தொடருபவர்கள் - நன்றிகள்

Wednesday, March 17, 2010

இளையராஜா இசை ராஜா (தொடர்பதிவு 4 )

இளையராஜா வந்தவுடன் சாஸ்திரிய இசை தனிமை நமது இசை அழிந்து விட்டது என்கின்றதை ஏற்க்க  முடியாது . தமிழின் பெருமை ஆங்கிலேயனுக்கு தெரிய வேண்டுமானால் ஆங்கிலத்தில் தான் கூற வேண்டும் . நமக்குள்ளேயே  இருந்தால் தான் எல்லாவற்றிற்க்கும்   அழிவு . சாஸ்திரிய இசையுடன் மேலைத்தேய  கலப்பு . ரகுமானின் முயற்ச்சியும் கூட அதுவே .



இளையராஜாவுக்கு கூடுதலான இசைக்கருவிகளை கொண்டே  இசை அமைக்க முடியும் என்று இல்லை . சாதாரண ஒரு இசைக்கருவியை வைத்தே முழுப்பாடலையும் முடிச்சிருப்பார் . "யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே" பாடல் தளபதி படம் . ஒரு அருமையான குரல் கொண்ட மிதாலி என்ற  வடநாட்டுகாரரையும் அறிமுகப்படுத்தினார். முழுக்க சித்தாரை  வைத்தே பாடலை முடித்திருப்பார் .

எல்லாருக்கும் பிடித்த "ஆயிரம் தாமரை மொட்டுகளே" பாடல் . இளையராஜாவின் ஒரு கலவை . கிராமிய கும்மியில் பெண்கள் கைதட்டலை ஆரம்பத்தில் போட்டு தொடர்ந்து மிருதங்க இசையுடன் மேலைத்தேய பாணியில் ஒரு கோரசையும் புகுத்தி இருப்பார் .  சிவபந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல் ஆனால் கும்மி போல அமையும். மேலைத்தேய பாணி , கர்நாடக இசைக்கருவிகள் கொண்ட கலவைப்பாடல் . ஜானகியின் தேன் குரலில் . "கோயிலில் காதல் தொழுகை " என்பது மிகப்பிடித்த வரிகள் .


கூடுதலாக இளையராஜா தனக்கு எழுதும் பாடல் வரிகளில் வரும் சத்தத்தையும் தனது இசையையும் கலந்து கொடுப்பார் . பபபப்ப பப்பபறி என்ற கமலகாசன் பட பாடலில் ." புது மாப்பிளைக்கு நல்ல நேரமடா " பாட்டில் . வரிகளின் சத்தத்தை எடுத்து பப்பபறி என்ற கோரசுடன் சேர்த்திருப்பார் .


மேலே கூறியது  போலவே "யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே " பாடலை போலவே கண்ணதாசன் எழுதிய மென்மையான சில வாத்தியங்கள் கொண்டு இசைக்கப்பட்ட பாட்டு . " கண்ணே கலை மானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே ". ஒரு சில வாத்தியங்களை மட்டும் கொண்டே தான் திறமையால் இசை அமைக்க முடியும் என காட்டிய பாடல்கள் . மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் . ஜேசுதாசின் அற்ப்புதமான குரலையும் காரணமாக கூறலாம் . 


எல்லா விதமாகவும் பாடல் பண்ண முடியும் என நிரூபித்தவர் இளையராஜா . கைதட்டலை வைத்தும் விரல் சுடக்குதலயும் வைத்தும் இசை கொண்டு வர முடியும் என நிரூபித்தார் . ரகுமானின் ஓமனப்பென்னே பாட்டிலும் காணலாம் .

"ராக்கம்மா கையத்தட்டு" பாடல் பாமர வரிகள் கொண்ட பாடல் . சாதாரண இசையில் கர்நாடக சாஸ்திரிய தேவார இசையையும் கொண்டு வந்தார் . சேர்த்தார் அதுவே இளையராஜா . பாமர வரியுடன் தேவார இசை மாறி மாறி வரும் . என்ன ஒரு கற்ப்பனை .    "புனிதத புருவமும் கொவ்வை செவ்வாயில் " தேவாரத்துக்கு இனிமையான இசை . தேவாரமும் பாமர இசையும் மாறி மாறி வரும் .

அடுத்த பதிவில் மேலும் இளையராஜாவால் நகைச்சுவையாகவும் இசை அமைக்க முடியும் எனவும் நிரூபித்துள்ளார் எவ்வாறு என்பது பற்றி பார்ப்போம் .

முதல் பதிவு
இரண்டாம் பதிவு 
மூன்றாம் பதிவு 

Saturday, March 13, 2010

அர்த்தமுள்ள இந்து மதம் (தொடர் பதிவு 2)

தொடர்பதிவாக இதை எழுதுகிறேன் . இந்த முறை என்னுடைய கருத்துகளையும் தொகுப்புடன் வழங்குகிறேன் . ஜாதி ,கடவுள் இந்த யோசனைகளை அடிப்படை மூட நம்பிக்கைகள் எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு  பரந்த  சிந்தனை மீது எண்ணத்தை மாற்ற வேண்டும் . 


இந்து  சமயத்தின் பல கூறுகளை எடுத்து கொண்டு வளர்ந்தது மற்றைய சமயங்கள் . அன்பே  சிவன் என்பது இந்து சமய கூற்று . அன்பை ஒரு நோக்காக  கொண்டதே கிறிஸ்தவ சமயம் . கொல்லாமை என்பது இந்து சமய அடிப்படை . அதை முக்கியமாக கொண்டதே பவுத்த சமயம் .
இறைவன் படைத்தான் ,படைக்கிறான் என்ற ஒரு கோட்டின் கீழ் நின்று விட்டால் வேறு யோசனைகள் எழாது . இறைவன் இல்லை என்பவர்கள் கூட ஏதொ ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்றனர் . சக்திகள் என பார்க்கப்போனால் எவ்வளவோ சக்திகள் .அந்த சக்திகளின் தொகுப்பாக அமைந்ததே இந்து  சமய வழிபாடு . கூடுதலாக பார்த்தால் அவ்வாறான வழி பாட்டு முறையே காணப்படும் . சூரியன் ,சந்திரன் , எம்மை சுற்றியுள்ள ஏனைய கோள்கள் போன்றன இந்து சமய வழி பாட்டு முறையிலேயே உள்ளது . கண்ணால் காணும்  சக்திகள் இவையே .


உயிரினங்களின் பிறப்புகள் நடத்தைகள் , இறைவன்  இதற்க்கிடையில் பல குளறுபடிகள் இருப்பதால் தெளிவான பின்னர் கருத்தை கூறுகிறேன்(தெளிவாகுமா?) . கூர்ப்பை அலசினால் அது ஒரு புரியாத புதிர் .முடிந்தால் பின்னூட்டமிடுங்கள் .


தேவையில்லாமல் இறைவன்  படைப்பு என்று போய் விட்டேன் . சரி குறுகிய வட்டத்துக்குள் தெளிவு பெறுவோமே .இந்து மதம் ஒரு வழிகாட்டி மதம் .மனித  வாழ்க்கையின் பல படிகளை எடுத்து கூறுகிறது . 


லவுகீக வாழ்க்கையை கூறும் ஒரே மதம் . அது தான் சந்தேகத்துக்கு இடமின்றி எந்த மதத்திலும் இல்லாதவாறு கணவன் மனைவி முறை இந்து மதத்திலும் உண்டு . குடும்பமாக இறைவன் சித்தரிக்கப்படுகிறான் . கண்ணதாசன் கருத்துப்படி இறைவனுக்கு எதற்க்கு மனைவி என்றால் மனிதனுக்கு எதற்க்கு மனைவி ? என்ற  கேள்வி எழுப்புகிறார் . அர்த்த நாரீஸ்வரர் வடிவம் கணவன் மனைவி சேர்ந்த நிலையை விளக்கும் .ஆண் பெண் சம நிலையை கூறிய ஒரே மதம் இந்து மதம் .


எவளவு பெரிய விஞ்சானியாக   இருந்தாலும் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதற்க்கு முன் அவன் தேவாலயம் சென்று விட்டு தான் அனுப்புவான் . அவனை அறியாமல் ஒரு மெய் ஞான உணர்வு அவனை அழைக்கிறது .

இந்த லவுகீக வாழ்க்கை தொடங்கும்  இடம் தாய் .சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ நகரில் பேசிய போது அங்கிருந்தவர்களை பார்த்து பெரியோர்களே தாய் மார்களே என்று அழைத்தாராம் .அங்கிருந்த இளம் பெண்கள் தமக்கு  திருமணம் கூட ஆகவில்லை என்றனராம் . அதற்க்கு விவேகானந்தர்   மேலை நாட்டில் பெண்களை பார்த்தால் காதலி , மனைவி நிலை தான் தோன்றும் . எமது கலாச்சாரத்தில் தான் பெண் என்றால் தாய் உணர்வு தோன்றும் .


தாய் க்கு முக்கியத்துவம் கொடுத்து தாய் முதல் படியில் இருக்கும் சமயமும் கூட . நாம் கண்ட முதல் தெய்வம் தாய் என்பதில் இறைவனை விட இந்து மதம் தாய்மையை தூக்கி நிறுத்துகிறது .யதார்த்தமான சிந்தனை கூட . தாய் காட்டி தான் தந்தை கூட தெரியும் . தந்தை தான் குருவை காட்டுபவர் .

ஆபத்திலே தான் ஆண்டவன் தோற்றமளிக்கிறான். மரணம் என்ற மாயை எங்கே இருக்கிறதோ அங்கேயே இறைவன்  இருக்கிறான் . நாம் பிறக்கும் போது எம்மை நாம் தீர்மானிப்பதில்லை . யார் தீர்மானிக்கிறார்கள் என்றே தெரியவில்லை . இறைவன் என எண்ணுகிறோம் .

உடல் கூற்று மனக்கூற்று , உடல் ,மனது ஒரு மனிதனுடைய முழுமை . உடலை தாண்டி மனதில் நிர்ப்பதாலேயே  ஆன்மிகம் என்று இந்து மதம் அழைக்கிறது . இது உடலுக்கு அப்பால் பட்ட நிலைமை .நமது இதிகாசங்கள் மனத்தை சாந்திப்படுத்தவே எழுதப்பட்டன . இதிகாசங்கள் உண்மையா பொய்யா  என ஆராய வரவில்லை .

அடுத்த பதிவில் இந்து சமயமும் இதிகாசங்கள் பற்றி பாக்கிறேன் . தசரதனுக்கு 60 ,௦௦௦ மனைவியர் சாத்தியமா ? தொடர்ந்து பாப்போம் இதிகாசங்களுடன் .


அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பதிவு  
http://ethamil.blogspot.com/2010/03/blog-post_10.html

Friday, March 12, 2010

இளையராஜா தொடர்பதிவு (3)


இளையராஜாவின் அபூர்வ கற்பனைகள் திறமை அறிந்தவர்கள் குறைவு . இன்னும் பாடல்கள் மனதில் நிற்ப்பதட்க்கு பல காரணங்கள் . அவர் இசையமைத்த  பாடல்கள் மீதான ரசனை பார்வையின் ( கொஞ்சம் தகவல்களுடன் )தொடர் பதிவாக இது   அமைகிறது .

இளையராஜா தான் வளர்ந்து வந்த காலத்தில் தனது இசை மீது கொண்ட நம்பிக்கையால் பல பாடகர்களை விட்டு விட்டு புதிய பாடகர்களை உருவாக்கினார். அவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பளிக்க தொடங்கினார் . மலேசியா வாசு தேவன் ,ஜென்சி , ஸ்வர்ணலதா ,சித்ரா போன்றோர் . எஸ் பி பாலசுப்ரமணியம் , ஜானகி போன்றோரின் முழு பரிமாணம் திறமைகள் வெளிக்கொண்டு வரப்பட்டது இளையராஜாவினால் எனலாம் .

"இதழில் கதை எழுதும் நேரம்" பாடல் நிறைய பேருக்கு பிடித்த பாடலாக இருக்கலாம் . திராரிசிசம் எனப்படும் சாஸ்திரிய இசை . இந்த பாடலில் மேலைத்தேய வயலின் , பியானோ இசைகளை பயன்படுத்தி இருப்பார். ஆரம்ப இசையே எங்கோ கொண்டு போய் விடும் . லலிதா ராகத்தில் அமைந்த பாடல் . எலோரும் காதல் பாடலுக்கு சோக கீதம் போல அமைப்பர். இளையராஜாவின் புதிய முயற்ச்சி .லலிதா ராகத்தில் அமைந்த பாடல் .  பாலசுப்ரமணித்தின் திறனை முழுமையாக கவனிக்கலாம் . கவனித்தால் பாடும் போது மென்மையாக பின்னணியில் டிரம்ஸ் வாத்தியங்கள் ஒலிக்கும் .

http://www.youtube.com/watch?v=0Y2U4XmYwLg


குணா படத்தில் அனைவருக்கும் பெரிதாக தெரிந்த கேட்ட பாடல் "கண்மணி அன்போடு காதலன்" . ஆனால் அந்த படத்திலேயே ஒரு பாடலில் ஜேசுதாசின் திறமையை போட்டு வாங்கியிருப்பார் இளையராஜா . கடினமான கர்நாடக ராகமான வராளி ராகத்தில் அமைத்திருப்பார் . சில தேடல்கள் பவானி ராகம் என்று சொல்கின்றன . "பார்த்த  விழி பார்த்த  படி பூத்திருக்க " பாடல் தான் அது .முழு கர்நாடக ராக பாடல்கள்  ஜேசுதாசால் மட்டுமே சிறப்பாக பாட முடியும் . ரகுமானின் கையில் உன்னி மேனன் உண்டு . இன்னொரு ஜேசுதாஸ் . மனதை மயக்கும் பாடல் .

http://www.youtube.com/watch?v=GfRR3a_FPFY

பெரும்பாலும் இளையராஜா சகாப்தம் நீண்டதாக வைக்கலாம் . கம்போ வாசிக்க தெரிந்தவர் ஒருவர் ராஜா  தானாம் .பேத்தோவன் , பாக் , செக்கன் என பல கிளாசிகல் இசைகள் தான் இளையராஜாவின் முதல் . ராஜாவே அற்கேச்ற்றடோர் ஆவும்  இசை அமைப்பாளர் ஆவும் இருந்ததால அவருக்கு இசை அமைப்பது மிக இலகுவாக இருந்தது .

இன்னொரு மேலை நாட்டு உத்தியில்  அமைத்த பாடல் . அழகான இசை . அனைவருக்கும் மனதில் கேக்க இதமான பாடலாக இருக்கும் . ஆனால் கேதாரம் எனும் கர்நாடாக ராகம் . "இது ஒரு பொன் மாலை பொழுது"   பாடல் அது . வயலின் , புல்லாங்குழல் என  பல இசைக்கருவிகளின் கோர்வை . வைர முத்துவின் வைர வரிகள் .

இன்னொரு எனக்கு மிகவும் பிடித்த கூடுதலாக பலர் கேட்டிருக்க முடியாத பாடல் . "அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே ".
http://www.youtube.com/watch?v=errR7iLYuuU
முன்னர் எண்பதுகளில் வானொலிகளில் மீண்டும் மீண்டும் பல தடவைகள் ஒலித்த பாடலாம் . வேறு ஒருவரும் இவ்வாறு இசை அமைக்க முடியாது என்பது இசை ஆராச்சியாளர்கள் கருத்து . இந்த பாடல் பாடி இன்னொருவர் பின்னணி பாட வேண்டிய முறையில் பின்னாலே பின்னணி இசை அந்த குரலுக்கு பதிலாக சேர்ந்து ஒலிக்கும் .

இளையராஜா ஒரு தனி சகாப்தம் . இடத்தை நிரப்ப முடியாது . அவருடைய ஸ்டையில் ரகுமானிடம் பலர் அவதானித்திருக்கலாம் . அடுத்த பதிவில் இளையராஜா பாடல் வெற்றிகளுக்கு காரணம் பற்றி இடுகிறேன் .
  

Wednesday, March 10, 2010

அர்த்தமுள்ள இந்து மதம்.. எனது பார்வையில்

இது வெறுமனே இந்து மதம் பற்றிய பதிவு அல்ல . இந்துசமயத்தை ஒரு மதம் என எடுத்துக்கொள்ளாது ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு அனைவரும் வாசிக்கலாம் . 

இந்த காலத்தில் மிக  முக்கியமான பிரச்சனையாக ஜாதிப்பிரச்சனைகள்,மொழிப்பிரச்சனைகள் . எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று உங்கள் அனைவருக்கும்  தெரியும் .இதென்ன பிரச்சனை? அனைவர் மனதிலும் உள்ள பிரச்சனை  அறியாமை . இந்து மதத்தை முழுமையாக அறியாமை . பாதி அறிந்தவன் பூசை மட்டும் செய்கிறான் , மீதி அறிந்தவன் விரதம் , வேண்டுதல் , நேத்திக்கடன் ,விழாக்கள் எடுக்கிறான் . முழுமையாக அறிந்தவன் கோபத்தில்  தான் இருப்பான்.

என்னை பொறுத்த வரை இந்து மதத்தை தற்போதைய நிலைப்படி அழகாக பிரிக்கலாம் . கோவிலுக்கு வெளியில் நிற்க்கும் ஜாதி(தீண்டத்தகாதவர்கள் ) , கோவிலுக்கு உள்ளே நிற்க்கும் ஜாதி , கர்ப்பக்கிரகத்துக்குள்ளே நிற்க்கும் ஜாதி (பிராமணர்கள் ).  இந்து மதம் ஒரு வழிகாட்டி மதம் . உரிமைக்காரர்கள் இல்லாத ஒரே தனித்துவமான மதம் . இதற்க்குள் பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றே கேள்வி எழலாம்.



இவ்வாறான  பிரச்சனைகளை அணுக வேண்டுமானால் இந்து சமயம் அல்லது வேறு மதங்கள் தோன்றிய அடிப்படையில் போய்  காரணத்தை தேட வேண்டும் . சமயங்கள் இறைவன் மனிதனுடைய பயத்தை போக்குவதட்க்காய் உருவாகியவை . மனிதனால் உருவாக்கப்பட்டவையே தவிர. மனிதனை மதங்கள் உருவாக்கவில்லை .


கவிஜர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தையும் எனது கருத்தையும் தொகுத்து  கூறினால் மிக பொருத்தமாக இருக்கும் .


 இந்த உலகம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதிலிருந்து  மனித இனம் தோன்றிய காலம் ஒரு சிறு பகுதியே . மனித இனம் 50 ,௦௦௦ ஆண்டுகளுக்கு முதலிலேயே உருவாகியது அதில் ஒரு பகுதியே சமயங்கள் தோன்றியது என்பது பலர் மறுக்க முடியாத உண்மை . காட்டுமிராண்டியான மனிதனிடம் நாகரிகம் வளர காதலும் மதங்களும் உறுதியாக நின்றது யதார்த்தம். சட்டங்கள் எவ்வாறு தோன்றியதோ அதே போலவே மனிதன் வழி தவறாமல் இருக்க  மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை . மதங்களின் பெயரால் மீண்டும் காட்டுமிராண்டிகள் ஆவது தான் ஒரே கவலை .


இதற்க்கு எல்லாம் காரணம் யாரோ எழுதிய புத்தகங்களும் யாரோ கூறிய  வார்த்தைகளையும் சரியோ தவறோ என பார்க்காமல் மனிதன் பின் பற்றுவது  தான் . அவை ஒன்றும் புதிய நூற்றாண்டில் எழுதப்படவில்லையே . வேண்டுமானால் அந்த காலகட்டத்துக்கு பொருந்தலாம் . 


சரி கவிஜர் தனது பார்வையில் இந்து மதம் ஒரு மதமாக இருக்கவில்லை என்றும் ஒரு வழிபாட்டு முறைமை  இருந்தது  என்றும் கூறியுள்ளார் . உண்மையில் இந்தியாவில் தான்     முதல் முதலாக வழிபாட்டு முறைமையோ அல்லது மதமோ தோற்றியதாக உலகம் ஏற்றுக்கொள்கிறது .  இதிலிருந்து இந்து சமயம் அந்த பெயரை பெற முன்னரே வைணவம் , சைவம் என இரு வகைகளாகவே இருந்தது .


உண்மையில் எல்லா சமயங்களுக்கும் உருவாக்கியவர்கள் பெயர் உண்டு. இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டது கிறிஸ்தவ சமயம் , கவுதம புத்தரால் உருவாக்கப்பட்டது பவுத்த சமயம் . ஆனால் இந்து சமயத்துக்கு உருவாக்கியவரும் கிடையாது . யாராலும் உருவாக்கப்படவுமில்லை . ஒரு  சமூக மக்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு முறை . இந்த ஒரு ஆதாரமே போதும் . 


கிறிஸ்தவ சமயத்துக்கு எவ்வாறு புரட்டஸ்தாந்து சமயமோ அவ்வாறே   இந்து சமயத்துக்கும் சமண சமயம் இருந்தது . ஆனால் இந்து சமயத்தை அழிக்க பல மதங்கள் உருவாக்கப்பட்டாலும் அவை அனித்தும் தாமே  அழிந்தது தான் வரலாறு . ஆனால் இப்போதும் இந்து சமய அழிப்பில் பலர் சிக்கி வேறு மதங்களாக பிரிந்துள்ளனர் . ஒரே காரணம் வேறு சமயங்களை யாரும் குறை கூட சொல்ல முடியாது . ஆனால் இந்து சமயம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது கண்ணதாசன் கருத்து . இவளவு தூரம் விமர்சனங்கள் தாங்கி நிற்க்கிறது என்றால் எப்போதும் அழியாது .




மனிதன் ஒரு வழிபாட்டை சமூக வழிபாடாக மாற்றிய போது உருவாகியதே மதம் என்ற பெயர் . மனித மனோபாவத்தின் அடித்தளத்தில் இருந்து மத உணர்ச்சி தோன்றிய போது ஒரு இந்துவிட்க்கு இந்தியாவிலே எந்த உணர்ச்சி தோன்றியதோ அதே உணர்ச்சி அனைவருக்குமே  தோன்றியது .  ஒரு  அடிப்படை மத உணர்ச்சி எப்படி இருந்ததோ அது  அப்படியே கொண்டது தான் ஹிந்து மதம் . 


சுவாமி விவேகானந்தர்  வாக்குப்படி "மரணம் என்ற ஒன்று இருக்கின்ற வரையில் நீ விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில் விரும்பாத ஒன்று  நடக்கின்ற வரையில் ஈஸ்வரன் என்பவன் நீ விரும்புகிறாயோ இல்லையோ இருந்து கொண்டே இருப்பான்" . மனோதத்துவ ரீதியான தன்னை உணர்ந்தவன் கூறும் கருத்து இது . 


லௌகீக   வாழ்க்கை (கணவன் மனைவி  )  முறைமை இருக்கும் ஒரே மதம் இந்து மதம் . இது பற்றி என்னுடைய் அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன் .



Tuesday, March 9, 2010

எல்லாரும் தமிழர் தானே?

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகமா ? அமையுமா ? நிருபாமா  கேட்டிருக்காங்க சம்மதம் தெரிவிக்கப்படுமா என பல கேள்விகள் மனதில் . நிறைய சந்தேகங்களும் வேற ..

தலைமை தூதரகம் என்னவோ கொழும்பிலை தான் . ஒரு துணைத்தூதரகம் ஒன்று கண்டியிலை இருக்கு . இன்னொரு துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்தில்  அமைக்க வேணும்  எண்டு இந்தியாவிண்ட விருப்பம். என்ன எண்ணமோ தெரியவில்லை . இந்திய  தூதரகம் அமைந்து விட்டால் எங்கட தமிழ் மக்கள் தொட்டது எல்லாத்துக்கும் கொழும்புக்கு வரோணும் எண்டு அவசியம்  இல்லை .

ஆரம்பத்திலை இருந்தே எனக்கு நிறைய எண்ணம் . சண்டை முடிஞ்சுதோ இல்லையோ . தமிழ் நாட்டு தமிழர்களையும் இலங்கை தமிழர்களையும்  ஒரு பாலத்தை இடையிலை போட்டு தரை வழியா இணைச்சிடுவம் எண்டு . என்னை பொறுத்த வரை தமிழன் என்று ஒரு இனம் தான் இருக்கோணும் . தமிழ் நாட்டு தமிழர்கள் யாழப்பாண மக்களுக்கு மிகவும் விருப்பம் எனவும் தெரியும் .

என்ன செய்யிறது எல்லாம் அரசியல் விளையாட்டு . மக்களுக்கு எப்ப புரியுதோ தெரியேல்ல . இது ஆரிய திராவிட பிரச்சனையா இந்தியா பாக்குதா எண்டு சந்தேகம் வேற .திராவிடர்கள் என்று பார்த்தால் நாம் எல்லாரும் ஒன்று தான் . அது நிறையவே மகிழ்ச்சி . இந்திய யாழப்பாண உறவு மேம்படுமோ என்னவோ தெரியவில்லை . தமிழ் நாட்டு யாழப்பாண உறவு மேம்படோனும் அது தான் வேணும் .  

சனாதிபதி அம்பான்தொட்டையிலை ஒரு விமான நிலையம் கட்டுறார் இருக்கிற பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் சேர்த்து . இவளவு தூரம் சம உரிமை சம உரிமை என்டுறாரே . வடக்கு கிழக்கிலை எதாவது ஒரு இடத்திலை விமான நிலையம் கட்ட மாட்டாரா எண்டு குறுக்கு யோசனை வேற . நிச்சயமா கட்டப்படாது . காட்டாயமாக யாழ்பாணம் மற்றும் தமிழர் ராச்சியம் தனியாக நிமிர்ந்து நிற்க்கும் என்பது உறுதி . தன்னிச்சையாக மாறி மீண்டும் அபிவிருத்தி நோக்கி மக்கள்  கொண்டு செல்வர் எண்டு நம்பிக்கை . 

பழைய படி கல்வி நிலைகளில் முன்னேற மீண்டும் பொறமை வரும் . மீண்டும் அழிப்பு இடம் பெறும் . இதெல்லாம் தேவை தானா ? கடைசி வரைக்கும் முழு உரிமை வழங்கப்பட போவதும் கிடையாது .ஏன் இந்த கால வீணடிப்பும் பூச்சாண்டி வேலையளுமோ தெரியேல்ல. தமிழ் நாட்டின் பங்களிப்பு ஒண்டுமே இல்லையெண்ட பிறகென்ன அங்க சேர்ந்த மாநில ஆட்சி . வடக்கின் அபிவிருத்திக்கு நேரடியாக தமிழ் நாடு முன்னின்று செய்ய முடியாதா ?

சீன ஆட்சி குறுக்கிடுவதே இந்தியாவின் அபிவிருத்தி தலைஈட்டிட்க்கு காரணம் . ஒரு அக்கறை மண்ணாங்கட்டியும் இல்லை . இலங்கை சீனாவின் பேச்சை கேட்டு ஆடுகிறது என்ற கோபமுமே . சீனா இந்தியா  இலங்கை பிரச்சனையே தவிர .. இதற்க்கும் தமிழருக்கும்  என்ன சம்மந்தம் ? தமிழரின் நிலத்தில் விளையாடுகிறோம் அவளவு தான் . தமிழ் நாடும் உலகமும் வேடிக்கை பார்க்கிறது . ஐரோப்பிய நாடுகளை தனது இறைமை என்று கூறி வர விடவுமில்லை . 

ஆசியன் கண்ணீர் விடுவது போல் முதலை கண்ணீர் வடித்தாலும் ஐரோப்பிய நாட்டவன் கொஞ்சமாவது கண்ணீர் விடுவான் . மக்களுக்காக உலக தைவர்கள் என்பதை மறந்து விட்டனர் போலும் . 

இலங்கையர்கள் ,இந்தியர்கள் தமிழர்கள் என்று வரும் போது ஏன் பிரிக்கிறார்கள் . ஈழ தமிழர்களுக்கு ஆதராவம் . ஏன் தமிழர்களுக்கு ஆதரவு என்றால் என்ன ? சின்னப்பிள்ளை தனமான கேள்வி என்றால் விட்டு விடுங்கள் ...  

Monday, March 8, 2010

ஒஸ்கார் விருதுகள் (விரிவான பார்வை )

இன்று காலைஇந்திய நேரப்படி அதிகாலை வேளையில் 2010 ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமெரிக்க நேரப்படி நேற்று இரவு இடம்பெற்றது . இந்த முறை ஒரு சுவாரசியமான போட்டியும் இடம் பெற்றது .அது சம்மந்தமான பதிவாக இதை இடுகிறேன் . முடிந்தவரை தொகுத்து வழங்கியுள்ளேன் .

அவதார் திரைப்பட  இயக்குனரும் அவரது மனைவியின் படமான டி ஹுர்ட்  லாக்கர் படமும் இந்த முறை முக்கிய போட்டியாக எதிர் பார்க்கப்பட்டன. 6 விருதுகள் ஹார்ட் லாக்கர் படத்துக்கும் 3  விருதுகள் அவதார் படத்துக்கும் கிடைத்தன .
அவதார் திரைப்படம் சிறந்த இயக்கம் சிறந்த ஒளிப்பதிவு என ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை ஜெபிப் பிரிட்ஜெஸ்(Jeff Bridges ) பெற்றுள்ளார் . கிரேசி ஹார்ட் (crazy heart ) திரைப்படத்துக்காக .

இளம் மேலைத்தேய பாடகர் ஊடகவியலாளர் உடனான சந்திப்பு எப்படி புரட்டி போடுகிறது வாழ்க்கையில்..

இந்த விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்டவர்கள். 

George Clooney - Up in the Air திரைப்படத்துக்காக 
Colin Firth -A Single Man திரைப்படத்துக்காக
 Morgan FreemanInvictus திரைப்படத்துக்காக 
Jeremy RennerThe Hurt Locker திரைப்படத்துக்காகவும் ஒஸ்கார் விருதுகளுக்காக சிறந்த முன்னணி நடிகர்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.  


சிறந்த துணை நடிகராக (கிரிச்தொப் வோல்ட்ஸ்) Christoph Waltz  -Inglourious Basterds திரைப்படத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

Col. Hans Landa எண்ட பாத்திரமேற்று நாசிப்படைகளின் தளபதியாக ஒளிந்திருந்த மக்களை தேடும் ஒரு துடிப்பானவராக நடித்திருந்தார் .

இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டோர் 
 Matt Damon Invictus திரைப்படத்துக்காக
  Woody Harrelson -The Messenger திரைப்படத்துக்காக 
 Christopher Plummer -The Last Station திரைப்படத்துக்காகவும்  பரிந்துரைக்கப்பட்டிருந்தன .


சிறந்த துணை நடிகையாக மோ நிக்கி தெரிவு செய்யப்படுள்ளார் .Mo'Nique -Precious: Based on the Novel 'Push' by Sapphire .

ஒரு தாய் , அவளுடைய நடத்தைகள் ஒரு இளம் கர்ப்பமடைந்த பெண்ணை பாத்திக்கிறது .


இவர் ஒஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம்.


Vera Farmiga ,Anna Kendrick ஆகிய இருவரும் Up in the Air திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டனர் . 


சிறந்த அனிமேஷன் திரைப்படமாக அப் (up ) தெரிவு செய்யப்பட்டுள்ளது .










சிறந்த திரைக்கதைக்காக Pete Docter க்கு கிடைத்துள்ளது .
இதற்க்கு முதல் அவர் TOY . WALL -E க்காகவும் நான்கு தடவைகள் பரிந்துரைக்க பட்டிருந்தார் . 

Coraline ,Fantastic Mr. Fox ,The Princess and the Frog ,The Secret of Kells போன்ற படங்களும் தெரிவுகளில் இடம் பெற்றிருந்தது .



அவதார் திரைப்படம் 


மூன்று விருதுகளை தட்டி சென்றுள்ளது .


சிறந்த கலை :Rick Carter and Robert Stromberg (Art Direction); Kim Sinclair (Set Decoration)
இது வரை இரண்டு படங்களுக்காக முன் மொழியப்பட்டுளார்.

சிறந்த ஒளித்தொகுப்பு :Mauri fiore


போட்டியில் இருந்த படங்கள் :
  • Harry Potter and the Half-Blood Prince -Bruno Delbonnel

  • The Hurt Locker -Barry Ackroyd

  • Inglourious Basterds -Robert Richardson

சிறந்த காட்சி அமைப்பு :Joe Letteri.




இதுவரைக்கும் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு நான்கை தட்டிச்சென்றவர் .

KING KONG (2005)
I, ROBOT (2004)
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING (2003)
THE LORD OF THE RINGS: THE TWO TOWERS (2002) 
போன்ற படங்களுக்காக முதலிலேயே கிடைத்திருந்தது .

தி ஹுர்ட் லாக்கர் 

ஈராக்கில் யுத்தம் இடம் பெறும் போது ஒருவன் எப்படி போரை வழிநடத்துகிறான் .

சிறந்த எழுத்து (திரைக்கதை )Mark Boal -(Original Screenplay )  


சிறந்த எடிட்டிங் -Bob Murawski and Chris Innis.
முதலாவது ஆஸ்கார் பரிந்துரை 

சிறந்த சவுண்ட் எடிட்டிங் &மிசிங் :Paul N.J. Ottosson and Ray 
இரு விருதுகள் 


சிறந்த documentry( short)  -Roger Ross Williams and Elinor Burkett


சிம்பாப்வேயில் ஊனமுற்றோருக்கு நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருக்கும் .

சிறந்த பாடல்களுக்கான விருது -Ryan Bingham and T Bone Burnett


சிறந்த வெளி நாட்டு படமாக










The Secret in Their Eyes (El Secreto de Sus Ojos)-Juan José Campanella
அர்ஜென்டீனிய திரைப்படம் தெரிவாகி உள்ளது 

தெரிவு செய்யப்பட்ட ஏனைய படங்கள்


Ajami -Israel
The Milk of Sorrow (La Teta Asustada)-Peru
A Prophet (Un Prophète)-France
The White Ribbon (Das Weisse Band)-Germany
  • சிறந்த குறும்படமாக -The New Tenants -Tivi Magnusson


    ஒரு தொடர்மாடி வீட்டிக்கு செல்லும் இருவர் அங்கு படும் கஷ்டங்கள் . 


    டிவி மன்குச்சொனுக்கு இரண்டாவது ஒஸ்கார் பரிந்துரை . இதற்க்கு முதல் பிக் திரைப்படத்திட்க்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார் .



    ஏன் ?