இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் விஷ்வ பரிஷத்தும் , எந்த இந்து அமைப்பும் , சினிமா சங்கங்களுமோ நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை . தொட்டதுக்கெல்லாம் பெரிசாக்கும் அமைப்புகள் எங்க ?
உண்மையாக இறைவை அடைய தங்களை தாங்கள் கட்டுப்படுத்தல் என்பது தவிர்க்கமுடியாததொன்று . புத்த பெருமான் காட்டிய வழி. தன்னை அறிந்தவன் , தனது புலன்களை கட்டுப்படுத்தியவன் அவனுக்குள்ளே இறைவன் இருப்பதை அறிவான் . தன்னை அறிந்தவன் உலகத்தின் மர்ம முடிச்சுகளை அறிந்தவனாக இருப்பான். மக்களுக்கு இறைவனாக தெரிவான் .

அவ்வாறு தெரிந்தவர்களில் ஆனந்தாக்கள் தான் அதிகம். இதிலை ஒரு அர்ச்சகர் வேற அது தான் தேவானந்தன். ஆனந்தாக்கள் என்ட உடனேயே பிரேமானந்தா , தேவானந்தன் அந்த வரிசையிலை இப்ப நித்தியானந்தர் . தெரியாமல் எத்தினை ஆனந்தாக்களோ தெரியேல்ல.
கீழ முக்கியமான தலைகள் பற்றியும் இருக்கு
இப்ப எல்லாரும் எதுக்கு பயப்படுகினமோ தெரியேல்ல கட்டாயம் காமெராவுக்கு பயந்து நடுங்கிக்கொண்டு இருப்பாங்க. காமெராக்கள் சாமியார்களை மட்டும் வேவு பார்ப்பதில்லை. உள் நாட்டு அரசியல்ல இருந்து உலக அரசியல் வரைக்கும் வேவு பார்ப்பது தெரிந்த விஷயம்.
இதை கூட இறைவன் காட்டி கொடுக்கிறார் எண்டு சொல்லுறவங்களுக்கு , ஆனா எல்லாம் நடந்து முடிஞ்சா பிறகு காட்டிறார் எண்டு தான் தெரியவில்லை . விஷயத்துக்கு வாறன் .
சுவாமி நித்தியானந்தா , பிரேமானந்தா வரிசேல. 32 வயசு ஆகும் ஆகும் இவர் குமுதத்தில் "கதைவைத்திற காற்று வரட்டும் " எண்டெல்லாம் சுவாரசியமாக எழுதியவர் . உலகம் முழுக்க கிளைகள் எல்லாம் இருக்கு. அமெரிக்க இந்து பல்கலை கழக தலைவர் இவர். உலக ஆன்மீக ஒளி தான் எண்டும் சொன்னவர் .
டவுசர் கிழிஞ்ச சோக கதையையும் எல்லா பத்திரிகைகளிலும் எழுத் கிழிக்க வேண்டிய நிலைமை வந்திருக்கு . சக்தி வாய்ந்த ஊடகம் , மூலை முடுக்கெங்கும் போய் சேரும் ஊடகம் சன் தொலைக்காட்ச்சி சாதாரண நேரங்களில் தொல்லைக்காட்ச்சியாக இருந்தாலும் பிரயோசனமாக நித்தியானந்தரின் நித்தியா லீலைகளை அப்பிடியே போட்டு உடைச்சிட்டு.

சுவாமி நித்தியானந்தர் ஒரு தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சி. அதை சஸ்பென்ஸ் ஆக ஆர் என்ட எழுத்தில தொடங்கும் நடிகை என கூறியிருந்தது . அப்பிடியே அந்த நடிகை யார் எண்டு ஒரு வார இதழ் போட்டு அம்பலப்படுத்தீட்டு . ஊடகங்கள் துவைத்து காயப்போட்டு கொண்டிருக்கிறது .
தலையில் தூக்கி வைத்தாடும் இந்திய மக்கள் அதே நேரம் தூக்கி எறியவும் தயங்குவதில்லை . திரும்ப திரும்ப இவ்வாறான ஆசாமிகளிடம் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஒரு முதலீடு இல்லாத தொழில் ஆகவே அமையும் .
இவர் சும்மா டிரைலர் , மெயின் பிட்ச்சை நீங்க இன்னும் பாக்கேல்ல . இதே காவி உடையோட மிக பிரபலமானவர் இருக்கார் . காவி உடை இல்லாத ஜோடி வேற இருக்கு . அவங்க பெரிய இடம் . இந்திய அரசியல் பொருளாதாரமே அவங்களை நம்பி மறைமுகமா இருக்கு . அவங்களை எப்ப தூக்கி எறிய போறீங்க மக்களே ?
எழுதிக்கொண்டு இருக்கும் போதே பிந்தி கிடைத்த செய்திகள்

டெல்லியில் 5 இடங்களில்விபசார விடுதி நடத்திய சாய்பாபா கோவில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி அருகே வரய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த நாராயணா என்பவர், தெலுங்கு தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில், கல்கி ஆசிரமம் முக்தி, மகா தீட்சை என்ற பெயரில் பக்தர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து வருகிறது. கல்கி பகவானை நம்பி முக்திக்காக நான் ரூ.12 லட்சத்தை இழந்து விட்டேன். ஆசிரமத்தில் பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

பிரபல ஆசிரமமான கல்கி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு போதைப்பொருளை கொடுத்து மயக்கமடைய செய்வதாக எழுந்த புகாரால் அங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
அகம் பிரம்மாஸ்மி என்பது இந்து சமய விளக்கம் என்று சொல்லலாம் . உதவி செய்ய காவி உடையோ எதுவுமே தேவையில்லை . நீங்கள் நீங்கள் தான் கடவுள் . இன்னும் ஆனந்தாக்கள் தொடர்வார்கள் . தெரியாத ஆனந்தாக்கள் எத்தனையோ ?
0 comments:
Post a Comment