இது இவ்வாறிருக்க லலித் மோடியின் பிரச்சனை வேறு இழுபட்டுக்கொண்டே செல்கிறது . இந்த நிலையில் லலித் மோடியும் முடிந்த வரை போட்டியை இன்னும் பிரபலப்படுத்துவதில்
இறங்கியுள்ளார் . அதன் இன்னொரு கட்டமாக என்றுமில்லாதவாறு இந்த முறை சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கும் பிரம்மாண்ட விழா சற்று முன்னர் நடைபெற்றது .
சிறப்பாக விளையாடியவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கும் விழா எனவும் ஐ சி சி , பி சி சி ஐ விழாக்களிலும் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் கூறியிருந்தார் லிலித் மோடி . அதே போல பாலிவூட் பிரபலங்களுடன் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் . ( என்ன இருந்தாலும் ஐ பி எல் இவ்வளவு தூரம் பிரபலமாக காரணம் என்னவோ லலித் மோடி தான் ).
22 விருதுகள்
இதில் 10 விருதுக்கான வீரர்களை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாரா, அம்பயர் சைமன் டபெல், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது . எட்டு விருதுகள் பார்வையாளர்களால் தேர்வு செய்யப்பட்டது .
மூன்று விருதுகள் புள்ளிவிபரங்களை (ஸ்டேட்ஸ்) அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்டது . ஒரு விருது ஐ.பி.எல்., தொடரில் இடம் பிடித்துள்ள எட்டு அணிகளின் கேப்டன்கள் இணைந்து தேர்வு செய்தார்கள் .
விருதுகள் விபரம் ( நடுவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட 10 விருதுகள் )
சிறந்த அறிமுக வீரர் :- கிரோன் போலராத் (Kieron Pollard ) - மும்பை இந்தியன்
பரிந்துரைக்கப்பட்டவர்கள் : (மைக்கேல் லம்ப், அம்பாதி ராயுடு, போலார்டு, பசல், மோனிஷ் மிஸ்ரா, டெய்ட், போலிஞ்சர். )சிறந்த துடுப்பாட்டம் :- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulcar ) - மும்பை இந்தியன்ஸ்
இதுவரை 561 ஓட்டங்கள் பெற்று ஆரஞ்சு தொப்ப்பிக்கு சொந்தக்காரர் .
பரிந்துரைக்கப்படவர்கள்: ( காலிஸ், சச்சின், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ராபின் உத்தப்பா).
சச்சின் அரையிறுதி போட்டியில் காயம் அடைந்தது அறிந்ததே , சச்சினுக்காக அணியின் உரிமையாளர் அனிதா அம்பானி விருதை பெற்றார் .
சிறந்த பந்து வீச்சு :- ஓஜா (OJAH ) - டெக்கான் சார்ஜர்ஸ்
இது வரை 20 விக்கெட்டுகள் பெற்று நீல தொப்பிக்கு சொந்தக்காரராக திகழ்பவர் .
சிறந்த பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்:- ஹர்பஜன் சிங் (Harbajan singh ) - மும்பை இந்தியன்ஸ்
28/03/2010 அன்று இடம் பெற்ற போட்டியில் 117 ஓட்டங்கள் பெற்றிருந்த போது 7 விக்கெட்டுகள் இழந்து 20 பந்துகள் மீதமாயிருக்க 53 ஓட்டங்களை குவித்தது 49 ஓட்டங்கள் (18 பந்துகளில்) 8 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக பெற்றார் ஹர்பஜன் .
பரிந்துரைக்கப்பட்டோர் :(முரளி விஜய், உத்தப்பா, யூசுப் பதான், ஜுயன் திரான், டேவிட் வார்னர், ஹர்பஜன், வார்ன். )
சிறந்த அதிரடியை வெளிப்படுத்திர்யவர் :-
2008 : பிரெண்டன் மக்கலம் ( Brendon McCullum ) - கொல்கத்தா நயிட் ரயிடர்ஸ்
2009 : அணில் கும்ளே (Anil kumble ) - ராயல் சலேன்ஜஸ்
பரிந்துரைக்கப்பட்டோர் : கில்கிறிஸ்ட், பிரண்டன் மெக்கலம், தன்வீர் .
சிறந்த களத்தடுப்பு :- எ பி டி விலியர்ஸ் (AB de Villiers ) - டெல்லி டேயர் டெவில்ஸ்
பரிந்துரைக்கப்பட்டோர் : ரெய்னா, போலார்டு, ஜூன்ஜூன்வாலா, டிவிலியர்ஸ், யூசுப் பதான், டேவிட் வார்னர்.
மிகவும் பொருத்தமாக இவ்விருது களத்தடுப்பு புலி ஜோண்டி ரோடெஸ் ஆல் வழங்கப்பட்டது .
சிறந்த மைதானம் :- சின்ன சுவாமி (M Chinnaswamy Stadium ) - பெங்களூர்
பார்வையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட விருதுகள் ( 8 விருதுகள் )
சிறந்த பந்து வீச்சு :- ஓஜா (OJAH ) - டெக்கான் சார்ஜர்ஸ்
சிறந்த பிடி :- டேவிட் ஹஸ்சே (david hussey )- கொல்கத்தா நயிட் ரயிடர்ஸ்
(சிக்ஸர் க்கு சென்ற பந்தை உள்ளே தட்டி பிடிக்கப்பட்ட பிடி)
சிறந்த அணித்தலைவர் :- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulcar ) - மும்பை இந்தியன்ஸ்
சிறந்த துடுப்பாட்டம் :- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulcar ) - மும்பை இந்தியன்ஸ்
சிறந்த பந்து வர்ணனையாளர் :- ரவி சாஸ்த்ரி (Ravi Shastri )
Most Stylish Player: ராபின் ஊத்தப்பா Robin Uthappa (Royal Challengers Bangalore)
Most Fan-Friendly Cricketer: அடம் கில் ச்ரிஸ்ட் Adam Gilchrist (Deccan Chargers)
சிறந்த பிடி எடுப்பாளர் : சுரேஷ் ராயினா Suresh Raina (Chennai Super Kings)
Click here to watch
நிலையியல்( ஓட்ட விகிதம், பந்து வீச்சு விகிதம் ) அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டோர் (4 விருதுகள் )
சிறந்த பந்து வீச்சு ( குறைவான ஓட்டங்கள் கொடுத்தமை ) :- ரவிச்சந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin ) (Chennai Super Kings)
விரைவான நூறு ஓட்டம் : யூசுப் பதான் Yusuf Pathan (Rajasthan Royals)
கூடுதலான ஓட்டங்களை ஆறு மற்றும் நான்கு ஓட்டங்கள் மூலம் பெற்றவர் : விரேந்திர சேவாக் ((Virender Sehwag ) (Delhi Daredevils)
Eternal Favourite Award
அனைத்து(எட்டு ) அணியின் தலைவர்களாலும் தெரிவு செய்யப்பட்டது :- கபில் தேவ் ( Kapil Dev )
கபில் தேவுக்காக சுனில் கவாஸ்கர் இந்த விருதை பெற்றுக்கொண்டார் .
சச்சினுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் . கிரிக்கெட்டின் பிறந்த நாள் இன்று ...




.jpg)
















