Tuesday, February 16, 2010

அதென்ன கூகிள் buzz (Google Buzz ) ...

பேஸ்புக் காலம் , இடையில் டுவிட்டேர் காலம் , மற்றபடி பேஸ்புக் த்விட்டேர் காலம் என்றாகி இப்ப கொஞ்ச நாளாகவே கூகிள் buzz காலமாக மாறியிருக்கு. ஜிமெயில் என்றாலே முதல் ஒரு காலத்தில் யாருக்குமே தெரியாது.



சமூக இணையத்தளங்கள் இப்போது போட்டியின் உச்சகட்டத்தில் இருக்கின்றன.
ஜிமெயிலும் விட்டு வைக்கவில்லை. கொஞ்ச வருடங்களுக்கு முதல் ஜிமயில் தனது சேவையில் chat வசதி போன்றவற்றை உட்ப்புகுத்தியது. இப்ப கொஞ்சம் எங்கபோனாலும் எல்லாருடைய வாயிலும் ஒரு முனுமுனுப்பு "google buzz " . அதென்ன google buzz தெளிவில்லாமல் பலர் . வந்தாலும் பாவிப்பதில் தெளிவில்லாது இருக்கின்றனர் . பலருக்கு இன்னும் வந்திருக்காது .

அதொன்றும் இல்லை google buzz சாதாரணமாக பேஸ்புக் டுவிட்டேர் போன்றதே . ஆனால் எளிமையான குழப்பமிலாத ஒரு சமூக இணையத்தளம். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளதையும் அறிய முடிகிறது .

அவ்வாறு google buzz அழைப்பு கிடைக்க பெற்றால் உங்கள் இன்பாக்ஸ் பகுதிக்கு கீழே இவ்வாறு தோன்றும்.



அதை கிளிக் செய்தால் இவ்வாறான எளிமையானதொரு முகப்பு தோன்றும்.











அதன்மேலே உள்ள ப்ரோபையில் பிச்ச்சரை கிளிக் செய்தால் அல்லது அருகில் இருக்கும் google profile கிளிக் செய்யலாம்.
இவ்வாறான ஒரு பக்கம் தோன்றும்.




நீங்கள் சாட் செய்யும் நண்பர்கள் சாதரணமாகவே add செய்யப்பட்டு விடுவார்கள். நாங்கள் follow பண்ணுபவர்கள் ஆக . எங்களை follow பண்ணுபவர்களாக... ஒரு விதமான மாற்றங்களும் அறிமுகமும் தேவையில்லை .



எங்களுடைய தகவல்களை நாம் சமூகத்துடனும் பகிர்ந்து கொள்ளலாம் ,அல்லது எமது நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் . பகிரும் பொழுதே அதை கொடுத்து விடலாம்.

இந்த url மூலம் மற்றயவர்கள் நம்மை follow பண்ணலாம்



நாம் follow பண்ணும் லிங்க்ஸ் கொடுத்து வைக்க முடியும் . ஒருவர் கமெண்ட் செய்யும் போது அது தானாகவே எமது இன்பாக்ஸ் குள் வந்து விடும் . தவறவிடப்படாது.

படங்கள் வீடியோ போன்றவற்றை மிகவும் பெரிதாகவும் விரைவாகவும் பார்க்கலாம் . நாங்கள் பாவிக்கும் கூகிள் ரீடர் டுவிட்டேர் போன்றவற்றை ஒரே தளத்தில் வைத்திருக்கலாம் .

நிறைய பேரிடம் இந்த வசதி சில நாட்களில் கிடைக்கப்பெறும் .

ஏற்க்கனவே இருக்கிற சமூக இணையத்தளங்களே போதும் , நேரம் வீண் , படிக்க முடியவில்லை என்றால் அதுக்கு இந்த வழியை பின்பற்றுங்கள்
முற்றாக google buzz ரிமூவ் செய்வதற்க்கு...

கடைசியாக கீழே காணப்படும்



எளிமையான எதிர்பார்த்த முறை. பாவித்து பாருங்கள் புரியும். அனைவரிடமும் வரவேற்ப்பு பெற்றுள்ளதா என்று கொஞ்ச நாட்களில் தெரிய வரும் . சில இடங்களுக்கு மட்டுமே
மட்டுப்படுத்தி உள்ளது.

கூகிள் தொலைபேசிகளுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது .அடுத்த பதிவில் கையடக்க தொலைபேசிகளுக்கான கூகிள் buzz பற்றி..

1 comments:

நீச்சல்காரன் said...

//நீங்கள் சாட் செய்யும் நண்பர்கள் சாதரணமாகவே add செய்யப்பட்டு விடுவார்கள்.//
நமது ரகசிய சாட் id களை நமக்குத் தெரியாமல் போல்லோவேர் ஆக்குவது பஷ்ஷின் Privacy Flaw தானே