ஆனால் ப்லோக்கேர்கள் நான் பார்த்தவரை ஒரு ரூபாய் இலாபம் கூட இல்லாது, விருது பெறும் ஆசை கூட இல்லாது, தன் புகழ் பாடாது எவளவோ பெரிய விடயங்களை கூட மிக எளிமையாக ஒரு இரு வசனங்களில் தமது ப்ளாக்களில் எழுதி விட்டு போய் விடுவர். ஆனால் மிக பெரிய இலக்கியவாதிகள் தமது அதி மேதாவிதனத்தை காட்ட வேறுபட்ட எதிர் மறை பார்வையை தமது பிரபலத்துக்கு பாமரன் மீது திணிப்பவர்கள் .
அண்மையில் ஒரு எழுத்தாளர் என்று தன்னை கூறிக்கொள்பவர் இலக்கிய உலகம் அடிதடி சண்டையில் தான் ஆர்வம் செலுத்துகிறது என்று ஒருவர் கூறிய ஆரோக்கியமான கருத்தை தூக்கி பிடித்து பெரிதாக்கி உள்ளார் . இவரை தான் கூறியுள்ளார் என புரியவில்லையோ என்னவோ ?
ப்லோகேர் பற்றிய அவரின் கருத்து ....
நான் இன்று விகடனில் எழுதுகிறேன் என்றால் அதற்குப் பின்னே என்னுடைய 35 ஆண்டுக்கால உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பு எதுவும் இல்லாமல் நொடியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்து விட்டு அதில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்க்ளைப் போல் இஷ்டப்படி எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்கள். சினிமா, அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்று எதையுமே விட்டு வைப்பதில்லை. அது மட்டுமல்ல; இரண்டு ஆண்டுகளாக ப்ளாகில் எழுதுபவர் நானும் என் சக எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் என்று கட்டுரையை ஆரம்பிக்கிறார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? சரி, நான் கேட்கிறேன். கணினி, இண்டர்நெட் ஆகியவற்றை ஒரு டாக்டரும் பயன்படுத்துகிறார். ஒரு எஞ்சினியரும் பயன்படுத்துகிறார். ஆனால் ஒரு மனிதர் இண்டர்நெட்டை மட்டுமே பயன்படுத்தி நான் டாக்டராகி விட்டேன், எஞ்சினியர் ஆகி விட்டேன் என்று சொல்வதில்லை. ஆனால் இண்டர்நெட் என்ற ஒன்று ஓசியில் கிடைத்து விட்ட காரணத்தினாலேயே அதில் ஒரு சினிமா விமர்சனத்தை எழுதி விட்டு ஒருவர் எழுத்தாளர் ஆகி விடுகிறார்.
ஒரு எழுத்தாளனோ அல்லது சமூக சிந்தனையாளனாகவோ இருக்க இலக்கியம் தெரிந்திருக்க தேவையில்லை . இலக்கியம் தெரிந்தவர்கள் எல்லோரும் சிந்தனையில் நோக்கில் சிறந்தவர்கள் என்றில்லை . இலக்கியம் தெரியாதவர்கள் சிந்தனை அற்றவர்கள் என்றும் இல்லை .
மொழிக்கும் சிந்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை .
உவமானங்கள் கையாள தெரிந்திருக்கலாம் மொழி நடை தெரிந்திருக்கலாம் ஆனால் அதிமேதாவிகளை போல எண்ணும் சிலர் சிறந்த சிந்தனையாளர்கள் என்று சொல்ல மாட்டேன் . சிறந்த சமூக நோக்கு பார்வையாளர்கள் எவளவோ பேர் ப்ளக் இல் இருக்கிறார்கள் .
ஒருமுறை ஒரு ’பின்நவீனத்துவ்வாதி’ என் முகத்தில் குத்து விட்டு பல் ஒன்றை உடைத்தார்.
சபாஷ் ........
தான் யானையாம் .....
"ஸ்டீஃபன் ஹாகிங்கை எதேச்சையாக சந்திக்க நேர்ந்த ஒரு ப்ரைமரி ஸ்கூல் டீச்சர் “என்ன ஸ்டீஃபன்… இப்போதெல்லாம் ஒன்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே நடப்பதில்லையே? எல்லா விஞ்ஞானிகளும் செமினார் அது இது என்று சொல்லிக் கொண்டு கூத்தடிக்கிறார்களே தவிர உருப்படியாக ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே?” என்று சொன்னால் ஸ்டீஃபன் ஹாகிங்குக்கு எப்படி இருக்கும்?"
ஸ்டீஃபன் ஹவ்கிங் பற்றி என்ன தெரியுமோ தெரியாது . அவரினதும் கார்ல் சாகநினதும் அறிவியல் சிந்தனைகள் வித்தியாசமான அறிவியல் பார்வை பற்றி என்ன தெரியுமோ தெரியாது ஆனால் ஸ்டீஃபன் ஹவ்கிங் ஐயும் விட்டு வைக்கேல்ல .. இவர் stephan ஹவ்கிங் ஆம் .
எழுத்தாளர் என்பவரின் பதில் .
அரே பச்சா; நான் சொல்வதை நன்றாக்க் கேட்டுக் கொள். நான் சண்டைக்குப் போனால் மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்களோடுதான் சண்டைக்குப் போவேனே தவிர உன்னை மாதிரி பச்சாக்களோடு அல்ல…
இவாறானவர்களுடன் சண்டைக்கு போனால் தான் கிடைக்காத அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் .
இப்போது நாம் ஜனாதிபதி பரிசு என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாம். ப்ரைமரி ஸ்கூல்களில் நன்றாகப் படித்து, கிருத்திருவம் எதுவும் செய்யாத பசங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் என்று சொல்லி சிலேட்டும் பலப்பமும் கொடுப்பார்கள். அந்த மாதிரி அவார்ட் வாங்கும் பசங்கள் பின்னாளில் உருப்படவே உருப்படாது. அது போன்ற அவார்டு தான் ஜனாதிபதி அவார்டு. உதாரணமாக, சிரிப்பு நடிகர் விவேக் பத்ம ஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…
விளக்கம் சொல்லீட்டாரு ....இவருக்கு ஜனாதிபதி விருது கிடைக்கவில்லை என்று எரிச்சலோ தெரியவில்லை .
ஆனால் ஒன்று இவ்வாறானவர்களுக்கு கமல்ஹாசனையும் விவேக்கையும் பிடிக்காது என்ற கருத்து உண்மையாகி விட்டது . ஜெயமோகன் எழுத்துக்களை கமல் வாசிப்பதால் கமல் மீதும் கோபம் இந்த மனுஷனுக்கு . கமலின் பார்வையும் பிடித்திருக்காது .
விவேக் , கமல் போன்றோர் திரைப்படங்களிலும் சரி சாதாரணமாகவும் சரி சிறந்த பொது நோக்காளர்கள் . இதனாலோ என்னவோ கூடுதலானோருக்கு பிடிப்பதில்லை .
நீயா நானா கோபிநாத்திடம் ஒருமுறை மாட்டுப்பட்ட போதே வெளிப்படையாக சொன்னார் நித்தியானதனுக்கு ஆதரவு செய்தது தவறு என்று . அதை கூட கோபிநாத் துருவி கேட்ட பின்பே சொன்னார் .
சரி, என் மடிக்கணினியில் பேட்டரி தீர்ந்து விட்ட்து..
பினிஷிங் தான் டாப் ..... தன்னிடம் மடிக்கணணி இருக்காம் ...
கூர்க் சென்று கொண்டிருக்கும்போது காரில் அமர்ந்தபடி டைப் செய்தேன்.
அட காரும் இருக்காம் ....
இவ்வாறானவர்களின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு சென்றுவிடலாம் ஆனால் இவற்றை வாசிப்பவர்களை தவறான பார்வையில் இட்டு செல்லும் .
4 comments:
கக்கூசில் கிறுக்கும் ரகம் இந்த ஆள்.
@basheer..
haha..
thannai thane pugalundhu kolvadhil enna inbamirundhu vida mudium!!! :)
அட விடுங்க, அதைப் பற்றி எழுதி ஏன் உங்கள் நேரத்தை வேஸ்ட் பன்றீங்க??
Post a Comment