தொடருபவர்கள் - நன்றிகள்

Friday, July 30, 2010

வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டமில்லாத நாளா ? - 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

உண்மைகள் அறிவியல் நோக்கில் வெளிவரவேண்டும் .. யார் மனதையும் புண்படுத்த அல்ல ..

13  ஆம் இலக்கம் அதிர்ஷ்டமற்றது ,13 ஆம் இலக்கத்தில் வீடு வாங்குவது நல்லதல்ல என்று  கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் கிறிஸ்தவத்தில் இன்னொரு கதையும் உண்டு . மேலைத்தேய நாடுகளிளும் வெள்ளிக்கிழமை  அதிர்ஷ்டமற்ற நாளாக நடைமுறையில் உள்ளது .




நேரத்தை சரியாக ஒழுங்கு படுத்த மனிதனால் தான் நாட்க்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான்  7 நாட்களாக பிரிக்கப்பட்டு 12 மாதங்களாகவும் பிரிக்கப்பட்டது .

ஆனால் இந்த பதின்மூன்றாம் திகதி மர்மத்தின் படி இறைவன் முதலிலேயே நாட்க்காட்டி படைத்து விட்டு மனிதனை படைத்தது போலவே கதை உள்ளது .


paraskevidekatriaphobia என்றழைக்கப்படும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீதான பயம் மேல் நாட்டில்   பெரும் தொகையான மக்களால் நம்பப்படுகிறது .


இந்த பயங்களுக்கு கட்டுக்கதைகளே காரணம் (எந்தவித ஆதாரமும் அற்ற )...




இயேசு தனது 12 தோழர்களுடன் இருந்த போது பதின் மூன்றாவதாக வந்தவர் யூதாஸ் . அவர் தான் இயேசுவை காட்டி கொடுத்தவர் . 


வெள்ளிக்கிழமை மீதான பயத்துக்கு காரணம் ...


இயேசு  வெள்ளிக்கிழமை இறந்தமை ...
ஆதாம் ஏவாளும் பழம் உண்ட நாள் வெள்ளிக்கிழமை ..
பாரிய வெள்ளப்பெருக்கு வந்த நாளும் வெள்ளிக்கிழமை ..
பைபிளின் படி ...


இன்னொரு உறுதிப்படுத்தப்படாத கட்டுக்கதையும் உண்டு . கிட்டத்தட்ட பொய்யானது என்றும் சொல்லலாம் . 


பிரிட்டிஷ் கடற்ப்படை கப்பல் 1800 இல் H .M .S Friday  என்ற கப்பல் ஒரு வெள்ளிக்கிழமை புறப்பட்டதாம்.  அதுவும் அதன் கப்டன் பெயர் James Friday ஆம் . அந்த கப்பல் அப்படியே காணாமல் போய்விட்டதாம் .   


  கிறிஸ்தவம் எனும் சமயம் இருக்கும் முன்னர்  pagan (பகன் )என்னும் சமயம் இருந்தது . அதன் தழுவலில் இருந்து வந்தது தான் இந்த பதின் மூன்று  என்ற எண். காரணம் பகன் ( pagan lunar calendar.) நாட்காட்டியில் 13 மாதங்கள் என்றே பிரிக்கப்பட்டிருந்தது . 


ரோமானிய காலத்தில் வெள்ளிக்கிழமை வீனஸ் க்காக இருந்தது . வீனஸ் காதலின் கடவுள் . Norsemen எனப்படுபவர்கள் அதை சுட்டு அவர்கள் பிரிக்க் பிரேய என்று பெயர் வைத்தார்கள் . அது தான் பின்னாளில் ஃப்ரைடே என்று அழைக்கப்படுகிறது . 


காலம் காலமாக கட்டுக்கதையாகவும் ஒன்றுதொட்டு ஒன்றாக வந்த மதங்களும் மாற்றியமைத்த விளையாட்டு  தான் இவை .  

Wednesday, July 28, 2010

பதிவர்கள் எழுத்தாளர்களா ? - நான் யானை - சாருநிவேதா

இலக்கியவாதிகள் என்ற போர்வையில் வெறும் மொழியின் ஆற்றலையும் வசன கையாடல்களையும் வைத்துக்கொண்டு தாம் உலகத்தமிழ் இனத்தின்  சிறந்த எழுத்தாளர்கள் என்று சொல்வது மிகவும் நகைப்புக்கு இடமானது .

ஆனால் ப்லோக்கேர்கள் நான் பார்த்தவரை ஒரு ரூபாய் இலாபம் கூட  இல்லாது, விருது பெறும் ஆசை கூட இல்லாது, தன் புகழ் பாடாது  எவளவோ பெரிய விடயங்களை கூட மிக எளிமையாக ஒரு இரு வசனங்களில் தமது ப்ளாக்களில் எழுதி விட்டு போய் விடுவர். ஆனால் மிக பெரிய  இலக்கியவாதிகள் தமது அதி மேதாவிதனத்தை காட்ட வேறுபட்ட எதிர் மறை பார்வையை தமது பிரபலத்துக்கு பாமரன் மீது திணிப்பவர்கள் .

அண்மையில் ஒரு எழுத்தாளர் என்று தன்னை கூறிக்கொள்பவர் இலக்கிய உலகம் அடிதடி சண்டையில் தான் ஆர்வம் செலுத்துகிறது என்று ஒருவர் கூறிய ஆரோக்கியமான கருத்தை தூக்கி பிடித்து பெரிதாக்கி உள்ளார் . இவரை தான் கூறியுள்ளார் என புரியவில்லையோ என்னவோ ?


ப்லோகேர் பற்றிய அவரின் கருத்து ....

நான் இன்று விகடனில் எழுதுகிறேன் என்றால் அதற்குப் பின்னே என்னுடைய 35 ஆண்டுக்கால உழைப்பு இருக்கிறது.  ஆனால் அந்த உழைப்பு எதுவும் இல்லாமல் நொடியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்து விட்டு அதில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்க்ளைப் போல் இஷ்டப்படி எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்கள்.  சினிமா, அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்று எதையுமே விட்டு வைப்பதில்லை.  அது மட்டுமல்ல; இரண்டு ஆண்டுகளாக ப்ளாகில் எழுதுபவர் நானும் என் சக எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் என்று கட்டுரையை ஆரம்பிக்கிறார்.  இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?   சரி, நான் கேட்கிறேன்.  கணினி, இண்டர்நெட் ஆகியவற்றை ஒரு டாக்டரும் பயன்படுத்துகிறார்.  ஒரு எஞ்சினியரும் பயன்படுத்துகிறார்.  ஆனால் ஒரு மனிதர் இண்டர்நெட்டை மட்டுமே பயன்படுத்தி நான் டாக்டராகி விட்டேன், எஞ்சினியர் ஆகி விட்டேன் என்று சொல்வதில்லை. ஆனால் இண்டர்நெட் என்ற ஒன்று ஓசியில் கிடைத்து விட்ட காரணத்தினாலேயே அதில் ஒரு சினிமா விமர்சனத்தை எழுதி விட்டு  ஒருவர் எழுத்தாளர் ஆகி விடுகிறார்.

ஒரு எழுத்தாளனோ அல்லது சமூக சிந்தனையாளனாகவோ இருக்க இலக்கியம் தெரிந்திருக்க தேவையில்லை . இலக்கியம் தெரிந்தவர்கள்  எல்லோரும் சிந்தனையில் நோக்கில் சிறந்தவர்கள் என்றில்லை . இலக்கியம் தெரியாதவர்கள் சிந்தனை அற்றவர்கள் என்றும்  இல்லை .
  
மொழிக்கும் சிந்தனைக்கும் எந்தவித  தொடர்பும் இல்லை .  

உவமானங்கள் கையாள தெரிந்திருக்கலாம் மொழி நடை தெரிந்திருக்கலாம் ஆனால் அதிமேதாவிகளை போல எண்ணும் சிலர்  சிறந்த சிந்தனையாளர்கள் என்று சொல்ல மாட்டேன் . சிறந்த சமூக நோக்கு பார்வையாளர்கள்  எவளவோ  பேர்  ப்ளக் இல் இருக்கிறார்கள் .

ஒருமுறை ஒரு ’பின்நவீனத்துவ்வாதி’ என் முகத்தில் குத்து விட்டு பல் ஒன்றை உடைத்தார். 
சபாஷ் ........






தான் யானையாம் .....

"ஸ்டீஃபன் ஹாகிங்கை எதேச்சையாக சந்திக்க நேர்ந்த ஒரு ப்ரைமரி ஸ்கூல் டீச்சர் “என்ன ஸ்டீஃபன்…  இப்போதெல்லாம் ஒன்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே நடப்பதில்லையே?  எல்லா விஞ்ஞானிகளும் செமினார் அது இது என்று சொல்லிக் கொண்டு கூத்தடிக்கிறார்களே தவிர உருப்படியாக ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே?” என்று சொன்னால் ஸ்டீஃபன் ஹாகிங்குக்கு எப்படி இருக்கும்?"
 
ஸ்டீஃபன் ஹவ்கிங் பற்றி என்ன தெரியுமோ தெரியாது . அவரினதும் கார்ல் சாகநினதும் அறிவியல் சிந்தனைகள் வித்தியாசமான அறிவியல் பார்வை பற்றி என்ன தெரியுமோ தெரியாது ஆனால்  ஸ்டீஃபன் ஹவ்கிங் ஐயும் விட்டு வைக்கேல்ல .. இவர் stephan ஹவ்கிங் ஆம் .

எழுத்தாளர் என்பவரின்  பதில் .

அரே பச்சா; நான் சொல்வதை நன்றாக்க் கேட்டுக் கொள்.  நான் சண்டைக்குப் போனால் மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்களோடுதான் சண்டைக்குப் போவேனே தவிர உன்னை மாதிரி பச்சாக்களோடு அல்ல…
 
இவாறானவர்களுடன் சண்டைக்கு போனால் தான் கிடைக்காத அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் .

இப்போது நாம் ஜனாதிபதி பரிசு என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாம்.  ப்ரைமரி ஸ்கூல்களில் நன்றாகப் படித்து, கிருத்திருவம் எதுவும் செய்யாத பசங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் என்று சொல்லி சிலேட்டும் பலப்பமும் கொடுப்பார்கள்.  அந்த மாதிரி அவார்ட் வாங்கும் பசங்கள் பின்னாளில் உருப்படவே உருப்படாது.  அது போன்ற அவார்டு தான் ஜனாதிபதி அவார்டு.  உதாரணமாக, சிரிப்பு நடிகர் விவேக் பத்ம ஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்

விளக்கம் சொல்லீட்டாரு ....இவருக்கு ஜனாதிபதி விருது கிடைக்கவில்லை என்று எரிச்சலோ தெரியவில்லை . 

ஆனால் ஒன்று இவ்வாறானவர்களுக்கு கமல்ஹாசனையும் விவேக்கையும் பிடிக்காது என்ற கருத்து  உண்மையாகி விட்டது .  ஜெயமோகன் எழுத்துக்களை கமல் வாசிப்பதால் கமல் மீதும் கோபம் இந்த மனுஷனுக்கு . கமலின் பார்வையும் பிடித்திருக்காது .

விவேக் , கமல்  போன்றோர் திரைப்படங்களிலும் சரி சாதாரணமாகவும் சரி சிறந்த பொது நோக்காளர்கள் . இதனாலோ என்னவோ கூடுதலானோருக்கு பிடிப்பதில்லை .

நீயா நானா கோபிநாத்திடம் ஒருமுறை மாட்டுப்பட்ட போதே வெளிப்படையாக சொன்னார் நித்தியானதனுக்கு ஆதரவு செய்தது தவறு என்று . அதை கூட கோபிநாத் துருவி கேட்ட பின்பே சொன்னார் .

சரி, என் மடிக்கணினியில் பேட்டரி தீர்ந்து விட்ட்து..
பினிஷிங் தான் டாப் ..... தன்னிடம் மடிக்கணணி இருக்காம் ... 

கூர்க் சென்று கொண்டிருக்கும்போது காரில் அமர்ந்தபடி டைப் செய்தேன். 
அட காரும் இருக்காம் ....  

இவ்வாறானவர்களின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு சென்றுவிடலாம் ஆனால் இவற்றை வாசிப்பவர்களை தவறான பார்வையில் இட்டு செல்லும் .

Tuesday, July 27, 2010

பாஸ்ட் பூட்ஸ்



பாஸ்ட் பூட் எனும் விடயம் இப்போது மிகவும் சாதாரணம் . உணவை பார்த்தாலே வாய் ஊறும். இதை பற்றி கொஞ்சம் தகவல்களும் பார்ப்போமே . 


அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும பங்கு வகிப்பது இந்த பாஸ்ட் பூட் நிறுவனங்கள் .

Subway (சப் வே )



சப்வே ஆரோக்கியமான உணவும் கூட , கொழுப்பை கட்டுப்படுத்தும் , குறைவான கொழுப்பு உணவு .. உடல் எடையை குறைக்க Jared Fogle என்பவன் 2 சப்வே சண்ட்விசெஸ் ஒரு நாளைக்கு என்ற வகையில் உண்டு 245 பவுண்ட்ஸ் ஒரு வருடத்தில் குறைத்தான் . அதன் பின்னர் சப்வே மிக பிரபலம் .
1965 ஆம் ஆண்டில் 17 வயது கல்லூரி மாணவன் Fred DeLuca ஆலும் குடும்ப நண்பர் Dr. Peter Buck ஆலும் சேர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது . இன்று 27 ,000 க்கும் மேற்ப்பட்ட உணவு விடுதிகள் 85 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் நடாத்தி வருகிறது . ஒரு வருடத்துக்கு 9 பில்லியன் வருமானமும்  ஒவ்வொரு செக்கனுக்கும் 2 ,800  சப்வே சண்ட்விசெஸ் படி விற்பனையாகி வருகிறது . 


McDonald's(மேக் டொனல்ட்ஸ் )

டிக் என்பவராலும் மக்  டானல்ட் என்பவராலும் (Dick and Mac McDonald ) 1940 il   barbecue உருவாக்கப்பட்டது . மக் டொனல்ட்ஸ் க்கு  ஆண்டு வருமானமாக 21 பில்லியன்கள் வருகிறது . பிரெஞ்சு பிராயிஸ்(french fries ) க்கு மிகவும் பெயர் போனது மக் டொனல்ட்ஸ் .


 ஒவ்வொரு வருடமும் புதிய வேளை ஆட்களை எடுத்து பழக்கி வருகிறது மக் டொனல்ட்ஸ் . எட்டு பேருக்கு ஒருவர் படி அமெரிக்காவில் மக் டொனல்ட்ஸ் இல் பயிற்சி எடுத்துள்ளனர் .1968 இல் 1000௦ விடுதிகளுடன இருந்த நிறுவனம் இப்போது ௦௦  மொத்தமாக 31 ,000   விடுதிகளை நடாத்தி வருகிறது .  

pizza ஹட் (pizza hut )

1958 இல் டேன் , பிரான்க் , காரனே , கன்சாஸ் (Dan and Frank Carney, Kansas ) போன்றோராலே pizza hut  உருவாக்கப்பட்டது . அமெரிக்காவில் மிகப்பெரிய தொடராக இந்த நிறுவனம் இயங்குகிறது . buffalo wings, bread sticks, and garlic bread போன்ற சைடு டிஷ் கள் போன்றவற்றுடன் இயங்குகிறது . 

 Burger king (பெர்கர்  கிங் )


1954  டிசம்பரில் (James McLamore and David Edgerton ) ஜேம்ஸ் மக்லமொரே  டேவிட் ஆகியோர் 1954  இல் முதல் பர்கர் கிங் ஐ மியாமியில் திறந்தனர் .


இதுவரை 11 ,௦௦௦௦௦௦௦ 000 நிறுவனங்களையும் ௧௧ million     நாளாந்த வாடிக்கையாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது . 


 KFC (கே எப் சி )

கூடுதலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் .Harland Sanders ஹர்லாந்து சண்டேர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது . கே எப் சி சிக்கென் இன் டேஸ்ட் இன்  ரகசியம் அவருக்கு மட்டும் தான் தெரியும் .11 வகை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் சிக்கன் தூள் ரகசியம் அவருக்கு மட்டும் தான் இன்று வரை தெரியும் .


wendy (வென்டி )
1970 இல் தனது மகளின் பெயரால் Dave  thomas என்பவர் ஆரம்பித்தது தான் வென்டி . காரில் இருந்து கொண்டே உணவு பரிமாறும் முறையை அறிமுகப்படுத்தினார் . இதனால் காரை விட்டு இறங்க வேண்டிய அவசியம் இல்லை .. 


வருடாந்த வருமானம் 3 .7 பில்லியனுக்கு மேலே பெறுகிறது இந்த நிறுவனம் .

Taco Bell  


க்ளென் பெல் (glen bell ) என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் . ஒவ்வொரு வருடமும் 6 % வளர்ச்சியை தனது லாபத்தில் ஈட்டி வருகிறது   .

Arby 'ச

அர்பிசெஸ் என்ற நிறுவனம் இன்னொரு பாஸ்ட் பூட்(உணவு ) நிறுவனம் 1964 இல் (போறேஸ்ட் லோரே )Forest and Leroy Raffel என்பவர்களால் உருவாக்கப்பட்டது . ஆட்டு இறைச்சியை கொண்டு உணவு தயாரிப்பதில் சிறந்த நிறுவனம் . இலேசான  உணவு முறையை அறிமுகப்படுத்திய முதல்  பாஸ்ட் பூட் நிறுவனம் . சண்ட்விசெஸ் ஐ அறிமுகப்படுத்தியது . 300 கலோரிகளையும் 94 % கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகளும் இருக்கின்றன . 


   . 
புகைப்பிடித்தலை  தனது நிறுவனத்துக்குள் தடை செய்தது  . 3500 நிறுவனங்கள் கொண்டு இயங்கி வருகிறது . 

பாஸ்ட் பூட் பிடிக்கும் என்றால் மறக்காம ஓட்டையும் போட்ருங்க ...

Sunday, July 25, 2010

விஜய்- வேலாயுதம்

அங்க காப்பி  அடிச்சு இங்க காப்பி  அடிச்சு  கடைசியில் உலக பிரபலம் பெற்ற கேம் மையே  காப்பி  அடிக்கிற நிலைமை . முன்னர் தெலுங்கு பட காப்பி இப்போ இதுவா ? எப்பிடி தான் இப்பிடி முடியுதோ ?




இதிலை கூடவா காப்பி அடிப்பாங்க 




சரி பரவாயில்லைன்னு விட்டா ...


இது தாங்க உலக புகழ் பெற்ற கேம் அசஸின் கிரீட் ...




இதுக்கு நடந்திருக்கும் கொடுமைய பாருங்க 




.
லோகோவ கூட விட்டு வைக்கல்ல ..







இதை சுட்டவனுங்க கதைய விட்டு வைச்சிருபானுன்களா ?

வேலாயுதத்தின் கதையில் ஜெனிலியா ஒருபத்திரிகை நிருபர் . எதிர் பாராத விதமாக விபத்தில் ரவுடிகள் பலர்  இறப்பதை  பார்க்கிறார் . அதை போல ஒரு கதையை உருவாக்கி  சிட்டியில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க Asaad (அசாத் ) எனும் பாத்திரம் வந்திருப்பதாக மக்களை காப்பாற்றுவது போலவும் எழுதுகிறார் . பிறகு சொல்லவா வேணும் ,ஒரு காரணத்தால் விஜய் அதே பாத்திரத்தை உண்மையில் ஏற்கிறார் . ரவுடிகளை ASSASINATION (:p )செய்கிறார் விஜய் ..  


இந்த கதை ஜெனிலியா எழுத தேவையில்லை .. Asassin creed இல் இதே மாதிரி தான் . அந்த கேம் உம் இதே கரு தான் .  


இந்த ASASSIN CREED BROTHERHOOD கேம் பாகம் இந்த செப்டெம்பர் வெளி வருகிறது . அதிலை இருக்கிற STYLE  எல்லாம் காப்பி அடிப்பாணுங்கள் . அது தான் முன்னெச்சரிக்கையா அந்த விடியோவையும் இணைந்த்துள்ளேன் .. .


    விடியோ லிங்க்ASSASIN Brotherhood


எந்த கொடுமை முடிஞ்சாலும் இந்த மாதிரி கொடுமை எப்ப முடியுமோ  ?





Friday, July 23, 2010

சினிமா தியேட்டர் திரை

இன்றும் ஒரு தகவலுடன் ஆனால் கொஞ்சம் உங்களுக்கு பிடித்த தகவல் தான் .கூடுதலாக சிலர் திரைப்படங்களை தவறாமல் பார்ப்பதுண்டு . ஆனால் ப்ரொஜெக்டர் போன்றன திரைப்படம் ஓடுவதற்கு காரணம் என நாம் நினைப்பதுண்டு .

திரை பார்ப்பதற்கு வெறுமையானதாகவே இருக்கும் . அதனாலோ என்னவோ அதன் சிறப்பு அறிந்திருப்பதில்லை . திரை சிறந்த தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டது  .அதை பற்றி பார்ப்போம் ..

திரைக்குபின்னால் இருந்து பார்க்கும்போது ..


திரைக்கு முன்னால் இருந்து பார்க்கும் போது ...


திரை அதில் பட்டு தெறிக்கும் வெளிச்சத்தை  வைத்து வகைப்படுத்தப்படுகிறது .


Matte white: < 5 % குறைவான ஒளித்தெறிப்பு மிக கடுமையான சாம்பல் நிற படங்கள் , மங்கலான வெளிச்சம் காணப்படும். 


Pearlescent: 15 % ஒளித்தெறிப்பு . கடுமையான  சாம்பல் நிறமும். தெளிவான வெளிச்சமும் காணப்படும் . கூடுதலாக தியேட்டர்களில் பொதுவாக பாவிக்கப்படும் திரை .தெறிப்படையும் வர்ணபூச்சுகள்  பூசப்படும் .


Silver: 30 % ஒளித்தெறிப்பு , நடுத்தரமான சாம்பல் நிற, மிக மிக தெளிவான படம் , கடுமையான நிறங்கள் மங்கலாக தெரியும் .


Glass bead: 40   %  அல்லது அதற்க்கு மேலான ஒளித்தெறிப்பு . சாதுவான சாம்பல் நிற படங்கள் . நல்ல தெளிவான படம் .
இது பல சிறிய மாபிள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு பார்க்க கண்ணாடி போல பூச்சு மென்மையாக பூசப்படும் . 


வெறுமனே பெரிய படத்தை மாத்திரம் கொண்டு அவை வடிவமைக்கப்படுவதில்லை . அவை ஒலிப்பதையும் சத்தத்தையும் கொண்டும் தீர்மானிக்கப்படுகின்றன . 


சாதாரண  தியேட்டர்களில் இடது பக்கத்தில் தொலைவில் ஒரு ஸ்பீகரும் நடுவில் ஒன்றும் . வலது  பக்கத்தில் தொலைவில் ஒன்றும் இருக்கும் . அவை தான் நாம் உண்மையான சூழலில் இருந்து சத்தத்தை உணருவது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தும் . அதை தான் DTS சவுண்ட் என்கிறோம் .




மூன்றுவகைகளின் அவற்றின் தெறிப்புக்கு ஏற்ப்ப திரைகளை தெரிவு செய்கின்றனர் .


Flat screen - தட்டையான திரை 






இதில் மேலே படத்தில் உள்ளவாறு நடுப்பகுதியை ஒளி விரைவாக வந்தடைந்துவிடும். கரைப்பகுதிகளுக்கிடையான தூரம் கூடவாக இருக்கும் . அதனால் இதில் கரையில் சற்று பெரிதாக உருவங்கள் தோன்றும் . இதனை நிவர்த்தி செய்யவே வளைந்த திரை வந்தது . 


Horizontal-curve screen - வளைந்த நீளமான திரை 




வளைந்த திரை இரு புறமும் வளைந்திருக்கும் . இதனால் இறுதி முனைகள் முன்னோக்கி வந்திருக்கும் . ஆகையால் ஒரே நேரத்தில் ஒளி திரையில் படும் . 


Torex ஸ்க்ரீன் 


இவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் விதமாக உருவாகியதே டோரெக்ஸ் ஸ்க்ரீன் . இது இரு புறமும் மட்டுமல்லாது மேலேயும் கீழேயும் வளைந்திருக்கும் . அதனால் முழு ஒளியும் ஒரே நேரத்தில் திரையில் படும் .


அடுத்த பதிவில் மிகுதியை பார்ப்போம் .
மறக்காம ஓட்டையும் போட்ருங்க . எல்லாரையும் தகவல் சென்றடைய ...

Thursday, July 22, 2010

நாசா கண்டுபிடிப்புகள் - எமது அன்றாட பாவனையில் ......

நீர்  வடிகட்டி
1950 களிலேயே நீரை சுத்திகரிக்கும் உபகரணங்கள் இருந்தது ஆனால் நீரை நீண்ட காலமும் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் சேமித்து வைக்க வேண்டிய தேவை நாசாவுக்கு இருந்தது.


முதன் முதலாக நீர் வடிகட்டி பாவிக்கும் போது கறுப்பு துகள்கள் அவதானித்திருப்பீர்கள் . சில்வர் அயன்களே அவை . அவை பட்டீரியாக்களை கொள்வதற்கு பாவிக்கப்படுபவை .

துளையிடும் இயந்திரம் 

1960 களில் நடுப்பகுதியில் நிலவிற்க்கு செல்ல முயற்ச்சிக்கும் போது நிலவில் இருக்கும் படிமங்கள் பொருட்களை கொண்டு வர வேண்டிய நிலை இருந்தது நாசாவிற்கு. அதற்க்காகவே பாரம் குறைந்த ஆனால் சக்திவாய்ந்த மின்காந்தம்  கொண்ட  ஒரு கருவியை அறிமுகப்படுத்தினர்.


ப்ளாக் & டேக்கர் (Black and deccor ) நிறுவனம் இதை பின்னர் சாதாரண மக்கள் பாவனைக்கு என சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டது .

புகையை அறியும் கருவி 


1970 களில் sky lab செய்துகொண்டிருந்த போது அதில் ஏதாவது நெருப்பு ஏற்ப்பட்டால் அதை எப்படி அறிவது என சிந்தித்த போதே தற்போது சாதாரண பாவனையில் உள்ள புகையை அறியும் கருவி(ionization smoke detector )  அறிமுகப்படுத்தப்பட்டது .  americium-241 என்ற  கதிர்ப்பை ஏற்ப்படுத்தும் மூலக்கூறு பாவிக்கப்பட்டு வருகிறது . ஒட்சிசன் நிற்றிஜென் போன்றன அதனூடு சென்று அதனை அயனாக்கம் செய்து ஒரு இலத்திரனை உருவாகுகின்றன . வேறு வாயு துணிக்கைகள் வரும் போது அவை தடைப்படும் . அப்போது சத்தம் இடும் ..

உடையாத கண்ணாடி


விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பாவிக்கும் தலைக்கவசம் தற்போது பாவனையில் உள்ள உடையாத கண்ணாடி போலவே வடிவமைக்கப்பட்டது . விண் வெளியில் உள்ள தூசு துணிக்கைகளில் இருந்து பாதுகாக்கவே இவை பாவிக்கப்பட்டன . பின்னர் இதுசாதாறன மூக்கு கண்ணாடி பாவனைக்காக வடிவமைக்கப்பட்டது . கீறல் குறைவானதாகவும் வடிவமைக்கப்பட்டது .

பல்கிளிப்


கூடுதலானோர் பல் பிரச்சனைக்கு பாவிக்கும் பல் கிளிப்புகளின் உலோகம்(translucent polycrystalline alumina (TPA).   நாசாவால் வெப்பத்தை தேடும் மிசயிலின் அன்டேனா (Antena ) க்கு பாவிக்கப்பட்டது . அது மிகவும் உறுதியாகவும் இலகுவாகவுமிருந்ததால் தனை unitech நிறுவனம் பல் கிளிப்புகளாக  வடிவமைத்த்தது .

விளையாட்டு பாவனை சப்பாத்துகள் 

உண்மையில் நாசா நிலவுக்கு பயணித்தபோது எதிர் நோக்கிய பிரச்சனைகளுக்கு முடிவு கட்டவே இந்த சப்பாத்து கண்டு பிடிக்கப்பட்டது  . இதில் காற்று நன்றாக உள் சென்று வரக்கூடியவாறும் இலகுவானதாகவும் வடிவமைக்கப்பட்டது .


மறக்காம ஓட்டையும் போட்டிருங்க ... 

ஏன் ?