ஒரே வார்த்தை விண்ணைத்தாண்டி வருவாயா உலகப்படம்.

பல நல்ல விமர்சனங்கள் கவர்ந்தன .
முதல் எல்லார்(சில) மேலயும் ஒரு குமுறு குமுரீட்டு என்ட கருத்தை சொல்லுறன் .இது விமர்சனம் இல்லையுங்க. நீங்களும் உங்கட மனதில்லை யோசித்தவையா இருக்கும் .
ஒரு படம் இயக்குவது என்பது நல்ல ரசனை சிந்தனைகள் உள்ளவனுக்கு கடினமான விஷயம் அல்ல விருப்பமான விஷயம் . ஒவ்வொரு பிரேமும் செதுக்கப்பட்டவை . அவற்றை வெறுமனே கதை சரியில்லை , முதல் பாதி சிறப்பு பின் பாதி சரி இல்லை . இன்னும் வேகத்தை கூட்டி இருக்கலாம் என்று ஏதோ ஆக்க்ஷன் படத்துக்கு விமர்சனம் எழுதிற மாதிரி. ஆக்க்ஷன் படத்துக்கும் விமர்சனம் எழுதும் போதும் வெறுமனே கதையை வைத்தே விமர்சனம் முடித்து விடுவார்கள் . " அரைத்த மாவு புளித்த மாவு" எண்டு .
மென்மையான காதல் படங்கள்ல வேகத்தை கூட்டுறதுக்காக கடைசிலை என்ன பயர்லையும்(fire ) டாடா சுமொவிலயுமா கிளைமாக்ஸ் வைக்க முடியும் . காதல் படம் மென்மையாக தான் குடுக்க முடியும் . கூட்டினால் உணர்வுகள் வெளிப்படாது .
ஆங்கில திரைப்படங்கள் கூட காதல் திரைப்படம் என்றால் கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் ஓடும் . வேணும் எண்டா கிராமத்துல ஓடுற ரயின்ல ஏத்திற மாதிரி சீன் எடுத்தா , இல்லன்னா அப்பாவோட ( வில்லனோட) சண்டை பிடிச்சு லவ்வ வின் பண்ணா கை தட்டு வேற .
உங்களை மாதிரி ஆக்களை பாத்து தான் பாதி பேர் லவ்வே பண்ணுறதில்லை. ஏதோ லவ் பண்ணா பெரிய குற்றம் மாதிரி இந்த மாதிரி கிளைமாக்ஸ் வரும் எண்டும் பயந்து பொய் இருக்குதுகள்.
காதலை அழகாக காட்டிய கவுதம் மேனனுக்கு பாராட்டுக்கள்(வணக்கத்துடன் ). காதல் உண்மையிலேயே அழகான விஷயம் மட்டுமே. உண்மையாக இந்த படத்தில் வில்லன் அவர் அவர் மனசுகளே . சரியான விளக்கம். வில்லன்(அப்பா , அண்ணா ) மாதிரி வாறவனுங்கள் பாதிலேயே போறது நல்லம் . அவர்களின் மனதில் எழும் குழப்பங்கள் பிரச்சனைகள் காட்டியிருக்கும் விதம் அருமை . அக்ஷுஅலா நான் ஜெசிய choose பண்ணேன் என்பது யதார்த்தம்.

சிலவை புதுசு அல்ல . அதே மதப்பிரச்சனை போன்றன . இங்கு மொழியும் வயதும் இன்னொரு பிரச்சனை . வயதை இருவரும் பொருட்டாக எடுக்காதது உண்மை .
காதல் மட்டுமே தெரிகிறது .
சில காட்சிகள் அதே என்றும் இன்னொரு விமர்சனம் வாசித்தேன். காட்ச்சிகள் என்று நீங்க எதை சொல்லுறீங்க . ஷங்கருக்கு 50 கோடி குடுத்தாலும் இப்பிடி காட்சி அமைப்பு எடுக்க மாட்டார் . அவருடைய பாணி வேறு .
ஒவ்வொரு பாடல்களும் மனதில் , காட்சி அமைப்பு பார்த்ததும் இன்னும் பிடிக்கிறது. பாடல்கள் பற்றி தனி ஒரு பதிவே எழுதியிருக்கிறேன் . வெறுமனே சொல்லி முடித்து விட முடியாது . முக்கியமாக மன்னிப்பாயா பாட்டுக்கு சிம்புவின் முகத்தை நிலவோடு சேர்த்தது அருமை .
காதலின் நெருங்கிய உணர்வை (romantic ) காட்டிய கவுதமிட்க்கு ஸ்பெஷல் பாராட்டுகள் . அதுக்கும் ஏன் தான் சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை .
அருமையான திரைக்கதை ஓட்டம் . முடிவை மாற்றாமல் விட்டால் நல்லது .
என்ன ஒரு தைரியம் . அதுவும் தமிழ் சினிமா கொடுக்காத ஒரு பாணி. இருவருக்கும் தான் . ரகுமானுக்கும் தான் . பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்டால் விளங்கும் .
தமிழ் இசைக்கு அனைத்தும் புதிது . பின்னணி இசையிலும் தரம் தெரிகிறது. மசாலாக்களுக்குள் இரு முத்துக்கள் .

ஏன் தான் கூடுதலான விமர்சகர்கள் காட்சி அமைப்புகளையோ பின்னணி ஒலிப்பதிவையோ சொல்லுறதில்லையோ தெரியேல . முக்கியமாக விண்ணை தாண்டி வருவாயா கலை , ஆடை வடிவமைப்பு , காட்ச்சிகள் அனைத்தும் பிளஸ். யாரும் கூறியதாக தெரியவில்லை . வேறு படங்களில் சேர்த்து காண முடியாதது .
தனிப்பட்ட நாயகனின் விருப்பு வெறுப்புக்காக , நாயகியின் விருப்பு வெறுப்புக்காக விமர்சனம் எழுதுபவர்களும் இருக்கின்றனர். இனி மேலாவது விமர்சனங்கள் எழுதும் போது பிளஸ் ஐயும் மயினசையும் சொல்லுங்கள் . வேரோனே ஒரு பார்வையில் சொல்லாதீர்கள் . சில படங்களை சொல்லலாம் தான் .. தரமான படங்கள் எவளவோ மட்டமான காரணங்கள் வைத்து தட்டப்பட்டுள்ளன .
அந்த திரைப்படத்தில் உணரவேண்டியவை எவளவோ . சிலர் உண்மை வாழ்க்கையில் கதைத்த வசனங்கள் . உண்மையான வாழ்க்கை ஒரு படமாக .
ஒரு படத்தை பார்க்கும் போது காட்சி அமைப்புகள் இயக்குனரின் உச்ச கற்ப்பனை. கவுதமின் சிறப்பு தெரிந்தவர்களுக்கு தெரியும் .
கவிதை போல , வெளியே வரும் போது புன்னகை + கண்ணீரை சேர்த்து கொடுத்த வாசுதேவ மேனனுக்கு பாராட்டுக்கள் . கிளைமாக்ஸ் மாத்தாமல் விட்டால் நல்லது .





























