தொடருபவர்கள் - நன்றிகள்

Wednesday, August 11, 2010

எம் உடல் பற்றி எமக்கே தெரியாதவை...

இன்று கொஞ்சம் உடல் சம்மந்தமாக எமக்கே தெரியாத ஷாக் ஆன  சில விடயங்களை  தொகுத்துள்ளேன் ... சகித்துக்கொண்டு வாசிக்கவும் . 
=========================================================================
உங்களுடைய அடையாளம் மறைக்க வேண்டும் என்றால் நாக்கை வெளியில் நீட்டாதீங்க . கை விரல் அடையாளம் போல ஒவ்வொருவருக்கும் நாக்கிலும் தனிப்பட்ட ரேகைகள் போல அடையாளம் உண்டு .
 




உங்கள் செல்லப்பிராணி மட்டும் தனது முடிகளை உதிர்ப்பது இல்லை . மனிதன் ஒரு மணித்தியாலத்திற்கு 600 ,000  உடல் கலங்களை உதிர்க்கிறான் . அதுவும்  கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 1 .5 பவுண்ட்ஸ் எடை கொண்ட  கலங்கள் உதிர்க்கிறான் . 60 வயதை அடையும் போது 105 பவுண்ட்ஸ் எடை கொண்ட நிறையை இழக்கிறான்(தோல் உதிர்வின் மூலம் ) . - யாராவது உங்கடை செல்ல பிராணியை வீட்டை விட்டு அதை அடிச்சு துரத்துன்னு சொன்னா இந்த தகவலை சொல்லுங்க . 




வயதானவருக்கு குழந்தைகளை விட குறைவான எலும்புகளின் எண்ணிக்கையே உண்டு . 350 எலும்புகளுடன் ஆரம்பிக்கும் குழந்தை , வாதன பின்னர் 206 எலும்புகளுடனேயே காணப்படும் . எலும்புகள் பிணைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் குறைகின்றன .




ஒவ்வொரு  3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை புதிய (stomach lining ) . அப்படி நடைபெறாவிட்டால் உணவுகளை செமிபாடடைய செய்யும்  ஆசிட்ஸ் விரையும் செமிபாடடைய செய்யும் .




எமது மூக்கு நாயின் மூக்கு போல சிறப்பானதாக இல்லாவிட்டாலும் 50 ,௦௦௦ வாசனைகள் வரை ஞாபகம்  வைத்திருக்கும் .


எமது உடலில் ஒவ்வொரு சிறிய அலகு பரப்புக்கும் 32 மில்லியன் பட்டீரியாக்கள் உண்டு .  இதில் என்ன நல்ல விஷயம்ன அதில் பெரும்பாலானவை தீங்கு விளைவிக்காதவை .. - இதை எழுதும் போதே ஒரு மாதிரியா தான் இருந்திச்சு . :)




கூடுதலாக அடி பாதங்கள் துர்நாற்றம் வீசுவதற்கு காரணம் உண்டு . சாக்ஸ் களட்டினாலே  தாங்க முடியாதுன்னு சொல்லுவாங்க . அதில் மொத்தம் 500 ,௦௦௦ வியர்வைக்கலங்கள் இருக்காம் . 


ஒரு  மனிதன் தும்மும் போது வரும் காற்றின் வேகம் 100 மைல்களாம் . இதூ தான் மூக்கை வாயை மூடி தும்முங்க என்றது . யாராவது தும்மும் சத்தம் கேட்டாலே மூடி விடுவது நல்லது . 




கிட்டத்தட்ட  60 ,௦௦௦ மைல் தூரத்துக்கு குருதி கலங்கள் காணப்படுகின்றன . அதுவும் ஆரோக்கியமான ஒரு இதயம் ஒரு நாளைக்கு 2000 கலன்கள் ரத்தத்தை பாய்ச்சுகின்றன  .  


ஒரு மனிதன் வாழ்நாளில் வெளிவிடும் எச்சில் 25 ,௦௦௦ குவார்ட்ஸ்(ஒரு குவார்ட்ஸ் 1/2 கலோன் ) ஆம் . விவேக் சொன்ன மாதிரி இதுவரைக்கும் துப்பிந்தேல்லாம் சேமிச்சு வைச்சிருந்தா முப்போகம்  விளைஞ்சிருக்கும்னு . 




மறக்காம ஓட்டையும் போட்ருங்க .. எல்லோரும் இந்த தகவலை படிக்கட்டும்

0 comments:

ஏன் ?