ஆனால் ரகுமான் இதனை சரியாக கையாளுவதில் சிறந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது. கூடுதலாக ஹோசானா பாடல் மட்டுமே அனைவரையும் கவர்ந்துள்ளதாக கூறலாம். இரண்டாவதாக ஓமனப்பெண்ணெயை சொல்லலாம் .

உண்மையாக அனைத்து பாடல்களுமே என் முன்னே பழைய ரகுமானை கொண்டு வந்து சேர்க்கிறது. ரகுமானின் ரசனை குறைந்து செல்லவில்லை, அவரின் உலகத்தார இசைகளிடையே நமது ரசனை குறைந்ததாகவும் நினைத்துக்கொள்ளலாம். அது தான் உண்மையும் கூட. என்னை பொறுத்தவரை விண்ணை தண்டி வருவாயா பாடல்கள் அருமையிலும் அருமை.. ரகுமானின் துணிச்சலுக்கும்(புதிய முயற்ச்சி ) பாராட்டுக்கள் .
பெரிதாக ஓசான தவிர மற்ற பாடல்கள் பிடிக்கவில்லை என்பவர்கள் வாசித்த பின்னர் மீண்டும் கேட்டு பாருங்கள்.
சரி நாங்க அப்பிடியென்ன சிறப்பு எண்டு பாப்பம்.
ஆரோமலே...
ஆரோமலே பாடல் முதல் முதல் கேட்க்கும் போது ஏதோ ஒப்பாரி கேட்பது போன்று தோன்றும். என்ன மொழி என்றும் புரியாது. ஆரம்பத்தில் ஆரோமலே ஒலிக்கும் . பாடல் முடியும் வரை பின்னணியில் ஒலிக்கும். இது மலையாளப்பாடல். ஆரோமலே எண்டா தமிழில் செல்லமாம்(கேட்டுக்கொள்ளுங்கப்பா ). ஆரம்பத்தில் வரும் கிட்டார் இசை முதலில் மெதுவாக வருடும்(தொடர்ந்து ). அல்போன்ஸ் இன் குரல் பெரிதாக இனிமை என்றில்லை. ஆனால் ஒரு கவர்ச்சி. மேல் இஸ்தாயியில் பாடும் போது தான் கொஞ்சம் பயமாக இருக்கும் . அலைபாயுதேயில் கேட்டிருப்பீர்கள் "மாங்கல்யம் தந்துனானே" பாடல் ரகுமானின் ஸ்பெஷல்களில் ஒன்று . அது போன்று இந்த பாடலிலும் "சுவஸ்தி சுவஸ்தி முகூர்த்தம் சுமங்கலி பவ" என்று வரும். மனதை தொடும் ( கட்டாயமாக ). பின்னணி பாடகர்களை கையாள்வதில் ரகுமான் ஜாம்பவான். பாடலின் இறுதியில் பாடலை முடிக்கும் போது "ஆரோமலே " தாழ்த்தி பாடி முடிப்பார் . முடிவில் தென்றல் போல பாடி முடிப்பார்(கீழ்ஸ்தாயியில்). அருமை....

ஹோசானா...
முதலிலேயே பாடல் வெளியாகி பெரிய ஹிட் ஆகி விட்டது. கேட்ட உடனேயே கவர்ந்த பாடல் என சொல்லலாம். ஆரம்பத்தில் ரகுமான் பாடுவது போல மயக்கம் ஏற்ப்படுத்திய பாடல் . விஜய் பிரகாஷின் அருமையான குரல். எளிமையான தாமரை வரிகள் பிளஸ் என்று சொல்லலாம்(வழமை போல ) . உயிரின் உயிரே பாடலுக்கு பிறகு ஒரு சோகமான பாட்டை இப்படியும் கொடுக்கலாமா என எண்ண தோன்றுகிறது. முக்கியமாக நெஞ்சை தொடுவது பின்னணியில் பாடும் கோரஸ் தான். இடையில் வரும் பிளாசயின் ராப் இசை , ஹலோ ஹலோ என இடையிடையே வருவது , இடையே வரும் interlude என அடிக்கிக்கொண்டே செல்லலாம் . இறுதி 60 செகன்கள் இசைக்கருவி , பாடல் அனைத்தும் உச்சத்துக்கு சென்று வருவது ஆங்கில பாணி . நல்லதொரு கற்ப்பனை. கிட்டத்தட்ட pray for me பாடலை நினைவுபடுத்துகிறது .
குறிப்பு :- ஹோசானா அல்ல .. விவிலியத்தில் வரும் ஒ சனாவை தான் தான் தாமரை கூறியுள்ளார்.
ஓமனப்பென்னே...

ரசிக்க கூடிய மெலடி . பாடலின் ஆரம்பம் மலையாள வார்த்தை . இடையில் கல்யாணி மேனன் பாடிய மலையாள வரிகள் இது ஒரு மலையாள பின்னணி பாடல் என நினைக்க வைக்கிறது(ஆரோமலேயுடன் ) . வரும் ஆரம்பத்திலிருந்தே பின்னணியில் ஒலிக்கும் இசை இனிமை(பாடல் முடிவு வரை மெதுவாக ஒலிக்கும் ) . உன்னிப்பாக கவனித்தால் விளங்கும் . ரகுமானின் கவரும் பாணியில் இதுவும் ஒன்று. மேலைத்தேய இசைக்கருவிகளாக இருந்தாலும் இறுதியில் மேலைத்தேய இசைகளுடன் நமது நாதஸ்வர இசையையும் சேர்த்திருப்பது ஒரு சிறந்த கற்பனை . பாடலின் இறுதில் எமது இசையையும் மேலைத்தேய இசையையும் இணைத்திருப்பது இளையராஜாவின் சிஷ்யன் என்பதை நினைவூட்டுகிறது . பென்னி தயாள் அனுபவித்து ஒவ்வொரு வரிகளையும் பாடியுள்ளார் . அதே எளிமையான தாமரை வரிகள் . ஆனால் இதில் வரிகள் பெரிதாக எடுப்படவில்லை.
கண்ணுக்குள் கண்ணை...
நரேஷ் அய்யர் பாடியிருக்கும் பாடல் . ஒரு வேகமான இசை, தாளங்கள் கொண்ட பாடல் . இடையிடயே வயலின் பாவனைகளோடு, பின்னணி குரல்களோடு அருமையாக கொடுத்துள்ளார் ரகுமான். இடையில் ரகுமான் வழமை போல தனது குரலில் பாடும் "உன் நண்பன் இல்லை" உச்சக்குரலில் அருமை . வயலின் இசை தொடருகிறது. கூடுதலாக இசையில் உச்ச தரமான இசைக்கருவிகள் பாவனை தெரிகிறது . வேகமான பீட்டுக்கு ஏற்ப்ப வயலின் இசையும் சேர்ந்து வரும்(அருமை ) . "நீயும் நானும் ஒரே புள்ளி" என பின்னால் பாடும் பின்னணி(கீழ்ஸ்தாயியில் வந்து செல்லும் ). தொடர்ந்து "அன்பே ஓடோடி" பாடும் போது ஒவ்வொரு முறையும் அதன் முறையில் மாற்றம் . பாடகர்களை இளையராஜாவுக்கு பிறகு ரகுமானின் பாவனை அதிகம் எனலாம்
மன்னிப்பாயா...
இதுவரை ஒ சனா வை விட கூடுதலாக பிடித்த சிறந்த பாடல் என்றால் அது மன்னிப்பாயா .. இந்த முயற்ச்சிகள் ரகுமானால் மட்டுமே மேற்க்கொள்ளக்கூடியது. ஸ்ரேயா கோஷல் சொல்லவாவேண்டும். முன்பே வா அன்பே வாவை மிஞ்சி விட்டது . ரகுமானின் இசைக்கோர்வையை கவனியுங்கள்(யாராலும் முடியாது ) . வரிகளும் அருமை எனலாம் . ரகுமானின் இஸ்டயிலில் மேலும் ஒரு முன்னேற்றம் எனலாம் இந்த பாடலை . "ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்" முதல் குரலிலேயே கவர்ந்தது தான் ஸ்ரேயா கோஷல் ." மன்னிப்பாய " உண்மையில் உருகி உணர்ந்து பாடுவார் . தொடர்ந்து ரகுமானின் குரல்(எதோ ஒரு வசீகரம் ஆரம்பத்தில் இருந்தே/எப்போதுமே ).

வருடும் பின்னணி இசை தொடர்ந்து பின்னணியில் வரும் ஒரு மெல்லிய இசை(கவனியுங்கள் ). ரகுமானின் குரலில் "காற்றிலே ஆடும் காகிதம் நான்... நீ தான் எனை கடிதம் ஆக்கினாய்" அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்" இரவில் தனிமையில் கேட்டால் கட்டாயம் கண்ணீர் வரும். தன்னால் மட்டுமே உணர்ந்து பாட முடியும் என பாடியுள்ளார் ரகுமான் . "அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாள் "
மேலும் மேலும் உருகி உருகி.. உண்மையில் ரகுமான் உருகி தான் .
இடையில் திருக்குறளை மேலைத்தேய பாணியில் கொடுத்திருப்பது பிளஸ் . "அனைவரும் உறங்கிடும் நேரம் அது எனக்கு தலையணை அணிக்கும் நேரம்" என்பன தாமரையின் சிறப்பு .
பாடல் முடியும் போது அமைதியாக முடித்திருப்பார் ம்ம் என்று ஸ்ரேயா கோஷல்(மெல்லிய இசையுடன் ) .
விண்ணைத்தாண்டி வருவாயா ...
பின்னியிருக்கிறார் ரகுமான். கிட்டாரும் பியானோவும் பின்னணியில் ஒலிக்கும். மிகவும் அமைதியான பின்னணியில் கேக்க வேண்டிய பாடல் . கார்த்திக் பின்னி விட்டார். உருகியுள்ளார் . கொஞ்சம் சத்தமான குரல் மெதுவாக ஒலித்திருக்கிறது . "நேற்றும் இரவும் உன்னோடு இருந்தேன் அதை நீயும் மறந்தாயா" போன்ற வரிகளை அருமையாக ராகத்துடன் கையாண்டுள்ளார் . வருவாயா என பாடலை முடிக்கும் போது பியானோவும் சேர்ந்து முடிக்கும் . மேலைத்தேய சிறந்த இசை முறை ." உயிரே நீ போனாலும் பிரிந்தது புவியீர்ப்பு மையத்தில் தானே " கஷ்டப்பட்டுள்ளனர் தாமரை வரிகளுக்கு இணங்க .
ஒவ்வொரு பாடலிலும் புதிய அணுகு முறை . இவ்வாறான அணுகு முறைகள் ஆயுத எழுத்திலும் கையாண்டிருந்தார் . படம் பெரிதாக எடுபடவில்லை(சிறந்த படம் ).
இந்த முறை கவுதம் மேனன் பாடல்களுக்கு காட்ச்சிகளில் பிழை விட மாட்டார். காட்சி அமைப்பு என்றால் அது கவுதம் மேனன் தான்.
2 comments:
Really superb post...
"உண்மையாக அனைத்து பாடல்களுமே என் முன்னே பழைய ரகுமானை கொண்டு வந்து சேர்க்கிறது. ரகுமானின் ரசனை குறைந்து செல்லவில்லை, அவரின் உலகத்தார இசைகளிடையே நமது ரசனை குறைந்ததாகவும் நினைத்துக்கொள்ளலாம். அது தான் உண்மையும் கூட..."
முற்றிலும் உண்மை அண்ணா...
Post a Comment