Tuesday, March 9, 2010

எல்லாரும் தமிழர் தானே?

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகமா ? அமையுமா ? நிருபாமா  கேட்டிருக்காங்க சம்மதம் தெரிவிக்கப்படுமா என பல கேள்விகள் மனதில் . நிறைய சந்தேகங்களும் வேற ..

தலைமை தூதரகம் என்னவோ கொழும்பிலை தான் . ஒரு துணைத்தூதரகம் ஒன்று கண்டியிலை இருக்கு . இன்னொரு துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்தில்  அமைக்க வேணும்  எண்டு இந்தியாவிண்ட விருப்பம். என்ன எண்ணமோ தெரியவில்லை . இந்திய  தூதரகம் அமைந்து விட்டால் எங்கட தமிழ் மக்கள் தொட்டது எல்லாத்துக்கும் கொழும்புக்கு வரோணும் எண்டு அவசியம்  இல்லை .

ஆரம்பத்திலை இருந்தே எனக்கு நிறைய எண்ணம் . சண்டை முடிஞ்சுதோ இல்லையோ . தமிழ் நாட்டு தமிழர்களையும் இலங்கை தமிழர்களையும்  ஒரு பாலத்தை இடையிலை போட்டு தரை வழியா இணைச்சிடுவம் எண்டு . என்னை பொறுத்த வரை தமிழன் என்று ஒரு இனம் தான் இருக்கோணும் . தமிழ் நாட்டு தமிழர்கள் யாழப்பாண மக்களுக்கு மிகவும் விருப்பம் எனவும் தெரியும் .

என்ன செய்யிறது எல்லாம் அரசியல் விளையாட்டு . மக்களுக்கு எப்ப புரியுதோ தெரியேல்ல . இது ஆரிய திராவிட பிரச்சனையா இந்தியா பாக்குதா எண்டு சந்தேகம் வேற .திராவிடர்கள் என்று பார்த்தால் நாம் எல்லாரும் ஒன்று தான் . அது நிறையவே மகிழ்ச்சி . இந்திய யாழப்பாண உறவு மேம்படுமோ என்னவோ தெரியவில்லை . தமிழ் நாட்டு யாழப்பாண உறவு மேம்படோனும் அது தான் வேணும் .  

சனாதிபதி அம்பான்தொட்டையிலை ஒரு விமான நிலையம் கட்டுறார் இருக்கிற பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் சேர்த்து . இவளவு தூரம் சம உரிமை சம உரிமை என்டுறாரே . வடக்கு கிழக்கிலை எதாவது ஒரு இடத்திலை விமான நிலையம் கட்ட மாட்டாரா எண்டு குறுக்கு யோசனை வேற . நிச்சயமா கட்டப்படாது . காட்டாயமாக யாழ்பாணம் மற்றும் தமிழர் ராச்சியம் தனியாக நிமிர்ந்து நிற்க்கும் என்பது உறுதி . தன்னிச்சையாக மாறி மீண்டும் அபிவிருத்தி நோக்கி மக்கள்  கொண்டு செல்வர் எண்டு நம்பிக்கை . 

பழைய படி கல்வி நிலைகளில் முன்னேற மீண்டும் பொறமை வரும் . மீண்டும் அழிப்பு இடம் பெறும் . இதெல்லாம் தேவை தானா ? கடைசி வரைக்கும் முழு உரிமை வழங்கப்பட போவதும் கிடையாது .ஏன் இந்த கால வீணடிப்பும் பூச்சாண்டி வேலையளுமோ தெரியேல்ல. தமிழ் நாட்டின் பங்களிப்பு ஒண்டுமே இல்லையெண்ட பிறகென்ன அங்க சேர்ந்த மாநில ஆட்சி . வடக்கின் அபிவிருத்திக்கு நேரடியாக தமிழ் நாடு முன்னின்று செய்ய முடியாதா ?

சீன ஆட்சி குறுக்கிடுவதே இந்தியாவின் அபிவிருத்தி தலைஈட்டிட்க்கு காரணம் . ஒரு அக்கறை மண்ணாங்கட்டியும் இல்லை . இலங்கை சீனாவின் பேச்சை கேட்டு ஆடுகிறது என்ற கோபமுமே . சீனா இந்தியா  இலங்கை பிரச்சனையே தவிர .. இதற்க்கும் தமிழருக்கும்  என்ன சம்மந்தம் ? தமிழரின் நிலத்தில் விளையாடுகிறோம் அவளவு தான் . தமிழ் நாடும் உலகமும் வேடிக்கை பார்க்கிறது . ஐரோப்பிய நாடுகளை தனது இறைமை என்று கூறி வர விடவுமில்லை . 

ஆசியன் கண்ணீர் விடுவது போல் முதலை கண்ணீர் வடித்தாலும் ஐரோப்பிய நாட்டவன் கொஞ்சமாவது கண்ணீர் விடுவான் . மக்களுக்காக உலக தைவர்கள் என்பதை மறந்து விட்டனர் போலும் . 

இலங்கையர்கள் ,இந்தியர்கள் தமிழர்கள் என்று வரும் போது ஏன் பிரிக்கிறார்கள் . ஈழ தமிழர்களுக்கு ஆதராவம் . ஏன் தமிழர்களுக்கு ஆதரவு என்றால் என்ன ? சின்னப்பிள்ளை தனமான கேள்வி என்றால் விட்டு விடுங்கள் ...  

2 comments:

வளாகம் said...

நல்ல பதிவு...
இந்தியா தூதுவராலயம் அமைக்க கேட்பது... யாழ் பகுதியை தனது கட்டு பாட்டில் வைத்து இருக்க தான்...
(எல்லாம் சீனா மீதான பயம் தான்... அவங்க பக்கத்துல வந்து ஆப்படிச்சிடக்கூடாதே... ஹி.. ஹீ...)
மற்றம் படி... தமிழரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியவங்க பலர்... தமது அரசியலையும், சுய வாழ்க்கையையும் பார்க்கவே டைம் சரியாகுது...
ஆனா.. ஒன்று... இன்னொரு அரை நூற்றாண்டில் தமிழ் மீதான பற்று நிச்சயம் குறையும்... ( இலங்கையிலும் சரி... இந்தியாவிலும் சரி...)
தற்போது... மொரிஸியஸ் தீவில் தமிழர்கள் (???) எப்படி தமிழை மறந்தார்களோ... அதே நிலை இலங்கையிலும் ஏற்படும்...
(தற்போதைய நிலை தொடர்ந்தாள்)

S.Sudharshan said...

சரியா சொல்லீடியல் . அழியாது அழியாது எண்டு எல்லாரும் சொல்லேக்கயே அழியப்போகுது எண்டு தெரியும் . தமிழனிடம் ஒற்றுமையை பார்க்க என்ன செய்யலாம் . ஒற்றுமையால் நிச்சயம் தமிழர்களை கட்டி எழுப்பலாம் . நாம் தமிழர் என்ற எண்ணம் வர வேண்டும்