முன்னைய பதிவுகளில் இந்து சமயம் லவுகீக வாழ்க்கையின் ஒரு வழிகாட்டி மதமாக அமைந்துள்ளது என்ற பார்வையின் அடிப்படையில் கருத்துக்களை வழங்கியிருந்தேன் .
முன்னைய பதிவிற்க்கு :- Click here
இந்து சமயத்தை ஒரு மதமாக மற்றவர்கள் ஒப்புவித்தது போல பார்ப்பவன் மதம் மாறுகிறான் , மிகையாக விளங்கி விட்டது என்று எண்ணுபவன் தன்னுடைய சுய சிந்தனையை இழந்து விடுகிறான் . இந்து சமயத்தை அறிவியலுடன் பார்த்தால் , சரியாக காரணங்களுடன் விளங்கி கொண்டால் இது போல சிறந்த மதம் இல்லை எனலாம் .
வழி காட்டி மதம் , அறிவியலுடன் இணைந்த மதம் என்ற வகையில் பார்ப்போம் . அறிவியலை இழிவு படுத்தாத ஒரே மதம் . சிலர் உலகம் உருண்டை என சொன்ன போது ஏற்றுக்கொள்ளவில்லை . சிலர் இப்போது பிரபஞ்ச தோற்றமே ஒருவனே நடத்துகிறான் . எல்லாவற்றையும் கண்டு பிடித்த பின்னர் விளக்கம் சொல்லுகின்றனர் . சிலர் பரப்புரைகாக மதம் மாறி அதை பேட்டி வேறு கொடுக்கிறார்கள் .
லவுகீக வாழ்க்கையை விளக்கும் அடிப்படையாக எமது புராணங்கள் , இதிகாசங்கள் அமைந்தது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை . புராணங்களில் வரும் சில கதைகள் சாத்தியமா ? ராவவனனுக்கு 60 ,000 மனைவியர் என்பது சாத்தியமா ? எனவும் மற்றைய சில கேள்விகளும் எழலாம் .
எவ்வாறு சில காரியங்கள் கதைகளுக்கு வரலாறு உண்டோ அதே போலவே வரலாறுகளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது . முன்னர் எல்லாம் அச்சு முறை என்ற முறை இருக்கவில்லை . ஆகவே வரலாறுகள் நாம் பல காலங்களாக செவி வழியே கேட்டு வந்தது தான் . ஆகவே சிலவை திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் .
ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் ராமன் ஒரு மனைவி (ஏகபத்தினி விரதம்) கொண்டவன் . அதற்க்கு எதிர் மாறாக ராவணனை சித்தரித்தார்கள் . பல பெண்கள் மீது ஆசை கொள்பவன் வாழ்க்கை எவ்வாறு ? ஏகபத்தினி விரதம் கொண்ட ராமனின் வாழ்க்கை எவ்வாறு ? என்பதை இருவரையும் இரு வேறு துருவங்களாக சித்தரித்திருந்தனர் . சரியானதை தெரிவு செய்வது எமது கடமை .
இந்து மதத்தை சரியாக விளங்காதவர்கள் இந்து மதம் ஒரு சந்நியாச மதம் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் நம் இளைஞர்கள் நினைப்பதும் அவ்வாறே. ஆனால் இந்து மதமோ அதன்சரித்திரத்தில் குறிப்பிடுவது லவுகீக(குடும்ப) வாழ்க்கை , காதல் கதையாக இருக்கும் . வாழ்க்கையில் நடக்கும் இந்த விடயங்கள் கண்ணன் வாழ்க்கையிலும் சரி(கண்ணன் ராதை ) , ராமன் வாழ்க்கையிலும் சரி (ராமன் சீதா ) நாம் கேள்விப்பட்டவையே . வேறு எந்த மத புராணமோ எந்த வரலாறுமோ இறைவனின் காதலை கூறியதில்லை . நம் அன்றாட உணர்வுகள் வாழ்க்கையோடு அமையவில்லை . இந்து சமயம் மாத்திரமே வழிகாட்டுகிறது .
பெண்களையும் பிரதானமாக கொண்டு பெண்களுக்கும் இதிகாசங்களிலும் சரி புராணங்களிலும் சரி சமனான இடம் கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம் .
இந்துசமயத்தில் எவ்வாறு வாழ விரும்புவனுக்கும் வழி உள்ளது . வாழ்க்கையை வெறுத்தவனுக்கும் வழி உள்ளது , வாழ நினைப்பவனுக்கும் வழி உள்ளது . தற்ப்போது எமது மக்கள் முழுமையாக இந்து மதத்தை விளங்கா விட்டாலும் (மத மாற்றம் ). ஆங்கிலத்தில் மொழி மாற்றி கூறும் போது அதனை மேலைத்தேய மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவில் இந்துக்கள் விகிதம் அதிகரிப்பதாக கருத்து கணிப்பு ஒன்று கூறகிறது .
நம்மை சுற்றி அமைந்த இந்து சமயம் அனைவரும் கண்ணால் காணும் ஐம்பூதங்களின் அடிப்படையில் அமைந்து உள்ளது . சரி இறைவனே இல்லை எதுவுமே இல்லைஎன்பவன் ஐம்பூதங்களின் சக்தியை கட்டாயம் மதித்தே ஆவான் .
இந்து சமயத்தில் ஒரு குறையாக அனைவருக்கும் தெரியாமல் இந்து சயத்தில் செய்யப்படும் சடங்குகள் , முறைகள் . அதை தெரியாமல் மிகைப்படுத்தி சிந்திக்கும் போது செய்யும் போது வெளியில் இருப்பவர்களுக்கு நகைப்பாகவும் மூட நம்பிக்கை எனவும் எண்ணத்தோன்றும் .
எவ்வாறு மேல கூறிய அனைத்திற்க்கும் காரணம் விளக்கங்கள் உண்டோ அதே போல இவற்றிட்க்கும் விளக்கம் உண்டு . அதனை அடுத்த பதிவில் பார்க்கலாம் .
யாரவது அறிவியலுடன் இதிகாசங்களை அல்லது இந்து மதத்தை தொடர்பு படுத்தி தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்



9 comments:
nalla eluthareenga nalla sevai
சுப்பர் ஆர்டிகல்...
அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறோம்...
*****
நான் எனது லெமூரியா பதிவில்... ஒப்பிட்டு எழுதி இருந்தேன்...
இன்னும் எழுதனும்...
LK said...
//nalla eluthareenga nalla sevai//
ஊக்கத்திக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்
ஏதொ முடிந்தது
வளாகம் said...
//சுப்பர் ஆர்டிகல்...
அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறோம்.//
நன்றி . தொடர்ந்து எழுதிகிறேன் பிரபு .
//லெமூரியா பதிவில் ஒப்பிட்டு எழுதி இருந்தேன். இன்னும் எழுதனும்...//
ஆம் வாசித்தேன் . மேலும் தொகுப்புகளை எதிர் பார்க்கிறேன் .
உலகில் ஒவ்வொரு மதத்திற்கும் ஆள் சேர்க்கிறார்கள்.ஆனால் எல்லோரும் இறுதில் சங்கமிக்கும் மதம் எம் மதமான இந்து மதமே.......சிவ சிவ
எல்லாம் மாறும் said...
//உலகில் ஒவ்வொரு மதத்திற்கும் ஆள் சேர்க்கிறார்கள்.ஆனால் எல்லோரும் இறுதில் சங்கமிக்கும் மதம் எம் மதமான இந்து மதமே//
புரிந்து கொள்ளாமலே மாயைகளை பார்த்து மாறுபவர்களை நினைக்க தான் கவலையாக உள்ளது
உங்கள் பதிவுகளில் விடயங்களை கொஞ்சம் கொஞ்சம் செறிவுபடுத்தலாம்...
Selva, u need to understand, either Ramaynam or Mahabaratham are myths. It's not realy happended. Just imagination only.
you are writing only Hindu relgion is related to the science,give me proof, where and how and when.
Idol workship is really bad!, u r worshipping, cow, cock, snake, so on. come out think differently.
யார் என்று காட்டிக்கொள்ளாத அனானிக்கு வணக்கம் ..
முழு பதிவுகளையும் தொடராக வாசிக்கவும் .. இந்து சமயம் விஞ்ஞானத்தோடு தொடர்புடையது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு .. இதில் விளங்கப்படுத்த இயலாது ஒரு இரு வார்த்தைகளில் ,.....தொடர்ந்து வாசிக்கக்வும்
Post a Comment