Sunday, January 3, 2010

5 நிமிடத்தில் 1கோடியே 26 லட்சம் காலி

இலங்கையில் சனாதிபதி தேர்தல் வரும் நிலையில் அறம் புறமாக பிரசார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது . இரு பக்கமும் சம அளவிலான எதிர் பார்ப்புகள் இருப்பதால் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது .ஒரு பக்கம் இராணுவ தளபதி சரத் பொன்சேகவும் இன்னொரு பக்கம் நவீன துட்டகைமுனு என சிங்கள தேசம் அழைக்கும் மகிந்த ராஜபக்சே அவர்களும் களத்தில் குதித்து உள்ளனர்.



இதற்கிடையில் வாக்குகளை பிரிப்பதற்கும் நடவடிக்கைகள் நடை பெறுகிறது. அதெல்லாம் விடுவம் . இருக்கிற கொடுமை பத்தாது எண்டு இங்க தொழில் நுட்பம் எல்லாம்
வாக்குகளுக்காக பாவிக்கபடுது. அதிலும் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மீதும் உள்ள வெறுப்பையோ அல்லது அறியாமையினாலையோ சிங்கள மொழில குறும் செய்தி அனுப்ப பட்டுள்ளது. சிறிது காலத்துக்கு முதல் தான் பணம் அதிபரின் உருவ படத்துடன் அச்சிடப்பட்டது.தன்னுடைய உருவப்படம் கொண்ட பணத்தை தானே அடிப்பது இதுவே முதல் முறை அது கூடிய சர்ச்சைகளில் சிக்கியுள்ள போது இந்த குறும் செய்தியும் புத்தாண்டு தினத்தின் அன்று இடம் பெற்று உள்ளது.





வேடிக்கையான ஜனாதிபதி தேர்தல்

கூடுதலாக நம் இணைய நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். ஜிமெயில் மற்றும் சமூக இணையத்தளங்களான Facebook இலும் கூட பரப்புரைகள் இடம் பெற்று வருகின்றன. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக குறும் செய்தியில் வாக்கு கேட்டது இதுவே முதல் முறை .நான் உங்களுக்கு (மக்களுக்கு) சுதந்திரமான நாட்டை தருவேன். இதன்மூலம் உங்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அதிபர் ராஜபக்ச என குறிப்பிட பட்டு இருந்தது .
அதுவும் அனைத்து கைபேசி நேத்வோர்க்க்கில் இருந்தும் அனுப்பபட்டு உள்ளது .


ஒரு குறும் செய்தி அனுப்ப ஒரு ரூபாய் என உங்கள் அனைவருக்கும் தெரியும் . அதிபர் அவர்கள் புத்தாண்டு தினத்தன்று ஒரு கோடியே இருபத்தியாறு லட்சம் ரூபாய் செலவழித்து வாழ்த்து அனுப்பி உள்ளார். ஜனாதிபதியின் மாத சம்பளம் எவ்வளவு என உங்கள் அனைவருக்கும் தெரியும் . ஒரு நாளில் ஒரு கோடியே இருபத்தியாறு லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் காலி!!!!.

நமக்கு தெரிந்து மக்களின் வரிப்பணம் பிழையாக பாவிக்கப்பட்ட ஒன்று சந்தர்ப்பம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர் சரத் பொன்சேகா யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

வளாகம் said...

*//அடுத்த ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர் சரத் பொன்சேகா யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.//*
அப்ப அவர் நல்லவர் என்றுங்களா?

சுதர்ஷன் said...

மன்னிக்கவும் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும்... எல்லாரும் ஒன்று எண்டது நாங்க அறிஞ்ச உண்மை .. அவர் குறும் செய்தி இவர் நல்லூர் கோவில்.அதை தான் சொல்ல வந்தேன்