விவேக் சொன்ன மாதிரி இது வரைக்கும் நாங்க கக்கூஸ் சுவரிலையும் கரீலையும் தானேட தமிழை வளர்த்தோம் .
முதலில் அறிவியல் , தகவல்கள் மற்றும் சிறப்பான தேவையான பதிவுகளை வழங்கும் பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு இருபது முப்பது ஆண்டுகள் கழித்து குழந்தைகள் கூகிளில் தேடும் போது தமிழில் அறிவியல் தகவல்கள் உங்களால் கிடைக்கப்போகிறது அதுவும் தமிழில் . இது தான் ஒரு வித தமிழின் வளர்ச்சி .
ஒரு இனத்தின் அடையாளமான மொழி இருக்க அந்த இனத்தை அழித்து விட்டு மொழி மொழி என்று கத்தினால் .. அது செம்மொழி மாநாடா ?
என்ன நடந்தது இந்த முறை செம்மொழி மாநாடு ?
இவளவு குறைகள் கண்டு பிடிக்கும் தமிழ் ஆர்வலர்கள் மேடையில் கருணாநிதியை எவராவது கதைத்தார்களா ?
இந்த முறை என்ன அதே உரை " ஆண்டாண்டு காலமாக தொன்மையும் வன்மையும் எண்டு " ஆனா அதை கதைக்கிறவன் பிள்ளை ஆங்கில பாடசாலையில் படிக்கும் .
அதே பழைய தேவாரமும் , திருவாசகமும் உரையும் .அதுவும் பாதி பேர் தூக்கம் ...
வெளிநாட்டில் இருந்து தமிழ் பேராசிரியர்கள் வருகை !!!!!!! - பென்ஷன் கிடைத்த உடன் அங்கே சென்று இருந்தவர்கள் எல்லாம் இப்போது இங்கே .. தமிழன் நாடுகளில் இல்லை ..
ஒரு மென்பொருள் ஆய்வாளர்களை அழைத்து தமிழை இணையத்தில் கணனியில் , மென்பொருள்களில் , எவ்வாறு முன்னேற்றுவது என்று எவனாவது கதைத்தான ? சிந்தித்தார்களா ? பழைய ஓலை சுவடியை எப்பிடி பாது காப்பது எண்டு டிஸ்கஸ் பண்ணியிருப்பாங்க ..
ஒரு இனம் அழியும் போது குரல் கொடுக்காத மொழி ஆர்வலர்கள் ஏதோ ரகுமானின் பாட்டில் பிழை வந்து விட்டதாம் ..
இவனுங்களுக்கு ஆஸ்கார் கிடைச்சிருந்தா அந்த மேடையில் என்ன மொழி கதைச்சிருப்பாணுங்கள் எண்டு குழந்தைக்கு கூட தெரியும் . ஆங்கிலம் தெரியுதோ இல்லையோ அவித்து விட்டிருப்பாணுங்கள் . ஆனால் ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைத்தது ஆங்கில திரைப்பட பாடலுக்கு ... ஆஸ்கார் மேடையில் தமிழ் பேச வேண்டிய அவசியம் ரகுமானுக்கு இருந்திருக்கவில்லை . ஆனால் பேசினார் ...
"யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளை பிழையாக பாடி விட்டாராம் . உங்க பற்றுக்கு ஒரு அளவே இல்லையாடா ?
குறைகளை கண்டு பிடிக்கிறதை விட்டுடு போய் பிரெஞ்சு காரன் மாதிரி மொழியை பரப்ப ஏதாவது முறை இருந்தா செய்யுங்கடா ...
ரகுமான் நாதஸ்வரம் மேளம் பாவிக்கவில்லையாம். பாவித்திருக்கிறாரே .. எமது பாடல் முறையும் உள்ளதே . 5 விதமான பாடல் முறைகள் உள்ளது . தனியே நாதஸ்வரம் பாவித்து தமிழ் இசையில் வழங்கியிருந்தால் , உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பேர் எத்தனை தடவை கேட்டிருப்பீர்கள் பாடலை ?
அந்த பாடல் மொழி கடந்து அனைவரையும் அடைந்துள்ளது . வேற்று மொழி நண்பர்(சிங்களவர் ) ஒருவர் கேட்க்கிறார் அருமையான இசை . வரிகள் விளங்காதது கவலை என்றார் . பெருமையாக கூறினேன் . எமது தமிழ் மாநாடு பாடல் என்று ... இந்த பாடல்கள் அனைத்து மொழி மக்களையும் சென்றடைந்துள்ளது . தமிழ் தெரியவில்லை என புலம்புகின்றனர் .
மற்றும் தமிழின் உச்சரிப்புகள் அழுத்தம் திருத்தமாக உள்ளது . தமிழ் மொழியை எந்த மொழிக்கு ஏற்பவும் மாற்றமுடியும் என காட்டியுள்ளார் .
எதிரியின் ஆயுதம்
மொழியின் அதுவும் தமிழ் மொழியின் எதிரி பெரும்பாலும் ஆங்கிலமே . எதிரியை எதிரியின் ஆயுதத்தால் தாக்குவது தவறில்லை . தமிழின் பெருமையை தமிழனுக்கே எத்தனை காலங்கள் கூறிக்கொண்டிருப்பீர்கள் ? இப்பிடி தனித்துவம் என்று என்ன கிழித்தீர்கள் .? ஆங்கிலேயனுக்கு தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் தானே எடுத்து கூற முடியும் . அடிப்படை எண்ணம் கூட தெரியாத ..... அதில் தனித்துவம் கெட்டுவிடாது .
போய் உள்ளுக்குள்ளயே குதிரை ஒட்டாம போய் வேற வளர்க்கிற முறைகளை நவீன முறையில் யோசியுங்கப்பா...
மறக்காம ஓட்டையும் போட்டிருங்க .. பிழையான கருத்துகள் பரவுகிறது .
2 comments:
உங்கள் ஆதங்கம் ஆக்ரோஷம் நியாயமானது ....
...கக்கூஸ் சுவர் = மலசல கூட சுவர்
மிகவும் நன்றி நிலாமதி ....
அது சரி ..முழுவதும் தூய தமிழில் எழுதினாலும் வாசிக்க மாட்டேன் என்கிறார்களே !! என்ன செய்வது
Post a Comment