தொடருபவர்கள் - நன்றிகள்

Sunday, April 18, 2010

சென்னை எதிர்பாராத இறுதி வெற்றியும் முன்னைய தோனியும் ஒழுங்கான பதிவும்

ஒரு வேண்டுகோள் 

தேவையற்ற பிரயோசனம் இல்லாத பதிவுகளுக்கு மத்தியில் ஒரு பதிவரின் ஒழுங்கான மனிதாபிமான பதிவை அனைத்தையும் மாற்றக்கூடிய பதிவை  பார்த்தேன் . பிரபல பதிவர்கள் (சிலர் ) தம்மைத்தாமே புகழ்ந்து தள்ளிக்கொண்டும் மாறி மாறி பிரபலமும் தேடும் போது ஒரு நல்ல தேவையான பதிவு .
உங்களால் முடிந்த மாற்றத்தை ஊடகங்களில் ஏற்ப்படுத்துங்கள் .
செய்திகள் மக்களுக்கு வெளி வரவேண்டும்  .....

==================================================================================
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இக்கட்டான நிலையில் இருந்து மீண்டும் அரை இறுதிக்கும் நுழையும் வாய்ப்பு இந்த போட்டியை வெற்றி கொண்டால் கிடைக்கும் என இருந்தது. காரணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இடம் காணப்பட்ட சராசரி ஓட்ட விகிதம் . இவ்வாறு எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் இன்றைய போட்டியில் கிங்க்ஸ் லேவேன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டது . 54 ஆவது போட்டி தர்மசாலாவில் நடை பெற்றது .



நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார் . இன்று வழமைக்கு மாறாக மகேல ஜெயவர்தன  ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார் . காரணம் அண்மைய பெறுபேறுகளில் சிறந்து விளங்கியமை.  கிளாஸ் பிளேயரின் அதிரடி தான் சந்தித்த முதல் 8 பந்துகளிலும் 21 ஓட்டங்களை( 2 சிக்சர்கள்  ) பெற்றார் . மர்ஷும் சங்கக்காரவும் பலமான அடித்தளத்தை பத்து ஓவர்கள் வரை கொண்டு சென்றனர் . சங்கக்காரவின் ஆட்டமிழப்பிட்க்கு  பின் வந்த யுவராஜ் சிங்கும்(1 ஓட்டம் )  ஆட்டமிழந்து செல்ல வந்த இர்பான் பதான் மார்ஷுடன் ஜோடி சேர்ந்து பலமாக அடித்தாடினர்.  மார்ஸ் 88 ஓட்டங்களும் , பதான் 44 ஓட்டங்களையும் பெற்று இறுதி  வரை ஆட்டமிழக்காது (இணைப்பாட்டம் 99 )ஆடினர்.   பந்து வீச்சில் இன்று போலிங்கேறும் பிரகாசிக்கவில்லை . மார்ஷின் சிறப்பான அதிரடி துடுப்பாட்டம் பஞ்சாப் அணியை 192 /3 என்ற உயரிய ஓட்ட இலக்கை அடைய வைத்தனர் .



கூடிய இலக்கு ஆகையால் வெற்றி பெற்றால் சராசரி ஓட்ட எண்ணிக்கையும் கூடும் என இருந்தது .192 என்ற இலக்கை வைத்து வழமை போல ஹெய்டன் விஜயோடு ஆரம்பித்த சென்னை அணி . ஆரம்ப ஓவரிலேயே ஒரு ஓட்டத்தையே  பெற்றது . ஹைடனின் வழமையான மோசமான துடுப்பெடுத்தாட்டத்தை இங்கும் காணமுடிந்தது . 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் .   அடுத்ததாக இறங்கிய ரைனா ( இறுதியில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட பட்டியலில் இடம் பெற்று விட்டார் ). தனது காலை உபயோகித்து அருமையான துடுப்பாட்டத்தை பிரயோகித்து வரும் ராயினா பியுவர் (தூய ) கிளாஸ் ஷொட்களை அடிப்பதை காண முடிகிறது . நம்பிக்கையான போர்மில் இருந்த ராயினா(46  ஓட்டங்கள்  )அணியை மீண்டும் வெற்றிக்கு பத்ரினாத்துடன்(53 )(நீண்ட கால இடைவெளிக்கு பின்னான அதிரடி ) இணைந்து பலமான நிலைக்கு இட்டுச்சென்றனர் . 

ராயினா ஆட்டமிழக்க ஆடுகளத்துக்கு வந்த டோனி யை பார்த்ததும் வழமை போல இந்த போட்டியிலும்  சறுக்கல் என நினைத்து தோனியை கவனிக்கவில்லை . ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக ஆடிய டோனி இறுதியில் பழைய தோனியை காட்டி  சென்னையை அதிரடியாக வெற்றி பெற செய்தார் . 
இறுதி ஓவரில் கூட 6 பந்துகளில் 19 ஓட்டங்கள் பெறவேண்டி இருந்தது . இந்த தோல்வியும்  தோனியின் மெதுவான ஆட்டத்தால் இடம் பெரும் என்று எண்ணத்தோன்றியது . ஆனால் இறுதியில் ஒரு 4 ஓட்டம் 2  சிக்செர்கள் அடங்கலாக இரு பந்துகள் மிகுதி இருக்க போட்டியை (195 /4 )வென்றார் டோனி . 

போட்டிக்கு வந்த தல்யிலாமா 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது . (+o .27 ) என்ற ஓட்ட விகிதத்துடன் அரை இறுதி போட்டிகளுக்குள் இடம் பிடித்தது சென்னை . 

ஆட்ட நாயகனாக எம் எஸ் டோனி தெரிவு .


ஒரு வேண்டுகோள் 

தேவையற்ற பிரயோசனம் இல்லாத பதிவுகளுக்கு மத்தியில் ஒரு பதிவரின் ஒழுங்கான மனிதாபிமான பதிவை அனைத்தையும் மாற்றக்கூடிய பதிவை  பார்த்தேன் . பிரபல பதிவர்கள் (சிலர் ) தம்மைத்தாமே புகழ்ந்து தள்ளிக்கொண்டும் மாறி மாறி பிரபலமும் தேடும் போது ஒரு நல்ல தேவையான பதிவு .
உங்களால் முடிந்த மாற்றத்தை ஊடகங்களில் ஏற்ப்படுத்துங்கள் .
செய்திகள் மக்களுக்கு வெளி வரவேண்டும்  ..... 

0 comments:

ஏன் ?