சில திரைப்படங்களை அந்த அந்த பாணியில் வைத்து விமர்சிப்பதே நல்லது . அந்த வகையில் உத்தமபுத்திரன் ஒரு பொருளாதார (கமெர்ஷியல்) பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த குடும்ப படம் . அந்த இலக்கை தெலுங்குப்பட ரீமேக்குகளே முழுமையாக நிவர்த்தி செய்கின்றன என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது .
பெரிதாக அடிதடியும் ஆக்ரோஷமான அதட்டல்களும் இல்லாத பொழுதுபோக்கு படம் .சில சாதாரண குடும்ப(கொஞ்சம் பெரிய குடும்பம் ) பின்னணிகளை வைத்து நகைச்சுவை என்ற உணர்வு கலந்து திரைக்கதையை ஓடியிருக்கிறார் இயக்குனர் .
ஆரம்பத்தில் சிறப்பு விருந்தினர் ஸ்ரேயாவுடன் ஆரம்பிக்கிறது படம் .பாக்கியராஜ் ,ரேகா ,அம்பிகா என பல கௌரவ பாத்திரங்கள் பலவற்றுடன் பாத்திரங்கள் நீண்டு செல்கிறது . ஆனாலும் சாதரணமான தனுஷின் நடிப்பும் , ஜெனிலியாவின் புதிய அழகும் சிறப்பு .
தனுஷும் நண்பர்களும் தவறுதலாக வேறு மண்டபத்தில் இருந்து ஜெனிலியாவை மாற்றி தூக்கிக்கொண்டு வர , தனுஷுக்கு ஜெனிலியா மீது காதல் வர , ஜெனிலியாவின் ஒரு குடும்பமே (வில்லத்தனமான கூட்டம் ) இருவரையும் துரத்த , குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்க தனுஷ் என்ன என்ன செய்கிறார்,அவருடன் பயணிக்கும் பாத்திரங்கள் போன்றவற்றை கற்பனையில் கற்பனையாக அமைத்திருப்பார் இயக்குனர் .
சலித்த கருவாக இருந்தாலும் இதில் அமைத்திருக்கும் பாத்திரப்படைப்புகள் சில சிந்தனைகள் சிறப்பு .
எவளவோ கதைகள் வெளியில் தேடி அலையும் போது குடும்பத்திற்குள் இருந்தே பலர் மறந்த சில நிகழ்வுகளை உருவி எடுத்துள்ளனர் . என்ன தான் சொன்னாலும் குடும்பத்தில் பெண்களை பலர் சில முக்கிய முடிவுகளோ அல்லது அவர்கள் உணர்வுகளை திரும்பிக்கூட பார்ப்பதோ அல்ல . அதை இந்த திரைப்படம் தொட்டுச்செல்கிறது. இதில் உள்ள சில நச் வசனங்கள் .
"பொண்ணுங்க எப்பவும் குடும்பத்திலை சின்ன வட்டத்துக்குள்ள வாழ்ந்தவங்க . அப்பா , கணவன் ,பிள்ளைகள், நாம தான் அவங்களுக்கு உலகம் "
"ஒரு நல்ல பொண்ணு வயித்திலை பொறந்தவன் இன்னொரு பொண்ணை கேவலமா நடத்தமாட்டான் "
இந்த இரண்டும் அந்த படத்தில் குடும்ப கருவுடன் இணைத்திருக்கும் செய்தியையும் ஒரு நிமிடம் உணர்த்தும் . நீங்களும் உணர்வீர்கள் ...
இதில் ஆர்த்தி ,சிறீநாத் , மயில்சாமி என ஒரு நகைச்சுவைப்பட்டாளம் . தாம் தூம் , உன்னாலே உன்னாலே ,உள்ளம் கேட்க்குமே ஜீவாவின் பிடித்த நகைச்சுவையாளர் ஸ்ரீநாத் முதல் பாதியில் நகைச்சுவையில் சந்தானம் போல வார்த்தையால் கலக்கியிருப்பார் .வித்தியாசமான மொழிநடையும் கூட .
இதில் இடைவேளைக்கு பின் விவேக்கினுடைய பங்கு மிகத்தாராளம். இதில் கூடுதலாக பேசாமலேயே முக பாவனைகளில் நகைச்சுவையை அமைத்திருப்பார் . அவர் பொய்யாக கூறும் பாத்திரங்கள் அனைத்தும் நிஜமாகவே நடைபெறும் . படத்தை பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள் .
விஜய் அண்டனியின் இசைக்குரிய சிறப்பில் உசுமலஅரசே என்ற பாடல் ரசிக்க கூடியது . பேசப்பட கூடிய பின்னணி இசை இல்லாவிட்டாலும் சாதாரண குடும்ப காட்ச்சிகளுக்கு வரும் பின்னணி இசை தான் .
ஆக மொத்தம் உத்தம புத்திரன் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ ஒரு நிறைவான படம் . சில உறவுகள் பற்றிய உணர்வுகளை நகைச்சுவை உணர்வோடு சுமந்தது ..
மறக்காம ஓட்டையும் போடுங்க ..படத்தை நிறைவா போய் பாருங்க ...
.jpg)

5 comments:
என்னது...? பாசிடிவ் விமர்சனமா....? நம்ப முடியலையே...
அது தான் மேலையே சொல்லீட்டன்
//ல திரைப்படங்களை அந்த அந்த பாணியில் வைத்து விமர்சிப்பதே நல்லது . அந்த வகையில் உத்தமபுத்திரன் ஒரு பொருளாதார (கமெர்ஷியல்) பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த குடும்ப படம் //
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
விமர்சனம் சிறப்பாக இருக்கிறது..
படத்தை பாஸிட்டீவாக விமர்சித்திருப்பது பாராட்டத்தக்கது..
//சலித்த கருவாக இருந்தாலும் இதில் அமைத்திருக்கும் பாத்திரப்படைப்புகள் சில சிந்தனைகள் சிறப்பு//
:))
Post a Comment