தொடருபவர்கள் - நன்றிகள்

Saturday, January 30, 2010

கண்ணாடி....


சொல்கிறேன்
கண்ணாடியில் தெரிந்துகொள்
எவ்வளவோ ..

சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்புக்கு
சாதகமாக்கு ..
உன்னுடன் முரண்படு
சரியா?தவறா?
உன் பெண்மையிடம் மட்டும் கேள்

கனவுகளுக்கு வடிவம் கொடு
வசனங்களுக்கு செயல் கொடு

உணர்வுகளை விற்காதே..
சமூகத்தை அறுத்தெறி
வெறி வேண்டாம் உனக்கு...
ஆயிரம் சொல்லட்டும்
உனக்கு நீ
நீ மட்டும்.....

தனிமையில் உன்னை அறி
கற்பனைகளுடன் பேசு
ரசனைகளுக்கு உயிர் கொடு
காதலோடு ரசி
இசையோடு சுவாசி

கண்களில் காதல் பார்
காற்றோடு புன்னகை
அழுது அழுது
அனைத்தையும் அழி

எண்ணத்தில் நம்பிக்கை வை
எண்ணி எண்ணி
காலம் கழிக்காதே
ஏன் என்று கேள்
பதில் கிடைக்கும்

ஏமாற்றத்தில் எதிரிகளை அறி
உண்மைக்காதலை
பகுத்தறிவால் அறி
காத்திருப்பு வேலைக்கு ஆகாது
உயிரைத்தருவேன் வாய்ப்பேச்சு

மழையோடு வெய்யிலாய் இரு
வானவில்...
மூங்கிலில் துளையாய் இரு
புல்லாங்குழல்...
அழகும் ரசனையும் உன்னோடு

சொல்கிறேன்
கண்ணாடியில் தெரிந்துகொள்
எவ்வளவோ ..

Friday, January 29, 2010

ஒரே பார்வை : பேஸ்புக்கும் கோர்க்மார்க்கும் (Twitter))



என்ன தலைப்பு எண்டு யோசிக்கேக்க இப்ப பேஸ்புக் ல என்ன கூடுதலா எல்லாரும் பண்ணுகினமோ அதையே வைப்பம் எண்டு வைச்சது தான்.

கற்காலம், இன்டஸ்டீரியல் காலம் எண்டதெல்லாம் போய் இப்ப பேஸ்புக் காலம் எண்டு சொல்லுற அளவுக்கு வந்து விட்டது . இந்த முன்னேற்றம் ஆரோக்கியமா இல்லையா எண்டதெல்லாம் வேறு விடயம் . கிட்டத்தட்ட முன்னூற்று ஐம்பது மில்லியன் பாவனையாளர்களை கொண்டுள்ளதாம் பேஸ்புக் . இணைய பாவனையாளர்களால் பார்க்கப்படும் இணையத்தள பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பேஸ் புக் கூகிள் ஐயும் முந்தினாலும் ஆச்சரியப்படுவதட்க்கு இல்லை .



சமூகவலைப்பின்னல் அமைப்பான பேஸ்புக் புதிய நண்பர்களையும் மறைமுக எதிரிகளையும் சம்பாதித்து தருகிறது . கூடுதலாக முதல் கணணியை ஆன் செய்தவுடன் நாம் ஜிமெயில் செல்வதோ வேறு இணையத்தளங்கள் செல்வதோ வழக்கம். இப்போது பேஸ்புக் போவது தவிர்க்க முடியாததொன்று.

கூடுதலான நேரம் செலவழிந்தாலும் தனிமையை போக்கும். கூடுதலாக பெண்களுடன் நம்மள மாதிரி ஆக்கள் கதைக்கிறதுக்கு இலகுவாக இருக்கிறது. நேர பார்த்து கதைக்கும் போதே நீங்க பேஸ்புக் இல் இருக்கீங்களா என்று கேட்பது வழமையா போச்சு . கூட கத்தினா ரிமூவ் பண்ணுற வசதியும் இதில தான் இருக்குது .

எல்லோரும் பேஸ்புக் பாவிப்பீர்கள் ஆனால் அதன் பின்னணி சிலருக்கே தெரிந்திருக்கும். சிலர் புதிதாக வந்திருப்பார்கள். ரொம்ப இழுத்தா வரலாறு மாதிரி சுருக்கமா சொல்லுறன்.



Mark Zuckerberg க்கும் அவரது கல்லூரி (ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ) நண்பர்களும் சேர்ந்து உருவாக்கியது தனது கல்லூரி ப்ராஜெக்ட் விஷயமா ஆரம்பிச்சவர் தான்,முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே மட்டுப்பட்டு இருந்தது . பின்னர் அது போஸ்டன் , ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது . பின்னர் ஏனைய பல்கலைகழகங்களுக்கும் , உயர் பாடசாலைகளுக்கும் 13 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்கள் பாவிக்கும் வகையில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது .

முதலில் நிறைய எதிர்ப்புகளையும் சந்தித்ததை யாரும் மறுக்க முடியாது. கூடுதலாக சிரியா ,சீனா ,வியட்நாம்,இரான் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது .கூடுதலான நிறுவனங்கள் வேலைத்தளங்களில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது . நம்ம ஆக்கள் படிப்பிலை கோட்டை விடுறதும் இந்த பேஸ்புக் ஆல தான்.

இப்ப டுவிட்டரும் கொஞ்சம் போட்டிக்கு வந்திருக்கிறதா கதை .. ஆனா இப்ப புதிது புதிதாக பல அறிமுகங்களை பேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகிறது .

ஆனாலும் இவ்வளவு இழப்புகள் இருந்தாலும் கூடுதலான நண்பர்களை ஈட்டி தருவதில் பேஸ்புக் முன்னிலை தான். பேஸ்புக் ல நடக்குற லொள்ளுகளுக்கு ஒண்டும் குறைச்சல் இல்லை.

யாரோ ஒரு லொள்ளு மன்னன் ஒபாமா கொல்லப்பட வேண்டுமா இல்லையா என ஒரு குயிஸ் போட்டு அதை அனைவருக்கு அனுப்பியிருக்கிறாராம் .
இது தெரிஞ்ச உடன பேஸ்புக் குழு அதை அகற்றி இருக்கு . (பேஸ்புக் குழு தான் செஞ்சுதொவும் தெரியேல்ல )
ஒபாமா கிட்டடில எச்சரித்திருந்தார் என வீடியோக்கள் பரவினதை யாரும் மறக்க முடியாது .

இப்ப இந்திய பிரதமரும் பேஸ்புக் ல இருக்கிறாராம் எண்டு ஒரு பேச்சு. அவருக்கு செல் போன் பாவிக்கிற பழக்கம் கூட இல்லையாம் . அதை அவருடைய மீடியா ஆலோசகர் தெருவித்திருக்கிறார். அது அடிக்கடி அப்டேட் உம் ஆகுதாம் . ஒரு வேளை நம்மட மகிந்த அய்யாவோட சாட் பண்ணுவாரோவும் தெரியேல்ல .

தனுஷ் கிட்டத்தில தன்னுடைய பெயரில் யாரோ பேஸ்புக் பாவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் . உங்கள மட்டும் இல்லை சார் கூடுதலா போனீங்க எண்டா எல்லா நடிகை நடிகர்களுக்கும் நிறைய profile இருக்கும். உங்கட மனைவிக்கும் இருக்கலாம் சார் .

பேஸ்புக்கால் சிக்கல்

இப்பிடி தான் சாங் என்பவர் இரு பெண்களை மாறி மாறி திருமணம் செய்து பிடிபட்டார் . பேஸ்புக் கில் இரு மனைவிகளும் நண்பர்களாகி தமது திருமண புகைப்படங்களை மாற்றிக்கொண்டனர். மாட்டினார் சாங். இப்ப ஜெயிலில இருக்கிறாராம்.
தகவல்கள் போடுற நேரம் ஜாக்கிரதையா இருங்க நண்பர்களே .....

பேஸ்புக் உம் டுவிட்டேரும்

டுவிட்டேர் வந்தவுடன் அனைவரும் சொன்ன கருத்து இனி பேஸ்புக்கில்
வேலை இல்லை என்பது தான் .


பேஸ்புக் உம் டுவிட்டேரும் போட்டி நிலைக்கு வந்திருந்தாலும் பேஸ்புக் புதிய அறிமுகங்களையும் வேகத்தையும் கூட்டி உள்ளது . இப்பொழுது பேஸ்புக் லோடிங் வேகம் குறைவான கணனிகளில் கூட விரைவாக உள்ளது .
பேஸ்புக் இது தான் தனக்கு சரியான காலம் என்று சலுகைகளை அள்ளி விடுகிறது . டுவிட்டேர் தனது பங்கிற்கு டுவிட்லோகாசொன் அறிமுகப்படுத்தி உள்ளது .



இதுவரை பேஸ்புக் பாவிப்பதில் டென்மார்க் முன்னிடத்தில் உள்ளது. 34 சதவீதமானோர் பேஸ்புக் பாவிக்கின்றனராம்.

பேஸ்புக் ல கோக்குமார்க்கு...



நம்மட நண்பர்களே இப்ப கூடுதலா பேஸ்புக் ல ரெண்டு மூண்டு பிரோபையில் வேற வைச்சிருக்கினம். நாகரிகமான ஒரு சமூக இணையத்தளத்தில் இவ்வாறு ஏமாற்றுபவர்கள்( ஆரோக்கியமா ?).

பண்ணுறது தான் பண்ணுறாங்க நம்பக்கூடிய மாதிரி பண்ணா இன்னும் நல்ல இருக்கும்ல.

அடபாவிகளா இது வேறயா...

இந்த விஷயம் அவருக்கு தெரியுமா ??



கூடுதலானவர்கள் கோக்குமார்க்கு பிடிபடுவதும் உண்டு . இப்ப பேஸ்புக் இல் சீட் செய்பவர்களை உடனே போடோ பிடிச்சு டாக் உம் பண்நீடுரானுங்க.
அலெர்ட் ஆகுங்க...
திருமணமாகியவர் பெண்களுடன் டேட் செய்யும் தொகுதியில் இணைந்துள்ள அருமையான காட்சி. இதெல்லாம் ப்ரூப் பண்ணுங்கப்பா ...அரிய கண்டு பிடிப்பு . வேற எதையும் கண்டு பிடிக்காதீங்க .
வடிவேல் சொல்லுற மாதிரி ஒக்காந்து யோசிப்பாங்களோ


பாதுகாப்பாக பாவிப்பது எப்பிடி


நெட் கபே களில் பாவிப்பவர்களே கூடுதலாக கவனிக்க வேண்டும் ...
புரோசரில் பேஸ்புக் இணையத்தளம் இருந்தால் அதை குளோஸ் செய்து விட்டு மீண்டு ஓபன் செய்யுங்கள் .

நெருப்புநரி (பயர் பாக்ஸ்) புரோசரில் ஓபன் செய்யாதீர்கள். நீங்கள் அடிக்கும் உங்கள் கடவு சொற்கள் பதியும் வசதி உண்டு( கிரீன் மன்கி ) .

கூடுதலாக உறுதி செய்யப்படாத அப்பிளிகாஷோன்ஸ் கிளிக் செய்யாதீர்கள். தேவையில்லாதவற்றை பாவிக்காதீர்கள்.
கூடுதலானவர்கள் இதன் மூலமே பாதிக்கப்படுகின்றனர்.

உள் நுழையும் போது மட்டுமே பேஸ் புக் கடவு சொல் கேட்க்கும். வேறு எங்கும் கேட்பதில்லை. அவ்வாறு வந்தால் அதை பரிசீலனை செய்யவும்.

உங்கள் படங்களுக்கு (பெண்கள் ) கூடுதலாக பிரைவசி செட்டிங் செய்து வைப்பது நல்லது . தேவையில்லாதவர்கள் அதை பதிய முடியாது.

பேஸ்புக்கில் நாகரிகம்..

கூடுதலாக வேறு ஒருவரின் பெயர்களில் புரோபாயில் ஓபன் செய்பவர்கள், தாமே இன்னொரு ப்ரோபாயில் ஓபன் செய்பவர்கள் அனைவரிடமும் இருந்து பாதுகாப்பதற்க்கு வசதிகள் உண்டு ( அவரை புளோக் செய்யலாம் அல்லது ரிப்போர்ட் அனுப்பலாம் )

நண்பர்கள் கிடைக்கும் இடத்து சொந்த பிரச்சனைகளுக்காக நண்பர்களை ரிமோவ் செய்பவர்கள்.


பேஸ்புக் இணையத்தளம் ரசனைகள் எண்ணங்களை பகிர்வதட்க்கே தவிர (சில அப்ப்ளிகேஷோன்கள் எரிச்சல் ஊட்டுவதும் உண்டு ) .
சிலவற்றை பகிர்வதும் உண்டு . சில நண்பர்கள் பகிரும் முக்கிய விடயங்கள் அற்றுப்போகும்.

சமூக இணையத்தளங்கள் சமூக தொடர்பை பேணுவதற்கே தவிர அநாகரிகமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதட்க்கு அல்ல.
கூடுதலாக சமூக இணையத்தளங்கள் தற்கொலை முயற்ச்சிக்கு தூண்டுவதாக , விரகத்தி அடைய வைப்பதாகவும் , இளைஜர்களை திசை திருப்புவதாகவும் அருட்தந்தை ஒருவர் வழக்கு போட்டிருந்தார்.

Thursday, January 28, 2010

இளையராஜா -உலக இசையின் ராஜா (பாகம் 2)

அவருடைய பாடல்களில் இனிமை ஆனால் அவரின் கற்பனையையும் நுணுக்கங்களையும் கவனிக்க மறுக்கிறோம். உங்களோடு தொடர்ந்து பகிர்கிறேன் .
இளையராஜாவின் மீதான பார்வையின் தொடர்ச்சியாக இந்த பதிவை இடுகிறேன். எனது ரசனைகளின் தொடர்ச்சியும் தொகுத்தவற்றையும் தருகிறேன். இளையராஜா பற்றிய பதிவுகளையும் ரசனைகளையும் நீட்டிக்கொண்டு செல்லலாம்.

வெளிநாடுகளில் பிறந்திருந்தால் எங்கேயோ போயிருக்க வேண்டியவர். கிராமத்தில் பிறந்ததாலோ என்னவோ அவர் இப்படி . சரி அதெல்லாம் விடுவம். நான் நீங்கள் இளையராஜாவிடம் ரசித்தவை பற்றி பார்ப்போம்.



மேலை நாட்டு இசையையும் கர்நாடக சங்கீதத்தையும் கலந்து கொடுத்து நவீன இசையை உருவாக்கியவர் இளையராஜா .அதில் அவருடைய சிஷ்யன் ஏ ஆர் ரகுமானும் தேர்ச்சி பெற்றவர் என்பது உங்களுக்கே தெரியும்.

இளையராஜா இசையமைத்த "பொட்டு வைத்த மல்லிகை மொட்டு பூத்திருக்கு வெக்கத்தை விட்டு " பாடலை கேட்டீர்கள் என்றால் அது கிராமிய மெட்டு , கிராமிய பாடலும் கூட , தமிழ் மணம் வீசும் அந்த பாடலை ஒரு மேலைத்தேய முறையில் அதாவது ஒரு மேலைத்தேய இசையில் கொடுத்தால் எப்படி இருக்கும். அதை தான் செய்திருப்பார் இளையராஜா. பாடலின் ஆரம்ப இசையை கேட்டு பாருங்க. இசைக்கருவிகளை ஒரு ஒழுங்காக இசைத்திருப்பார். ஆரம்ப புல்லாங்குழல் இசை எங்கேயோ இட்டுச்செல்லும் .

அதே நேரம் கர்நாடக இசையிலும் ராகங்களிலும் இளையராஜா சளைத்தவராக இருக்கவில்லை. அலைகள் ஓய்வதில்லை பட பாடல்களில் இதை கவனிக்கலாம்.
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உறவில் கலந்த உயிரே " பாடலை யாரும் மறந்திருக்க முடியாது . "உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் " முடிந்தவுடன் அந்த பெண் குரலை அழகாக பயன்படுத்தி இருப்பார் .எஸ் எஸ் ஷஷி ரேகாவின் குரல் பின்நீட்டாங்க இல்லையா .



பின்னணியும் மிருதங்க இசை அமைதியாக செல்லும். அதனுடன் மேலைத்தேய கருவி ஒன்றையும் இலேசாக பாவித்திருப்பார்(பின்னணியில்) .

சுத்தமான கர்நாடக கீர்த்தனைகளுக்கும் இளையராஜா அற்புதமாக இசை கொடுத்திருந்தார் . அவருக்கு கூடுதலாக பிடித்த ராகம் மாயாமாளவகௌளை என்று குறிப்பிடலாம். கூடுதலான பாடல்கள் அந்த ராகத்திலேயே அமைத்திருப்பார்.
கூடுதலாக அவர் தனது மேடை நிகழ்ச்சிகளில் தனது முதல் பாடலாக ஜனனி ஜனனி பாடலை பாடுவார். அதில் ஒரு உயிரோட்டம் உண்டு என்று அடிக்கடி சொல்லுவார். அதை கேட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்.



கூடுதலாக இளையராஜாவின் உத்தி பாடகர்களை அருமையாக பாவித்திருப்பார். சில பாடல்களில் ஆண் பெண் குரல்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கேட்ப்பதட்க்கு அருமையாகவும் இருக்கும். ஆண் குரலில் ஏற்றம் இருக்கும் போது பெண்குரலில் ஒரு இறக்கம் இருக்கும் . உதாரணமாக "மதுரை மரிக்கொழுந்து வாசம் " பாட்டை கூறலாம் .

மற்றயது அனைவருக்கும் தெரிந்த கூடுதலாக கேட்க்கும் பாடல் " பூங்கதவே தாள் திறவாய் " ஐயும் குறிப்பிடலாம் . ஆண் குரல் மேல்ஸ்தாயியில் சென்று வரும் அருமை . பெண் குரலில் பாடல் மாறி வரும் போது பின்னிசை ஆண் குரலில் வழங்கப்படுவது சிறப்பு . மதுரை மரிக்கொழுந்து பாட்டை கேட்டால் இசை முடிந்தவுடன் "மெட்டுன்ன மெட்டு கட்டி" பெண் குரலில் தொடங்க மீண்டும் உயரும். இசை குறைந்து உயரும்.

குரல்களை மேலும் பயன்படுத்துபவராக புதியவர்களை அறிமுகப்படுத்தினார். பாலசுப்ரமணியத்தை அறிமுகப்படுத்தினார். ஜானகி கூட இளையராஜாவுக்கு பின்னரே பிரசித்தி பெற்றார்.

சின்ன சின்ன சின்னக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா . அற்புதமான கற்பனை. ஆரம்பத்தில் எளிய ஹம்மி அருமையாக அமைத்திருப்பார் . கர்நாடக பாணியிலான பாட்டு ஆனால் அது தெரியாமல் மேலைத்தேய இசையை பயன்படுத்தி இருப்பார் .

புதிய புதிய உக்திகளை தமிழ் இசைக்கு கொண்டு வந்த இளையராஜா. அதை ரசிக்கும் படியாக அமைப்பதிலும் தவறவில்லை. கூடுதலாக இளையராஜா ஆரம்ப இசையிலேயே கொள்ளை கொள்வது வழக்கம். அது தான் நானும் கூடுதலாக ஆரம்ப இசையும் கவனிப்பதுண்டு.



இந்த பாடலில் கிரட்சிசிசம் எனப்படும் இசை பயன்படுத்தி இருப்பார். லலிதா ராகம் அருமையான ராகம். "இதழில் கதை எழுதும் நேரம் இது... இன்பங்கள் அழைக்குது ". எனும் பாடல். பியானோ வயலின் ஒரு ஒழுங்கமைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆரம்ப இசை ஒரு பெண் நடப்பதற்கு ஏற்ப்ப இசை அமைத்தது போல...

எடுக்க எடுக்க குறையாதது இளையராஜா இசை ஜானம். அவரிடம் சரக்கு இல்லை என்பதெல்லாம் ஏற்க்க முடியாதது. கர்நாடக ராகங்களுக்கு எல்லை இல்லை. எப்படி வேண்டுமானாலும் தனது கற்பனையால் இளையராஜா மாற்றுவார்.

எனது பதிவும் இளையராஜா பற்றி எழுத எழுத குறையாது.. நம்மட இளையராஜா ராப் இசையிலும் சளைத்தவர் அல்ல .
யோசிக்காதீங்க அடுத்த பதிவில் மேலும் இடுகிறேன்.

Tuesday, January 26, 2010

இளையராஜாவுடன் நானும் நீங்களும்.(பாகம் 1 )


இளையராஜாவுக்கு பத்ம பூஷண விருது கிடைத்த சந்தோசம் . இண்டைக்கு எனது ரசனைகள் கற்பனைகள் உங்களுடன் என்பதற்க்கு ஏற்ப்ப ஒரு பதிவு. உங்களுக்கும் பிடித்திருக்கும் . வாசித்த பின்னர் மீண்டும் பாடல்களை கேட்டு பாருங்கள்.நீங்கள் வரலாறு எல்லாம் நல்லா படித்திருப்பீங்க . அது விக்கிபீடியலையும் இருக்கு . அதை விட வித்தியாசமாக ரசனைகளை பகிரலாம் என நினைக்கிறேன்.

இன்று வரை இளைஜர்கள் ரசிக்கிறார்கள் என்றால் அது சும்மாவா. காதுக்கு இரைச்சல் இல்லாத இசை.
இளையராஜா தமிழ் இசைக்கு கிடைத்த ஒரு ராஜா என்டுசொல்லலாம். தமிழ் இசை வரலாற்றை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம் . பாவநாசம் சிவன் ராமநாதன் யுகம் , கே.பி மகாதேவன் , விசுவநாதன் ராமமூர்த்தி சகாப்தம் , இளையராஜா சகாப்தம் , எ ஆர் ரகுமான் சகாப்த்தம் என பிரிக்க்கலாம் . இன்று வரை அதுவே . இதில் இளையராஜா , எ ஆர் ரகுமான் மட்டுமே தமது முதல் படங்களிலேயே பிரசித்தி பெற்றோர். இருவரும் தமிழ் இசையில் புதிய புதிய யுத்திகளை கையாண்டனர்.

பண்ணைபுரம் எனும் ஊரிலே ஞானதேசிகனாக பிறந்தவர். சின்ன வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டவர். லண்டனில் இசையில் பட்ட படிப்பை முடித்து . கிளாசிகல் கிட்டாரில் சிறந்து விளங்கினார். அவரது முதல் படம் அன்னக்கிளி . மச்சான பாதீங்களா போன்ற பாட்டுகள் முதல் படத்திலேயே உச்சிக்கு கொண்டு சென்றது.
வித்தியாசமான இசை முறைமை அதாவது கிராமிய இசையும் மேலைத்தேய இசையும் கலந்து ஒரு மிக்சிங் ஆக கொடுத்திருந்தார் . இது கூடுதலான மக்களை சென்று அடைந்தது. வந்த கொஞ்ச காலத்திலேயே ஒரு தமிழ் இசை புரட்ச்சி என்றும் சொல்லலாம். நவீன பின்னணி இசையில் கொள்ளை கொண்டவர் .

கிராமிய பாடலான குத்தச்சம்பா பாட்டில் கூடுதலாக கிராமிய பின்னணி பாடல் ஆகையால் கிராமச் சூழலில் பெண்கள் நெல் குத்தும் சத்தம் போன்றவற்றை தனது இசையில் புகுத்தி புதுமையான இசையை வழங்கினார். இயற்க்கை சத்தங்களையும் இசையில் புகுத்தினர்.
முக்கியமாக தமிழ் கச்சேரிகளில் முன்னர் ஹிந்தி பாடல்கள் பாடப்பட்டு வந்தது . கூடுதலாக முன்னர் விச்வநாதன் ஆகியோர் குறைவாகவே கிராமிய இசைகளை பயன்படுத்தி இருந்தனர். இளையராஜா அந்த குறையை போக்கியிருந்தார். ஹிந்தி பாடல்கள் திடீரென மேடைகளில் பாடுவது நிறுத்தப்பட்டது . இந்த பெருமைக்கு உரியவர் இளையராஜா தான்.

கூடுதலாக மாறுபட்ட பின்னணி இசை. ஷநேயில் ப ப ப பா என்று வரும் பின்னணி இசைகளை வயலினை பாவித்து கி கி கி கீ என மாற்றி புதிய பாணியை உருவாக்கினர். கூடுதலாக மௌன ராகம் படத்தில் கார்த்திக் ஓடும் கட்ச்சியில் இதை பயன் படுத்தி இருப்பார் .

முதல் சோகமாகவே வயலின் இசைகள் அமைந்திருக்கும் அதை விறு விறுப்புக்காக பாவித்தார். கூடுதலா காமெடி படங்கள்ல பின்னணில ஷெனை பாவித்திருப்பார் .

செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு அந்த ஆண்டில் பிடித்த பாடலாக செந்தூர பூவை குறிப்பிட்டு இருந்தார்

கோரஸ் களிலும் சிறந்து விளங்கினார் என்பதற்க்கு "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி" பாட்டை கேட்டால் உங்களுக்கே புரியும் .அதாவது பல குழல்கள் சேர்ந்து ஒரு ஆற்காச்ற்ற போன்று அமையும். அற்புதம் .ஆண் பெண் கோரசகளிலும் கலக்கியிருப்பார். படத்துடன் பார்த்தால் இன்னும் அருமை
கூடுதலாக பெண் பின்னணியில் பாடும் ஆரிராரோ சொல்வதற்க்கு வார்த்தை இல்லை . கேட்டு பாருங்கள் .

கோரல் இசை என்று சொல்லுவாங்க கூடுதலா நாங்க ஆங்கில இசைகள்ள இதை கவனிக்கலாம் . அதை தமிழ் பாணிக்குள் புகுத்தி தொடர்ந்து கிராமிய இசை வரும் படி அமைத்திருப்பார்.கேட்பதற்க்கு இனிமை..

தேவர் மகன் படத்தில் "போற்றிப்பாடடி பொன்னே " பாட்டின் ஆரம்பம் அவ்வாறே அமைந்திருக்கும்.

அதே தேவர் மகன் படத்திலை இஞ்சி இடுப்பழகா பாட்டு எங்கயோ கொண்டு போய் விட்டது.
ஒரு டூயட் பாட்டை மிகவும் அருமையாக அதன் தன்மை கெடாது துள்ளல் பாடுகளுக்கு போடும் இசையை போட்டிருந்தார். பெண் குரலை மிக அருமையாக பாவித்திருப்பார் .புல்லாங்குழல் இசை இடையில் வரும் அருமை . தேவையான இடங்களில் சிறு சிறு இசை .அருமையான ஒருங்கிணைப்பு.


கிராமிய ரசிகர் முதல் பட்டண மக்கள் வரை அனைவரையும் ஒருங்கு இணைத்து அனைவரையும் தமது கட்டுக்குள் வைத்திருந்தது சிறப்பு. பாடல் வரிகள் கிராமிய இசையாக இருக்கும் அனால் பின்னணி இசையோ மேலைத்தேய இசையில் அமைந்திருக்கும் . சிறந்த கற்பனையுடன் வழங்கியிருப்பார் .

கர்நாடக இசையை பாமரர்களுக்கும் கொண்டு செல்லும் உக்த்தியில் இளையராஜா ஜெயித்து விட்டார்.

இன்னும் நிறைய தகவல்கள் உங்களோட பகிர இருக்கிறேன் வரும் பதிவுகளில் பார்க்கலாம். உங்களுக்கும் தகவல்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

Saturday, January 23, 2010

கற்பனைகளில் காதல்-கனவுகளுடன்

ஆள் ஆளுக்கு காதல் பற்றி எழுதிறதெண்டு கிளம்பீட்டாங்க . ஆனாலும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே . பிடிச்சிருந்த வாசியுங்க இல்லன்ன பிறேண்ட்சாவே இருப்பம் . எதோ எல்லாரோடையும் பகிரோணும் எண்டு தோணிச்சு . இதெல்லாம் பிகர்களுக்கு ..கண்டுக்காதீங்க பாஸ் .இது கவிதையும் இல்லை கட்டுரையும் இல்லை . ஒரே மிக்ஸிங்.. கொஞ்சம் வித்தியாசமா ...



காதல் என்னவென்று தெரியாது
எண்ணங்கள் கற்பனைகள் ஒன்றித்ததது

பார்த்ததும் தோன்றவில்லை
காமம் இல்லையென்றது உறுதி
வழியவும் இல்லை உன்னத உணர்வு
உறவு பெயர் கொண்டு அவள் அழைக்கவில்லை நட்பும் இல்லை.

அவள் சுடிதாரில் ஒளிந்திருந்த பெண்மை
பார்வைகளை நெற்றி பொட்டில் ஒழித்து
வைத்தவள்.
உதட்டோரம் ஒளிந்திருந்த குறுஞ்சிரிப்பு
உடனே கதைக்கவில்லை.
குலம் கோத்திரம் எதுவும் தெரியாது
தேவையும் இல்லை.
ஆறுதலாக கதைத்தோம் ஆழமாக போனோம். வேண்டாமடா எண்டது அறிவு
அதை தான் நாம எதுலயும் கேக்குறேல்லையே

விளிக்கும் இமைகளில் ஒரு சோகம்
அவள் தனிமை தான் காரணம்

என் தனிமை அவள் தனிமை நம் இணைவில் நீங்கியது
அவள் தனிமை நீக்க வந்தவன் தனிமையோடு ....

ரசனைகளுடன் ஒன்றியவள் ....
காதல் எல்லை இல்லாதது
ரசனைகள் போல
நீண்ட இரவில் எல்லை இல்லா ரசனைகள்..

அவள் குரலால் இரவின் ஆழ்ந்த அமைதியில் உரைத்தவைகள்
அவளோடு நான் உரைத்த ஆசைகள்
உணர்வோடு உள்ளுயிரில்
தனிமை+இசை+காதல் இருவருள்ளும்
ஒரு சந்தோஷம்
காதல் என்னவென்று புரிந்தது

இரவுகளில் விழி மூடி கதைக்க கற்றுக்கொடுத்தவள்
பெரிதாக அலட்டவில்லை ... கற்பனைகளுடன் தொடர்ந்தது.
கற்பனையில் குடித்தனம் காதல் எல்லாம்
விழிகள் மூடிய படி
அழகான வீடும் கூட அதுவும் ரெட்டை பெண் பிள்ளைகளோட
சின்ன ஈகோ க்களோட வாழ்க்கை
சின்ன சின்ன சண்டை
ரசனையான வாழ்க்கை...
ஒரே வார்த்தை
ரெண்டு பேரும் made for each other




காலை மலர்வதும் இரவு நீளுவதும் அவள் குறுஞ்செய்தியில்.
உணர்வோடும் எண்ணங்களோடும் கலந்து விட்டாள்
இது சரி வராது எண்டு உடன கேட்டு போட்டன்
நம்மட வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு போர்முலா தான்
பதிலா காத்திருக்க சொன்னதும் ஒரே சந்தோசம்...
ஒரே டூயட் தான்
அந்த நேரம் ரிலீஸ் ஆனா நெஞ்சே நெஞ்சே ,விழி மூடி யோசித்தால் பாட்டுகள் தான்.
காத்திருந்த நாட்கள் அவள் தன் நண்பியை நச்சரித்த படி.....

சில நாட்கள் கழித்து பெரிய இடி
கிளைமாக்ஸ் தான்
வழமை போல பெண் தோழிகள் தொல்லை தான்
அது தானுங்க நண்பி சொன்னாவம் ...என்ன கொடுமை இது
எந்த உயிர்தோழி போலவடா நீ என்று சொன்னாளோ
அதே தோழி தான்..



உயிரைத்தருவேன் என்று சொல்லவில்லை
உயிராய் இருந்தேன்
உனக்காய் காத்திருப்பேன் என்று சொல்லவில்லை
அவளை விட்டு பிரிந்ததில்லை... அவளும் தான்..
பிரிய மாட்டேன் என்று நண்பி அனுப்பிய குறுஞ்செய்திகளை
போர்வர்ட் செய்தவள்....
ஆனாலும் உணர்ந்து அனுப்பியிருந்தால் பிரிந்திருக்க மாட்டாள்
குழப்பத்துடன் நான்......
அவள் உணர்ந்து அனுப்பியவை சில இன்னும் என் இன்பாக்ஸ் க்குள்.
பேசிய வார்த்தைகள் காற்றோடு
சாட்ச்சிகள் இல்லை

ஒரு நிமிடமும் எனை விட்டு பிரிந்ததில்லை
ஒரே இரவில் ரேடியோவில் இரவின் மடியில் ,நேற்றைய காற்று எல்லாம்
நிகழ்ச்சி தொடருகிறது உறவு தொடரவில்லை
ஒரே இரவில் தொலைபேசியில்
அவளோடு படங்களும் கூட ...


உண்மைக்காதல் எங்கிருந்தாலும் புண் படுத்துவதில்லை
ஒரேயடியாக விலகி விட்டேன்
அவள் எனக்கு கொடுத்த பிரிவின் வலிகள் அவளுக்கு
அக்கறை இல்லையெண்டது தெரிஞ்சது...

உறவுகள் கிடைத்த உடன்
தனிமை போக்க வந்தவன் தேவையில்லை எண்டு
முடிவோ தெரியவில்லை.
உணர்வின் வலிகள் இனி ஒரு போதும் அவள் பக்கம் செல்ல விடாது.

ஓங்கி யாரோ அடிச்ச மாதிரி இருந்தது (திரும்பவும் )
திடுக்கிட்டு முழிச்சா அம்மா ...
அப்புறம் அது கனவெண்டு தெரிஞ்சுது .
முதலே அம்மா தட்டினவ நான் எழும்பேல்ல.
அப்பவே எழுபியிருக்கொனும் ஏதோ ஒரு மயக்கம்.

கொஞ்சம் விரக்தி மனதில் நினைத்தவள்
கனவில் அல்லவா
மீண்டும் அப்பிடியொரு கனவு வருமோ எண்டு
ஆனால் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள்
காய்ந்த அடையாளம்
இது கனவா நெஜமா ஒரு குழப்பம்!
மீண்டும் தனிமை விழித்தது

ஆனாலும் கனவுகள் வீணாகாது
செயல் வடிவம் கொடுப்பேன்
ஆனால் அவளுடன் அல்ல...
நிச்சயமாக இல்லை...

இன்னொரு நிஜத்திட்க்கு...

யாழ்ப்பாணம் என்ற மாயையும் மறக்கப்பட்ட வன்னி மக்களும்

யாழ்ப்பாணத்துக்கு போனதால கனகாலம் எழுத முடியவில்லை.யாழ்ப்பாணம் போற வழிலேயே இதை பற்றி கட்டாயம் எழுதோணும் எண்டு நினைச்சனான். இதை எழுதிறதுக்கு யாருக்கும் ஆதரவளிக்க தேவையில்லை மனிதாபிமானம் இருந்தால் எழுதலாம்.

யாழ்ப்பாணம் வாயால் சொல்வதற்க்கு இனிமை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகு. ஆனா மாறாத வடுக்களை சுமந்து நிற்கும் ஒரு தமிழர் தலை நகரம். எல்லாரும் யாழ்ப்பாணம் எண்ட உடன கொழும்பு கோட்டையில ஏறுறவங்க யாழ்ப்பானகோட்டையில தான் விழிப்பினம் போல இருக்கு.

இடையில் மாறாத சுமைகளையும் காயங்களையும் தாங்கும் தமிழர் இதய பூமியை மறந்து இருப்பவர்கள் எத்தனை பேர்? போயிட்டு வந்தவங்க யாரை கேட்டாலும் யாழ்ப்பாணம் இப்ப நல்ல டேவேலோப் எண்டுவாங்கள். இடையிலை நீங்க தாண்டி போற இடத்தையும் கொஞ்சம் பஸ் கண்ணாடிய விட்டு எட்டி பாருங்க.

யாழ் மக்களை விட செழிப்புடனும் தமது சொந்த வளங்களை பாவித்து தாமே முன்னேறிய மக்கள் ,பல வசதிகளுடன் வாழ்ந்த வன்னி மக்கள் தற்போது அடிப்படை வசதிகள் வாழ்விடங்கள் கூட இல்லாமல் துன்பத்தில் இருப்பதை அவதானிக்க முடிந்தது . அவர்களுடன் கதைத்த போது தமது சொந்த சோகங்களையே சொன்னார்கள் இப்பிடி கதைத்தாலாவது தமக்கு ஆறுதலாக இருப்பதாக கூறினர் .

முதலில் செட்டிக்குளம் அகதிகள் முகாமிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வைத்தியர்களுடன் சென்றதால் செல்ல முடிந்தது . வவுனியா நகரிலிருந்து சுமார் இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கும் . போன பாதை முழுவதும் இராணுவ பாதுகாப்பு. அவளவு தூரத்தில முள் கம்பி வேலிகளுக்குள் சிறைக்கைதிகள் போல மக்கள் . மக்களின் உடல்கள் மெலிவுற்று போதிய ஊட்டச்சத்து இன்றி காணப்பட்டனர். இராமநாத முகாம் போன்ற பெயர்களுடன் முகாம்கள். உதவிகள் செய்யவும் உத்தரவு பெறோனுமாம்.

அப்பிடியே ரோட்டால ஒரு எதிர்பார்ப்போட யாழ்ப்பாணம் நோக்கி போகும் போது அதுதான் நம்மட வடக்கின் வசந்தம் திட்டத்தின் அபிவிருத்தியை பார்க்க ஆவல் தான். முதல் வவுனியாவில இருந்து ஒரு பத்து கிலோமீட்டருக்கு என்னமோ ரோடு எல்லாம் நல்ல தான் இருந்திச்சு. அதுக்கு அப்புறம் பழைய மாதிரி தான் . மிச்சம் போடுறதுக்கு முயற்ச்சி கூட இல்லை . அப்பிடியே போனா கொஞ்ச நேரத்துல ரெண்டு பக்கமும் இராணுவ முகாம் தான். அநேகமா ஒவ்வொரு மீட்டருக்கும் ஒவ்வொரு பாதுகாப்பு அரண்(ரெண்டு பக்கமும்). அதிலயும் என்ன கொடுமை எண்டா அந்த அரண்களுக்கு பின்னால மக்களின் மீள் குடியேற்றம்.அது தான் நம்மட வடக்கின் வசந்தம் நிகழ்ச்சியின் ஒரு திட்டம். முகாம்களில் இருந்து அனுப்பப்பட்டதாக எங்களுக்கு கூறப்பட்ட மக்கள் வீதியோரத்தில் கேவலமாக இருக்கும் காட்ச்சிகள் காமேராவில் தட்டு பட்டவை.



அடிப்படை வசதிகள் இல்லாமல் வீதியோரங்களில் ,அதுவும் முழுவதும் இராணுவமயமாக்கப்பட்ட இடங்களில் இளம் தமிழ் பெண்கள் வீதியோரங்களில் வசிப்பது மிகவும் ஆபத்தானது. சிறுவர்களின் கல்விக்கு இன்னும் ஒன்றும் மேட்கொள்ளப்படாதது இன்னும் அதிர்ச்சி .

இதையெல்லாம் கடந்து போகேக்க மக்களின் உழைப்பால் வளந்த கிளிநொச்சி நகரம் எந்த ஒரு தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது . எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் முன்னேறிய நகரம் . அழிவின் தடயங்கள் கூட சில தான் இருக்கு.





முதல் கிளிநொச்சி போயிட்டு பிறகு யாழ்ப்பாணம் போறதா தான் இருந்தது .நேரம் இல்லாததால முதல் யாழ்ப்பாணம் போனம். ஒரு வித உணர்வோடு ஆனையிறவு ,பளை எல்லாம் கடந்து யால்ப்பனதுக்குள் நுழையும் போது இந்த வாசகம் ... வாசகமெல்லாம் நல்ல தான் இருக்கு ஆனா அப்ரோச் தானேப்பா பிடிக்கேல்ல .


யாழ்ப்பாண நகரம் வழமை போல சன நடமாட்டம் கூட தான் . அவர்களுக்கு சந்தோசம்தான் பாதை திறந்து தங்கட உறவுகளை பார்க்க முடியுது . தாங்கள் சும்மா சும்மா கொழும்புக்கு போயிட்டு வரலாம் எண்ட சந்தோசம் தான் . தமது சந்தோசத்தில் வாக்களிக்க கூட தயார். நிறைய காலத்துக்கு பிறகு யாழ்ப்பாண நூலகம் போக முடிஞ்சது
சந்தோசம் தான்.
அங்கயிருந்த நூலக அதிகாரி ஒருவர் தன்னை பற்றியும் யாழ் மண்ணின் உண்மை நிலை பற்றியும் கூறினார்.(தலையில் கை வைத்த படியே)
எங்கட எல்லாம் போச்சு .எல்லாம் அழிஞ்சு போச்சு வன்னியில் இருந்து வந்தனான் எங்க குடும்பத்துக்கு ஒண்டும் ஆகேல்ல ஆனா கண்ணுக்கு முன்னால நிறைய உயிர்கள் போயிட்டுது .ஒரே குடும்பத்திலை யாருமே இல்லாத அநாதை பிள்ளைகள் கூட இருக்குதுகள். மனதால செரியா பாதிக்கப்படிருக்குதுகள். மற்றவை சொலுற மாதிரி நினைக்குற மாதிரி யாழ்ப்பாணம் இல்லை இங்கயும் கொடில்கள்ள வாழுதுகள். நாங்க முதல் ஒரு கிலோ அரிசி நூறு ரூபாய்க்கு கூட கிடைக்காம இருந்தனாங்கள். எண்டு சொன்ன அவருக்கு ஆறுதலாக என்னுடன் வந்த வைத்தியர்கள் ஆறுதல் கூறினார். எதோ தம்பி சொன்னதால கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் எண்டார்.


இத்தனை சுமைகளை தாங்கி நிக்கும் வன்னி மண் யாழ்ப்பாணம் எண்ட வெளிப்பூச்சில மறைஞ்சு போனதும் மக்கள் மறந்து போனதும் தான் கவலை .

Sunday, January 17, 2010

சில்லென்று ஒரு காதல் -உங்களுடன்(பாகம் 1)

ஒரே நாளில்(அதுவும் பதிவுலகிற்கு வந்து சில நாட்களில்)800 ஹிட்சுகளை தந்த வாசகர்களுக்கு நன்றி . ஒரே மாதிரியான பதிவுகளை கொடுக்காமல் சற்று வித்தியாசமாக கொடுப்பது நல்லது எண்டு நினைக்கிறேன். எல்லாரும் காதலை பற்றி கவிதைகள் எழுதுவதுண்டு எனது பதிவு கவிதை அல்ல . கவிதை போல ஒரு பதிவை உங்களுக்கு தருகிறேன்.



அப்பா அம்மாவையும் காதலையும் பிரிச்சு பார்க்க தெரியாதவர்கள் இதோடையே போயிடுங்க. இதுக்கு மேல வாசிச்சா நீங்க கடுப்பாகிடுவீங்க. "அது ஒரு பீலிங்க்டா மச்சி". எல்லாத்தையும் எல்லாத்துக்குளையும் போட்டு குழப்பி தான் யாருமே ஒழுங்கா முடிவு எடுக்கிறேல்ல. இவளவு காலமும் காதலின் பிரச்சனையும் அது தான்

காதல் கனமான பெறுமதி வாய்ந்த கனமான வார்த்தை . இது இரு நண்பர்கர்களுக்கிடையிலோ அல்லது தாய் தந்தை உறவுகளுக்கு இடையிலோ ,சகோதரர்களுக்கிடையிலோ இருக்கலாம். ஆனால் கூடுதலாக எந்த வித இரத்த உறவும் இல்லாமல் ஒருவரையொருவர் நம்பி ரசனைகள்,விருப்பங்கள்,விட்டுக்கொடுப்புகள்,புரிந்துணர்வு ,காமம் எல்லாம் ஒரே புள்ளியில் எப்போது சந்திக்கிறதோ அதுவே காதல்.

கூடுதலாக விட்டுக்கொடுப்புகள் ,புரிந்துணர்வுகள் திருமணத்திட்கு பின்பு காதலர்களிடையே கசப்பை ஏற்ப்படுத்துவது உண்டு. இது கூடுதலாக யதார்த்தமாக காதலை வெளிப்படுத்தாதவர்களிடையே ஏற்ப்படுகிறது.

அதென்ன யதார்த்தமான காதல் என்று கேட்க்குறீங்களா?. யதார்த்தமில்லாத காதல் என்னவெண்டு சொன்னால் உங்களுக்கு யதார்த்தமான காதல் என்னவென்று விளங்கும் .கூடுதலாக காதல் என்றாலே என்னவென்று தெளிவான அறிவில்லாதவர்கள் அது தாங்க இவங்களுக்கு பதினாறு வயசுல காதல் என்றால் என்னவெண்டு காட்டுறது தமிழ் சினிமா தான் . முதலில் எதை சொல்கிறார்களோ அது ஒருவருடைய மனதில் ஆழமாக பதிவதுண்டு.அதுவும் திரும்ப திரும்ப சொன்னால் எப்பிடி இருக்கும்.

பிரச்சனையான தந்தையர் சினிமாவை உருவாக்குகின்றணரா அல்ல சினிமா பிரச்சனையான தந்தைமாரை உருவாக்குகிறதா தெரியவில்லை.( அவங்க மறந்தாலும் சினிமா விடாது )


பிரச்சனை இல்லாத காதலை இதுவரை எந்த சினிமாவும் காட்டியது கிடையாது(ஆங்கில திரையுலகம் தவிர ). காதல் என்றாலே பிரச்சனை ஆபத்து என்பது பலருடைய கருத்து(தமிழ் சினிமாவின் தாக்கம்). அது நம்மட இந்தியா இலங்கையருக்கிடையில தான். காதலில் பிரச்சனைக்கு காதலர்களே காரணம்.


கூடுதலாக உண்மைக்காதல் என்றால் ஒருத்திக்காய் காத்திருப்பது , அவரே உயிர் என நினைத்துக்கொண்டு இருப்பது , இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என நினைப்பது ,தாடி வளர்ப்பது (இது ஜேசுதாஸ சொல்லனுமுங்க அவர்ட போர்முலா தான் ), குடிப்பது எல்லாம் சுத்த முட்டாள்த்தனம்.


இரு உயிர்களுக்கிடையே எப்போது காதல் உருவாகிறதோ அதன் பின்னரே அது காதல் என்று அழைக்கவேண்டும். மேல் குறிப்பிட்டவையை ஒரு தலை காதலுக்காக(தயவு செய்து ஒரு தலை என மாற்றுங்கள் ) செய்பவர்களையே முட்டாள்கள் என்று சொல்கிறேன்.


ஒரே வசனத்தில் யதார்த்தமான காதலை விளங்க கூற வேண்டும் என்றால் " நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது யதார்த்தம் இல்லை நீ இருந்தால் நம் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும் என்பதே யதார்த்தம் ". பெண்களில் சிலர் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது உண்டு சிலர் கூடுதலாக பொய்யான நடிப்புகளுக்கே மயங்குகின்றனர்.



வாழ்க்கையில் எவ்வாறு (யதார்த்த பூர்வமாக) தனது வாழ்க்கை துணைவியை வைத்திருக்க போகிறேன் என கூறாமல் உனக்காக காத்திருப்பேன் உயிரைத்தருவேன் என கூறுபவர்களே அதிகம்(எழுத்தில பாக்கும் பொது கொஞ்சம் ஓவரா தெரியேல்ல ). கூடுதலான பெண்களின் முடிவும் இவ்வாறு சினிமா பார்த்து கதைப்பவர்கள், பொய்யான நடிப்பு நடிப்பவர்கள் (என்னை பொறுத்த வரை ) மீதே செல்கிறது. இவ்வாறு சொன்னால் தான் உண்மைக்காதலாம்(எங்க போய் மோதுறது ). நான் கூட சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன் உண்மைக்காதல் என்பதில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கும் . உண்மைக்காதல் உண்மையில் உயிரையே கொடுக்கும். ஆனால் ஒரு தலை காதலில் இவ்வாறு காதலை வந்து சொல்பவர்களை தான் சொல்கிறேன்.

ஆனால் அவ்வாறானவர்களுக்கு இடையில் பின்னர் புரிந்துணர்வு இல்லாமல் விட்டுக்கொடுப்பு இல்லாமல் பிரிவுகள் இடம் பெறுவது மறுக்க முடியாத உண்மை.

மனதால் இரு உயிர்கள் ஒருமிக்கும் போது ரசனைகளுடன் அவளுடன்/அவனுடன் வாழப்போகும் வாழ்க்கை ,அவளுக்கு அல்லது அவனுக்கு நானோ நீங்களோ அழகாய் அமைத்து கொடுக்க போகும் வாழ்க்கை சின்ன சின்ன ரசனைகளை வெளிப்படுவதே உண்மையான காதலும் கூட.

காலை மழைச்சாரலில் ஜன்னலோரம் இருந்து உயிர் காதலுடன் ஒரு cup cofee குடித்தால் எப்படி இருக்கும்.இந்த சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக தான் காதல்.



எவ்வாறு வேண்டுமானாலும் வாழலாம் ஆனா வாழ்க்கை ரசித்து அழகாய் இருக்க தான் காதல். அந்த அழகான காதலை சில்லென்று அழகாய் வெளிப்படுத்துவதே இனிமையான காதலும் கூட. காதல் வந்தால் உலகில் எல்லாம் அழகாய் தெரியும் என்பதும் உண்மை.

சில்லென்று காதல் எண்டு சொல்லீட்டு கொஞ்சம் சீரியஸா போயிட்டு அடுத்த பதிவில் சில்லுன்னு காதலில் ரசனைகள், உணர்வுகள் ,விருப்புகள் பற்றி பதிகிறேன். உங்களிடம் வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து எழுதலாம்.

Saturday, January 16, 2010

ஒரு க்ரூப்பின் Database

நான்கு நாட்களில் 800க்கும் மேற்பட்ட ஹிட்ஸ் கொடுத்த வாசகர்களுக்கு நன்றி .இது ஒரு மொக்கை பதிவு என ஆரம்பத்திலேயே வாசகர்களுக்கு சொல்லி கொள்ளுறன் .இந்த பதிவிற்க்கு பெயர் வைக்கவே ஆயிரம் யோசனை . அவளத்துக்கு குழப்பமானவர்களும் கூட. ஆனாலும் இவங்க "ரொம்ப நல்லவங்களாம் ". எண்டு தங்களை தாங்களே சொல்லிக்"கொல்லுவாங்கள்". ஆனாலும் நம்மட குரூப் ல காமடி சென்ஸ் கொஞ்சம் இருக்கு (சிரிக்கலாம்). காமெடி பீஸ்(அதுகள் ஹீரோ இல்லை ) களும் இருக்கு.அவங்களே சொல்லி அவங்களே சிரிப்பாங்க.


நம்மட க்ரூப்புக்கு வயசு ஒன்னு ஆக போறதால இந்த பதிவு ரொம்ப முக்கியம். நம்மட ஆரம்ப காலம் இரு குழுக்கள் நம்மட அக்கா(துரு துரு எலி ) பக்கம் தான் நான்.
நானும் நம்மளோட கிராபிக் டிசைனரும் இன்னொருவருமே. நம்முடைய தற்காலிக சர்வதிகாரி (அது தான் தலைவி ) இன்னும் கொஞ்ச குரூப்போட வந்து ஜோஇன் ஆஹீட்டாங்க. இவங்க சேர நான் கொஞ்சம் உட்கட்சி பிரச்சனயல போயிட்டன். ஒரு மாத கப்ல மறுபடியும் வந்துட்டோம்ல. சில பேர் கப்ல கடா வெட்டீடானுங்க.பெரிய விஷயத்தை சுருக்கமா சொன்னா இப்பிடி தான் .


இப்பிடி தாங்க ஒரு நாள் ரொம்ப ஓவரா நம்மட பாசத்தலைவி கத்தி வாங்கி கட்டினது . வேற யாரும் இல்லை நம்மட "என்ன பழக்கம் இது " வசனத்தின் சொந்தக்காரி தான்.
கொஞ்சம் பெரிய சத்தம் எண்டாலும் எல்லாரையும் தம்பி தம்பி எண்டு கூப்பிட்டு கெஞ்சி கதறி பாசத்தை வாங்குபவர் . நாங்களும் நம்பீட்டம் .என்ன செய்யிறது செல்வாக்கு அதிகம் . மூத்த உறுப்பினர் எண்டதால கட்டாயப்படுத்தி மரியாதையை மட்டும் வாங்கீடுவாங்க(இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை ). ஆனா சாப்பாட்டு விஷயத்துல கெட்டிக்காரியும் கூட.

இவங்க கூடுதலா பாசம் வைச்சிருக்கிறது நம்மட மாமாவோட(அது தான் Bag=பேக்). எவளவு முடியுமோ அவளவு சமாளிச்சு கிளாஸ் கட் அடிச்சாலும் கண்டுபிடிச்சிடும். ஆனா மாமாவும் சும்மா ஆளில்லை. எழும்பிறதே 11 மணிக்கு தான். ஆனா கவலை இல்லாதவர். ஏன்னா இவர்ட வாழ்க்கையில பொண்ணுங்க இல்லையாம்(நம்பலாமா ???).

3 Idiots. (சத்தியமா நாங்க மாதவன் ,அமீர், ஷார்மன் ஜோஷி தான் நம்புங்க )
கரீனா கபூர் ,ஓமி வித்யவுக்காக வெயிட்டிங் ...



ஆனா இவரோட நண்பர்(முக்கியமா பதிவரும் கூட) இருக்காரே.. அவரை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிம்பிள். ஏன் எண்டா மூஞ்சி புத்தகத்தில் நீங்க தேடும் போதும் யாருக்கு அழகான கூடுதலான பெண் நண்பிகள் இருக்கு எண்டு பாத்தா அது இவருக்கு தான். நாம ஒண்ணும் திறம் இல்லை.ஆனா இவரோட அடிக்கடி மாறும் .அது ஏன்னு யாருக்காவது புரியுமா ? ஆனாலும் வெளிப்படையானவர் ,கலை ரசனை உள்ளவர் . ஏன் இதெல்லாம் சொல்லுறன் எண்டா பாவி பய கோவிச்சுகிட்டு பொண்ணுங்கள எனக்கு அறிமுகப்படுத்த மாட்டான் . இவர் கடைக்கண் பார்வையில் இருந்து தப்பிச்சவங்க கிடையாது.

இதெல்லாம் பறுவாயில்லை குரூப் ல ஆங்கில மணியும் தமிழ் மணியும் இருக்கு. கூட யோசிக்காதீங்க ஆங்கில மணி தான்(பெல் ).கதைச்சாலே பெல் அடிக்கிற மாதிரி தான்.காது கிழிஞ்சிடும். " கிழிஞ்சிது " வார்த்தையின் சொந்தக்காரர்.கொல்லுவனும் தான். பிறகு தலைவியோட"என்ன பழக்கம் இதை" காப்பி அடிச்சவங்க( ஒரே ரௌடி கும்பல் அப்பா ). ஆனாலும் இவங்களை கோவப்படுத்தி பாக்கிறதில ஒரு சந்தோசம் தான் .நம்மளோட தமிழ் மணி இருக்குதே அது வந்து அது வந்து(யோசிக்கிறன் ) .... அடிக்கடி மாறுவதால் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
அதுவும் தன்னை பீமா திரிஷா எண்டு நினைச்சு நம்மட போடோக்களுக்கு அடிக்குற கமெண்ட் இருக்கே . சபா ... முடியல ...

இவங்களுக்கு அண்ணாவும் கூட( தலைவி போர்முலா தம்பி இவங்க போர்முலா அண்ணா) இருக்கு. அவர் தான் பிந்திய உறுப்பினர் நம்மட (டிப்பி டிப்பி ). இவர கண்டு பிடிக்கிறது ரொம்ப ரொம்ப சிம்பிள்.. பொண்ணுங்க கூட்டமாக இருக்கும் இடத்தில் தானாக சென்று கதைப்பார்(அதுகள் கணக்கு எடுக்குறேல்ல) . கூட பிரெண்ட்ஸ்(கேர்ள்) எண்டு காட்டி கொள்ளுவார். வெளில இருந்து பார்த்த ஏதோ ரொம்ப படம் காட்டுறவர் மாதிரி தான் தெரியும். வானைத்தை போல விஜயகாந்த் மாதிரி பாசத்தை அள்ளி கொட்டுவார் (காட்டுவார் ) . இவரையும் நம்புறாங்களாம். ஆனாலும் இவர் ரொம்ப நல்லவர்( எவளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன் ) .ஆனாலும் திறமைகள் பல.


திறமைகளும் சாகசங்களும்


சோற்றை எவளவு கேவலமாக சாப்பிட முடியுமோ அவளவு கேவலமாக சாப்பிடுவார்.(கான்டீன் ஆண்டியிடம் திட்டு வேற )

அடுத்தவர்கள் சிலருக்கு செய்வதை காப்பி அடித்து தானும் செய்வார்

ஒரே காதுக்குள்ள இயர் போன் ஆனா இசை பற்றி ஒண்ணுமே தெரியாது(என்ன கொடுமை).

பாசமாக இருப்பது போல படங்கள் எடுத்து அவற்றை மூஞ்சி புத்தகத்தில் போஸ்ட் செய்வார் , வசனங்கள் எழுதுவார் .

ஆனாலும் இவர் திறமைகள் வசப்பட்டோர் பலர் . நட்பின் இன்னொரு அத்தியாயம். இருபத்தியோராம் நூற்றாண்டின் ஜூலிஸ் சீசெர்(வணக்கம் அய்யா ). வரலாற்றில் இடமுண்டு.

என்னிலும் மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதையுடன்(என்ன பண்ணுறது )...

அடுத்த நம்ம பழைய மூத்த உறுப்பினர்கள் அவர்களில் ஒருவர் துரு துரு மூஞ்சுறு (நான் சொல்லேல்ல நான் சொல்லேல்ல ). மூஞ்சி புத்தகத்தில வேறொருவருடைய பக்கமும் போகாமல் ஒருவர்(அவரும் ரொம்ப நல்லவரு ) பக்கமே இருப்பவர். இதுக்கு மூஞ்சி புத்தகம் பாவிக்காமலே இருக்கலாம் . ஆனா இவங்க ரொம்ப போபுலர். தலைவியும் இவங்களும் கத்தினா எல்லா ப்ளோர் க்கும் கேக்கும்(அட்டகாசம்) . இப்ப திருந்தீட்டான்கலாம். (அப்பிடின்ன பாருங்களேன் ).

அடுத்தது இவங்க தம்பி (ஒரே தம்பி,அக்கா,அண்ணா கோவிக்காதீங்க இவங்க அப்பிடி தான் ). இவரும் ரொம்ப பழயவரு. கோவிச்சிடுவாறு.. இவர்ட வாழ்க்கையில ஒரே அடி. வேலை முடிஞ்ச உடனே கலழடீருவாங்க .ஆனா தலைவியுடன் பாசமானவர் (செல்லம் செல்லம் ). கூடுதலா தன் வேலையோட இருப்பதால் பெரிசா ஒண்ணும் இல்லை. ஆனா நல்ல ஒரு காமெடி பீஸ். யாரவது மாட்டினா அவளவு தான்.

பூல் விளையாடும் கவர்ச்சி மிகுந்த காட்சி (கண்களுக்கு விருந்தாக)




நம்ம பில்ட் அப் அண்ணாச்சி . இவர் ஒரு குள்ள நரிக்குட்டி. இவருடைய வேலைகள் இவ்வாறு என்பதால் செல்லமாக அழைக்கப்படுறார். இவரோட இவருண்ட கூட்டாளி(நண்பா ,நண்பா )தான் அதுதாங்க அருமையான நடையை கொண்டவர். ரெண்டு பேரும் மாறி மாறி தங்களை தாங்களே சிங்கம் எண்டு சொல்லி கொள்ளுவாங்கள்(கொல்லுவங்கள்)..
கடந்த ஒரு வருடமாக ஜிம் செல்லும் இவர்களுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லையுங்க .அந்தோ பரிதாபம் .

இருதய பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்



ஆனா மனசு சுத்தமுங்க

ரசிக்க கொஞ்சம் கிசு கிசு

கீரைப்பிடியின் தலையை கொண்டவரும் அதன் முதல் எழுத்தை தனது பெயரில் கொண்டவருமானவர் அடிக்கடி யாகூ மெயில் பக்கம் பொய் வருவதாக செய்தி .

நம்முடைய அக்கா கந்தசாமியில் வரும் நாயகி ஸ்ரேயாவின் பெயரை கொண்டவருமனவர் தற்போது குஷியா இருக்கிறார். முக்கியமான நாள் ஒன்று நெருங்கி வருவதே காரணம்.

மணியின் ஆங்கில அர்த்தத்தை கொண்டவர் தற்போது தனியே வானத்தை பார்ப்பதாகவும் காதல் பாடல்களை முனுமுனுப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. மூஞ்சி புத்தகத்தில் காதல் வாசங்களும் எழுதி வருகிறார்.

புல் ஷீட்டின் நிலைமை என்னவோ.. அவர் கிசு கிசுக்களுக்கும் மாட்டவில்லை(நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் )

நம்மள பற்றி யாரும் சொல்லாத வரைக்கும் நல்லது தான்.

ஏலே எல்லா பயபுள்ளைகளும் இன்னும் வருசத்துல மண்ணோட மண்ணா நாசமத்து போகப்போரியல் ஏலே ..இருக்கிற வரைக்கும் வாழுங்க எலே..
இது நம்ம விவேக் சித்தர் சொன்னது.
"எலே டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி "..

எல்லாரும் ரொம்ப நல்லவங்க . ஆனா என்ன ஒன்னு சேர்க்கிறது ரொம்ப கஷ்டம் . நான் இதை(உண்மையை ) எழுதியதால் கொஞ்ச காலத்துக்கு தலை மறைவாக வேண்டும்.

Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன் சொல்லவரும் உண்மைகள்


வழமையாவே பண்டிகை எண்டாலே வெளியாகிற தரமான திரைப்படங்களை முதல் ஷோவுக்கு போய் பாக்கிறது வழக்கம். இந்தமுறை கல்லூரியில் பொங்கியதால் முதல் ஷோவுக்கு போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் பருவாயில்லை எப்பிடியாவது ஆயிரத்தில் ஒருவன் பாத்தாச்சு. சென்ற வருடத்தில் இருந்தே இந்த திரைப்படத்தை எதிர் பார்த்து பார்த்தே களைச்சாச்சு.

பாடல்கள் நீண்ட காலத்திற்கு முதலே வெளியாகி விட்டது. வித்தியாசமான பாடல்கள் டிரயிலர் எல்லாம் படத்தின் மீதான எதிர் பார்ப்பை மேலும் கூட்டியது. வித்தியாசமான தமிழ் சினிமா பாணி என்ற ஆவலோடு நண்பனுடன் போனேன் .

திரைப்படத்தின் ஆரம்பமே அமர்க்களம் முதலில் அதற்க்கு பாராட்ட வேண்டும் . ஆரம்பமே புராதன காலத்தில் கதை இடம் பெறுகிறது . அருமையான காட்சி அமைப்புகள்.சோழ தேசமும் மக்களும் பாண்டிய வம்சத்தினரால் அழிக்கப்பட்டு இடம்பெயர செய்யப்படுகின்றனர். சோழ இளவரசன் குல தெய்வ சிலையுடன் தப்பித்து செல்கிறான்.

படத்திக்கிடையில் மற்றவர்கள் அடித்த கமெண்டுகள் கொஞ்சம் நல்லா போச்சு.கொஞ்சம் குடும்பத்தோட வந்தவர்கள் தான் பாவம். செல்வராகவன் சார் விட்டு வைக்கேல்ல.

பின்னர் கதை நிகழ் காலத்தில் தொடர்கிறது...

கதாநாயகிகள் (அன்றியா,ரீமாசென் கலக்கிட்டாங்க போங்க ) , கதாநாயன் (கார்த்தி ) போன்றோரின் அறிமுகக்காட்சி தமிழ் சினிமா பாணியில்(ஆர்ப்பாட்டம் இல்லாமல் ) இருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்டது.



நாயகி அன்றியாவின் தந்தை பிரதாப் அந்த சோழ வம்சத்தினது குல தெய்வத்தின் சிலையை தேடி புறப்பட்டு காணாமல் போகிறார் . அன்றியா தனது தந்தையையும் ரீமாசென் குலதெய்வ சிலையையும் மீட்க்கும் நோக்குடன் தமது பயணத்தை தொடருகின்றனர். அதற்க்கு துணையாக அவர்களுடன் நாயகன் கார்த்தி அறிமுகமாகிறார். சாதாரண காட்சட்டையுடன் அறிமுகமாகிறார். ஆரம்ப காட்ச்சியில் காரிலிருந்து கார் கண்ணாடியினூடு இறங்கும் காட்சி அருமை .நல்ல வேளை உடனே அறிவுரை சொல்லும் குத்து பாட்டு போடவில்லை . பிரம்மாண்டமான கப்பலில்(சொல்லலாம் ) அனைவரும் வியட்நாமுக்கு புறப்படுகின்றனர். வியட்நாமில் இருந்து ஒரு தீவு நோக்கி சிலர் புறப்படுகின்றனர். இராணுவ உதவிகளுடனும்..

அவர்களின் பாதை ஆபத்தானது.புறப்படும் அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பலவிதமான எச்சரிக்கைகள். பாம்புகள் வரும் காட்ச்சிகள் ,அந்த தீவின் காவலர்கள் ஏவும் அம்புகள் தொகையாக வந்து தாக்கும் காட்ச்சிகள், கடல் வாழ் உயிரினங்களின் தாக்கல் என காட்ச்சிகள் அவற்றை படமாக்கிய விதம் என்பன வியப்பு .பல படிகள் முன்னேற்றம்.

பாலைவனத்தில் புதைகுழிகள் ஆபத்தை விளைவிக்கும் போது சோழ வம்சத்தினர் செய்து வைத்திருந்த பாதை வழிகாட்டி( சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும்
நடராஜ சிலை ஒன்றின் நிழல் தெரியும். அந்த நிழலிநூடு பாதையை கடந்து செல்லும் காட்சி அருமை). இயக்குனரின் ஐடியா க்கு ஒரு சபாஷ் . ஒரே தடவையில் அவர்கள் பாதையை தாண்டி செல்வது போல வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சில குறைகளை தவித்திருக்கலாம்.

இறுதியில் ஒரு கிராமத்தை சென்றடையும் இவர்களுக்கு ஆவி பிடிக்கிறது. தப்பித்து பரம்பரை பரம்பரையாக ஒரு இடத்தில் ஒளிந்து வாழும் சோழ வம்சத்தினர் அன்றியா ,ரீமாசென்,கார்த்தியை பிடித்து செல்கின்றனர்.அவர்களின் ராஜாவாக பார்த்திபன் .மிரட்டியிருக்கிறார் . பின்னர் நிறைய கோல் மால்கள் இடம் பெறுகிறது. சிலையை மீட்கிறார்களா இல்லையா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் திரைக்கதை சற்று தள்ளாடி உள்ளது . ஆரம்பத்தில் திரைக்கதை சற்று விறு விறுப்பாக சென்றாலும் இடைவேளைக்கு பின்னர் அதில் எதோ குறை தெரிகிறது.
சிறு சிறு தவறுகள் படத்தில் தென்பட்டாலும் இந்த சென்சர் குழு எங்கே போனது என்று தெரியவில்லை. சில காட்ச்சிகள் முகம் சுளிக்கும் விதமாக அமைத்திருந்தது. குடும்பமாக வந்திருந்த சிலர் இடையில் எழுந்து சென்றதை காணக்கூடியதாக இருந்தது.செல்வராகவன் ஒரு தரமான சினிமாவை இதனால் கெடுத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. சில காட்ச்சிகளை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .

இராணுவத்தினரால் பெண் மானவங்கப்படுத்தபடும் காட்ச்சிகள் எல்லாம் கொஞ்சம் ஓவர் . அவற்றை குறைத்திருக்கலாம். சில காட்ச்சிகள் எழுத முடியவில்லை.

ஒளிப்பதிவாளர் பற்றி சொல்ல போனால் சொல்லிக்கொண்டே போகலாம் . அருமையான பாராட்டத்தக்க ஒளிப்பதிவு. படத்தை தூக்கி நிறுத்துகிறது . பாடல்களிலும் ஒளிப்பதிவில் பின்னியிருக்கிறார். "ஓ ஈசா, என் ஈசா, சாம்பல் தின்னும் என் ஈசா" பாடல் காட்ச்சிகள் அருமையிலும் அருமை.

ஜி. வி பிரகாஷின் இசை படத்தில் மேலும் வலு சேர்க்கிறது. பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். சில இடங்களில் இரைச்சலாக அமைந்தது தான் குறை . பாடல்கள் அனைத்தும் பிரமாதம். உன் மேல ஆசை தான் பிரமாதம் . ரீமா சென் அன்றியா டான்சில் கலக்கீட்டங்கப்பா. என்னன்னு சொல்லுவன். தனுஷின் குரலும் மேலும் பிளஸ்.

"ஓ ஈசா, என் ஈசா, சாம்பல் தின்னும் என் ஈசா"
பாடலும் பாடல் காட்ச்சிகளும் அருமை.ஆங்கில ஆல்பம் களின் தரத்திற்க்கு இணையான காட்ச்சிகள்
"தாய் தின்ற மனமே, இது பிள்ளையின் கதறல், ஒரு பேரரசன் புலம்பல்"
என்ற உணர்ச்சி ததும்பும் பாடலும் இசையும் அருமை . விஜய் ஜேசுதாசின் குரல் வைரமுத்து வரிகளை ரசித்திருக்கிறது.

சொல்ல வரும் உண்மைகள்

இயக்குனர் செல்வராகவன் கூறவரும் உண்மைகள் எதுவென சரியாக இன்னும் விளங்கவில்லை . இராணுவத்தின்(இந்திய ) அடாபிடிகள். ஒரு இனம் ஒடுக்கப்படுவது துன்புறுத்தப்படுவது. தமது சொந்த தேசத்தில் இருந்து துரத்தியடிக்கப்படுவது. மக்கள் இடம் பெயரும் காட்ச்சிகள் மற்றும் இராணுவத்தால் பெண்கள் மானவங்கப்படுத்தப்படுவது போன்ற காட்ச்சிகள் ஏதோ ஒரு நாட்டில் இடம் பெற்றது போல உள்ளது(நான் சொல்லேல்ல ).

படம் எடுக்கப்பட்ட காலம் , சோழரின் புலிச்சின்னம் போன்றன ஏதேதோ யோசிக்க வைக்குது . பயப்படாம இந்திய இராணுவ சீருடையுடன் அட்டூழியங்களை படம் பிடிச்ச தைரியத்துக்கு உங்களுக்கு பாராட்டுக்கள் செல்வராகவன் சார் .

"பெண் மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டு அழிய அருள்வாயோ"

வரிகளே முதலில் கவர்ந்தது .. பாடலின் அனைத்து வரிகளும் நமக்கு ஒன்றையே நினைவு படுத்துகிறது .

கார்த்திய பற்றி சொல்லோனும் எண்டா தனது வழமையான எளிமையான அலட்ச்சியமான கதாப்பாத்திரம். மக்கள் மனதில் ஒரு படத்திலேயே இடம் பிடித்தவர். இன்னும் முன்னேறுவார். அவரின் நகைச்சுவை காட்ச்சிகள் ஆறுதல் . அனைத்து இளைஜர்களும் இனி " கல்யாணம் பண்ண உங்கள மாதிரி ஒரு பொன்னை தாங்க கல்யாணம் பண்ணனும் எண்டு முடிவு பண்ணீட்டேன் " என்ற வசனத்தை அடிக்கடி சொல்வார்கள் . அன்றியவிடம் சொன்ன வசனத்தை உடனே ரீமாசென் இடமும் சொல்லும் காட்சி அருமை .
பார்த்திபன் இன்னொரு கதாநாயகன் என்றே சொல்ல வேண்டும் .சோழ வம்ச ராஜாவாக கதாப்பாத்திரத்திட்க்கு பொருந்தி நடித்துள்ளார்.



கதாநாயகிகளில் அன்றியா எளிமையான நடிப்பு ,இருந்தாலும் அவரிடம் ஒரு வித கவர்ச்சி. பொருத்தமான நாயகி தேர்வு . அணியும் ஆடைகள் மிகவும் பொருத்தம். உண்மையாக திரைப்படத்திலும் தமிழ் பேச கஷ்டப்படுகிறார்.

ரீமாசென்.. சபா..... இப்பவே கண்ணை கட்டுதே.. சொல்லவே வார்த்தை இல்லை .முதல் இருந்தே ரீமா சென் விசிறி எண்டதால இந்த படம் என்னை தீவிர விசிறியாக்கி விட்டது. கவர்ச்சிக்கு குறையே இல்லை. உன் மேல அசை தான் பாட்டில் தூள். டான்ஸ் பிரமாதம் . பார்த்திபனுடன் வரும் காட்ச்சிகளில் அழகுடன் வலம் வருகிறார்.

ரீமா சென் விசிறிகளுக்கு :-



இந்த படம் நிச்சயமாக விருதுகளை குவிக்கும் சந்தர்ப்பம் உண்டு .மூவரின் நடிப்பும் பிரமாதம்.

தரமான முயற்சி செல்வராகவன் சார். பாராட்டத்தக்கது . சிறு சிறு தவறுகளை நிவர்த்தி செய்து காட்சி நீளத்தை குறைத்தால் படம் வெற்றிப்படம் . இவ்வாறான முயற்ச்சிகளை வரவேற்க்க வேண்டும் . நாயகர்களுக்காக படத்தை ஓட வைப்பவர்கள் சிந்திக்கலாம் ... மேலும் ஒரு தமிழ் திரையுலகின் மாற்றத்துக்கான படிக்கல் . சபாஷ் ..

Tuesday, January 12, 2010

தமிழர் என்ற பெருமையும் உழவர் திருநாளும்...

தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வரும் வேளையில் தைப்பொங்கலும் பழந்தமிழர் பண்பாடும் இந்து சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான நெருங்கிய தொடர்புகள் பற்றிய பதிவை இடுகிறேன்.இந்த நேரத்தில் அனைவரும் தெளிவு பெறுவதற்க்கும் அறிந்து கொள்வதற்க்கும் பொருத்தமான தலைப்பு என்று நினைக்கிறேன்.
நம்முடைய பண்பாடுகளை நமது மொழியின் சிறப்புகளை நம்மவர்கள் மறந்து விடக்கூடாது என்ற ஆசையும் நமது கலாச்சார பாரம்பரிய விழுமியங்களை எடுத்து கூறுவதில் உள்ள பெருமையுமே இந்த பதிவிற்க்கு காரணம்.



நமது புராதன காலமான அதாவது சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த எமது மூதாதையோர் (பழைய திராவிடர் அல்லது மூலத்திராவிடர் ) ஒரே மொழியிலான பேச்சு வழக்கையும் கொண்டிருந்தனர் என புராதனம் கூறுகிறது. எமது மூதாதையர் இயற்கையின் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளை கண்டு அஞ்சி இயற்கையுடன் தொடர்புடையவையை(ஆகாயம் ,சூரியன் ,சந்திரன் ,மரங்கள் ) வழிபட்டு வந்தனர்.கூடுதலாக கடவுள் இல்லை என்பவர்கள் கூட நம்புவதும் இயற்கையையும் அண்டத்தையுமே. கடவுள் இருக்கிறாரா இல்லையா என அலசி ஆராய்ந்தால் இந்து சமய வழிபாட்டு முறைகள் சரியென தெரியவரும். இந்த புராதன வழிபாட்டு பாரம்பரிய முறையே ஈழத்திலும் இந்தியாவிலும் பெரும்பான்மையாக காணப்பட்டது.


இவ்வாறான வழிபாட்டு முறைகளின் படியே பிற்காலத்தில் தமிழர்களால் தைப்பொங்கல்,சூரிய வழிபாடு மற்றும் பெரும்பாலும் நாம் கோவில்களில் வழிபடும் விருட்ச்ச வழிபாடு போன்றன தோற்றம் பெற்றன.கூடுதலாக திராவிடருக்கே உரிய வழிபாட்டு விழாவாக காணப்பட்டது தைப்பொங்கல் விழா.பின்னர் தமிழில் ஏற்பட்ட சிதைவுகள் அதாவது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிப்பிரிவுகள் காரணமாக திராவிட இனம் சிதைந்தது தமிழின் இன்னொரு அழிவு. இருந்தாலும் தமிழருக்கே உரிய குணங்களில் ஒன்றான நன்றி செலுத்துதல் இந்துக்கள் ,கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் என்பவற்றை தாண்டி தமிழரின் பண்டிகையாக சிறந்து விளங்குகிறது. இது தமிழரின் தேசியத்திருநாளும் கூட.

முருகன் சிவன் எனும் பெயர்கள் கூட ஜாயிறு கடவுளுக்கு வழங்கப்பட்ட பெயர்களே. இது மேலும் தமிழர்களின் தாய்மதம் இந்து சமயம் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.

தமிழரின் மாதமாம் தை முதலாம் திகதி தமிழர்களால் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. கார்காலம் விலகி சூரியன் தோன்றும் நாள் உழவர்களால் அறுவடை நாளாக கொண்டாடப்படுகிறது. தமது அறுவடைக்கு உதவி புரிந்த சூரியன் ,மண், மாடு போன்றவற்றிக்கு நன்றி தெருவிப்பர்.உழவர்களுக்கே (வேளாளர் ) உரிய திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் உழவர்கள் தமது அறுவடைக்கு உதவிய சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் . அதிகாலை எழுந்து நீராடி புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டு. சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நோக்கி பொங்குவார்கள்.முதல் வருடம் ஐப்பசி மாதம் விதைத்த நெல் வந்த பின்னர் தைபொங்கல் அன்று
அதனை அறுவடை செய்து நெல்லை குத்தி அரிசியாக்கி அதை எடுத்து சோறு சமைப்பர். அவர்கள் புதுச்சோறு என அதனை அழைப்பதுண்டு. மக்களின் பசி போக்கும் நாட்டை செல்வ செழிப்புடனும் கொண்டு நடத்த உறுதுணையாக இருப்பவர்கள் உழவர்கள் ஆதலால் தொன்று தொட்டே உழவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்தது. நெல் களத்தை போர்க்களத்துக்கு உவமித்து பாடிய புலவர்களும் உண்டு. நெல் வளம் செழித்து ஒரு நாடு இருந்தால் தான் அது போரிலும் கூட வெற்றி பெற முடியும்.

சங்ககாலத்தில் கீ.மு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த தமிழர்கள் இந்நாளை அறுவடை நாளாக கொண்டாடி வந்துள்ளனர். இந்நாள் உழவர்கள் தமது புது நெல்லை பெரும் நாளாக கொண்டாடி வந்தனர் என புறநானூறு கூறுகிறது.

பழந்தமிழர் வாழ்ந்த சான்றுகள் சிந்து வெளி நாகரிகத்தில் இன்னும் காணப்படுகிறது. கூடுதலாக ஆற்றங் கரையோரம் வாழ்ந்த அவர்கள் நதிகளையும் வழிபட்டு வந்தனர்.வைகையும் பவானியையும் தாமிரபரனியையும் தமிழர்கள் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர்.அவர்கள் மிகுந்த செழிப்புடன் வாழ்ந்தமையே அதற்க்கு காரணம். சங்க கால தமிழர் பொங்கலன்று நீராடுவது "நதிநீராடல்" என அழைத்தனர்.
சங்க இலக்கியங்களில் எழுதப்பட்ட பாடல்களிலும் தைப்பொங்கல் அன்று நதிநீராடல் நிகழ்ச்சி பற்றி விபரித்து கூறப்பட்டுள்ளது.



பொங்கலுக்கு அடுத்த நாள் சூரியனுக்கு நன்றி தெருவித்தவர்கள் தாம் உழுவதற்கும் சூடு மிதிப்பதட்க்கும் உதவிய மாட்டுக்கு நன்றி செலுத்தவும் கொண்டாடப்படுவது தான் மாட்டு பொங்கல். இத்தினத்தில் மாடுகளை குளிப்பாட்டி அவற்றிற்க்கு விபூதி சந்தானம் பூசி அவற்றை அலங்கரித்து கொண்டாடி மகிழ்வதுண்டு.

கூடுதலான பண்டிகைகள் இந்து சமயத்தில் காணப்படுவதன் காரணமே இந்து மக்கள் கூடுதலான செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர் என்பதை பறை சாற்றுகிறது. பண்டிகைகள் கொண்டாடப்படுவது மக்கள் மனதில் ஒளியூட்டுவதட்கே. ஒவ்வொன்றையும் அர்த்தத்துடன் கொண்டாடினால் அதுவே போதுமானது.

பி. கு :- "தமிழ் பழமையும் புதுமையும்" புத்தகத்திலிருந்து சில தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

"அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்"

Sunday, January 10, 2010

விஜய் VS சன் பிக்சர்ஸ் சுறா - டீலா நோ டீலா

கொடுமை கொடுமை எண்டு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஆடிச்சாம் எண்டுற மாதிரி கொஞ்ச நாளாக நேரம் கிடைக்காததால் சன் டிவி பக்கம் போகாத நான் நேற்று பார்த்தேன். பல பதிவுலக நண்பர்கள் கொஞ்ச காலத்து சன் டிவி பக்கம் போக வேண்டாம் என எச்சரித்து இருந்ததும் நினைவில் இருந்ததால் சற்று குறைத்து கொண்டேன். வேட்டைக்காரன் பதிவுகள் பல வந்துவிட்டன இதற்க்கு காரணம் சன் பிச்செர்ஸ் அட்டகாசம் தான்.

வேட்டைக்காரன் படத்தை சன் பிக்சர்ஸ் ஏகபோக உரிமை எடுத்து வெளிட்டது அனைவரும் அறிந்ததே. வேட்டைக்காரன் படம் வெளியாக முன்னரே பல விளம்பரங்களும் ஒரு மணியித்தியாலத்துக்கு 8 தடவை படி தனது அனைத்து தொலைக்காட்ச்சிகளுமான சன் மியூசிக், கே டிவி ,சன் டிவி யில் வழமை போல விளம்பரப்படுத்தியது . கூடுதலானவர்களுக்கு டிரெயிலர் பார்க்கும் போதே படத்தின் கதை விளங்கி விட்டது. அது இன்னொரு பக்கம் இருக்கட்டும். இது போதாது எண்டு சன் டிவி யில் வரும் அனைத்து நிகழ்ச்சியிலும் கட்டாயமாக வேட்டைக்காரன் பற்றிய கதையை புகுத்துவதும் பார்க்காதவர்களை எல்லாம் படம் நன்றாக இருக்கிறது என்ற சொல்ல வைக்கும் கொடுமையும் நடக்கிறது .

வேட்டைக்காரன் படம் வெளியாகி 18 மணித்தியாலங்களுக்குள் படம் மாபெரும் வெற்றி என அறிவித்ததும் சன் பிச்சர்ஸ் இன் இன்னொரு வெற்றி . இதை நம்பி மக்கள் அலை மோதியதும் அனைவரும் அறிந்ததே. சன் டிவி இந்தியாவின் அனைத்து பட்டி தொட்டியெங்கும் ஒளிபரப்பாவது அனைவரும் அறிந்ததே. போலி விளம்பரத்துக்கு மக்கள் ஏமாந்தனர்.
சரி பரவாயில்லை அவர்கள் நிறுவனம் விளம்பரப்படுத்துகிரர்கள் என சகித்துக்கொண்டு இருக்க முகம் சுளிக்கும் விதமாக மக்களை சென்றடையும் உண்மையை எடுத்துக்கூறவேண்டிய மக்கள் ஊடகங்கள் மக்களை பிழையாக வழிநடத்துவது பிழையானதல்லவா?


விஜய் ரசிகர்களும் இதை மறுக்க மாட்டார்கள் ஏற்று கொள்வார்கள் என நினைக்கிறேன்.
வரலாற்றில் மறக்க முடியாத கொடுமையாகவும் தனது மதிப்பையும் இழக்கும் விதமாகவும் சன் டிவி நடந்து கொண்டது நகைப்பை விட சலிப்பையும் கவலையையுமே ஏற்படுத்தியது. வேறொன்றும் இல்லை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் சன் செய்திகள் தான்.
சன் செய்திகளில் படம் வெளியாகி அடுத்த நாள் தலைப்பு செய்தியில் வேட்டைக்காரன் மாபெரும் வெற்றி என சன் டிவி கூறியிருந்தது மக்களை ஏமாற்றும் வேலையாகவே அமைந்திருந்தது.
அதுவும் தினகரனும் இதற்க்கு உடந்தையாக அதனது தளத்திலும் மற்றும் பத்திரிகையிலும் செய்திகளை வெளியிட்டதும் சங்கடத்திட்க்கு உள்ளாக்கியது.

சரி இதெல்லாம் ஒரு மாதிரி தற்போது குறைந்து வர நானும் சன் டிவி போட்டு வழமைய போல நிகழ்ச்சி பார்த்தேன். என்ன கொடுமை என்று தான் சொல்ல வேண்டும் டீலா நோ டீலா நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்ச்சி தடோது அனைவரிடமும் பிரசித்தி பெற்றுள்ளது . அந்த நிகழ்ச்சி விளம்பரத்தில்" மக்களுக்கு ஒரு செய்தியாக உங்களுக்கும் பணம் வெல்லும் வாய்ப்பு உண்டெனவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தை போய் பாருங்கள் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையளியுங்கள் எனவும் கூறப்பட்டது.
எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது என நம்ம வடிவேல் சொல்வது தான் யாபகம் வந்தது. வேறு என்ன செய்ய முடியும் .கட்டாயமாக திரையரங்கு போய் வேட்டைக்காரன் பார்க்க சொல்கின்றணர அல்ல கெஞ்சுகின்றனரா??

கொஞ்ச நாளைக்கு முதல் தான் வேட்டைக்காரன் பாடல்களை சன் மியூசிக் ஒளிபரப்பியது. கவலை வேண்டாம் மீண்டும் சுறாவை சன் பிக்சர்ஸ் தான் எடுத்துள்ளது.
இந்த கொடுமையை தட்டி கேக்க மக்கள் தான் வர வேண்டும் . கொஞ்சம் தரமான படங்களான கண்டேன் காதலை போன்ற படங்களுக்கு சன் டிவி விளம்பரம் கொடுப்பது சகிக்க கூடியது .இதுக்குமா ??

விளம்பரங்களை வைத்து படங்களை ஓட்ட முடியும் என்றால் நல்ல தரமான திரைப்படங்களை என்ன செய்வது. ஏன் நல்ல திரைப்படங்களை சன் பிச்செர்ஸ் எடுப்பதில்லை. நல்ல திரைப்படம் எடுப்பவர்கள் விளம்பரங்கள் தேவையில்லை என்று வருவதில்லையோ தெரியவில்லை. சுறா கோடிகளுக்கு வாங்கப்பட்டு உள்ளதாம். அப்பிடி எண்டா இன்னும் விளம்பரங்கள் இருக்கு. ஒரு பதிவில் வாசித்திருந்தேன் சுறா ஆஸ்கார் விருது வென்றது என்று..ஏன் வெளியாகி இரு நாளில் வெற்றி பெறும் போது வெளியாகாமல் ஆஸ்கார் விருது பெறுவது ஒன்றும் புதிது இல்லையே . எல்லாம் பொங்கல் வரைக்கும் தான்.

Saturday, January 9, 2010

தமிழ் சினிமா காதலும் "A Walk To Remember"உம்

ஆகலும் பழைய பிந்திய பதிவு விமர்சனம் எண்டு நினைக்க வேண்டாம்.Twilight படம் பார்த்த பிறகு அது போல ஒரு மனதை பாதிக்கும் படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காதோ எண்டு ஏங்கி கொண்டு இருக்க"A walk to remember" படம் பார்க்கும் சந்தர்ப்பம் இவளவு காலம் கழிச்சு கிடைத்தது. வழமைய போல இணையத்தில் இருந்து இறக்கம் செய்து தான் இந்த படமும்..ஏற்கனவே பார்த்தவர்கள் இதை வாசித்து விட்டு பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும் .

தமிழ் சினிமாவில் உள்ள ஆர்ப்பாட்டமான காதல் கதையோ அல்லது யதார்த்தம் இல்லாத காதல் கதையுமோ அல்ல. நம்மட ஆக்கள் யார் தாடி வளர்த்தால் தான் உண்மையான காதல் என போர்முலா உருவாக்கியவர்கள் ஆச்சே சொல்லவா வேண்டும்.?? குழப்பம் இல்லாத தெளிவான திரைக்கதை .திருத்தமான கதைக்கரு.

கதையின் ஆரம்பத்தில் கல்லூரி மாணவனாக படிக்கும் நாயகன் (Landon carter) நண்பர்களுடன் இணைந்து பிழையான வேலையால் தன்னுடன் இருக்கும் நண்பனை மருத்தவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு இலட்ச்சியம் இல்லாத தான் என்ன செய்கிறேன் என தெரியாத நிலையில் .ஒழுங்கான நடத்தை இல்லாததுக்காக தண்டிக்கப்படுகிறார். ஒரு பாடசாலை நாடக விழாவில் பங்குபெறும் சந்தர்ப்பம் கிடைக்குறது. அங்கு அவருடன் நாயகி (Jemmie) இணைகிறார். எதிர்காலம் பற்றி சிந்திக்காத இவர் Jammie யால் மாற்றம் பெறுகிறார். மாற்றம் பெற எண்ணும் போது Jammie யின் ஆதரவை கேக்கின்றான். ஆவலுடன் கூடுதலாக நெருங்கி பழகும் landon க்கு எதிர்பாராத விதமாக காதல் ஏற்படுகிறது. காதல் landon யின் நண்பர்களையும் jammie தந்தையும் சந்தித்து வெற்றி பெறுகிறது. மகிழ்ச்சியாக இருக்கும் அவர்கள் வாழ்க்கையில் தெரியாத உண்மையை அப்போது தான் சொல்கிறார் jammie. அதன் பின்னர் அவர்களது காதல் எவ்வாறு அமைகிறது என இயக்குனர் அருமையான திரைக்கதை ஓட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் . படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


படத்தின் நாயகன்(Shane west) அதற்கே உரிய பாணியில் யதார்த்தமாக கதாப்பாத்திரத்திட்கு பொருந்தி அருமையாக நடித்துள்ளார். சிறந்த நாயகனாக அந்த ஆண்டில்(2002) விருது பெற்றுள்ளார்.


படத்தின் நாயகியை(Mandy moore) சொல்ல போனால் மிகவும் எளிமையான உடை எளிமையான பேச்சு இனிமையான குரல் வளம் கொண்ட பெண்ணாக ஜொலிக்கிறார். முதலில் இருந்து போக போக கதாநாயகியும் திரைக்கதை போல அழகாக தெரிகின்றன .தலை அலங்காரமும் நாடகம் இடம்பெறும் போது அவர் தோன்றும் காட்ச்சியும் மனதில் நிற்கின்றது. சிறந்த நடிகை என 2002 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.


படத்தில் மேலும் ஒரு சிறப்பு அதன் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்ச்சியிலும் ஒளிப்பதிவு ரசிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஆர்ப்பாட்டமில்லாத பின்னணி இசை மேலும் இந்த திரைப்படதிட்கும் அதன் காட்சி அமைப்புகளிற்கும் கதப்பாத்திரங்களையும் மெருகூட்டுகின்றது.
சிறிது சிறிதாய் பாடல்கள் இடம் பெறும் விதமும் ரசிக்க தக்கதாய் உள்ளது .It's gonna be பாட்டு அருமையாக உள்ளது.

கூடுதலாக அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த(எனக்கும் கூட ) வசனமாக " I might kiss u" "I might be bad at it" "its not possible" அமைந்துள்ளது .குடும்பத்துடன் பார்க்கலாம்.

மனித உணர்வுகளையும் காதலின் ஆழத்தையும் யதார்த்தத்தையும் சரியாய் பிரதிபலிக்கும் படம் . ஒவ்வொரு காட்ச்சியிலும் ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஒலிப்பதிவாளர் அனைவரது பங்கும் ஒன்றை அமைந்துள்ளது படத்தின் வெற்றி.

இறுதியில் அவர்களின் காதலின் உண்மைத்தன்மையை எடுத்து காட்டும் விதம் நெஞ்சை உருக வைக்குறது.
ஒவ்வொரு காட்சி அமைப்பும் ரசிக்க வேண்டியது. இந்த படத்தின் நாயகனும் நாயகியும் சிறந்த ஜோடிக்கான விருது பெற்றனர்.

Tuesday, January 5, 2010

நீ பொய் ..


நட்பில் விளம்பரம் பொய்
காதலில் நட்பு பொய்
பாசத்தில் வேசம் பொய்
நீ மட்டுமா மெய் ?

பொய்களின் நிழலில்
ஆடுபவள் நீ
அதில் எனது விம்பம்
இல்லையடி...
உனது விம்பமும் நிலையில்லையடி

பொய்கள் உன்னை
ஆளலாம்...
யதார்த்தத்தை மறைக்கலாம்..
உண்மையை மறுக்கலாம்.
உன்னையும்
ஒரு நாள் எரிக்கலாம் ...

குள்ள நரிகள்
பாசாங்கால்
ஜெயிப்பதுண்டு ...

பாசாங்கு நட்பை
ஜெயித்ததுண்டு
காதலை மறைத்ததுண்டு
உண்மை அன்பையுமா ?

விதைத்தவள் நீ
விளைவும் உனக்கு
என்னை நீ மறந்தால்
நானும் உன்னை மறப்பேன்
இரு வரிகளில் காரணம் சொல்வேன்
காதல் இருவரின்
ஒப்பந்தம் ....

என் உணர்வுகளை
எரித்து விட்டாய்
ஒரு போதும் அவை
உனக்காய் திரும்பாது

மீள்வேன்
யதார்த்தம் மரித்ததில்லை
நீ உணரும் போது
சிறிதாய் நகைக்க..

by:-சுதர்ஷன்

Sunday, January 3, 2010

5 நிமிடத்தில் 1கோடியே 26 லட்சம் காலி

இலங்கையில் சனாதிபதி தேர்தல் வரும் நிலையில் அறம் புறமாக பிரசார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது . இரு பக்கமும் சம அளவிலான எதிர் பார்ப்புகள் இருப்பதால் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது .ஒரு பக்கம் இராணுவ தளபதி சரத் பொன்சேகவும் இன்னொரு பக்கம் நவீன துட்டகைமுனு என சிங்கள தேசம் அழைக்கும் மகிந்த ராஜபக்சே அவர்களும் களத்தில் குதித்து உள்ளனர்.



இதற்கிடையில் வாக்குகளை பிரிப்பதற்கும் நடவடிக்கைகள் நடை பெறுகிறது. அதெல்லாம் விடுவம் . இருக்கிற கொடுமை பத்தாது எண்டு இங்க தொழில் நுட்பம் எல்லாம்
வாக்குகளுக்காக பாவிக்கபடுது. அதிலும் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மீதும் உள்ள வெறுப்பையோ அல்லது அறியாமையினாலையோ சிங்கள மொழில குறும் செய்தி அனுப்ப பட்டுள்ளது. சிறிது காலத்துக்கு முதல் தான் பணம் அதிபரின் உருவ படத்துடன் அச்சிடப்பட்டது.தன்னுடைய உருவப்படம் கொண்ட பணத்தை தானே அடிப்பது இதுவே முதல் முறை அது கூடிய சர்ச்சைகளில் சிக்கியுள்ள போது இந்த குறும் செய்தியும் புத்தாண்டு தினத்தின் அன்று இடம் பெற்று உள்ளது.





வேடிக்கையான ஜனாதிபதி தேர்தல்

கூடுதலாக நம் இணைய நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். ஜிமெயில் மற்றும் சமூக இணையத்தளங்களான Facebook இலும் கூட பரப்புரைகள் இடம் பெற்று வருகின்றன. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக குறும் செய்தியில் வாக்கு கேட்டது இதுவே முதல் முறை .நான் உங்களுக்கு (மக்களுக்கு) சுதந்திரமான நாட்டை தருவேன். இதன்மூலம் உங்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அதிபர் ராஜபக்ச என குறிப்பிட பட்டு இருந்தது .
அதுவும் அனைத்து கைபேசி நேத்வோர்க்க்கில் இருந்தும் அனுப்பபட்டு உள்ளது .


ஒரு குறும் செய்தி அனுப்ப ஒரு ரூபாய் என உங்கள் அனைவருக்கும் தெரியும் . அதிபர் அவர்கள் புத்தாண்டு தினத்தன்று ஒரு கோடியே இருபத்தியாறு லட்சம் ரூபாய் செலவழித்து வாழ்த்து அனுப்பி உள்ளார். ஜனாதிபதியின் மாத சம்பளம் எவ்வளவு என உங்கள் அனைவருக்கும் தெரியும் . ஒரு நாளில் ஒரு கோடியே இருபத்தியாறு லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் காலி!!!!.

நமக்கு தெரிந்து மக்களின் வரிப்பணம் பிழையாக பாவிக்கப்பட்ட ஒன்று சந்தர்ப்பம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர் சரத் பொன்சேகா யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Friday, January 1, 2010

தமிழ் படம் லொள்ளு

தலைப்பிலையே உங்களுக்கு விளங்கியிருக்கும் தமிழ் படம் எண்ட பெயர்ல ஒரு படம் . படத்தின் பெயரே கொஞ்சம் எடாகுடம் தான் .இந்த படம் நிறைய கிண்டலும் கேலியும் சுமந்து வரும் எண்டு நினைக்கிறேன் . எங்கட ஹாரிஸ் ஜெயராஜ்ட தூய தமிழ்(ஹசிலி பிசிலி ) பாடல்களை கேட்டவர்களுக்கு இந்த படத்தின் பாட்டும் கிண்டலும் கேலியுமாக அமைந்திருக்கும் . தமிழ் படங்களை பார்த்து வாழ்வோருக்கும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தமிழ் சினிமா எடுப்போருக்கும் இந்த படம் நல்ல பாடமாக அமையும்.



எங்கட ஆதங்கத்தை எல்லாம் படத்திலை இயக்குனரே கொட்டியிருப்பார். சிவாஜி கால சினிமால இருந்து கடைசி சின்னன் சிறுசுகள் வரைக்கும் எல்லாரையும் கிண்டல் அடித்துள்ளார்கள். இந்த படத்தில் கதாநாயகன் சிவா. நம்ம 600028 ஹீரோ. அவர் கல்லூரியில் படிக்கும் மாணவர். அவருடைய சக நண்பர்கள் எம்.எஸ் பாஸ்கர் ,மனோபாலா ,வெண்ணிற ஆடை மூர்த்தி..
கேக்கவே எப்பியிருக்கு. இதிலிருந்தே தெரியுது எப்பிடி படம் இருக்கும் எண்டு.
தயாநிதி அழகிரி தாயாரித்து இருக்கும் இந்த படம் முன்னர் விளம்பர படங்கள் எடுத்து வந்த சீ எஸ் அமுதானால் இயக்கப்பட்டு உள்ளது . இந்த படத்திற்க்கு கண்ணன் இசை அமைத்து உள்ளார் .



அருமையான இசை .. அதுவும் அனைத்து பாட்டுகளையும் கிண்டல் அடிக்கும் பாடல் அருமை. இசை எம்மை ரசிக்க வைக்கிறது . இந்த பாட்டை தந்த வெற்றி லோஷன் அண்ணாக்கு நன்றி. முந்தி கொண்டு கேக்க முடிஞ்சுது.
எவ்வவளவு முடியுமோ அவளவு கிண்டல் எண்டு கேள்வி.

தமிழ் படத்தில் உள்ள ஓட்டை உடைசல்களில் எல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் தமிழ் படம் குழுவினர்.

ஆனா அனைவரையும் இந்த படம் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் எண்டு உறுதி கூறுகிறது தமிழ் படக்குழு.அதே நேரம் நல்ல தரமான படங்களை நக்கல் அடிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.ஜனவரி வரைக்கும் பொறுத்திருந்து பாப்போம்

இந்த பாட்டையும் கேளுங்க. இதுக்கு அர்த்தம் புரிஞ்சா சொல்லுங்க.






video

ஏன் ?