இது வெறுமனே இந்து மதம் பற்றிய பதிவு அல்ல . இந்துசமயத்தை ஒரு மதம் என எடுத்துக்கொள்ளாது ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு அனைவரும் வாசிக்கலாம் .
இந்த காலத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக ஜாதிப்பிரச்சனைகள்,மொழிப்பிரச்சனைகள் . எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் .இதென்ன பிரச்சனை? அனைவர் மனதிலும் உள்ள பிரச்சனை அறியாமை . இந்து மதத்தை முழுமையாக அறியாமை . பாதி அறிந்தவன் பூசை மட்டும் செய்கிறான் , மீதி அறிந்தவன் விரதம் , வேண்டுதல் , நேத்திக்கடன் ,விழாக்கள் எடுக்கிறான் . முழுமையாக அறிந்தவன் கோபத்தில் தான் இருப்பான்.
இவ்வாறான பிரச்சனைகளை அணுக வேண்டுமானால் இந்து சமயம் அல்லது வேறு மதங்கள் தோன்றிய அடிப்படையில் போய் காரணத்தை தேட வேண்டும் . சமயங்கள் இறைவன் மனிதனுடைய பயத்தை போக்குவதட்க்காய் உருவாகியவை . மனிதனால் உருவாக்கப்பட்டவையே தவிர. மனிதனை மதங்கள் உருவாக்கவில்லை .
கவிஜர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தையும் எனது கருத்தையும் தொகுத்து கூறினால் மிக பொருத்தமாக இருக்கும் .
இந்த உலகம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதிலிருந்து மனித இனம் தோன்றிய காலம் ஒரு சிறு பகுதியே . மனித இனம் 50 ,௦௦௦ ஆண்டுகளுக்கு முதலிலேயே உருவாகியது அதில் ஒரு பகுதியே சமயங்கள் தோன்றியது என்பது பலர் மறுக்க முடியாத உண்மை . காட்டுமிராண்டியான மனிதனிடம் நாகரிகம் வளர காதலும் மதங்களும் உறுதியாக நின்றது யதார்த்தம். சட்டங்கள் எவ்வாறு தோன்றியதோ அதே போலவே மனிதன் வழி தவறாமல் இருக்க மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை . மதங்களின் பெயரால் மீண்டும் காட்டுமிராண்டிகள் ஆவது தான் ஒரே கவலை .
இதற்க்கு எல்லாம் காரணம் யாரோ எழுதிய புத்தகங்களும் யாரோ கூறிய வார்த்தைகளையும் சரியோ தவறோ என பார்க்காமல் மனிதன் பின் பற்றுவது தான் . அவை ஒன்றும் புதிய நூற்றாண்டில் எழுதப்படவில்லையே . வேண்டுமானால் அந்த காலகட்டத்துக்கு பொருந்தலாம் .
சரி கவிஜர் தனது பார்வையில் இந்து மதம் ஒரு மதமாக இருக்கவில்லை என்றும் ஒரு வழிபாட்டு முறைமை இருந்தது என்றும் கூறியுள்ளார் . உண்மையில் இந்தியாவில் தான் முதல் முதலாக வழிபாட்டு முறைமையோ அல்லது மதமோ தோற்றியதாக உலகம் ஏற்றுக்கொள்கிறது . இதிலிருந்து இந்து சமயம் அந்த பெயரை பெற முன்னரே வைணவம் , சைவம் என இரு வகைகளாகவே இருந்தது .
உண்மையில் எல்லா சமயங்களுக்கும் உருவாக்கியவர்கள் பெயர் உண்டு. இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டது கிறிஸ்தவ சமயம் , கவுதம புத்தரால் உருவாக்கப்பட்டது பவுத்த சமயம் . ஆனால் இந்து சமயத்துக்கு உருவாக்கியவரும் கிடையாது . யாராலும் உருவாக்கப்படவுமில்லை . ஒரு சமூக மக்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு முறை . இந்த ஒரு ஆதாரமே போதும் .
கிறிஸ்தவ சமயத்துக்கு எவ்வாறு புரட்டஸ்தாந்து சமயமோ அவ்வாறே இந்து சமயத்துக்கும் சமண சமயம் இருந்தது . ஆனால் இந்து சமயத்தை அழிக்க பல மதங்கள் உருவாக்கப்பட்டாலும் அவை அனித்தும் தாமே அழிந்தது தான் வரலாறு . ஆனால் இப்போதும் இந்து சமய அழிப்பில் பலர் சிக்கி வேறு மதங்களாக பிரிந்துள்ளனர் . ஒரே காரணம் வேறு சமயங்களை யாரும் குறை கூட சொல்ல முடியாது . ஆனால் இந்து சமயம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது கண்ணதாசன் கருத்து . இவளவு தூரம் விமர்சனங்கள் தாங்கி நிற்க்கிறது என்றால் எப்போதும் அழியாது .
மனிதன் ஒரு வழிபாட்டை சமூக வழிபாடாக மாற்றிய போது உருவாகியதே மதம் என்ற பெயர் . மனித மனோபாவத்தின் அடித்தளத்தில் இருந்து மத உணர்ச்சி தோன்றிய போது ஒரு இந்துவிட்க்கு இந்தியாவிலே எந்த உணர்ச்சி தோன்றியதோ அதே உணர்ச்சி அனைவருக்குமே தோன்றியது . ஒரு அடிப்படை மத உணர்ச்சி எப்படி இருந்ததோ அது அப்படியே கொண்டது தான் ஹிந்து மதம் .
சுவாமி விவேகானந்தர் வாக்குப்படி "மரணம் என்ற ஒன்று இருக்கின்ற வரையில் நீ விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில் விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில் ஈஸ்வரன் என்பவன் நீ விரும்புகிறாயோ இல்லையோ இருந்து கொண்டே இருப்பான்" . மனோதத்துவ ரீதியான தன்னை உணர்ந்தவன் கூறும் கருத்து இது .
லௌகீக வாழ்க்கை (கணவன் மனைவி ) முறைமை இருக்கும் ஒரே மதம் இந்து மதம் . இது பற்றி என்னுடைய் அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன் .



8 comments:
நல்ல முயற்சி
வாழ்த்துகள்
// இதிலிருந்து இந்து சமயம் அந்த பெயரை பெற முன்னரே வைணவம் , சைவம் என இரு வகைகளாகவே இருந்தது //
இரண்டு வகைகள் இல்லைப்பா, இது இரண்டு பெரும் பிரிவுகள், வாமம்,கபாலிகம், கோமுகம், சமணம்,அவுணம்,பவுத்தம்,என்று எண்ணற்ற பதிவுகள் இருந்தன.
சுதர்சன் படிப்பதில் இருந்து தெரிந்து கொண்டதை எழுதியிருக்கின்றீர்கள் நல்லது, அதில் இருந்து உணர்ந்து, நீங்கள் என்ன கிரகித்துக் கொண்டீர்கள் என்பதையும் எழுதுங்கள், கடவுள் யார், என்ன என்பதை நான் கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி என்று ஒரு தொடர் எழுதி வருகின்றேன் அதையும் படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். நன்றி.
நல்லப் பதிவு .அதிலும் விவேகானந்தர் சொன்ன வார்த்தைகள் அற்புதம்.
Sabarinathan Arthanari said...
நல்ல முயற்சி
வாழ்த்துகள்
நன்றிகள்... முடிந்த ஒரு சிறு முயற்சி .
பித்தனின் வாக்கு said...
//சுதர்சன் படிப்பதில் இருந்து தெரிந்து கொண்டதை எழுதியிருக்கின்றீர்கள் நல்லது, அதில் இருந்து உணர்ந்து, நீங்கள் என்ன கிரகித்துக் கொண்டீர்கள் என்பதையும் எழுதுங்கள்,//
எனது கருத்துகளையும் வைத்தே தொகுத்துள்ளேன் . வெறுமனே கண்ணதாசனை வைத்து மட்டும் எழுதவில்லை . எனது கருத்தை கூடுதலாக எழுதவில்லை . அடுத்த பதிவில் நிச்சயமாக இதை நிவர்த்தி செய்கிறேன் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் . வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே .
பித்தனின் வாக்கு said...
//கடவுள் யார், என்ன என்பதை நான் கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி என்று ஒரு தொடர் எழுதி வருகின்றேன் அதையும் படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்.//
அவ்வாறான ஆக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் . நிச்சயம் வாசித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன்
dhanabal. said...
//நல்லப் பதிவு .அதிலும் விவேகானந்தர் சொன்ன வார்த்தைகள் அற்புதம்//
நன்றி . விவேகானந்தர் வார்த்தை எப்போதும் யதார்த்தமாகவே இருக்கும் . ஒருவனுடைய மன நிலையில் இருந்தே இதைக்கூட சொல்லியுள்ளார் சுவாமி விவேகானதர்
இந்து மதத்தின் அழிவிற்கு காரணம் அதன் விமர்சனத்தன்மை என்பதை விட அதை புரிந்துகொள்ளும் அளவுக்கு எமது அறிவு வளரவில்லையே என்பது எனது வாதம்..இந்து சமயம் என்பது வெறுமனே ஒரு சமயம் அல்ல...அது ஒரு பரிபூரண வளர்ச்சி அடைந்த விஞ்ஞானம்...இது எனது விவாதம்..
Post a Comment