Saturday, May 29, 2010
அர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்
Thursday, May 27, 2010
கண் விளையாட்டு- மாயை-மனத்தோற்றம்-தொழில்நுட்பம்
கண்ணை நம்பாதே ,எல்லாம் மாயை , மனப்பிரமை , மாயத்தோற்றம் என்று பல அறிஞர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம் . எதையும் முழுதாக சொல்லாதவர்கள் நம்மவர்கள் என்று சொல்லலாம். ஆனால் நாம் வாழும் உலகம் மாயத்தோற்றம்(Illusion and Hallucination ) உடையதா ? நாம் பார்க்கும் பொருட்கள் ஒன்றும் நாம் பார்ப்பது போல இல்லையா ?
நாம் நினைக்கும் நாம் வாழும் உலகம் என்பது எமது தொடுகை உணர்வு , பார்வை , நுகருதல் , சுவைத்தல் என்பன எமது மூளைக்கு எடுத்து செல்லப்படுவதன் மூலம் உணர்ந்துகொள்கிறோம். அதை வைத்து மட்டுமே நாம் தீர்மானிக்கிறோம் நாம் நிஜத்தில் வாழ்கிறோம் என . நாம் பார்க்கும் பார்வை அப்படியே மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை . ஆனால் மூளையை , மனத்தோற்றத்தை இலகுவாக ஏமாற்றி விடலாம் என்பது நாம் பார்க்கும் உலகில் சாதாரணமாகநடக்கிறது . அது தான் இலகுவாக மஜிக்கிலும் நடக்கிறது .அப்படியென்றால் நாம் பார்ப்பது உண்மையாக இருக்கும் உலகின் பிரதிபலிப்பு மட்டும் தானா ?
எம்மனத்தோற்றத்தை மூளையை இலகுவாக ஏமாற்றலாம் . இதற்க்கு உதாரணம் கட்டாயத்தோற்றம் (forced perspective ). இது தான் தூரத்தில் இருக்கும் ஒருவர் கட்டையாக தெரிவார் அருகில் இருப்பவர் உயரமாக தெரிவார். சில நேரங்கள் இருக்கும் பொருட்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் .
மேலும் நம் உலகில் உள்ள சில கண்டுபிடிப்புகள் கண்களை ஏமாற்றலாம் என்பதற்கு சான்றாக இருக்கின்றன.
இதன் நடு புள்ளியை உற்று கவனித்தீர்கள் என்றால் சுற்றி இருக்கும் ஊதா புள்ளிகள் தெரியாது . மற்றும் உடனே கவனித்தால் பச்சை நிற புள்ளி அசைவது கண்ணுக்கு தெரியாது .
கீழே உள்ள வீடியோவை பெரிதாக்கி நடுப்புள்ளியை பாருங்கள் அதில் சொல்லப்படும் போது கண் பார்வையை வெளியே திருப்புங்கள். ( 1 நிமிடம் 40 செக்கன்கள் தான் )
கண்ணோடு மேலும் சில விளையாட்டுகள்
உண்மையில் இந்த கிறிஸ்டல் பந்து அசைகிறதா ? அந்த காமெராவை பிடிப்பவர் அசைகிறார் , ஸ்ட்ரிங் அசைகிறது . ஆனால் எமக்கு அந்த பந்து அசைவது போல தான் தோன்றும் .
4 நிறங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்த அட்டை ஒவ்வொரு படியாக கடுமையான நீல நிறமாகி கொண்டு செல்கிறது. ஆனால் பென்சிலை இடையில் வைக்கும் போது இரு நிறங்கள் ஒரே மாதிரி தெரியும் . இது ஒளியின் தெறிப்பை வைத்துசெய்யப்பட்டுள்ளது .
நவீன தொழில் நுட்ப்ப பார்வையில் விஞ்ஞானிகள் , கணணி வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டு வரும் இன்னொரு உலகத்தை காணலாம். அந்த உலகத்தில் நீங்கள் இந்த உலகில் செய்யமுடியாதவற்றை செய்து முடிக்கலாம் . இது கிட்டத்தட்ட அவதார் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த தொழில்நுட்ப்பத்திட்க்கு ஈடானது . உடலில் அனைத்து சென்சர்களும் பொருத்தப்பட்டு இருக்கும் .
இந்த உதாரணத்தை எடுத்தால் நாம் வாழும் உலகு எப்படி என்பதை உணரலாம் . தொழில்நுட்பம் உருவாக்கப்போகும் உலகும் உண்மையானது போன்றே தோன்றும் . காரணம் அங்கும் நாம் காணும் சூழல் எமது கண்ணுக்கு தெரியும் பொருட்கள் என்பவற்றிட்க்கு ஏற்ப்ப எம்மை பழக்கப்படுத்திக்கொள்ள போகின்றோம். நிச்சயமாக அதுவும் நமக்கு இன்னொரு உலகம் போல தான் தோன்றும் .
முக்கியமாக எமது கண்ணை வைத்து தொழில்நுட்பத்தை வைத்து பல நன்மைகளும் வந்துள்ளன . கூடுதலாக இந்த தொழிநுட்பத்தில் ஒருவரின் பயத்தை போக்க முடியும் .
உயரமான கட்டிடங்களில் இருந்து அவரை இருந்த இடத்தில் இருந்தே விழ வைப்பது போன்ற உணர்வை மூளைக்கு அனுப்பலாம் . இதன் மூலம் பயம் என்ற உணர்வை பலரிடமிருந்து போக்கலாம் .
இராணுவ பயிற்ச்சிகளை எந்த செலவின்றியும் வழங்கலாம் . இது அவர்கள் உண்மையில் காட்டுக்குள்ளேயே சென்று அந்த சூழலுக்கு ஏற்ப்ப ஒத்திசைந்து உண்மையாக சண்டையிடுவது போல சண்டையிடலாம் . அப்பாடா அதிலையே சண்டை பிடித்தால் இனி எங்களுக்கு நிம்மதி என நீங்கள் நினைப்பது புரிகிறது .எதிர்காலத்தில் வரவிருக்கிறது .
இருக்கு ஆனா இல்லை என்பது இனி வரும் தொழில்நுட்பங்களுக்கு போருந்தலாமோ என்னவோ ...
Wednesday, May 26, 2010
மரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம்
Tuesday, May 25, 2010
புதிய உலகின் உத்தரவு....அதென்ன ??
.==================================================================================
3 இடியட்ஸ் உம் இலங்கை இந்தியக்கல்வி முறையும்...
3 இடியட்ஸ் படம் மாபெரும் வெற்றி பெற்று அனைவரையும் சென்றடைந்தது உண்மை . ஆனால் அந்த திரைப்படம் சரியாக சென்றடைந்ததா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம் .
அந்த திரைப்படம் சொல்ல வரும் விடயம் கல்வி முறை மாற்றமும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கும் கட்டாய கல்வி முறை பற்றியுமே. ஆனால் அதன் பிரதான கரு இதுவாக இருந்தாலும் சில மாற்றுக்கருத்தாளர்கள் 3 இடியட்ஸ் திரைப்படம் ஒரே பாதையிலேயே பயணிக்கிறது என்ற வாதத்தை வைக்கின்றனர். அதில் வரும் விடயங்கள் தவறென்பது அவர்கள் கருத்து .
அதுவும் இதற்க்கு மிக முக்கிய எதிர்ப்பை தெரிவிப்பது பெரிய பதவியில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகளே . அந்த திரைப்படத்தில் வரும் விடயங்கள் அனைத்தும் தவறு என்பதுடன் இந்த கருத்து மாணவர்களை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லுமாம் . ஒரு வேளை தாம் அனைவரும் கல்வி எனும்படியை முடித்து விட்டதால் இப்படி எண்ண தோன்றுகிறதோ தெரியவில்லை .
ஆனால் மாணவர்கள் பார்வையில் அவர்களின் கருத்தை பார்த்தால் , பாடங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை மீட்டுவனவாகவும் முக்கியமாக தாம் என்ன படிக்கிறோம் எதற்க்காக படிக்கிறோம் என்பதை உணராமல் கேள்வி கேட்க்காமல் படிக்க வேண்டி உள்ளதாக கூறுகின்றனர் .அதுவும் முக்கியமாக ஒரு பாடத்தில் விசேட சித்தி பெற வேண்டுமானால் அது மனப்பாடமாக்குபவனாலும் தூங்காமல் இரவு முழுக்க கண் முழித்து வருத்தி படித்தால் மட்டுமே பெற முடியும் என்ற இன்னொரு கருத்தும் நிலவுகிறது . கூடுதலாக பாடங்களை விளங்கி கற்கும் மாணவர்களிடையே புள்ளிகள் குறைவாகவும் , மனப்பாடமாக்குபவர்களுக்கு புள்ளிகள் கூடுதலாகவும் பெறுபேறுகளில் கிடைப்பது உண்மையே .
இதற்க்கு கல்வித்துறை அதிகாரி நாராயணன் கூறிய பதில் முக்கியமாக தாம் அனைவரும் இந்திய கல்வித்திட்டத்தில் இருந்தே பயனை பெற்றதாகவும் அதை எதற்கு ஏளனம் செய்து திரைப்படத்தை அமைத்ததாகவும் குற்றம் சாட்டினார் .
ஆனால் இந்த திரைப்படம் கல்வியை குறை கூற முன் வரவில்லை . திரைப்படம் முழுக்க முழுக்க குறை கூறுவது கல்வி முறையையே . கல்வி சரியாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் , மாணவர்களை சென்றடைய வைக்கும் முறையிலேயே அடிப்படை தவறுகள் இடம் பெறுகின்றன .
தாய் தந்தையர் கட்டாயப்படுத்தி இந்த துறையில் தான் நீ செல்லவேண்டும் என வற்புறுத்தும் விடயமாக இருந்தாலும் சரி , மாணவர்கள் புள்ளிகளுக்காகவும் டிகிரி எடுப்பதர்க்காக்கவுமே தமது உயர் கல்வியை தொடர்கின்றனர் என மாணவர்கள் சிந்தனையையும் வெளிப்படுத்தி இருப்பதிலும் சரி , ஏட்டு கல்வி முறையானாலும் சரி அனைத்தையும் கொண்டுள்ள படம் தான் 3 இடியட்ஸ் .
வெளிநாடுகளில் கூடுதல் கண்டு பிடிப்புகளும் தொழில் வளர்ச்சியும் இவளவு தூரம் வளர்ச்சி அடைய காரணம் அவர்கள் தாம் தமது கல்வியை டிகிரிக்காக அல்லாது விரும்பி படிப்பதுவே . இது அவர்களை மேலும் அந்த துறையில் வளர செய்யும் என்பது உறுதி . ஆனால் நமது கல்வித்திட்டம் புள்ளிகளை வைத்து தீர்மானிக்கப்பட்டு விடுவதால் ஒவ்வொரு துறையிலும் செல்பவர்கள் கூடுதலாக அலுவலகங்களில்(அரசாங்க ) உறங்குகின்றனர் . காரணம் அவர்கள் கற்கும் போது நிச்சயமாக அரசாங்க துறையில் வேலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே அவர்களை சூழ்ந்திருக்கும். தாம் அந்த துறையை விரும்புகிறோமா இல்லையா என்பது அவர்கள் எண்ணத்தில் எழாது .
அத்திரைப்படத்தில் முக்கியமாக வரும் ஒரு காட்சி மாணவர்கள் நிலை பற்றிய முழு விளக்கத்தையும் கல்வித்திட்டம் பற்றியும் தெளிவாக்கும் . மெஷின் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று அமீர் கானிடம் கேள்வி கேட்கப்படும். உடனே அமீர் கான் எளிய முறையில் வேலையை இலகுவாக்க பயன்படுத்தப்படுவதே என கூறுவார். அதை தவறென்று கூறி இன்னொருவனிடம் கேள்வி கேட்க்க அதற்க்கு புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையை மனப்பாடமாக்கி வாசித்து காட்டுவார் மற்றையவர் . வெளியேற்றப்பட்ட அமீர் கான் உள்ளே வந்து விட்டு விட்டு சென்ற புத்தகம் எனும் ஒரு வார்த்தைக்கு ஒரு பக்க விளக்கம் சொல்லுவார் .
உண்மையில் இந்த ஒரு சிறிய காட்சி முழுவதையும் உள்ளடக்கி இருக்கும் என நினைக்கிறேன் .
முக்கியமாக செயன்முறைக்கல்வி முறை முன்னைய காலத்தில் இருந்திருக்கவே இல்லை . காரணம் வசதியின்மை . ஆனால் 1960 1970 களில் வந்த அதே பாடத்திட்டத்தை மீண்டும் திணித்து வைத்திருக்கின்றனர். சில பாடங்கள் தேவையில்லை என ஓரங்கட்டப்பட்டவை.
கல்வி ஆய்வாளர் ஒருவர் தெருவித்திருக்கும் கருத்து முக்கியமாக கல்வித்துறையில் தவறில்லை , கற்பிக்கும் பாடங்களிலும் தவறில்லை ஆனால் நம்பர்கள் தான் மேலும் அழுத்தத்தை பிரயோகிகின்றனவாம். சில குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்களை உள்ளே எடுக்க முடியும் என்பதால் எண்ணிக்கைகளை குறைக்கவே புள்ளிகள் முறை தெரிந்தேடுக்கப்படுகிறதாம் . ஆனால் புள்ளிகளை மட்டும் வைத்தே தீர்மானிக்கலாமா என்பதே முக்கிய கேள்வி ?
ஒரு மனிதனின் வாழ்க்கையை புள்ளிகள் தீர்மானிப்பதில்லை . அவனின் சொந்த முயற்சி சொந்த முடிவுகள் எண்ணங்கள் அவனை பல படிகள் முன்னேற்றும். ஒருவனின் சுய யோசனையை ஒரு ஏட்டு கல்வியால் தூண்டி விட முடியாது . எத்தனையோ படித்தவர்கள் கூட வாழ்க்கையில் கூட முடிவெடுக்க தெரியாமல் தவிப்பது யதார்த்தம். தேடல் என்பதே ஒரு மனிதனை மிகவும் முன்னேற்றும் ஒரு காரணி. தேடல்நிச்ச்சயம் கற்றவனை விட ஒரு படி உயர்த்தி வைக்கும் .
பிடித்திருந்தால் மறக்காம ஓட்டை போட்டிருங்க ...
Monday, May 24, 2010
விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?
உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .
அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .
இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .
இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.
எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு .
நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ??
"திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது."
I got caught in some cables but managed to scramble out
தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் .
தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் .
என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்
இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .
"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .
அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் .
நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .
கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..
முக்கியமான தவறுகள்
விரைவான அதிர்ச்சி
அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .
பொதிகளை கை விடாமல் இருத்தல்
முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .
தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .
விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்
அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .
பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .
இவற்றால் உயிர் பிழைக்கலாம் என்றில்லை . உயிர் பிழைக்கும் விகிதத்தை கூட்டலாம்.
இந்த தகவல் பிரயோசனமாக இருந்தால் அனைவரையும் சென்றடைய ஓட்டை கிளிக் செய்யவும் .

.gif)














.jpg)














