Monday, February 1, 2010

தமிழ்ப்படம் :தயிர்ல போட்டா தயிர் வடை போடல்லன்னா மெது வடை

தமிழ்ப்படம் பற்றி (ஆவ்வ்வ் ) தேவையான அளவு படத்திலை போதாது எண்டு விமர்சனத்திலையும் நோண்டி ,நக்கல், பிக்கல் எண்டு பிச்சு உதறீட்டாங்க போங்க. படத்தை விழுந்து பிரண்டு வயிறு குலுங்க சிரிச்சு சிரிச்சு உயிர் போச்சு . சிரிக்காதீங்க. சிந்தியுங்க . நம்மளும் இந்தமாதிரி படங்களை வரவேற்றிருக்கோம்.

விமர்சனம் நிறைய வாசிச்சிருப்பீங்க. இது பட விமர்சனம் அல்ல தலைப்பிலையே தெரிந்திருக்கும்



ஹீரோவுக்காக பல படங்களை ஓட வைத்தவர்களுக்கும் கொஞ்சம் விளங்கியிருக்கும். இதுக்கு கொடி பிடிக்காம ஏற்றுக்கொண்ட நல்ல இருக்கும் . அட இதை நக்கல் படமா நினைக்காம நம்ம ஹீரோ இஸ்டயில்ல படம் வந்திருக்குன்னு சொல்லுராங்கவுங்கோ . அப்பிடின்னா பாருங்களன் . என்னகொடுமை ?

சாதரணமாவே இந்தமாதிரி தமிழ் படங்கள் ஹீரோக்கள் பற்றி பதிவு எழுதினாலே ஏற்றுக்கொள்ளாம எதிர்ப்பு தெருவிக்கிறவங்க இதுக்கு தெருவிக்காம இருக்கிறது பெரிய விஷயம் போங்க.(திருந்தீட்டான்களோ )

படத்தை பாத்தவங்க (நம்மட குத்து பாட்டு ஹீரோக்கள் , முதல் பாட்டிலேயே தத்துவம் சொல்லுறவங்க ) இதய நோய் வந்திருக்கும் . தமிழ் படம் கலக்கியிருக்கு . இனி இதுக்கு மேல இப்பிடி படம் எடுத்தா( எடுப்பாங்க எண்டுறீங்க ?) , ரசிகர்கள் ரசிப்பார்களா ? தமிப்படம் தான் மனசில நினைவு வரும். வருமா? ஒரே கதைய எடுத்தாலும் பழைய பட கதைய மறந்து புதுசா பாக்குற மாதிரி பாக்குறாங்க சார்(நாயகன் முக்கியமாம் ).

முக்கியமா தமிழ்ப்பட பாட்டு பற்றி பாத்தீங்கன்னா. ஒவ்வொரு பாட்டும் கிண்டல் போங்க . ஆனா கண்ணன் எண்ட புது இசையமைப்பாளர் . அவர் புதுசு போலவே இருக்கிறார் . முதல் அறிமுகபாட்டு வழமை போல குத்து தான் . அதில திறமை பாக்க முடியாது. ஆனா ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கலக்கியிருக்க ஒரு பாட்டு ஓமகசீயா ...

அருமையான மெட்டு ஒண்டு வீணாக போயிட்டு. அதுக்குள்ள தமிழ் அர்த்தம் கண்ணாடி போட்டு பார்த்தாலும் தேட முடியாது . நாக்கு முக்க நாக்கோ ஓஹ் சகலாக.... ஒக்காந்து யோசிச்சிருக்காங்க . விவேக் ஒரு படத்திலை சொல்லி இருப்பார் . நாக்கு முக்க நாக்க ..என்ன மெட்டுடா? அவன் அவன் வெளிநாடு பொய் எல்லாம் பாட்டு கம்போஸ் பண்ணுறானுங்க .. எல்லாம் தோத்து போச்சுன்னு ...

அட அந்த பாட்டை விடுங்க. கூட எதிர் பார்த்த அறிமுகப்பாட்டு பச்ச மஞ்ச கறுப்பு தமிழன் நான் பாட்டு . வழமையா சிலருடைய தமிழ் படங்கள்ல வாற மாதிரி( இப்ப எல்லாரும் தான்) . குத்தோட தத்துவம் சொல்லுறது .

இந்த பாட்டு கேட்டா பிறகு எவனும் தத்துவம் சொல்ல மாட்டான் . "கவர்ச்சி கண்ணனே . ஏழைகளை ஏற்றி விடும் (எழைகள கவர் பண்ண ) ..நீ ஒக்கார்ந்தால் எழுந்து நிற்க்கும் எழுச்சி நாயகன் . ஒரு அப்பனுக்கு பிறந்த ஆம்பிளை " ஆரம்ப வரிகள் அட லொள்ளோ லொள்ளு.



அட கட் அவுட்டுக்கு பால் வேற( திருந்துங்க ) . பெண்கள் கும்பிடுறாங்க . ஆரத்தி காட்டுறாங்க . கலர் கலர் சட்டை ..அதே பாணி . கடைசில எல்லா கலர் தமிழன் எண்டும் சொல்லுறார் .

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுள் நான் தான். அட என்ன மிஞ்ச எவனும் இங்க இல்லை . நம்ம தாய் குலத்துக்கு நான் தான் செல்லப்பிள்ளை..
பின்னணில " ஆமா ராசா " ( சில வயதான பெண்கள் ) .. அம்மா செண்டிமெண்ட் தாய் குலத்தையும் கவர் பண்ணுறாராம். இதெல்லாம் நுணுக்கம் ...

2011 நம்ம கையிலை (அவ்வவ் ) .. சந்திப்போம்டா சட்ட சபையிலை... ( சரி சரி ). என் பார்வை பட்டாலே சிங்கம் அடங்கும்.. ( சிங்கம் அனிமேஷன் ) ,கண்ணெல்லாம் சிவக்குது ... அட அட இயக்குனர் கலக்கீட்டார்.

சிலர் அவரை தூக்கி (தலைவன் நீ , இறைவன் நீ )... இது வேறயா.. அகில உலக சூப்பர் ஸ்டாராம். ( ஒ மை கோட் )

இதுக்கு பிறகு தான் ஹைலயிட்டு.. ரெண்டு பேர் சண்டை பிடிக்கும் போது இடையிலை வந்து.. தயிர்ல போட்டா தயிர் வடை போடேல்லன்னா மெது வடை ,ஓட்டை இருந்தா அது ஓட்டை வடை .. என்னை வணங்கி பாரு மோட்சம் கிடைக்குமாம் ( அடுத்த சாயி பாபா ).. கூடையிலை இருந்து பூ பறக்குது (நடக்கும் போது )

ஹஹாஹ் இடையிலை டான்ஸ் மாஸ்டர் வந்து ஆடுவாரு( எல்லா படத்திலையும் மாஸ்டர் வந்து ஆடுவாங்க ஈளை அது தன வந்தான் என்பார் ) செம கடியுங்க.

இடையிலை சம்பந்தம் இல்லாத ராப். ஏஞ்சலின ஜோளியவே எங்க வைச்ச அழகன் நானாம் ( அடங்கொய்யாலே )...சிவாஜி பட ஆரம்ப பாட்டையும் கிண்டல் அடிச்சு கொன்னுட்டாரு போங்க..
ரோபோல அந்த கொடுமை நடக்காம இருந்தா சரி

வயித்திலை நாயகனின் படம் கீறி வந்து ஆடுவாங்க .. தமிழ் சினிமா கொடுமை தாங்க . இதெல்லாம் நாங்க இன்னொரு நாயகன் எண்டதால் ரசிக்கிறோம் . நாயகர்கள் மீது உள்ள மோகத்தால தவறுகளை ஏற்பதில்லை. இப்ப பார்க்கும் போது விளங்கியிருக்கும்.


தமிழ் சினிமாவில் மட்டுமே நாயகர்களுக்காக படம் ஓடுகிறது. வேறு எந்த உலக சினிமாவும் அப்படி அல்ல. அவர்களை நாம் கடவுளாக பார்க்கிறோம் . இவ்வாறான வசனங்கள் பார்க்க வைக்கிறதா அல்ல ? நாம் அவர்களை இவ்வாறான வசனங்கள் சொல்ல அனுமதிக்கிறோமா?

நான் தான் இறைவன் தலைவன் எண்டு சொல்லலும் போதே தூக்கி எறிந்தால் மீண்டும் இவ்வாறு எடுப்பார்களா ??

தமிழ் படம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்ச்சி . வரவேற்கிறேன். வரவேற்ப்போம். தமிழ் படம் பாகம் ரெண்டு எடுக்காமல் இருப்பது நமது கையில் .

3 comments:

Anonymous said...

why do you only target vijay! ithuvum oru pollapu vijaya kindal panni unga vote porukireenga

Sudharshan said...

கருத்துக்கு நன்றி ... இனி எல்லாரையும் சேர்த்து எழுதிறன்

Dinesh said...

நீங்க சொல்ற மாதிரி இந்த படத்தால தமிழ் சினிமால ஒரு புரட்சி வந்ததுன்னா ரொம்ப சந்தோஷம் தான். படம் இன்னும் பார்க்கவில்லை. விமர்சனங்களை படிக்கும் போது பார்க்க ஆவலாக இருக்கின்றது.