Sunday, February 7, 2010

அழுத்தமில்லாத அழகான வாழ்க்கையும் கூகுளும்

அசல் விமர்சனத்துக்கு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ஹிட்சுகளை கொடுத்து தமிழிஷில் இன்று காலை வரை 33 வாக்குகளுடன் முன்னணியில் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஊக்கம் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது.

உங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு ஒன்றும் பெரியவன் அல்ல. இது அறிவுரையும் அல்ல . இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் மிகமிக முக்கியமானதும் கூட . உங்கள் வாழ்க்கை ,அது எவளவு முக்கியமானது . அழுத்தமில்லாமல் பின்பற்றுவதட்க்கு வழிமுறைகள் உண்டு . எதோ கொஞ்சம் சிந்தனைக்கு ரசனைகளுக்கு எட்டியதை உங்களோடு பகிருகிறேன்.



வாழ்க்கை மிக மிக அழகானது . எதிர் மறை சிந்தனைகள் வேண்டாம். அந்த அழகான வாழ்க்கையில் நீங்கள் இருக்கும் வீட்டில் இருந்து பழகும் நண்பர்கள் முதல் , பார்ப்பவை , கேட்பவை வரை நீங்கள் அழகாக வைத்த்திருந்தால் , சுருக்கமாக சொல்லப்போனால் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம். ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு வாழ்வு தான் .

சிறந்த ஒரு உருவாக்கம், சிறந்த ரசனை சிந்தனை உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும். உண்மையான மகிழ்ச்சி நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் உண்டு . நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பது மட்டும் மகிழ்ச்சி அல்ல. செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் ரசனை வேண்டும், அதில் மட்டுமே சிந்தனை இருக்க வேண்டும் .

எல்லாரிடமும் ரசனை உண்டு ஆனால் இருக்கின்ற வாழ்க்கையை ரசனையோடு பார்க்கும் திறமை இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு ஒரு குட்டிக்கதை. யானை ஒன்று அமைதியாக நின்று உணவு உண்டு கொண்டிருந்தது. அப்ப அங்க வந்த இலையான் அதுண்ட காதில வந்து இருந்து இரைஞ்சுகொண்டு இருந்திச்சு. யானை அதை தன்னுடைய காதை சுழட்டி தூக்கி எறிஞ்சிட்டு. மீண்டும் மீண்டும் வந்து கரைச்சல் குடுக்க யானை கேட்டிச்சாம்..
" நீ ஏன் ஒரு இடத்தில் இருக்காம அலைந்து திரியிற, ஒருக்கா உணவருந்துகிறாய் பிறகு எனக்கு வந்து கரைச்சல் குடுக்கிறாய் உன்னால ஒரு இடத்தில இருக்க முடியாதா எண்டு " .



உடன இலையான் நீ மட்டும் எப்பிடி ஒரு வேலைய செய்து கொண்டு இவளவு அமைதியா இருக்கிறாய் எண்டு கேட்டிச்சாம். அதற்க்கு யானை நான் சாப்பிடுற உணவையும் ரசித்து ரசித்து சாப்பிடுறன் என் கவனம் முழுக்க என் உணவில் தான் என்றதாம்.

பேராசிரியர் டானல்ட் நோர்மன் கருத்தும் ஒவ்வொரு பொருட்களின் உருவாக்கம் , அழகான ரசனைகளுடன் கூடிய சந்தோசம்( fun ) என்பன மன அழுத்தத்தையும் போக்குகிறது என்று கூறியுள்ளார் .

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்கள் அவற்றை மாற்றி அமைக்கும் ,பயன்படுத்தும் முறை என்பன உங்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது.

இது ஒரு பழச்சாறு செய்யும் கருவி . ஆனாலும் இதை தான் தனது முன் அறையில் அழகு பொருளாகவும் பாவிப்பதாக கூறினார் . சிறந்த உருவாக்கம் தான் . சிறந்த எளிமையான கற்ப்பனை.



நீங்கள் பிரயாணம் செய்யும் வாகனம் கூட தெரிவு செய்யும் போது வெளியில் இருப்பவர்கள் யோசிப்பார்களே என வெளியில் அழகாக இருக்கிறது என்பதற்க்காக எமக்கு உள்ளே சௌகரியம் இல்லாத ஒன்றை தெரிவு செய்ய முடியாது.





இந்த வாகனம் வெளியில் பெரிய கவர்ச்சி ஒன்றும் இல்லை.உள் வடிவமைப்பு அழகு. ஆனால் உள்ளிருந்து ஓட்டும் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.


சில வடிவமைப்புகள் எம் ஆழ் மனதை கவர்வதுண்டு. அதென்ன ஆள் மனது கேட்பது விளங்குது . ஆழ் மனதில் இருப்பவை நாம் அன்றாடம் செய்யும் வேலைகள்.
இந்த வடிவமைப்பும் அனைவரையும் கவரவே.



நீங்கள் அடிக்கடி பாவிக்கும் கூகிள் ஆனால் கவனித்திருக்க மாட்டீர்கள். கூடுதலான பத்து "O " க்கள் காணப்படும் ஒவ்வொரு இலக்கத்துக்கு மேலும் . அட இன்னும் இவளவு பக்கங்கள் இருக்கு என்ற எண்ணம் தோன்றாமல் இருக்கவே இந்த வழிமுறை.

இது ஒரு பின் பாங் மேசை. ஒவ்வொரு தடவையும் பந்து அடிக்கும் போது அலைகள் தோன்றும் மீன்கள் ஓடித்திரியும். அழகாக இல்லையா.



புதிய வாழ்க்கை சுத்தி பார்க்கும் ஒவ்வொரு பொருட்களும் அழகாய் . மனதில் ஒரு சந்தோசம் . தனியான மகிழ்ச்சி(fun ). தனிமை கூட பாதிக்காது. முயற்ச்சி செய்து பாருங்கள். வாழ்க்கையில் ரசனை இவளவு முக்கியமானது. உங்களை சுத்தி சந்தோசம் இருக்கும் போது ரசனைகள் இருக்கும் போது உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் முறை உங்களிடமே இருக்கும் . பெரிய மன அழுத்தம் ஒன்றுமே இருக்காது.

அழகான வாழ்க்கை தொடரும் ..அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாம்.

1 comments:

ramesh said...

Thanks for you, for Psychology advice more advice & to write article- Thank for your team,by Ramesh