Wednesday, March 17, 2010

இளையராஜா இசை ராஜா (தொடர்பதிவு 4 )

இளையராஜா வந்தவுடன் சாஸ்திரிய இசை தனிமை நமது இசை அழிந்து விட்டது என்கின்றதை ஏற்க்க  முடியாது . தமிழின் பெருமை ஆங்கிலேயனுக்கு தெரிய வேண்டுமானால் ஆங்கிலத்தில் தான் கூற வேண்டும் . நமக்குள்ளேயே  இருந்தால் தான் எல்லாவற்றிற்க்கும்   அழிவு . சாஸ்திரிய இசையுடன் மேலைத்தேய  கலப்பு . ரகுமானின் முயற்ச்சியும் கூட அதுவே .



இளையராஜாவுக்கு கூடுதலான இசைக்கருவிகளை கொண்டே  இசை அமைக்க முடியும் என்று இல்லை . சாதாரண ஒரு இசைக்கருவியை வைத்தே முழுப்பாடலையும் முடிச்சிருப்பார் . "யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே" பாடல் தளபதி படம் . ஒரு அருமையான குரல் கொண்ட மிதாலி என்ற  வடநாட்டுகாரரையும் அறிமுகப்படுத்தினார். முழுக்க சித்தாரை  வைத்தே பாடலை முடித்திருப்பார் .

எல்லாருக்கும் பிடித்த "ஆயிரம் தாமரை மொட்டுகளே" பாடல் . இளையராஜாவின் ஒரு கலவை . கிராமிய கும்மியில் பெண்கள் கைதட்டலை ஆரம்பத்தில் போட்டு தொடர்ந்து மிருதங்க இசையுடன் மேலைத்தேய பாணியில் ஒரு கோரசையும் புகுத்தி இருப்பார் .  சிவபந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல் ஆனால் கும்மி போல அமையும். மேலைத்தேய பாணி , கர்நாடக இசைக்கருவிகள் கொண்ட கலவைப்பாடல் . ஜானகியின் தேன் குரலில் . "கோயிலில் காதல் தொழுகை " என்பது மிகப்பிடித்த வரிகள் .


கூடுதலாக இளையராஜா தனக்கு எழுதும் பாடல் வரிகளில் வரும் சத்தத்தையும் தனது இசையையும் கலந்து கொடுப்பார் . பபபப்ப பப்பபறி என்ற கமலகாசன் பட பாடலில் ." புது மாப்பிளைக்கு நல்ல நேரமடா " பாட்டில் . வரிகளின் சத்தத்தை எடுத்து பப்பபறி என்ற கோரசுடன் சேர்த்திருப்பார் .


மேலே கூறியது  போலவே "யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே " பாடலை போலவே கண்ணதாசன் எழுதிய மென்மையான சில வாத்தியங்கள் கொண்டு இசைக்கப்பட்ட பாட்டு . " கண்ணே கலை மானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே ". ஒரு சில வாத்தியங்களை மட்டும் கொண்டே தான் திறமையால் இசை அமைக்க முடியும் என காட்டிய பாடல்கள் . மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் . ஜேசுதாசின் அற்ப்புதமான குரலையும் காரணமாக கூறலாம் . 


எல்லா விதமாகவும் பாடல் பண்ண முடியும் என நிரூபித்தவர் இளையராஜா . கைதட்டலை வைத்தும் விரல் சுடக்குதலயும் வைத்தும் இசை கொண்டு வர முடியும் என நிரூபித்தார் . ரகுமானின் ஓமனப்பென்னே பாட்டிலும் காணலாம் .

"ராக்கம்மா கையத்தட்டு" பாடல் பாமர வரிகள் கொண்ட பாடல் . சாதாரண இசையில் கர்நாடக சாஸ்திரிய தேவார இசையையும் கொண்டு வந்தார் . சேர்த்தார் அதுவே இளையராஜா . பாமர வரியுடன் தேவார இசை மாறி மாறி வரும் . என்ன ஒரு கற்ப்பனை .    "புனிதத புருவமும் கொவ்வை செவ்வாயில் " தேவாரத்துக்கு இனிமையான இசை . தேவாரமும் பாமர இசையும் மாறி மாறி வரும் .

அடுத்த பதிவில் மேலும் இளையராஜாவால் நகைச்சுவையாகவும் இசை அமைக்க முடியும் எனவும் நிரூபித்துள்ளார் எவ்வாறு என்பது பற்றி பார்ப்போம் .

முதல் பதிவு
இரண்டாம் பதிவு 
மூன்றாம் பதிவு 

1 comments:

வளாகம் said...

இசையை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது...
ஆனால், தகவல்கள் ரசிக்கும் படி உள்ளன...
வாழ்த்துக்கள்...