Sunday, September 5, 2010

மரியாதைக்குரிய வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் அவசர எச்சரிக்கை ..!!!

தற்ப்போதைய வேளையில் தமிழ் ஊடகங்களே சிந்தனையில் வற்றி பதிவுலக பக்கம் தமது பார்வையை திருப்பியுள்ள வேளையில் பதிவுலகிலும் இணைய உலகிலும் நாகரிகமற்ற வேலைகள் இடம் பெறுவது தொடர்கிறது . எவ்வளவு எச்சரித்தாலும் சிலர் கேட்பதாக தெரியவில்லை .. என்னை பொறுத்த மிகவும் பாவத்திற்கு உரிய செயல் இன்னொருவன் சிந்தனையை எண்ணங்களை எழுத்துக்களை திருடுவது .


அறிவியல்  பதிவு திருட்டு எனும் போது அது பெரும்பாலும் செய்தி ஊடகங்களில் இருந்து திருடுகின்றனர் . இன்னொருவன் எழுத்தை எப்படி திருட முடிகிறதோ தெரியவில்லை ..இப்படி பேசிக்கொண்டிருப்பதை விட இதற்க்கு ஏதாவது செயலில் செய்ய வேண்டும் . இதை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் .. 

சாதாரணமாக சில அறிவியல் பதிவுகள் எழுதும் போது எடுக்கும் காலம் கூடியது ஒரு நாள் , குறைந்தது 6 மணித்தியாலங்களாவது  எடுக்கும் . காரணம் அதற்குரிய தகவல்கள் திரட்டி(புத்தகங்கள் ,இணையம்,நபர்கள்  ) , நாம் கற்றவற்றை சிந்தித்து சாதாராண வாசகர்களுக்கும் விளங்கும் வகையிலேயே எழுதுகின்றோம் . காரணம் அறிவியலில் இன்னொருவன் சிந்தனையை அப்படியே எழுத முடியாது .எழுதினால் அது உண்மையாக சுய சிந்தனை அறிவியல் ஆற்றல் உடையவன் அல்ல ..

ஆனால் சிலர் (இங்கு நேரே இணைய முகவரி அனைத்துடனும் வெளியிடுகிறேன் .) இதில் நாகரிகம் பார்க்க முடியாது(நாகரிகம் அற்றவர்களிடம் ) ..

இதனை தகவல் உலகம் என்ற பெயரில் அப்படியே காப்பி அடித்து வெளியிடுகின்றனர் .இதில் மேலும் பல பதிவாளர்கள் வேறு வேறு ப்ளொக்குகளில்  செயல்ப்படுகின்றன .நான் நேரேயே அறிந்த ஒன்றை வெளிப்படுத்துகிறேன் .


பல இருக்கிறது சிலதை தருகிறேன் ...உதாரணத்திற்கு
original 1

இது அவருடைய பதிவு
original/copy

பெர்முடா முக்கோணம் பற்றியது .
ஒரிஜினல்
காப்பி பேஸ்ட் பண்ணி போட்டது ..
Copy-paste


Original/copy press this  link ...
அவர் செய்த வேலையை அவருக்கே இன்னொருவன் செய்து விட்டார் என்பதே கவலை .ஆனால் இதில் எது ஒரிஜினல் என்று தெரியவில்லை ..


மேலே உள்ள அதே பதிவு இரண்டாக பிரித்து கீழே காப்பி ..
பதிவுலகில் இருந்து பதிவுலக காப்பி ..
copy 1
copy 2

ஒரு சில உதாரணங்களே நான் காட்டி உள்ளேன் . நீங்களும் மிகுதியை  அறிந்து கொள்ளலாம்.. ஏதாவது சில வசனங்களை   காப்பி செய்து ,அதை அப்படியே இணையத்தில் தேடினால் பிடிக்கலாம் .. அது வேறு எங்கே உள்ளது என்று ..

அனைத்தும் பழைய பதிவுகள் ..போன வருட பதிவுகள் கூட இந்த வருடம் தான் இவர் காப்பி பேஸ்ட் செய்துள்ளார் .....

நீங்கள் காணும் இணையங்கள் சந்தேகத்துக்கு இடமாக இருந்தால் ... கற்ப்பனை திருட்டாக இருந்தால் அதனை பேஸ்ட் செய்து கூகிள் இல் தேடி பார்க்கவும் .. இதற்க்கு வாசகர்களும் பதிவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் .. இவற்றை இதே போல வெளியில் கொண்டுவர வேண்டும் .. இது ஒன்றே வழி ..... இதனை நான் செய்தது தவறு என்றால் சுட்டிக்காட்டவும் ...
இந்த நபர் முகப்புத்தாக நண்பர்  ..

ஏற்க்கனவே பல தடவைகள் எச்சரித்துள்ளேன் .. இது போன முறை எச்சரித்தது ...
இருந்தும் தொடர்ந்து செய்தார் ...


இதே போல தான் பதிவர் லோஷன் அண்ணாவின் கிரிக்கெட் பதிவு அப்படியே காப்பி அடித்து  முகப்புத்தகத்தில் வேறு ஒருவரால் போடப்பட்டது . லிங்க் கொடுத்து இருந்தால்  சரி ...ஆனால் பிடிபடாமல் மாற்றி எழுதியிருந்தார் .

தனிப்பட்ட ரீதியில் எச்சரிந்திருந்தேன் ..ஆனால் தொடர்ந்து செகின்றனர் . இதை பதிவர்கள் , வாசகர்கள் உங்கள் உதவியுடனேயே வெளியில் கொண்டு வர முடியும் ..இவற்றை நீங்களும் சுட்டிக்காட்டலாம் ...

5 comments:

ஜிஎஸ்ஆர் said...

இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”

என்னடா இவன் எடுத்த எடுப்பிலேயே இப்படி சொல்கிறான் என நினைக்கவேண்டாம் எல்லாம் நான் கற்ற அனுபவம்

S.Sudharshan said...

நன்றி நண்பா ஜி எஸ் ஆர் ... முடியும் ஜி எஸ் ஆர் .. வெளிக்கொண்டு வந்தால் அதே பெயரில் இயங்க முடியாது .. இவளவு நாளும் நேரே ஒரு தளத்தை யாரும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியதிலை தோழா..நாம் நாகரிகம் பார்த்தோம் .. ஆனால் எழுத்தாளர்கள் வலி ? இது தான் வழி...

DrPKandaswamyPhD said...

எதாச்சும் செய்யுங்க.

ம.தி.சுதா said...

ஒரு கட்டுரைக்காகப்படும் பாடு எழுதுபவனுக்குத்தான் தெரியும்.... முதலில் GSR உடைய கட்டுரை பார்த்தேன் இப்ப நம்ம சுதர்சன்.. ஆனால் சில ஜென்மங்கள் திருந்தாது...

பிராது said...

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.
நானும் என்னால் ஆனா முயற்சியை செய்கிறேன்.
http://pirathu.blogspot.com/