தொடர்பதிவாக இதை எழுதுகிறேன் . இந்த முறை என்னுடைய கருத்துகளையும் தொகுப்புடன் வழங்குகிறேன் . ஜாதி ,கடவுள் இந்த யோசனைகளை அடிப்படை மூட நம்பிக்கைகள் எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு பரந்த சிந்தனை மீது எண்ணத்தை மாற்ற வேண்டும் .
இந்து சமயத்தின் பல கூறுகளை எடுத்து கொண்டு வளர்ந்தது மற்றைய சமயங்கள் . அன்பே சிவன் என்பது இந்து சமய கூற்று . அன்பை ஒரு நோக்காக கொண்டதே கிறிஸ்தவ சமயம் . கொல்லாமை என்பது இந்து சமய அடிப்படை . அதை முக்கியமாக கொண்டதே பவுத்த சமயம் .
இறைவன் படைத்தான் ,படைக்கிறான் என்ற ஒரு கோட்டின் கீழ் நின்று விட்டால் வேறு யோசனைகள் எழாது . இறைவன் இல்லை என்பவர்கள் கூட ஏதொ ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்றனர் . சக்திகள் என பார்க்கப்போனால் எவ்வளவோ சக்திகள் .அந்த சக்திகளின் தொகுப்பாக அமைந்ததே இந்து சமய வழிபாடு . கூடுதலாக பார்த்தால் அவ்வாறான வழி பாட்டு முறையே காணப்படும் . சூரியன் ,சந்திரன் , எம்மை சுற்றியுள்ள ஏனைய கோள்கள் போன்றன இந்து சமய வழி பாட்டு முறையிலேயே உள்ளது . கண்ணால் காணும் சக்திகள் இவையே .
உயிரினங்களின் பிறப்புகள் நடத்தைகள் , இறைவன் இதற்க்கிடையில் பல குளறுபடிகள் இருப்பதால் தெளிவான பின்னர் கருத்தை கூறுகிறேன்(தெளிவாகுமா?) . கூர்ப்பை அலசினால் அது ஒரு புரியாத புதிர் .முடிந்தால் பின்னூட்டமிடுங்கள் .
தேவையில்லாமல் இறைவன் படைப்பு என்று போய் விட்டேன் . சரி குறுகிய வட்டத்துக்குள் தெளிவு பெறுவோமே .இந்து மதம் ஒரு வழிகாட்டி மதம் .மனித வாழ்க்கையின் பல படிகளை எடுத்து கூறுகிறது .
லவுகீக வாழ்க்கையை கூறும் ஒரே மதம் . அது தான் சந்தேகத்துக்கு இடமின்றி எந்த மதத்திலும் இல்லாதவாறு கணவன் மனைவி முறை இந்து மதத்திலும் உண்டு . குடும்பமாக இறைவன் சித்தரிக்கப்படுகிறான் . கண்ணதாசன் கருத்துப்படி இறைவனுக்கு எதற்க்கு மனைவி என்றால் மனிதனுக்கு எதற்க்கு மனைவி ? என்ற கேள்வி எழுப்புகிறார் . அர்த்த நாரீஸ்வரர் வடிவம் கணவன் மனைவி சேர்ந்த நிலையை விளக்கும் .ஆண் பெண் சம நிலையை கூறிய ஒரே மதம் இந்து மதம் .
எவளவு பெரிய விஞ்சானியாக இருந்தாலும் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதற்க்கு முன் அவன் தேவாலயம் சென்று விட்டு தான் அனுப்புவான் . அவனை அறியாமல் ஒரு மெய் ஞான உணர்வு அவனை அழைக்கிறது .
இந்த லவுகீக வாழ்க்கை தொடங்கும் இடம் தாய் .சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ நகரில் பேசிய போது அங்கிருந்தவர்களை பார்த்து பெரியோர்களே தாய் மார்களே என்று அழைத்தாராம் .அங்கிருந்த இளம் பெண்கள் தமக்கு திருமணம் கூட ஆகவில்லை என்றனராம் . அதற்க்கு விவேகானந்தர் மேலை நாட்டில் பெண்களை பார்த்தால் காதலி , மனைவி நிலை தான் தோன்றும் . எமது கலாச்சாரத்தில் தான் பெண் என்றால் தாய் உணர்வு தோன்றும் .
தாய் க்கு முக்கியத்துவம் கொடுத்து தாய் முதல் படியில் இருக்கும் சமயமும் கூட . நாம் கண்ட முதல் தெய்வம் தாய் என்பதில் இறைவனை விட இந்து மதம் தாய்மையை தூக்கி நிறுத்துகிறது .யதார்த்தமான சிந்தனை கூட . தாய் காட்டி தான் தந்தை கூட தெரியும் . தந்தை தான் குருவை காட்டுபவர் .
ஆபத்திலே தான் ஆண்டவன் தோற்றமளிக்கிறான். மரணம் என்ற மாயை எங்கே இருக்கிறதோ அங்கேயே இறைவன் இருக்கிறான் . நாம் பிறக்கும் போது எம்மை நாம் தீர்மானிப்பதில்லை . யார் தீர்மானிக்கிறார்கள் என்றே தெரியவில்லை . இறைவன் என எண்ணுகிறோம் .
உடல் கூற்று மனக்கூற்று , உடல் ,மனது ஒரு மனிதனுடைய முழுமை . உடலை தாண்டி மனதில் நிர்ப்பதாலேயே ஆன்மிகம் என்று இந்து மதம் அழைக்கிறது . இது உடலுக்கு அப்பால் பட்ட நிலைமை .நமது இதிகாசங்கள் மனத்தை சாந்திப்படுத்தவே எழுதப்பட்டன . இதிகாசங்கள் உண்மையா பொய்யா என ஆராய வரவில்லை .
அடுத்த பதிவில் இந்து சமயமும் இதிகாசங்கள் பற்றி பாக்கிறேன் . தசரதனுக்கு 60 ,௦௦௦ மனைவியர் சாத்தியமா ? தொடர்ந்து பாப்போம் இதிகாசங்களுடன் .
அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பதிவு
http://ethamil.blogspot.com/2010/03/blog-post_10.html



4 comments:
நல்ல,அருமையான பதிவு.
arthamulla hindhu matham enbathu
kavignar kannadhasanin adaiyalam.
athil neengal ezhuthi iruppathu nandraaga ullathu.thodarungal.appadiye enathu mugavarikkum anuppi vaiungalen.
arjunchandarsingh@gmail.com
chandru
நல்ல முயற்சி
தனபால் said...
நல்ல,அருமையான பதிவு.
Sabarinathan Arthanari said...
நல்ல முயற்சி
மிக்க நன்றி . உங்கள் ஊக்கத்திற்க்கு ஆதரவிற்க்கு நன்றி
Post a Comment