தொடருபவர்கள் - நன்றிகள்

Monday, September 20, 2010

கடவுளுக்கு விதியை வகுத்தவன் யார் ?

நேற்று நீயா நானாவில் வழமை போல நீண்ட  விவாதம் ஒன்று இடம்பெற்றது . விதி என்று ஒன்று இருக்கிறதா இல்லையா ?  ஆனால் இந்த முறை அதனை நம்பிக்கை சம்மந்தப்பட்ட வெறும் வார்த்தை ஜால விவாதம் போல கொண்டு செல்லாது .. அதனை அறிவியல் கண்ணாடியினூடு சற்றும் சளைக்காமல் தெளிவான விவரம் கொடுத்தவருக்கு பாராட்டுகள் .

கூடுதலாக இறை நம்பிக்கை , விதி நம்பிக்கை இரண்டின் மீதும் எப்போதும் மனித மனங்களுக்கு நம்பிக்கையும் குழப்பமும்  உண்டு .தனது பிழைகளையும் , பிரச்சனைகளையும் ஏற்காத  மனம் இறைவன் ,விதி எனும் இரு பொருள்கள் , முறைகள்  மீது எப்போதும் பழி போடுவதுண்டு . அவற்றின் மீது பழி போட்டால் அவர்களுக்கு மனோதத்துவ ரீதியாக  ஒரு மன நிம்மதி .


மனித மனம் இறைவனை நம்புகிறது அதே நேரம் விதியையும் நம்புகிறது . விதியை நடத்துகிறவன் இறைவன் என்கிறது . விதியால் இறைவன் ஆளப்பட்டான்  என்கிறது புராணங்கள் ,கட்டுக்கதைகள் . அப்போது விதி இறைவனை விட பெரியதா ? அல்லது அதற்கும் மேலே ஒருவர் இருந்து சிறிய கடவுள்களை விதி கொண்டு இயக்குகிறாரா ? அப்படியானால் அவர் தான் கடவுளா ? அப்படியானால் சிறிய கடவுள்களை விதி கொண்டு இயக்கு என அவருக்கு விதியை தீர்மானித்தவர்  யார். இறைவன் விதியை நடத்த வேண்டும் என அவனுக்கு விதி எழுதியவன் யார் ?


இறைவனுக்கு விதி இல்லை தானாகவே செயல்ப்படுகிறான்  என்றால் அதே போலவே மனிதனும் , அவனையும் எவரும் வழிநடத்த தேவையில்லை  ..


ஒவ்வொரு நொடி நிகழ்வுகளும் மனிதனின் ஒவ்வொரு செயல்ப்பாடுகளே தீர்மானிக்கின்றன . ஒவ்வொரு நொடியும் மனிதன் எடுக்கும் தீர்மானங்கள் மனிதனின் வாழ்க்கையை இரு வேறு திசைகளில் கூட மாற்றக்கூடியது . அது தான் அறிவியல் சொல்லும் சமாந்தர உலகம் . உலக உயிரினத்தோற்றத்தில்   இருந்து அனைத்தும்  ஒரு விபத்தில் இருந்து தோன்றியவை . ஒன்றும் இல்லாததில் இருந்து தான் ஒவ்வொன்றும் உருவாகியது , இது அறிவியல்  . இதில் விதி, கடவுள்  எந்த ஒன்றும் இல்லாததில் இருந்து உருவாகியதா ? அல்லது ஒன்றுமே இல்லாத விடயமா ?

விதி ,கடவுள் மனிதனுக்கு சௌகரியம்  தான் .
 சௌகரியம் எல்லாம் உண்மை அல்ல.. 
ஒன்றும் இல்லாததன்மை தான் சௌகரியம் மனித மனங்களுக்கு ...


சௌகரியங்களில் மனித மனம் சோர்ந்து தேங்கி விட மும்முரமாக செயல்ப்படும் நம்பிக்கைகள் இவை . மனித முயற்ச்சியை , திறனை புறம் தள்ளும் ஒரு முட்டுக்கட்டை . மனிதனை ஒரு குறுகிய சிந்தனைக்கும் ஒரு எல்லை கோட்டுக்குள்ளும் நிறுத்தும் முயற்சி .

மனித மனம் சௌகரியம் தேடினால் சௌகரியங்கள் சுகமானவை .. எப்போதுமே சுகமானவை .. விதி , கடவுள் வெறும் சௌகரியம் மட்டுமே ...

2 comments:

Thamizhan said...

விதி என்று நம்பிக்கைக் கொண்ட மகான்கள்,ரிஷிகள்,பெரியவாள்,மகாத்மாஎல்லோரும் விதியென்று விட்டு விட வில்லை.

தங்களுக்கு என்று வந்ததும் "மதி"யைத் தேடிச்,சிறந்த மருத்துவத்தைத் தேடியலைந்தனர்.ரமண் மகரிஷிக்குப் புற்று நோய்,நான்கு அறுவைச் சிகிச்சைகள். வயதான "காஞ்சிப் பெரியவாளுக்கு" தனி மின்வசதிஉடனே கொண்டு வரப்பட்டுச் சிறந்த மருத்துவச் சேவை!

விதி பொருள் இல்லாதவர்களுக்கு, மதி பொருள் உள்ளவர்களுக்கு !!

S.Sudharshan said...

இல்லாத ஒன்றை குறுகிய வட்டத்துக்குள் சிந்தித்தல் ஆகாது ... ஆனாலும் பொருள் இல்லாததும் தத்தம் தவறே ..தற்கால சூழலில் சமூகம் , சுற்றி இருப்பவைகள் , பொருளாதாரம் போன்ற பல புறக்காரணிகளே தீர்மானிக்கின்றன அனைத்தையும் .

ஏன் ?