பல விளம்பரங்கள் ஆபாசத்தை மையப்படுத்தி வந்தாலும் சில விளம்பரங்கள் சிறப்பான சிந்தனையால் உருவாக்கப்பட்டவை .. இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பானுங்க போல இருக்கு ..
பாம்பு கடியில் இருந்து தப்புவது எப்பிடின்னு கூகிள் தேடல் .. தேடுற நேரமாடா இது ?
இதுக்கு அப்புறம் சாப்பிட முடியும் !!!
என்ன ஒரு புத்திசாலித்தனம்
அட பதருகளா .... அதுக்குள்ளையா ...
மனித வாழ்க்கையில் துன்பம் என்பது எமக்கு மட்டுமல்ல பிறருடைய துன்பங்கள் தெரியும் போது எமது துன்பம் ஒன்றும் பெரிதில்லை என்று தோன்றும் . எவளவு துன்பம் வந்தாலும் மகிழ்ச்சி என்பது மனதில் தான் உள்ளது என நிரூபித்த சிறுவன் ...
மறக்காம ஓட்டையும் போட்ருங்க .............
Monday, June 28, 2010
உலககிண்ணம் -இந்தியத்திட்டம் -உண்மைக்காரணம்- படங்கள்
உலக கோப்பையும் இந்தியாவும்
1950 ஆம் ஆண்டு உலக கோப்பைக்குள் நுழைய தகுதி பெற்ற இந்தியா வீரர்கள் ஓய்வு இல்லை என விலகி கொண்டது . இது AIFF (இந்திய உதைப்பந்து கழகம் ) இன் உத்தரவு . அப்போதைய தேவையை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை . அப்போது பிபா இந்திய அணியின் செலவுகள் சிலவற்றை தானே பொறுப்பேற்றுக்கொண்டது ..போக்குவரத்து செலவு உட்பட .
Shailen Manna என்ற அணித்தலைவரின் கூற்று (இந்தியா வெறும் காலுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை ) AIFF எனும் இந்திய கால்பந்து கழகத்தின் விட்ட தவறை மறைப்பதற்காகவே புனையப்பட்டது .
ஒவ்வொரு நாட்டவரினதும் உலககிண்ண கோல் திட்டம் ..
ஜெர்மானியர்கள்
இத்தாலிய திட்டம்
பிரேசிலிய திட்டம்
சுவிஸ் பிளான் ரொம்ப காமெடி
உண்மையிலேயே அவனுங்களே சுத்தி சுத்தி பாஸ் பன்னுவாணுங்கள்
பிரெஞ்சு பிளான்
துருக்கியர்கள் உண்மையிலேயே ரேபிரியை விட மாட்டானுங்க.. அந்த சிவப்பு புள்ளி றேபெரி ..
இந்திய திட்டம் ....
மறக்காம ஒட்டையும்போடிருங்க ...
Saturday, June 26, 2010
என் அம்மா ...
தரே சமீன் பர் பற்றிய இரண்டாவது பதிவு . இதன் பாடல்கள் ஹிந்தியில் கேட்க்கும் போதே காட்ச்சிகளுடன் பார்க்கும் போது மனதை உருக்கும் . "Shankar-Ehsaan-Loy, Shailendra Barve
" போன்றோரின் இனிமையான இசையில் வந்த பாடல்கள் . ஹிந்தியிலும் தமிழிலும் ஷங்கர் மகா தேவனே பாடலை பாடியுள்ளார் . உருக்கமான குரலில் ..

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஒரு சிறுவனின் மனோ நிலையையும் அவன் தாய் மீது எதிர் பார்க்கும் பாசத்தையும் அன்பையும் இந்த பாடல் கொண்டு வருகிறது .

இரவினில் பயந்தேன் நானம்மா
இதை சொன்னதில்லை நானும் தெரியுமா?
இதயமாய் இருந்தாய் நீயம்மா
உன் உள்ளம் அந்த உண்மை அறியுமா?
உனக்கு எல்லாம் தெரியுமே என் அம்மா ...
கூட்டத்தில் நானுமே தனியம்மா…
குயில் கூட்டை திரும்ப காண இயலுமா?
பாரம்மா உனக்கு நான் பாரமா ?
என் நினைவு உனது நெஞ்சில் இருக்குமா?
நான் கெட்ட பையனா சொல்லம்மா ???
இதை சொன்னதில்லை நானும் தெரியுமா?
இதயமாய் இருந்தாய் நீயம்மா
உன் உள்ளம் அந்த உண்மை அறியுமா?
உனக்கு எல்லாம் தெரியுமே என் அம்மா ...
கூட்டத்தில் நானுமே தனியம்மா…
குயில் கூட்டை திரும்ப காண இயலுமா?
பாரம்மா உனக்கு நான் பாரமா ?
என் நினைவு உனது நெஞ்சில் இருக்குமா?
நான் கெட்ட பையனா சொல்லம்மா ???
(இந்த வரிகள் மிகவும் கவர்ந்தவையும் அப்படியே குழந்தையின் உணர்வையும் பிரதிபலிக்கிறது) ..
அன்போடு தான் அப்பா எனை தட்டாமலே சுற்றும் போது பயமம்மா
அந்நேரமே கண்தேடுமே உனை காணவே போராடுமே என் அம்மா

பயத்தினால் உறங்கி போவேன் நான் அம்மா
அதையும் நான் சொன்னதில்லை கேள் அம்மா
உன் மடி மறுபடி கிடைக்குமா?
பிள்ளையை அன்னை மறப்பது நியாயமா?
உனக்கு எல்லாம் தெரியுமே என்னம்மா…
அதையும் நான் சொன்னதில்லை கேள் அம்மா
உன் மடி மறுபடி கிடைக்குமா?
பிள்ளையை அன்னை மறப்பது நியாயமா?
உனக்கு எல்லாம் தெரியுமே என்னம்மா…
மறக்காம பிடிட்ச்சிருந்தா ஓட்டை போட்டிருங்க ..
Monday, June 21, 2010
வரலாற்றை மாற்றிய காவியம் - இராவணா
விசில், ஆரவார கூட்டம் இல்லாத நாளா போய் ராவணா பாக்க வேணும்னு கிழமை நாட்கள்ல போய் பார்ப்போம் என்று இன்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .
கதை உலகத்துக்கே தெரிந்த கதை தான் . வெளிநாட்டு கதைகளை சுட்டு சினிமா எடுப்பதை விட எமது வரலாற்று கதையை எடுத்து அதை வெளிநாடுகளுக்கு நவீன முறையில் மாற்றி கொண்டு போய் சேர்த்த மணிக்கு முதல் வாழ்த்துக்கள் .
ஆனா இன்னும் ராமாயண கதை முழுதாக தெரியாத கூட்டம் கூட இருக்குன்னு தியேட்டர் கமெண்ட்ஸ் சொல்லியது .
அப்படி அப்படியே பாத்திர படைப்புகள் . ராமனாக பிரிதிவ் ராஜ் , சீதையாக ஐஸ்வர்யா ராய் , ராவணன் விக்ரம் ,அனுமான் கார்த்திக் , கும்பகர்ணன் பிரபு , விபீஷணன் - பெயர் தெரியாது, சூர்ப்பனகை - பிரியாமணி . அதே இயல்புகளுடனும் படைக்கப்பட்டுள்ளது . ஆட்டை குழம்பு வைச்சு சாப்பிட சொல்லு சாபிடுறன், மற்றையது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் ராவணனுக்கு தவறு என சுட்டிக்காட்டிக்கொண்டு இருப்பார் . அவர் தான் விபீஷணன் .
படத்தின் சிறப்பு - (இப்பிடி சொன்னாலே நிச்சயம் மறை கருத்தும் இருக்கும்)
மணி கதையை(அதே கதை ) கையாண்ட விதம் மிக அருமை . கதையின் மையக்கருவையும் கோணத்தையும் மாற்றி வரலாற்றையே மாற்றி விட்டது. ராவணன் பற்றி வரலாறு கூறிய பொய்யை போட்டு உடைத்தது நவீன ராவணன் . எத்தனை குழுக்கள் கொடி தூக்க போகுதோ ?
ஒளிப்பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது போல என்னையும் கவர்ந்தது . மனோஜ் பரமஹம்ச க்கு பிறகு சந்தோஷ் சிவனை அடையாளம் காட்டியுள்ளது . உயிரே க்கும் அருமையாக பண்ணியிருப்பார் . நீர்வீழ்ச்சி மற்றும் காடுகளில் கமெராவை வைத்த விதம் அருமை .
கள்வரே கள்வரே பாடல் காட்சி அமைப்பு பாராட்டுக்குரியது . அவ்வளவு அழகு . ஐஸ்வர்யாவும் காட்ச்சியும் .
ராவணனின் பாத்திரத்தை மாற்றி அமைப்பதில் எளிமையான வெற்றியை கண்டிருக்கிறார் . ராமன் மனதில் நிற்க்கவில்லை , ராவணன் தான் வாழ்கிறான் . படத்திலும் வாழ்ந்தான் .
ராவணனை சிவன் பக்தனாக காட்டிய வரலாறு. ஹரியை ஹீரோவாக காட்டியது . எம்மை இழிவாக காட்டுவதே வேலையாக போய் விட்டது . மணியின் காவியம் சிந்திக்க வைக்கும் .
படத்தின் எதிர் மறை(மயினஸ் )
முக்கியமாக மணியின் பழைய படங்களில் இருந்த சிறப்பு இதில் இல்லை . காரணம் ஒரு வகையில் சுகாசினியின் எழுத்தாகவும் இருக்கலாம் . மணி சொல்ல வரும் ,காட்ட நினைக்கும் காட்ச்சிகள் வசனத்தில் பஞ்சத்தை காட்டியது . சில இடங்களை தவிர. சுஜாதாவை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லையோ ? சுஜாதா மணியின் படங்களின் சிறப்பு எனலாம் .
இந்த கெமிஸ்ட்ரி எனும் விடயம் ஐஸ்வர்யா ராய்க்கும் , விக்கிரமுக்கும் இடையில் இல்லை . சில இடங்களில் பார்வையில் மாத்திரம் தெரிகிறது . ஒரு வேளை சீதையையும் ராவணனையும் நெருக்கமாக காட்டினால் குழுக்கள் கொடி பிடிக்கும் என்று பயந்திருக்கலாம். ஆனால் அந்த குறையே இறுதி காட்ச்சியில் மனதை நிரப்பாத ஒரே காரணம் .
என்னைப்பொருத்த வரை மோசமான எடிட்டிங் ..
காட்டு சிறுக்கி பாடலையும் காணவில்லை . ராவணனோடு டூயட் பாட கூடாது என்றோ ?
வசனங்களில் ஆங்காங்கே சுகாசிநியினியை அடையாளம் காட்டுகின்றன. விக்ரம் ஐஸ் இடம் கேட்க்கும் " அவரு எப்பிடி சிவப்பா இருப்பாரோ ? ஆமா சாமின்னா சிவப்பா தானே இருப்பாரு ? " " நாம எல்லாம் அரக்கர்கள் அழுக்கு தீண்டப்படாதவர்கள் " போன்ற வசனங்கள் ஹயிலயிட் . சுஜாதாவின் எழுத்தையும் ஞாபகப்படுத்தியது . எனக்கு திராவிடர்கள் வரலாற்றில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது மனதில் தோன்றியது .
ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மட்டுமே பாராட்ட கூடியது . கார்த்திக்கும் சிறப்பாக பண்ணியிருப்பார் . ஆனால் விக்ரம் நடிப்பை சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் காணவில்லை .
மணி மாற்றியமைக்க நினைத்த வரலாறு , படைக்க இருந்த காவியம் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பாலும் , போர்க்கொடிகளாலும் காணாமல் போய் விட்டது . இவை இல்லாமல் சாதாரண தரத்தில் திருப்தியடைய வைத்திருக்கிறது ராவணா .
நல்ல படத்தை தூக்கி நிறுத்தியது ஒளித்தொகுப்பும் மணியுமே !!
"வரலாற்றை மாற்றி அமைத்த காவியம் " - வாழ்ந்திருக்கிறான் .
எனது பார்வை பிடித்திருந்தா மறக்காம ஓட்டையும் போடுங்க

Friday, June 18, 2010
7 தவறுகள்
பெரிய ஆய்வொன்றும் தேவையில்லை .. அடிப்படையிலேயே பிழை உள்ளது.. மனிதன் இங்கிருந்து உருவாக்கப்படுவது ..
குழந்தைகள் மனித நேயம் மிக்க கண்களால் கூட கவனிக்கப்படாதவர்கள் . அவர்கள் வளர்க்கப்படும் வளரும் சூழல் , வளர்க்கப்படுபவர்களில் தங்கியுள்ளது அவர்கள் எதிர்காலம் . வழமையாக கூடுதலாக பெற்றோர்கள் விடும் தகவல்களை ஆய்வுகளில் இருந்தும் எனது கருத்தையும் சேர்த்து தொகுத்துள்ளேன் .
முக்கியமான முதலாவது தவறாக குழந்தைகளை அழைக்கும் முறை
கூடுதலாக டேய் ,நீ , வா ,போ கெட்ட பையன் (Naughty Boy) போன்று அழைப்பதை நிறுத்த வேண்டும் . நீங்கள் எவ்வாறு அழைக்கிறீர்களோ அது போலவே குழந்தையும் வளரும் . இது அடிப்படை மனோதத்துவமும் கூட . பேபி என அழைத்தால் அது கட்டாயம் வளர்ந்தாலும் குழந்தை போலவே நடத்தைகளில் செயல்களில் இருக்கும்.
பாராட்டாமையும் ஊக்குவிக்காமையும்
குழந்தைகள் சாப்பிடும் , விளையாடும் இடங்களில் கூட அவர்களுக்கு அடிக்கடி சாதகமான வார்த்தைகளை சொல்ல வேண்டும் . உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் அல்லது செய்த வேலை மிகவும் அருமை என அடிக்கடி சொல்ல வேண்டும் . பாராட்டுகள் குழந்தைகள் விரும்பும் போதை . அதை சிறிய புன்னைகையோடு கொடுங்கள் , அவர்கள் எதிர்காலத்தையே அது மாற்றும் .முடிந்தால் சிறிய சிறிய பரிசுப்பொருட்கள் கொடுக்கலாம்.
சரியில்லாத நாகரிகமற்ற பழக்கவழக்கங்களை அனுமதித்தல்
கத்தி பேசுதல் , அமைதியின்மை போன்றவற்றை தடுப்பதில்லை . சிலர் இதனை அனுமதிப்பதில்லை ஆனால் தாங்கள் செய்வதுண்டு. குழந்தைகள் பெரும்பாலும் தாய் தந்தையரிடம் இருந்து தான் கற்கிறது . அப்படியே பிரதிபலிக்கும் . அவர்கள் முன் நாம் மெதுவாக பேச வேண்டும். நாகரிகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் .
குழந்தைகள் பேச்சை கேளாமை
இது என்ன குழந்தைகள் தானே பெற்றோர் பேச்சு கேட்பதில்லை என கேள்விப்பட்டிருக்கிறோம் என யோசிக்கலாம் . ஆனால் குழந்தைகள் சில கேள்விகள் கேட்க்கும் போது அதை செவிமடுக்க வேண்டும் . கேட்க்காத போதே அவர்கள் உங்கள் திசையை திருப்ப தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் . முக்கியமாக நீங்க பேச்சை கேட்க்காவிட்டால் உங்களிடமிருந்தே குழந்தைகள் சொல் பேச்சு கேளாமையை பழகுகிறது என்பதை மறக்க வேண்டாம் .
காதலை அன்பை வெளிக்காட்டாமை
நிச்சயம் வெளிக்காட்ட வேண்டும் . அவர்களை அருகே அழைத்து கட்டிபிடிக்க வேண்டும் . அப்போது ஒவ்வொரு முறையும் அவர்கள் மீது பாசம் உள்ளதை தெருவியுங்கள் . குழந்தைகள் முக்கியமாக அன்பை, கவனத்தை எதிர்பார்ப்பதுண்டு அதனால் அடிக்கடி உனக்காக நான் இருப்பேனென்ற வார்த்தைகளை பிரயோகியுங்கள் .
நேரம் ஒதுக்காமை
உங்கள் குழந்தைகளுடன் ஒவ்வொருநாளும் கடைசி 30 நிமிடங்களாவது தனியாக ஒதுக்குங்கள் .
அளவான உணவு , நேர ஒழுங்கமைப்பு
இவை குழந்தைகளின் செயல்ப்பாடுகளை தீர்மானிகின்றன. ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும் . குறைவான அளவு உணவும் கூடிய அளவு உணவும் கூடாது . மரக்கறியை சேர்ப்பதில் பிரச்சனை இருந்தால் வேறு பிரச்சனைகள் இருந்தால் இந்த புத்தகல் உதவி செய்யும் . "Sneaky Chef "
முக்கியமாக குழந்தைகள் பெற்றோரிடம் இருந்துதான் அனைத்தையும் கற்கிறது .. சில குழந்தைகள் அரவணைப்பு தாயின் புரிந்துணர்வு இல்லாமல் சொல்ல முடியாமல் தவிக்கின்றன . அவர்களை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள் . தாய்மை மட்டும் அல்ல சுற்றி உள்ளவர்களும் கவனிக்கலாம் .
பிடிச்சிருந்தா மறக்காமை ஓட்டை போட்ருங்க

Thursday, June 17, 2010
மண்ணில் விண்மீன்கள் - மழலை பூக்கள்- தொலைந்த திரைப்படம்
சில பதிவுகள் காணாமல் போவது போல சில படங்களும் காணாமல் போவதுண்டு .. அதற்க்கு காரணமில்லாமல் இல்லை .. 3 இடியட்ஸ் படம் போலவே ஒரு அருமையான படைப்பு தான் அமீர்கானின் தரே சமீன் பர்(Tare zameen par ).. குப்பைகளுக்கு நடுவே கமல் போலவே சிந்தனை உடைய படைப்பாளி அமீர் கான்.. இந்த படம் தமிழ் வடிவிலும் உள்ளது . இந்த படத்திற்கு விமர்சனம் எழுத எனக்கு தகுதியே இல்லை .. தயவு செய்து பார்க்காதவர்கள் பாருங்கள் .

இந்த படம் மழலைகளின் வாழ்க்கை விதையிலேயே கிள்ளி எறியப்படுவதை
உணர்த்துகிறது .. கல்வி முறையையும் அன்பையும் உணர்த்துகிறது .. இலங்கை இந்திய கல்வி முறைகளுக்கு விழுந்த செருப்படி இந்த படம் .. இந்த பாடல் தமிழில் கேட்க்கும் போதுமிக மிக கவர்ந்தது .. கேளுங்கள் .. வரிகள் நான் எழுதியதால் சிலவை தவறவிட்டிருப்பேன் ..

பெற்றோர்கள் சமூகம் எவ்வாறு குழந்தைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் திரைப்படம் ...
பார்க்க வேண்டிய காட்ச்சியும் பாடலும் ...காட்சி மாத்திரம் வேறு (காட்ச்சிக்கு நன்றி )
லோட் ஆகினால் யூ டியூபில் சென்று பார்க்கவும்
யார் இந்த பாக்கள் ?
வேரில்லா பூக்கள்
விடியாத பகல்கள்
சுடரில்லா அகல்கள்
அன்பை தேடி அலையும் கலை மானின் கண்கள்
ஓடாத தேர்கள்
உறவில்லா மனங்கள்
தொலைந்து போகவோ....
மண்ணில் விண்மீன்கள்..
எப்போதும் மங்காத சூரிய பூக்கள்
பொன் வண்ண ஆற்றில் குதித்தாடும் மீன்கள்
மனிதத்தின் நேயங்கள் காணாத கண்கள்
சுற்றம் நடப்பு தேடியே துடிக்கின்ற உயிர்கள்
தொலைந்து போகவோ.....
மண்ணில் விண்மீன்கள் ...!!
கற்ப்பனை மேடையில் ஆடி பாடும் இங்கு
எல்லோர் கனவிலும் தேடி வர்றாதே பகையே ஓடி
எத்தனை நிறங்கள் மாறி மாறி
மின்னிற வண்ணத்து பூச்சிக்காரி
எதோ ஆசை நெஞ்சில் உருளும்
எதோ எண்ணி நாட்கள் நகரும் இன்பம் தேடி உலகிலே
தொலைந்து போகவோ...........
மண்ணில் விண்மீன்கள்..!!!
காரிருள் ராத்திரி எட்டிப்பாருங்கள்
காற்றினில் தீயிது எல்லை கோடில்லை
உலகமே இவை ஒதுக்கி வைத்தாரே
படிகம்போல உள்ளே உள்ள எண்ணம் தெரியுது
வீணையின் நாதம் போல் பேச்சு இனிக்குது
இசைகளின் உயிர்ப்பாய் மழலையின் சிரிப்பு நம்ம்மை இழுக்கும்
துள்ளும் காற்று... தூய ஊற்று
இது இறைவன் தாலாட்டு
இதன் வினையோ இமையமே
தொலைந்து போகவோ....
மண்ணில் விண்மீன்கள் .... !!!
தேடுங்கள் கண்ணாலே ...
தேன் சிந்தும் பூவை
ஈரைந்து மாதம் புடம் போட்ட பொன்னை
அழியாது வாழும் கல்வெட்டு பூக்கள்
சூடாத பூக்கள்
சுருதியில்லா பண்கள்
தொலைந்து போகவோ...
மண்ணில் விண்மீன்கள் !!!
போலே பேசீடுவார்
நதி அலை போலே ஆடீடுவார்
கேள்விக்கணைகளை தொடுத்தே எல்லோரை பந்தாடீடுவார்
சிரிப்பால் கலக்கிடுவார்
சிறகுகள் இன்றி பறந்திடுவார்
அருள் ஒளி போலே வந்தே விதியை மாற்றிடுவார்
நீரினில் ஆடும் நிலவினை போல்
வாசனை வீசும் மலரினை போல்
வாழ்த்திடும் குழந்தைகள் நாளை உலகை மாற்றீடுவார்
மனையில் போடும் குட்டிதூக்கம் போல்
மனசுக்குள் வீசும் தென்றலை போல்
தொலைந்து போகவோ ..........
தொலைந்து போகவோ .............
தொலைந்து போகவோ மண்ணில் விண்மீன்கள் மிகவும் உருக்கியது .. ஷன்கர் மகாதேவன் குரலில் ....
இந்த படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர் விருது அமீர்கானுக்கும் .. சிறந்த நடிகர் அந்த சிறுவனுக்கும் கிடைத்தது ..
தொலைந்து போகவோ இந்த பதிவு :)
ஓட்டை மறக்காமல் போடுங்கள்
Wednesday, June 16, 2010
இஸ்லாமிய திருட்டு - உண்மையின் பக்கம் - படங்கள் வரலாறு சொல்லும்
முக்கிய குறிப்பு :- இது பகுத்தறிவு உள்ள மக்களை மேலும் தெளிவு படுத்த இடப்படும் பதிவு . மதவாதிகள் உங்கள் சமயங்கள் உங்கள் உணர்வுகள் புண்படுத்தப்படுவதாக நினைத்தால் இந்த பதிவை வாசிக்க வேண்டாம் .
மதங்கள் அந்த காலத்து அரசியல் வாதிகளாலும் அரசர்களினாலும் மக்களை அடிமைப்படுத்த பயன்படுத்திய ஒரு சமூக அமைப்பு தான் மதம் . மதங்களின் பெயரால் மக்களை துன்பப்படுத்தியும் தமது சுய தேவைகளை திருப்திப்படுத்த பாவித்த ஆயுதமே மதம்/சமயங்கள் .
அதிலும் மதங்களின் தோற்ற காலம் வெளிப்படையாக தெரிந்த ஒன்று . கி மு 2500 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பவுத்த மதமும் , 2000 ஆண்டுகளுக்கு முதல் தோன்றிய கிறிஸ்தவமும் மற்றும் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இஸ்லாமிய சமயமும் சரி அனைத்தும்ம் அண்மையிலேயே தோன்றியுள்ளது . இஸ்லாமும் கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட ஒரே ஒற்றுமை கொண்டிருக்கும் . காரணம் இவை இரண்டினதும் அடிப்படை எகிப்திய கடவுள்கள். மிக மிக தொன்மை வாய்ந்தவர்கள் எகிப்தியர்கள் . அவர்களிடமிருந்து சுட்டதே சில சமயங்கள் .
==================================================================================
எகிப்திய சூரிய கடவுள் ஹோருஸ்
அந்த கடவுள்களும் வெறும் வானவியலை வைத்து உருவாகியவை . எகிப்திய ஹோரஸ் சூரிய கடவுள். அவரை வணங்கும் முறை இருக்கும் போதே ப்டாஹ்(ptah ) எனும் கடவுளின் வணக்க முறையும் இருந்தது .
இந்த உருவம் பரீச்சயமானது போல இருக்கா ?
இந்த தொப்பி எங்கயாவது பரீச்சயமான மாதிரி இருக்கா ?
வெறுமனே வானவியலாலும் சூரிய சந்திரனாலும் எழு ராசிகளாலும் உருவான மதங்கள் . உருவி எடுக்கப்பட்ட சின்னங்கள் .
எகிப்தியர்களின் முறை .. அனைவருக்கும் படம் பார்க்கும் போதே தெரியும் இது எங்கே நடைபெறுகிறது என்று .
==================================================================================
12 இமாம்ஸ்
சூரியனும் 12 ராசிகளுடன் பயணிக்கிறது ..
அடுத்த பதிவில் சமயங்கள் மேலும் வீறு கொண்டேலா யார் காரணம் .. மக்கள் ஏன் சமய வெறிபிடித்து உள்ளனர் .. ஒன்றுமே இல்லாத சமயத்துக்கு ஏன் இத்தனை கொலைகள் ..
சமயங்களால் அடிமைப்படுத்தி பயப்படுத்தி வைக்க முடியுமே தவிர .. மனித உணர்வை வெளிப்படுத்த இயலாது ..
இந்த பதிவுக்கு எதிர்ப்புகள் வரும் ஆனால் நம்புபவர்கள் இறைவன் பாத்துக்கொள்பான் என்று விட்டுவிடுவதில்லை .. இதற்க்கு மட்டும் வந்து விடுவார்கள் .
பதிவு தொடரும் .. உங்கள் வரவேற்ப்பு தேவை ...
பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போடுங்கள் .. அனைவரையும் சென்றடைய ....
மதங்கள் அந்த காலத்து அரசியல் வாதிகளாலும் அரசர்களினாலும் மக்களை அடிமைப்படுத்த பயன்படுத்திய ஒரு சமூக அமைப்பு தான் மதம் . மதங்களின் பெயரால் மக்களை துன்பப்படுத்தியும் தமது சுய தேவைகளை திருப்திப்படுத்த பாவித்த ஆயுதமே மதம்/சமயங்கள் .
அதிலும் மதங்களின் தோற்ற காலம் வெளிப்படையாக தெரிந்த ஒன்று . கி மு 2500 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பவுத்த மதமும் , 2000 ஆண்டுகளுக்கு முதல் தோன்றிய கிறிஸ்தவமும் மற்றும் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இஸ்லாமிய சமயமும் சரி அனைத்தும்ம் அண்மையிலேயே தோன்றியுள்ளது . இஸ்லாமும் கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட ஒரே ஒற்றுமை கொண்டிருக்கும் . காரணம் இவை இரண்டினதும் அடிப்படை எகிப்திய கடவுள்கள். மிக மிக தொன்மை வாய்ந்தவர்கள் எகிப்தியர்கள் . அவர்களிடமிருந்து சுட்டதே சில சமயங்கள் .
==================================================================================
எகிப்திய சூரிய கடவுள் ஹோருஸ்
அந்த கடவுள்களும் வெறும் வானவியலை வைத்து உருவாகியவை . எகிப்திய ஹோரஸ் சூரிய கடவுள். அவரை வணங்கும் முறை இருக்கும் போதே ப்டாஹ்(ptah ) எனும் கடவுளின் வணக்க முறையும் இருந்தது .
=================================================================================
இந்த உருவம் பரீச்சயமானது போல இருக்கா ?
இந்த தொப்பி எங்கயாவது பரீச்சயமான மாதிரி இருக்கா ?
=================================================================================
================================================================================
வழிபாட்டு முறை
=================================================================================
==================================================================================
எகிப்திய சந்திர கடவுள் கொன்சு (Khonsu )வெறுமனே வானவியலாலும் சூரிய சந்திரனாலும் எழு ராசிகளாலும் உருவான மதங்கள் . உருவி எடுக்கப்பட்ட சின்னங்கள் .
எகிப்தியர்களின் முறை .. அனைவருக்கும் படம் பார்க்கும் போதே தெரியும் இது எங்கே நடைபெறுகிறது என்று .
==================================================================================
12 இமாம்ஸ்
சூரியனும் 12 ராசிகளுடன் பயணிக்கிறது ..
அடுத்த பதிவில் சமயங்கள் மேலும் வீறு கொண்டேலா யார் காரணம் .. மக்கள் ஏன் சமய வெறிபிடித்து உள்ளனர் .. ஒன்றுமே இல்லாத சமயத்துக்கு ஏன் இத்தனை கொலைகள் ..
சமயங்களால் அடிமைப்படுத்தி பயப்படுத்தி வைக்க முடியுமே தவிர .. மனித உணர்வை வெளிப்படுத்த இயலாது ..
இந்த பதிவுக்கு எதிர்ப்புகள் வரும் ஆனால் நம்புபவர்கள் இறைவன் பாத்துக்கொள்பான் என்று விட்டுவிடுவதில்லை .. இதற்க்கு மட்டும் வந்து விடுவார்கள் .
பதிவு தொடரும் .. உங்கள் வரவேற்ப்பு தேவை ...
பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போடுங்கள் .. அனைவரையும் சென்றடைய ....
Tuesday, June 15, 2010
இயற்கையின் தேர்வு - பரிணாமம் - விடாமுயற்ச்சி
அனைவரும் விளங்கும் படியாக எழுதியிருப்பதால் விஞ்ஞான சொற்க்கள், சிலவை எளிய விளக்கங்களுடன் எழுதி உள்ளேன் .
இயற்க்கை நிகழ்வுகள் , இயற்க்கை விபத்துகள் போன்றன நம் வாழ்க்கையை தீர்மானிப்பது போல உலகில் உயிரினத்தோற்றத்தையும் உருவாக்கியது .டார்வின் போன்ற விஞ்ஞானிகள் கூர்ப்பு கொள்கைகள் சர்ச்சையை கிளப்பினாலும் சமூகத்தில் இருந்து உயிரினங்கள் மூட பழக்கவழக்கங்களை தூக்கி எறிந்தது .
100 மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் உலகில் உயிரினங்கள் தரையில் இருந்ததில்லை . உதாரணமாக உலகில் மீன் வகை , முலையூட்டிகள் , பறவையினங்கள், ஊர்வன வகை போன்ற உலகில் முதன் முதல் தோன்றிய உயிரின வகைகள். இவை கூட தரையில் இருந்ததில்லை . இவை அனைத்திற்கும் நீர் தான் மூல ஆதாரமாக இருந்தது . நீர் வாழ் உயிரினங்கள் தான் இவ்வுலகில் முதல் முதல் தோன்றியது .
இரசாயன பிணைப்புகளே உயிரினங்களை உருவாக்கியது . சரியான பிணைப்பு வரும் வரை உயிரினங்கள் தோன்றவில்லை . ஒரு விபத்து போலவே உயிரினங்களின் தோன்றியது . ஒரேயொரு ஆதாரத்தை முன் வைக்கலாம் காரணம் உலகம் தோன்றி பல மில்லியன் வருடங்களுக்கு பிறகே உயிரினம் தோன்றியது .
சரி இனி மனிதன் எப்படி மனிதன் ஆனான் ? உயிரினங்கள் எப்படி உலகில் தோன்றின ? இயற்கையின் தேர்வு என்ன ?என்பது பற்றி பார்ப்போம் .
நீர்வாழ் உயிரிங்கங்களின் தேர்வு
அவ்வாறு விபத்தால் தோன்றிய உயிரினங்கள் பரம்பல் அடைந்தது . அவற்றுக்கு தேவையான சக்தியை பெற உணவு இன்மை . உணவுக்கான போட்டியும் அதிகரித்தது . சில உயிரினங்கள் நீரும் சேறும் கலந்த நீரில் வாழ தொடங்கின .. அவை தமக்கான உணவு போட்டி நீரில் காணப்படுவதை உணர்ந்து , மற்றைய உயிரினங்கள் அடையமுடியாத இடங்களில் உணவை தேட முயற்சித்தன . அதன் விளைவாகவே செற்றுப்பகுதிக்கு நகர்ந்து மெல்ல தரையை அடைந்தன . அவற்றுக்கு அங்கு போட்டி நிலவவில்லை . அதனால் அவற்றின் இனப்பெருக்கமும் அங்கேயே நடைபெற்றது .
என்னுடைய கருத்து படி அவற்றிற்க்கு பிறந்தவைகளும் அந்த அந்த சூழலுக்கேட்ப்ப ஜீனில் மாற்றம் ஏற்ப்படே பிறந்திருக்க வேண்டும் . அவை தொடர்ந்து தரையிலேயே வாழ தொடங்கின .
மனிதனினுக்கு இயற்க்கை தேர்வின் தன்னம்பிக்கை
தக்கன பிழைத்தல் கொள்கையின் அடிப்படை இயற்கையின் தேர்வு தான் . முதலில் பலமான உயிரினங்கள் பிழைத்தது . விதையும் மண்ணுக்குள் எத்தனையோ சவால்களை எதிர் கொண்டு தான் மரமாக வருகிறது . அதே போல தான் குருவிகள் கூட முட்டை இட முன் மிகவும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்கிறது . இயற்க்கை தேர்வு மனிதனின் வாழ்வுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகிறது .
டார்வினின் கூர்ப்பு கொள்கை தவறு என வாதிடுபவர்கள் உண்டு . ஏன் இப்போது இருக்கும் மனிதர்கள் குரங்கு ஆவதில்லை எனவும் அதனால் அது தவறாம் .
ஆனால் Mutations எனப்படுவது செல்களில் ஜீன்களில் ஏற்ப்படும் எழுந்தமானமான மாற்றங்கள் . இவை அரிது இருந்தாலும் இந்த மாற்றம் இடம்பெற 1000 ௦௦ தலைமுறைகளுக்கு மேல் எடுக்கும் . இதில் ஒரு உயிரினத்தில் இருந்து இன்னொரு உயிரினம் முற்றிலும் மாறுபடும் .
உயிரங்களின் தக்கன பிழைத்தல் கொள்கை அவற்றின் தோற்றங்களை வைத்து கூறலாம் . உதாரணமாக தாவர உன்னிகளுக்கு முகத்தின் இரு புறமும் பக்கவாட்டில் கண்கள் இருக்கும் .அவற்றால் அதன் மூலம் சுற்றி பார்க்க முடியும் . ஆனால் வேட்டையாடும் விலங்குகளுக்கு முன்னோக்கியே இருக்கும் .காரணம் அவற்றிற்க்கு இலக்கு தான் முக்கியம் .
உறுதியான தன்மை இயற்கையின் தேர்வில் உயிரினங்கள் தோன்றலுக்கு மிகவும் முக்கியம் .மனிதன் வாழ்க்கையில் கஷ்டப்படவில்லை .. உறுதியான தன்மை இல்லாதவனே கஷ்டப்படுகிறான் . சூழலுக்கேட்ப்ப மாறுதல் , தன்னை தயார்படுத்தல் , எதிர்கொள்ளல் போன்றன தற்போதைய வாழ்கையில் தேவையானது . இதனை தயார்படுத்துபவன் எதையும் எதிர்கொள்ளலாம் . இதை தான் தான் நம்பிக்கையும் போதிக்கிறது . அறிவியலுடனும் விளக்கி விட்டேன் .
கொஞ்சம் தத்துவத்தோட தொடர்பு படுத்தி விட்டேன் .. கொஞ்சம் வித்தியாசமா யோசிப்பம் என்று தான் .அடுத்த பதிவில் ஏன் இந்த தரை வாழ உயிரினங்கள் சில மீண்டும் நீருக்கு சென்றன ? ஏன் இரண்டிலும் வாழ்கின்றன . மனிதன் எப்படி மனிதன் ஆனான் என்பது பற்றி பார்ப்போம் .
மறக்காமல் அனைவரையும் தகவல் அடைய ஓட்டை போட்டு விடவும் . நன்றி

Monday, June 14, 2010
ஜோதிடம் - அறிவோம் உண்மைகள் - ஒரு குட்டி கதையும்
வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. இதை தான் சமாந்தர உலக தியரியும் கயோஸ் தியரியும் பறை சாற்றி நிற்க்கின்றன . இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெறும் நிகழ்வுகள் , அதாவது உயிரினங்கள் எவ்வாறு இந்த உலகில் ஒரு விபத்தால்(எதிர்பாராத உயிர் பிணைப்புகள் ) உருவாகியதோ அதே போல தான்நிகழ்வுகளும் விபத்து போன்றது .
ஏனைய உயிரினங்கள் போலவே மனிதனின் வாழ்க்கையும் , இருந்தாலும் இந்த அறிவும் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் ஏமாற்று வேலைகள் , தனக்கேற்ப நிகழ்வுகளை சாதகமாக்கி கொள்ளல் போன்றவற்றில் கில்லாடியாகி அதற்க்கு ஜோதிடம் என்றும் பெயர் வைத்தான்.
புரோகிதர்களும் ஜோதிடர்களும் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை நிகழ்வுகளை எதிர்வு கூறி கட்டம் பார்த்து இடம்பெறுகிறது . எந்த ஒரு விடயத்தையும் ஆதாரத்துடன் காட்டுவது அறிவியல் . ஜோதிடம் உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன ?
புரோகிதனிடம் கேட்க்கும் ஜோதிடமும் ஜோதிடனிடம் கேட்பதும் வேறுபடும். ஏன் வேறுபடுகிறது ? வெறுமனே 50 % நிகழ்தகவு வைத்து கூறப்படுகிறது .
ஒரேயொரு ஆதாரம் இப்போதும் உறுதியாக இருக்கிறது . இரட்டையர்கள் பிறப்பு . இருவரும் பிறப்பது ஒரே ராசி ஒரே நட்சத்திரம் .ஆனால் இருவரின் வாழ்க்கையும் வேறு வேறு. சில வேளைகளில் ஒருவர் இறந்து விடுவது உண்டு .
ஜோதிடர்களின் கணிப்பு வியாழன் வாழ்க்கையை தீர்மானிப்பதாகவும் சனி வாழ்க்கையை கெடுப்பதாகவும் இருக்கிறது . சனி 50000 கிலோ மீட்டர் அகலமான ஹய்ட்ரஜனையும் ஹீளியத்தையும் கொண்டது .அவை மாற்றத்தை ஏற்ப்படுத்தாது .
பொய் என்பதற்கு நாம் கி மு பல வருடங்களுக்கு முன்னர் செல்ல வேண்டும் . எகிப்தியர்கள் கோருஸ் எனும் எகிப்திய சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர் . இது பிந்திய சூரிய கடவுள் கிறிஸ்து உருவாக்கத்திற்கு முதல். முன்னர் மனிதன் இரவு பகலை விழுங்குவதாகவும் பகல் இரவை விழுங்குவதாகவும் எண்ணியிருந்தான். அது தான் சூரியனை வழிபட்டு வந்தான் . அதனையே கடவுளாக சித்தரித்தான் . அதனை சுற்றி அமையும் ராசிகளை ஒவ்வொரு காலமாக நிர்ணயித்தான் . இது வானத்தின் மீதான நீண்ட கால அவதானத்தில் மனிதன் குறித்தவை .
நட்ச்சத்திரங்களை இரு முறைகளில் பார்க்கலாம் ஒன்று அவை இருப்பது போலவே ,மற்றயது நாம் நினைப்பது போல அவை இருப்பது . இதில் எது உண்மை என்பது பகுத்தறிவு தீர்மானிக்கும் .
ராஜாக்களின் காலம் தான் ஜோதிடத்தின் பொய் தாண்டவம் ஆட தொடங்கிய காலம். சில பொய்களை காரணத்துடன் சொல்ல வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. அதற்க்கு ஒரு உறுதியான காரணம் தான் எமது வாழ்க்கை ஏற்க்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகவும் கதை அவிழ்த்து விடப்பட்டு ஜோதிடம் வளர்த்து விடப்பட்டது . சமயமும் இதே போலதான் வெறுமனே வானவியல் .
இஸ்லாமியர்களின் நட்சத்திர சந்திர வழிபாடும் , மற்றயவர்களின் சூரிய வழிபாடும் மிகச்சிறந்த உதாரணம். இவற்றின் மையம் தான் கடவுளை உருவாக்கியது .இது இவர்களுக்கு சொந்தமானது அல்ல . நாகரிகம் வளர்ந்த எகிப்தியர்களின் வழிபாட்டு முறை .
வானவியலை வைத்து உருவாக்கப்பட்ட இறைவன் , ஜோதிடம் இரண்டும் ஒன்று தான் . ஆனால் நட்சத்திரங்கள் , கிரகங்கள் மாற்றம் ஏற்ப்படுத்துமாம். இது விஞ்ஞானத்தால் முற்றாக மறுக்கப்பட்ட ஒன்று . அவற்றின் கதிர் வீச்சுகள் உண்மையாக வந்தால் உயிருடன் இருக்க முடியாது .
ஒரு முறை பிஜபூர் சுல்தான் மீது படையெடுக்க தீர்மானித்தான் கிருஷ்ணதேவராயன் . ஆனால் கிர்ஷந்தேவரயனை வெல்ல முடியாது என நினைத்த பிஜபூர் அரசன் தேவராயன் ஜோசியனை விலைக்கு வாங்கி விட்டான். படையெடுக்க தயாரான தேவரயனிடம் இன்று நீங்கள் துங்கபத்திரா நதியை தாண்டினால் உயிர் போய்விடும் என்று கூறினான் ஜோதிடன் . இதை கேட்டா மன்னன் என் நம்பிக்கை சொல்கிறது நான் வெல்வேன் என்று நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான் . ஆனால் மனைவி பிள்ளைகள் அவனை அனுமதிக்கவில்லை .
உடனே வந்த தெனாலி ராமன் . அவன் சொல்வது பொய் என்பதை தான் நிரூபிக்கிறேன் என்று அரசனிடம் சொல்ல அரசனும் நீ சொல்வது நடந்தால் உனக்கு பொற்காசுகள் தருகிறேன் என்றார் .
அடுத்த நாள் காலை வந்த ஜோதிடனிடம் ஐயா, அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் அவர்களே தாங்கள் கூறும் ஜோதிடம் முற்றிலும் பலிக்குமா எனக் கேட்டான். அதற்கு அச்ஜோதிடனும் என் ஜோதிடம் பொய்யானது அல்ல. இது வரை நான் கூறிய ஜோதிடங்கள் அனைத்தும் 100% மெய்யென நிரூபித்துள்ளேன். அப்படியிருக்க என் ஜோதிடம் பலிக்குமா என நீ எவ்வாறு கேட்பாய்? என்று கோபமாகக் கத்தினார் ஜோதிடர்.
அப்படியானால் தாங்கள் என்னை மன்னிக்கவும் என்றான் தெனாலிராமன். பின் ஜோதிடரிடம், “தாங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள்” என்று கேட்டான். அதற்கு அச்ஜோதிடரும் ஏதேதோ கணக்குப் பார்த்து விட்டு “இன்னும் குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகளாவது நன்கு வாழ்வேன்” என்றான். இதைக் கேட்டதுதான் தாமதம், உடனே தெனாலிராமன் தான் தயாராக வைத்திருந்த வாளை உருவி சோதிடனின் தலையை வெட்டி வீழ்த்தினான்.
தனது ஆயுளையே ஒழுங்காக கணிக்க தெரியாதவனா உங்கள் ஆயுளை கணிக்கப்போகிறான் என்று கூறி விட்டு பின்னர் தேடி பார்த்த போது பிஜபூர் மன்னனுக்கும் ஜோதிடனுக்கும் இடையில் நடந்த கடித பரிமாற்றம் பிடி பட்டது .
நீளமாகி விட்டது பதிவு .அனைத்து கருத்துகளும் பதிய முடியவில்லை . பகுத்தறிவால் பொய்களை உடைப்போம். தொடர்ந்து எழுதுவேன் .
தகவல்கள் அனைவரையும் சென்றடைய ஓட்டு போடவும் .... நன்றி ..

முன்னைய ராஜாக்கள் தமது யுத்த ஆயுதமாக ஜோதிடத்தை பயன்படுத்தி வளர்த்தனர் . ஒரு கதை சொன்னால் சுவாரசியமாக இருக்கும் .

Subscribe to:
Posts (Atom)

.jpg)

.jpg)