தொடருபவர்கள் - நன்றிகள்

Monday, December 28, 2009

அவதாரும் முள்ளி வாய்க்காலும் நானும்..





எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டினம் எண்டது உண்மை. ஆனால் இதே போல யோசனை தோன்றியவர்களும் இருப்பார்கள். அவர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

என்ன செய்யுறது எல்லாம் ஓய்ந்து இருக்கிற நிலையிலை (என்ட மனதில தான்). மீண்டும் மீண்டும் துன்பத்தையும் துயரத்தையும் கிளறுவது போல அமைந்து விட்டது அவதார் திரைப்படம். திரைப்படத்தை கேவலமாக சொல்லவில்லை. திரைப்படம் மிக மிக அருமை. நமக்கு உலகம் போற்றும் காதல் காவியத்தை முன்னர் கொடுத்தவர் அல்லவா.

இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் நம் மனதில் ஒரு இடத்தில் குடி கொள்கிறார். அது பற்றி பிறகு சொல்கிறேன். சரி இனி தலைப்புக்கு வருவம். அவதார் நமக்கு ஒரு அவதாரம் புதியதொரு விடிவு காலம் வராதா என ஏங்கி தவிக்கும் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த கதை நாங்களும் நேர பாத்திருக்கிறம் எண்டு யாரும் சொல்ல கூடாது. என் கண்களை கலங்க வைத்த காட்சிகள் எத்தனை பேரை கலங்க வைத்திருக்குமோ? எத்தனை பேர் என்னை போல யோசித்து இருப்பார்களோ எண்டு மனம் ஏங்குகிறது.


படத்தின் ஆரம்பத்திலேயே சந்தோஷமாகவும் கூடிய வளங்கள் நிறைந்த நாடாகவும் ( உலகம்) வித்தியாசமான அறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்ட உலகமாக அமைதியாக ஒரு உயிருக்கும் தீங்கு செய்யாத உயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் விதமாக வந்து குதிக்கிறது மனித இனம். அவர்களின் வளர்ச்சி கண்டு வளங்களை சுரண்ட வரும் மனிதர்கள் கடைசியில் அவர்களையே அழிக்கின்றனர் . என்ன வித்தியாசம் இங்க ஒரு இனம் முற்றாக அழிந்து விட்டது ஒருவரின் உதவியும் இன்றி அவடரில்(அது படமாக இருந்தாலும்) அந்த நவிகள் என்று அழைக்கப்படும் உயிரினம் அழிய கூடாது எண்டு கவலைப்படுபவன் ஈழ தமிழனாக தான் இருக்க வேண்டும். என்ன நமக்கு நடந்தது அவற்றிற்கு படத்தில் கூட நடந்து விட கூடாது எனும் ஒரு ஆதங்கம் தான்.
என்ன எங்களை காக்க கதாநாயகன் வரவில்லை என்பது தான் கவலை.


அந்த அழகான வளம் கொழிக்கும் இடத்தை மனிதன் அழிக்கும் போது எங்கட தேசமும் அதன் அழிவும் தான் கண் முன்னே வந்து நிக்குறது கண்ணீர் துளிகளாய். வேறு என்ன செய்ய முடியும் . அனைவரும் எதிர்க்கும் போது உதவி செய்ய கொஞ்ச பேர். அதுவும் அவர்கள்(நவிக்கள் ) அப்பாவிகள் போல இருப்பதும் அவர்களை கொல்ல மனிதன் துடிப்பதும் மனிதனின் நடவடிக்கை எங்களையே முகம் சுளிக்க வைக்கிறது . ஒரு வேளை மனிதன் வர முதல் எங்கட உலகம் இப்பிடி தான் இருந்திருக்குமோ எண்டும் யோசிக்க வைக்குது . அழிவில் நவிக்கள் அழுவது துடிப்பது எம் கண் முன்னே எம் மக்களை கொண்டு வந்து நிறுத்துகிறது . இறுதியில் கதாநாயகன் மனிதர்களுடன் கதைப்போம் என்று கூறி முயற்ச்சி செய்கிறான் அதையும் ஏற்க்க முடியாமால் தமது அழித்தல் நடவடிக்கையை தொடங்குகிறது படை.


நம் அனைவருக்கும் பெரு மூச்சு கதாநாயகன் எடுத்த நடவடிக்கை."This is our land" என்று தளபதி (நவிகளின்) கத்தியது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. எனக்கே எழும்பி கத்தோணும் போல இருந்தது .( உடனே அள்ளிக்கொண்டு போயிருப்பங்கள் ).. நவிக்கள் படை எடுத்து வரும் போது காட்சிகளில் பின்னி விட்டார். எதோ உண்மையாக உரிமைக்காக போராடுபவர்கள் படை எடுத்தது போல இருந்தது .
எமது மக்களின் அழிவை கண் முன்னே காட்டிய படம் இறுதியில் நமக்கு மகிழ்ச்சியான முடிவு தான் படத்துல. நிஜத்துல ????
நமது பக்கம் இருந்து நவிகளுக்காக ஜெயித்து காட்டும் இடத்திலேயே நமது ஜாம்பவான் ஜெமேஸ் கமரூன் நம் மனதில் இடத்தை பிடிக்கிறார்..

Saturday, December 26, 2009

காமடியனும் பெண்களின் நட்பும்

எங்க இந்த காலத்துல உண்மையான நட்பு எங்க எங்க எண்டு தேடினாலும் உண்மையான நட்பு எண்டுற பெயரில நட்பு நாடகம் அல்லா நடக்குது. அதாவது ஆங்கிலத்தில எண்டு சொல்லுவாங்கள்.

அட தமிழ் சினிமாவ பாத்துட்டு இது தான் நட்பு இது தான் காதல் என்டு முடிவு எடுத்து சில சீவன்கள் பண்ணுற அட்டகாசம் தாங்க முடியேல்ல.



அட அது போனாலும் பறவாயில்லை மிஞ்சி இருக்கிறவங்கள்ளயாவது உண்மையான நட்பு கிடைக்கும் எண்டா..அட அதுவும் பெண்கள் வரும் வரைக்கும் தான் அவன்ட உண்மையான நட்பு தெரிய வரும். கூடவே இருந்திட்டு பொண்ண பாத்த உடனே டாட்டா காட்டிட்டு ஒடீருவானுங்க. நம்ம சின்ன கலைவாணர் விவேக் மொழில சொல்ல போனா பிகர பாத்த உடனே பிரெஞ்ட்ஷிப்ப கட் பண்ணுறது. தப்பா நினைக்காதீங்க சும்மா கதைக்குற உங்கள சொல்லேல்ல. அதாவது ஆண்களின் நட்பையும் விட்டுட்டு ஒரேடியா போய் விளக்கு பிடிக்கிறவங்கள சொல்லுறன்.
இதுவரை காலமும் நான் சந்தித்த சிலரை தவிர பலரது நட்பு (படம் காட்டுவது )போன்றே அமைந்துள்ளது.

அட அது சரி பருவயில்லன்னு விட்டுடலாம். அண்டைக்கு எனக்கு தெரிஞ்ச நண்பர்கள் ரெண்டு பேர் எதோ அவனுக்கு முன்னால உயிரே குடுக்கிற மாதிரி கதைச்சிட்டு இங்கால வந்து மாத்திப்புட்டன் பய.
அது சரி உண்மையான நட்பு இந்த காலத்துல எப்பிடி போகுதுன்னு பாத்தா

குறும்செய்தீல நட்பு பற்றி நடக்க முடியாத வாசகங்கள் எல்லாம் அனுப்புப்படும்.

facebook நட்பு பற்றிய படங்களை ஏற்றி tag அதில் செய்யப்படும்

போன் ல நிறைய நேரம் கதைக்குறது
ஏதோ இவனுங்களை மாதிரி ஹீரோ இல்லாத மாதிரி வசனங்கலாலா அடிச்சு விடுறது.( மாறி நினைக்காதீங்க இது எல்லாம் ஆண் பெண் நட்புக்கு இடையில ஆண்கள் கூடுதலா செய்யுற சேட்டை ) மன்னிக்கவும் சில ஆண்கள் .....
இதுல இன்னொரு கொடுமை என்னன்னு சொன்னா அவரு தான் உண்மையா நட்பு தெரிஞ்சவராம்..(உண்மையான நட்பு விளம்பரப்படுத்துவதில்லை)

அட அது சரி பருவயில்லன்னு விட்டுடலாம். அண்டைக்கு எனக்கு தெரிஞ்ச நண்பர்கள் ரெண்டு பேர் எதோ அவனுக்கு முன்னால உயிரே குடுக்கிற மாதிரி கதைச்சிட்டு இங்கால வந்து மாத்திப்புட்டன் பய.
அது சரி உண்மையான நட்பு இந்த காலத்துல எப்பிடி போகுதுன்னு பாத்தா

சரி என்ட பாட்டுக்கு வருவம். எதுக்கு கரைச்சு கொட்டுவான் பாவம் ..யதார்த்தமாக நட்பு வைத்திருப்பவர்களுக்காக அவர்களை விடலாம் ஏதோ காமெடி பீஸ் எண்டு விடலாம் .
நண்பர்களுக்குள் ஒரு உண்மையை மறைத்தாலும் மறைக்க முற்பட்டாலும் அது உண்மையான நட்பு இல்லை என்டு உணரோணும் .
விளக்கு பிடிக்கும் (பெண்களுக்கு கூஜா தூக்குறது எண்டா கேவலமா இருக்கும் ) நட்புகளை விட்டு விலகி இருப்பதே மேல். நட்பு எண்டுற பெயரை அதுக்கு பாவிக்கிறாங்கள் என்டு நினைக்குறன்.

ஏதோ இவளவு காலமும் இவளவு அனுபவம் கிடைச்சு உண்மையான யதார்த்தமான நண்பர்களை இனம் கண்டு கொள்ள முடிந்துள்ளது .
நட்பு போல பாவனை செய்பவர்களையும் கண்டு கொள்ள முடிந்துள்ளது .

ஒரே வார்த்தையில் சொல்ல போனால் முக நட்பு உண்டு அக நட்பு இல்லை..

Friday, December 11, 2009

சர்வாதிகார சீனாவும் இந்தியாவும்



2012 படத்தை போல உலகம் அழியுமோ இல்லையோ(அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஒரு படம் ). அதைப்பற்றி பிறகு பேசுவோமே .ஆனால் 2012 இல் சீனா இந்தியா யுத்தம் நடக்குமோ தெரியவில்லை. தற்போது உலக வல்லரசு ஆதிக்க போட்டி சீன இந்திய அமெரிக்க ஆகிய நாடுகளிடையே உருவாக்கம் பெற்றுள்ளது. பிருத்தானியா பல நாடுகளை ஒன்றிணைத்து இருந்தாலும் அவை எல்லா விடயத்திலும் இணைந்து செயட்படுவதுமில்லை. உலக வல்லரசு அமெரிக்காவிடம் ஆயுத பலம் இருந்த போதிலும் மனிதவளம் சீனா போல அல்ல . அமெரிக்காவும் நீண்ட கால நோக்குடனேயே இந்தியாவுடன் உடன்படிக்கைகளை பேணி வருகிறது . அமெரிக்க சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க மறைமுக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது .

தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை பிரச்சனை முறுகல் நிலையை எட்டியுள்ளது. இந்தியாவும் சீனாவும் இணைந்தால் ஆசியாவிலேயே மிகப்பெரிய சக்தியாக ஆகிவிடும் வேறு ஒருவரும் மூக்கை நுழைக்க கூட முடியாது என மேற்குலகுக்கு நன்றாக தெரியும். சீனா தனது அண்டிய நாடுகளான பாகிஸ்தான் ,நேபாளம் ,பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவையே பேணி வருகிறது . இலங்கையிலும் இடம் பெற்ற யுத்தத்தின் போது கூடுதலான உதவிகளை சீனா செய்தது அனைவரும் அறிந்ததே. இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து நாடுகளுடனும் சீன சிறந்த உறவை பேணி வருகிறது.

தற்போது சீனா மெல்ல மேலல்ல தனது எல்லை பிரதேசங்களை விரிவாக்கி வருகிறது .. இதற்க்கு இந்தியாவிடம் இருந்து மௌனமே பதிலாக அமைகிறது. சமீபகாலமாக சீனாவின் ஆதிக்கம் எதுவும் தமது நிலப்பரப்புக்குள் இல்லையென வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் அதற்க்கு ஆமோதித்து உள்ளார்.
ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாரிய யுத்தம் ஒன்று நடந்தது அனைவரும் அறிந்ததே . இதில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இந்திய இன்னும் மீளவில்லை போல இருக்கிறது .



அண்மையில் கூட இந்திய சீன எல்லையில் இந்திய நெடுஞ்சாலைகளை அமைக்க அதற்க்கு சீனா கடும் எதிர்ப்பு தெருவித்ததை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது . இவ்வளத்துக்கும் இந்தியா நெடுஞ்சாலைகள் அமைத்தது தனது எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில். அதே போல சீனா தனது நெடுஞ்சாலைகளை அமைத்த போது இந்தியா மௌனம் மட்டுமே காத்தது. சிறு எதிர்ப்பு கூட தெருவிக்கவில்லை . சீனாவுடனான வெளியுறவுக்கொள்கைகளில் ஏற்பட்ட விரிசலே இதற்க்கு காரணம். இந்தியா சீனா இடையில் நீளமான எலைப்பகுது காணப்படுவது குறிப்பிட தக்கது . இன்னமும் சீனா இந்தியாவில் பல இடங்களில் தனது கால்களை அத்து மீறி பதித்து உள்ளது .

Tuesday, December 8, 2009

Google Goggles

கூகிள் பல நவீன முறைகளை அருமுகப்படுத்தி வருகிறது அதே போல் கூகிள் அறிமுகப்படுத்தி உள்ள கூகிள் கோக்லஸ் (google goggles) ஒன்று . இதன் மூலம் நாம் செல்லும் இடத்தில் கையடக்க தொலைபேசி மூலம் நாம் நிற்கும் இடத்தில் உள்ள இடங்களை படம் பிடிப்பதன் மூலம் அதை பற்றிய முழு அளவிலான தகவல்களையும் பெற்று கொள்ளலாம். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர் பார்க்க படுகிறது . ஒரு இடத்தின் பெயரை கூட தெரிந்து கொள்ளாமல் அது பற்றிய முழு விடயங்களையும் அறிந்து கொள்ளலாம் video

Saturday, December 5, 2009

Project natal

video

இதோ வந்து விட்டது Project natal . சிறுவர்களுக்கு விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த ஒரு கண்டு பிடிப்பாக அமையும்.
இந்த ஒளிப்படத்தை பாருங்கள் உங்களுக்கே விளங்கும்

கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்கலையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

ஏன் ?