தமிழை வைத்து அரசியல் நடாத்தும் யுகத்தில் தமிழ் இலக்கியவான்கள் , தமிழ் பண்டிதர்களின் கையில் தமிழ் நெரிபடும் போது , வெறுமனே தமிழின் அழகை பார்த்து தமிழ் இனிமை பார்த்து தமிழ் மீது காதல் கொண்டு தமிழை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க தொடர்ந்து பாடுபடும் தமிழ் ஆர்வலர்கள் இன்றும் தொடர்கின்றனர் .....
அவர்களில் ஒருவர் தான் "செல்லினம்" எனும் தமிழ் செயலியை அறிமுகப்படுத்தியவரும் தற்ப்போது ஐ போன் 4 இல் தமிழ் மொழியை உட்புகுத்தியவருமான முத்து நெடுமாறன் எனும் கணிஞர். தொழிநுட்பத்தில் தமிழை புகுத்தி அதை இன்னொரு படி நிலைக்கு உயர எடுத்து செல்ல பாடுபடுபவர் .
தொழிநுட்பத்தில் இனிவரும் புதிய புதிய தொழில்நுட்பங்களில் எப்படி தமிழை புகுத்தலாம் என சிந்தனையில் மட்டுமல்லாது செயலிலும் வடிவம் கொடுத்துள்ளார் . இவரது குறிக்கோள் எதிர்கால மற்றும் நவீன தொழில்நுட்பப முறைகளிலும் நவீன காலத்தில் பாவனைக்கு வரும் வந்துகொண்டிருக்கும் எதிர்காலத்தில் வரும் ஐ போன் ஐ பட் போன்றவற்றில் தமிழை ஏற்றுவது . ஆனால் முயற்ச்சியில் தளரவில்லை தற்ப்போதைய ஐ போன் 4 வெளியீட்டில் தமிழையும் பாவனைக்கு உட்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளார் .
தொடர்ந்து பல தமிழ் மென்பொருள்களையும் உருவாக்கியவர் உருவாக்கிக்கொண்டு இருப்பவர் .
அவருடைய கருத்து " அடுத்து என்ன தொழில்நுட்பம் வரப்போகிறது அடுத்து வருகிற தொழில்நுட்பப மேம்பாடு எந்தவகையில் ஆட்சி புரியப்போகிறது என்பதை அறிந்து அதை தமிழில் கொண்டு வர வேண்டும் என்பது பற்றியே என்னுடைய எனது குழுவின் எண்ணம் " என தெரிவித்திருந்தார் .
தான் தமிழ் இலக்கியவாதி இல்லாவிட்டாலும் தமிழ் மீது தமிழ் எழுத்தின் மீது தனக்கு நீண்ட கால காதல் இருப்பதாக தெரிவித்தவர் தமிழ் எழுத்துருக்களை அழகிய வடிவில் தன்னால் கணனியில் ஏற்றமுடியும் என்றும் நம்பிக்கை கொண்டு அதனை செயல்ப்படுத்தியும் உள்ளார் .
ஆனாலும் இதன் பாவனையை தமிழர்களிடையே அறிமுகப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் சில காலங்களில் இது முழு பயன்பாட்டையும் பெறும் என்பதில ஐயமில்லை . தமிழின் வளர்ச்சிக்கு தமிழை தொழில்நுட்பத்தில் புகுத்தும் திட்டம் நிச்சயம் கைகொடுக்கும் .
தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரின் சீர்குலைக்கும் நபர்களிடையே முத்து போன்ற முத்துகள் மிகவும் அரிது .அவற்றை நாமே இனம் காண வேண்டும் . தமிழ் மொழி மாநாட்டில் இதற்க்கு ஒரு மூளை ஒதுக்கி இருந்தாலும் காலத்தின் தேவை இதுவேயாகும் .
தொழில்நுட்பத்தில் தமிழன் தமிழனாகவே வளர்வது பெருமை . அப்படி வளர்க்க அயராது பணிபுரியும் தமிழனை இனம்கண்டு வளர்த்து விடுவது நம் கடமை . முத்து நெடுமாறன் மற்றும் பலர் முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் .


0 comments:
Post a Comment