தொடருபவர்கள் - நன்றிகள்

Saturday, September 25, 2010

குவாண்டம் சூசயிட்

பல்கலைக்கழக ஆய்வாளர் Max Tegmark  என்பவரால் இது 1997 இல் உலகின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது .ஒருவர்  துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்க்கொலை  தயாராக உள்ளார் . 


துப்பாக்கி மணிக்கூட்டு திசைக்கு  எதிராக சுழன்றால் சுடாது , மணிக்கூடு திசையில் சுழன்றால் சுடும் . தற்கொலை செய்பவர் முதல் தரம் சுடுகிறார் துப்பாக்கி இடது பக்கம் சுழல்கிறது சுடவில்லை .இரண்டாவது தடவையும் சுடவில்லை .மூன்றாவது தடவையும் சுடவில்லை . 


மீண்டும் ஆரம்பத்திற்கு சென்றால் , அதாவது தன்னை தானே சுட ஆரம்பிக்கும் முதல் :- 
முதல் தடவை சுடும் போதே இறந்து விடுகிறார் .


பொறுங்கள் .....


முதலில் இறக்கவில்லை , இரண்டாவது சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறார் . அதெப்படி இரண்டும் சாத்தியம் ?




அதாவது ஒவ்வொரு தடவை சுடும் போதும் உலகம் இரண்டாக பிரிகிறது . இது தான் நாம் எடுக்கும் தீர்மானங்களை ஒவ்வொரு நொடியும் நாமே தீர்மானிக்கிறோம் என்பது . ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை . அதாவது ஒருவர் உயிரோயல்லாத போது அவரின் பிரதி  உயிரோடு இருக்கலாம் . இதை பற்றி தான் 12 பி திரைப்படத்துடன் விளக்கி எழுதி இருந்தேன் .



குவாண்டம் துணிக்கைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறிய துணிக்கைகள் . அவை நிலையானவை அல்ல . ஆனால் இவற்றை இன்னும் பரிசோதனை மூலம் அறிய முடியவில்லை .


தகவல் அனைவரையும் சென்றடைய மறக்காம வாக்கை பதிஞ்சிடுங்க ..

Wednesday, September 22, 2010

எந்திரன் - சரியாக போய் சேருமா ?

உயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர்  மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் .

தமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில்  இறந்தகாலமாக திகழும்  என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை "என்  இனிய இயந்திரா" , எந்திரன் திரைப்படமாக  பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு  பட்டி தொட்டி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல்  சார்ந்து  செல்லுமா என்பதே இன்றைய கேள்வி .


அறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில்  முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் ..


சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ,ரவி , ஜீனோ கதாப்பாத்திரங்கள் ஜீவா எனும் நாட்டின் தலைவருக்கு எதிராக , அவரின் கொடுமைகளுக்கு எதிராக செயல்படுவது போல அந்த கதை நகர்கிறது . அந்த விஞ்ஞான புனைகதை 2022 இல் இடம் பெறுவது போல 1986 இல் எழுதியிருந்தார் . இதில் ஜீனோ ஒரு இயந்திர நாய் . முழுவது கணணி எந்திர மயம், இலக்கங்களிலேயே அனித்தும் இருக்கும் என பல விஞ்ஞான விளக்கங்கள் , கருத்துகள் என் இனிய இயந்திராவில் வாசிக்க வசிக்க இனிமையும் வியப்பும் நிறைந்திருக்கும் .

சுஜாதாவின் எழுத்து அறிவியலை அப்படியே பிரதிபலிப்பது மிக கடினம் . அப்படியே பிரதிபலிக்க முனைந்தாலும் தமிழ் திரையுலகம் மசாலா எனும் மந்திரன் கொண்டு அதை அழித்துவிடும்  . அதில் தவறும் இல்லை .தமிழர்களின் இன்றைய தேவை மசாலா தான் .. 7 பாடல்களை(35 நிமிடங்கள் ) திணிக்க வேண்டிய கட்டாயம் வேறு  இதில் .

ஆனால் சுஜாதா கதையும் ,அறிவியலும் திரைப்படத்தில் சிதைந்து போகலாம் . அறிவியல் படத்துக்கு படம் வெளி வர முதலே சிலர் கொடுத்த விமர்சனங்களும் , ஷங்கர்  ,ரஜனி மீதிருக்கும் வெறுப்புமோ இத்திரைப்படத்தை மறைத்தாலும் சுஜாதாவின் நூல்களுக்கு வழிகாட்டி விட்டதால் எந்திரன் தமிழ் அறிவியலில் நுழையும் . சுஜாதாவின் கனதியான எழுத்தை இத்திரைப்படம்  பாதியில் இழந்தது நிவர்த்தி செய்ய முடியாதது .


ஒரு வேளை இந்த திரைப்படம் வெறும் ரஜனி படமாக தமிழர்களை அடையலாம் . அவ்வாறான உத்திகளே படம் வெளிவர முதலே கையாளப்பட்டு வருகின்றன . இதுவரை அறிவியல் தொடர்புடைய எந்த நடவடிக்கையும் , விளம்பரமும்  இடம்பெறவில்லை .வெறும் பிரம்மாண்ட (செலவில் ) இயக்குனர் நாயகன் ஷங்கர் இந்த படத்தில் கூற வரும் செய்தியை சுஜாதா இல்லாமல் சரியாக பிரதிபலிப்பாரா என்பது சிந்திக்க வேண்டியது . சுஜாதாவின் எழுத்து பாமரனையும்  அறிவியல் தன்மையோடு சிந்திக்க வைக்கும் . அனைவரையும் சிந்திக்க வைக்கும் .

சுஜாதா வசன வாசனை  சில பட ற்றேயிலரின் பிரதி பலித்தது " என்ன நக்கலா ? சிட்டி இயந்திரன் "இல்லை நிக்கல் ,போல்ட் நட்டெல்லாம் நிக்கல் பண்ணது " என்று சொல்லும் .

வரவேற்க தக்க அறிவியல் திரைப்படம் , ரஜனியாலேயே இவளவு பிரபலம் , ஆனால் முழு ரஜனி படமாக, மசாலாவாக  மக்களை அடையாமல் விட்டால் நல்லது . ஆனால் இன்னும் இத்திரைப்பட பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாநாயகன் என் இனிய சுஜாதா ..

Monday, September 20, 2010

கடவுளுக்கு விதியை வகுத்தவன் யார் ?

நேற்று நீயா நானாவில் வழமை போல நீண்ட  விவாதம் ஒன்று இடம்பெற்றது . விதி என்று ஒன்று இருக்கிறதா இல்லையா ?  ஆனால் இந்த முறை அதனை நம்பிக்கை சம்மந்தப்பட்ட வெறும் வார்த்தை ஜால விவாதம் போல கொண்டு செல்லாது .. அதனை அறிவியல் கண்ணாடியினூடு சற்றும் சளைக்காமல் தெளிவான விவரம் கொடுத்தவருக்கு பாராட்டுகள் .

கூடுதலாக இறை நம்பிக்கை , விதி நம்பிக்கை இரண்டின் மீதும் எப்போதும் மனித மனங்களுக்கு நம்பிக்கையும் குழப்பமும்  உண்டு .தனது பிழைகளையும் , பிரச்சனைகளையும் ஏற்காத  மனம் இறைவன் ,விதி எனும் இரு பொருள்கள் , முறைகள்  மீது எப்போதும் பழி போடுவதுண்டு . அவற்றின் மீது பழி போட்டால் அவர்களுக்கு மனோதத்துவ ரீதியாக  ஒரு மன நிம்மதி .


மனித மனம் இறைவனை நம்புகிறது அதே நேரம் விதியையும் நம்புகிறது . விதியை நடத்துகிறவன் இறைவன் என்கிறது . விதியால் இறைவன் ஆளப்பட்டான்  என்கிறது புராணங்கள் ,கட்டுக்கதைகள் . அப்போது விதி இறைவனை விட பெரியதா ? அல்லது அதற்கும் மேலே ஒருவர் இருந்து சிறிய கடவுள்களை விதி கொண்டு இயக்குகிறாரா ? அப்படியானால் அவர் தான் கடவுளா ? அப்படியானால் சிறிய கடவுள்களை விதி கொண்டு இயக்கு என அவருக்கு விதியை தீர்மானித்தவர்  யார். இறைவன் விதியை நடத்த வேண்டும் என அவனுக்கு விதி எழுதியவன் யார் ?


இறைவனுக்கு விதி இல்லை தானாகவே செயல்ப்படுகிறான்  என்றால் அதே போலவே மனிதனும் , அவனையும் எவரும் வழிநடத்த தேவையில்லை  ..


ஒவ்வொரு நொடி நிகழ்வுகளும் மனிதனின் ஒவ்வொரு செயல்ப்பாடுகளே தீர்மானிக்கின்றன . ஒவ்வொரு நொடியும் மனிதன் எடுக்கும் தீர்மானங்கள் மனிதனின் வாழ்க்கையை இரு வேறு திசைகளில் கூட மாற்றக்கூடியது . அது தான் அறிவியல் சொல்லும் சமாந்தர உலகம் . உலக உயிரினத்தோற்றத்தில்   இருந்து அனைத்தும்  ஒரு விபத்தில் இருந்து தோன்றியவை . ஒன்றும் இல்லாததில் இருந்து தான் ஒவ்வொன்றும் உருவாகியது , இது அறிவியல்  . இதில் விதி, கடவுள்  எந்த ஒன்றும் இல்லாததில் இருந்து உருவாகியதா ? அல்லது ஒன்றுமே இல்லாத விடயமா ?

விதி ,கடவுள் மனிதனுக்கு சௌகரியம்  தான் .
 சௌகரியம் எல்லாம் உண்மை அல்ல.. 
ஒன்றும் இல்லாததன்மை தான் சௌகரியம் மனித மனங்களுக்கு ...


சௌகரியங்களில் மனித மனம் சோர்ந்து தேங்கி விட மும்முரமாக செயல்ப்படும் நம்பிக்கைகள் இவை . மனித முயற்ச்சியை , திறனை புறம் தள்ளும் ஒரு முட்டுக்கட்டை . மனிதனை ஒரு குறுகிய சிந்தனைக்கும் ஒரு எல்லை கோட்டுக்குள்ளும் நிறுத்தும் முயற்சி .

மனித மனம் சௌகரியம் தேடினால் சௌகரியங்கள் சுகமானவை .. எப்போதுமே சுகமானவை .. விதி , கடவுள் வெறும் சௌகரியம் மட்டுமே ...

Tuesday, September 14, 2010

ஹலோ.... "ஹலோ(Hello)" வரலாறு

எல்லோரின்  தொலைபேசி உரையாடலின் முதல் வார்த்தை ஹலோ மட்டுமே . ஆனால் இந்த சொல் எப்படி வந்தது ? கிரகாம் பெல் தொலைபேசியை உருவாக்கி இருந்தாலும் இந்த சொல்லிற்கு  சொந்தக்காரர் எடிசன் .


 கிரகம் பெல்லின் அல்லது தொலைபேசியில் உரையாடிய முதல் வார்த்தை "Mr. Watson, come here. I want to see you."  வொட்சன் உன்னை பார்க்க வேண்டும் இங்கே வா என்பதே " . ஆனால் 1877 இல் எடிசன் தொலைபேசிகளை வியாபார நோக்காகவே பார்த்தார் . 


அப்போது ஒரு பிரச்சனை தோன்றியது வேலைத்தளங்களில் இருவர் பேச  எண்ணும் போது எப்படி மற்றொருவர் க்கு புரியும்.ஒருவர் அழைப்பை ஏற்ப்படுத்தும் போது  ஒரு (எலார்ம்) மணி போல சத்தமிடும் அமைப்பை திட்டமிட்டிருந்தனர் .

ஆனால் எடிசன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இருந்த நிறுவன அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார் .  Friend David, I don't think we shall need a call bell as Hello! can be heard 10 to 20 feet away. What do you think? அழைப்பு மணி தேவைப்படாது , ஹெலோ  என்ற வார்த்தையை ஏன் பாவிக்க கூடாது அது 10 தொடக்கம் 20 அடிகள் வரை கேட்க்க  கூடியது என கூறியிருந்தார் . 


ஆனால் அகோய் Akoy  என்ற  சொல்லே ஹெலோ வர முதல் பாவனையில் இருந்தது . ஆனால் ஆதி காலங்களில் ஹெலோ  சொல் பலரை சத்தமாக  அழைப்பதற்கு பாவிக்கப்பட்டுள்ளது .

Sunday, September 12, 2010

பேசப்படா பெயர்கள் - 1 - தொழில்நுட்பத்தில் தமிழ்

தமிழை வைத்து அரசியல் நடாத்தும் யுகத்தில் தமிழ் இலக்கியவான்கள் , தமிழ் பண்டிதர்களின் கையில் தமிழ் நெரிபடும் போது , வெறுமனே தமிழின் அழகை பார்த்து தமிழ் இனிமை பார்த்து தமிழ் மீது காதல் கொண்டு தமிழை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க தொடர்ந்து பாடுபடும்  தமிழ் ஆர்வலர்கள் இன்றும் தொடர்கின்றனர் .....

அவர்களில் ஒருவர் தான் "செல்லினம்" எனும் தமிழ் செயலியை அறிமுகப்படுத்தியவரும் தற்ப்போது ஐ போன் 4 இல் தமிழ் மொழியை  உட்புகுத்தியவருமான முத்து நெடுமாறன் எனும் கணிஞர். தொழிநுட்பத்தில் தமிழை புகுத்தி அதை இன்னொரு படி நிலைக்கு உயர எடுத்து செல்ல பாடுபடுபவர் .


தொழிநுட்பத்தில் இனிவரும் புதிய புதிய தொழில்நுட்பங்களில் எப்படி தமிழை புகுத்தலாம் என சிந்தனையில் மட்டுமல்லாது செயலிலும் வடிவம் கொடுத்துள்ளார் . இவரது குறிக்கோள் எதிர்கால மற்றும் நவீன தொழில்நுட்பப முறைகளிலும் நவீன காலத்தில் பாவனைக்கு வரும் வந்துகொண்டிருக்கும் எதிர்காலத்தில் வரும் ஐ போன் ஐ பட் போன்றவற்றில் தமிழை ஏற்றுவது . ஆனால் முயற்ச்சியில் தளரவில்லை   தற்ப்போதைய ஐ போன் 4 வெளியீட்டில் தமிழையும் பாவனைக்கு உட்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளார் .


தொடர்ந்து பல தமிழ் மென்பொருள்களையும் உருவாக்கியவர் உருவாக்கிக்கொண்டு இருப்பவர் .
அவருடைய கருத்து " அடுத்து என்ன தொழில்நுட்பம் வரப்போகிறது அடுத்து வருகிற தொழில்நுட்பப மேம்பாடு எந்தவகையில் ஆட்சி புரியப்போகிறது என்பதை அறிந்து அதை தமிழில் கொண்டு வர வேண்டும் என்பது பற்றியே என்னுடைய எனது குழுவின் எண்ணம் " என தெரிவித்திருந்தார் .

தான் தமிழ் இலக்கியவாதி இல்லாவிட்டாலும் தமிழ் மீது தமிழ் எழுத்தின் மீது தனக்கு நீண்ட கால காதல் இருப்பதாக தெரிவித்தவர்  தமிழ் எழுத்துருக்களை அழகிய வடிவில் தன்னால் கணனியில் ஏற்றமுடியும் என்றும் நம்பிக்கை கொண்டு அதனை செயல்ப்படுத்தியும்  உள்ளார் .

ஆனாலும் இதன் பாவனையை தமிழர்களிடையே அறிமுகப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் சில காலங்களில் இது முழு பயன்பாட்டையும் பெறும் என்பதில ஐயமில்லை . தமிழின் வளர்ச்சிக்கு தமிழை தொழில்நுட்பத்தில் புகுத்தும் திட்டம் நிச்சயம் கைகொடுக்கும் .

தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரின் சீர்குலைக்கும் நபர்களிடையே முத்து போன்ற முத்துகள் மிகவும் அரிது .அவற்றை நாமே இனம் காண வேண்டும் . தமிழ் மொழி மாநாட்டில் இதற்க்கு ஒரு மூளை ஒதுக்கி இருந்தாலும் காலத்தின் தேவை இதுவேயாகும் .
தொழில்நுட்பத்தில்  தமிழன் தமிழனாகவே வளர்வது பெருமை . அப்படி வளர்க்க அயராது பணிபுரியும் தமிழனை இனம்கண்டு வளர்த்து விடுவது நம் கடமை . முத்து நெடுமாறன் மற்றும் பலர் முயற்ச்சிகளுக்கு  வாழ்த்துக்கள்   .

Sunday, September 5, 2010

மரியாதைக்குரிய வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் அவசர எச்சரிக்கை ..!!!

தற்ப்போதைய வேளையில் தமிழ் ஊடகங்களே சிந்தனையில் வற்றி பதிவுலக பக்கம் தமது பார்வையை திருப்பியுள்ள வேளையில் பதிவுலகிலும் இணைய உலகிலும் நாகரிகமற்ற வேலைகள் இடம் பெறுவது தொடர்கிறது . எவ்வளவு எச்சரித்தாலும் சிலர் கேட்பதாக தெரியவில்லை .. என்னை பொறுத்த மிகவும் பாவத்திற்கு உரிய செயல் இன்னொருவன் சிந்தனையை எண்ணங்களை எழுத்துக்களை திருடுவது .


அறிவியல்  பதிவு திருட்டு எனும் போது அது பெரும்பாலும் செய்தி ஊடகங்களில் இருந்து திருடுகின்றனர் . இன்னொருவன் எழுத்தை எப்படி திருட முடிகிறதோ தெரியவில்லை ..இப்படி பேசிக்கொண்டிருப்பதை விட இதற்க்கு ஏதாவது செயலில் செய்ய வேண்டும் . இதை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் .. 

சாதாரணமாக சில அறிவியல் பதிவுகள் எழுதும் போது எடுக்கும் காலம் கூடியது ஒரு நாள் , குறைந்தது 6 மணித்தியாலங்களாவது  எடுக்கும் . காரணம் அதற்குரிய தகவல்கள் திரட்டி(புத்தகங்கள் ,இணையம்,நபர்கள்  ) , நாம் கற்றவற்றை சிந்தித்து சாதாராண வாசகர்களுக்கும் விளங்கும் வகையிலேயே எழுதுகின்றோம் . காரணம் அறிவியலில் இன்னொருவன் சிந்தனையை அப்படியே எழுத முடியாது .எழுதினால் அது உண்மையாக சுய சிந்தனை அறிவியல் ஆற்றல் உடையவன் அல்ல ..

ஆனால் சிலர் (இங்கு நேரே இணைய முகவரி அனைத்துடனும் வெளியிடுகிறேன் .) இதில் நாகரிகம் பார்க்க முடியாது(நாகரிகம் அற்றவர்களிடம் ) ..

இதனை தகவல் உலகம் என்ற பெயரில் அப்படியே காப்பி அடித்து வெளியிடுகின்றனர் .இதில் மேலும் பல பதிவாளர்கள் வேறு வேறு ப்ளொக்குகளில்  செயல்ப்படுகின்றன .நான் நேரேயே அறிந்த ஒன்றை வெளிப்படுத்துகிறேன் .


பல இருக்கிறது சிலதை தருகிறேன் ...உதாரணத்திற்கு
original 1

இது அவருடைய பதிவு
original/copy

பெர்முடா முக்கோணம் பற்றியது .
ஒரிஜினல்
காப்பி பேஸ்ட் பண்ணி போட்டது ..
Copy-paste


Original/copy press this  link ...
அவர் செய்த வேலையை அவருக்கே இன்னொருவன் செய்து விட்டார் என்பதே கவலை .ஆனால் இதில் எது ஒரிஜினல் என்று தெரியவில்லை ..


மேலே உள்ள அதே பதிவு இரண்டாக பிரித்து கீழே காப்பி ..
பதிவுலகில் இருந்து பதிவுலக காப்பி ..
copy 1
copy 2

ஒரு சில உதாரணங்களே நான் காட்டி உள்ளேன் . நீங்களும் மிகுதியை  அறிந்து கொள்ளலாம்.. ஏதாவது சில வசனங்களை   காப்பி செய்து ,அதை அப்படியே இணையத்தில் தேடினால் பிடிக்கலாம் .. அது வேறு எங்கே உள்ளது என்று ..

அனைத்தும் பழைய பதிவுகள் ..போன வருட பதிவுகள் கூட இந்த வருடம் தான் இவர் காப்பி பேஸ்ட் செய்துள்ளார் .....

நீங்கள் காணும் இணையங்கள் சந்தேகத்துக்கு இடமாக இருந்தால் ... கற்ப்பனை திருட்டாக இருந்தால் அதனை பேஸ்ட் செய்து கூகிள் இல் தேடி பார்க்கவும் .. இதற்க்கு வாசகர்களும் பதிவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் .. இவற்றை இதே போல வெளியில் கொண்டுவர வேண்டும் .. இது ஒன்றே வழி ..... இதனை நான் செய்தது தவறு என்றால் சுட்டிக்காட்டவும் ...
இந்த நபர் முகப்புத்தாக நண்பர்  ..

ஏற்க்கனவே பல தடவைகள் எச்சரித்துள்ளேன் .. இது போன முறை எச்சரித்தது ...
இருந்தும் தொடர்ந்து செய்தார் ...


இதே போல தான் பதிவர் லோஷன் அண்ணாவின் கிரிக்கெட் பதிவு அப்படியே காப்பி அடித்து  முகப்புத்தகத்தில் வேறு ஒருவரால் போடப்பட்டது . லிங்க் கொடுத்து இருந்தால்  சரி ...ஆனால் பிடிபடாமல் மாற்றி எழுதியிருந்தார் .

தனிப்பட்ட ரீதியில் எச்சரிந்திருந்தேன் ..ஆனால் தொடர்ந்து செகின்றனர் . இதை பதிவர்கள் , வாசகர்கள் உங்கள் உதவியுடனேயே வெளியில் கொண்டு வர முடியும் ..இவற்றை நீங்களும் சுட்டிக்காட்டலாம் ...

Friday, September 3, 2010

தூக்கமும் பிள்ளையார் தலையும்- விஞ்ஞான காரணம்

சக்தியா சிவமா என்ற பிரச்சனையில் சக்தி விநாயகரை உருவாக்கி பாதுகாப்பிற்க்காக விட்டிருக்க அங்கு வந்த சிவன் தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்த விநாயகரின் தலையை துண்டித்தார் என்கிறது ஒரு புராதன கதை. இது எல்லோரும் அறிந்த  கதை . அதன் பின்னர் வடக்கே தலை வைத்து படுத்திருந்த யானை ஐராவத தலையை துண்டித்து வந்து  விநாயகருடன்(உடலோடு ) இணைத்தது நந்தி .



நாசாவினால் 3 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட புவியை சுற்றிய காந்தப்புல  படம் .

சம்மந்தமே இல்லாத படம் என்று பார்க்க வேண்டாம் ..சம்பந்தம் இருக்கிறது .
அது ஒரு பக்கம் இருக்க  ஒவ்வொரு தடவையும் பாயை விரிக்கும் போது சின்ன வயதில் நான் கேட்ட சொற்கள் வடக்கை தலை வைத்து உறங்காதே என்பது தான் .எல்லோர் வீட்டிலும் கூறும் செய்தி .ஆனால் நம் முன்னோர்களுக்கு அடிப்படை அறிவு இருந்திருக்கவில்லை .. வாய் வழியாக கேள்விப்பட்டதே . காரணமும் தெரியாது .

விஞ்ஞானம்  தொடர்கிறது .......

இன்சோம்னியா( Insomnia ) என்பது ஒரு நோய் . உறங்குவதில் உள்ள பிரச்சனை .ஒழுங்கான தூக்கமின்மை ,மன அழுத்தம் ,சோம்பல் போன்ற பல அறிகுறிகளை காட்டும் .பெரும்பாலானோருக்கு இருக்கலாம் . அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 64 மில்லியன் பேர் ஒரு வருடத்துக்கு பாதிக்கப்படுகின்றனர் . 


American Navajo இந்தியன்ஸ் எனும் இனமும்  வடக்கே தலை வைத்து படுப்பதை அறவே ஒதுக்கினர் .அவர்களுடைய சுவடுகளில் குறிக்கப்பட்டுள்ளவை..இந்த சுட்டியை அழுத்தி பார்க்கலாம் ..

காரணம் வடக்கே தலை வைத்து உறங்கும் போது காந்தப்புலத்துக்கு  எதிரே நமது செயல்ப்பாடு இருப்பதே .இதன் போதே ஒழுங்கான உறக்கமின்மை , கூடாத கனவுகள் ,காலையில் எழும் போது ஒரு வித மன அழுத்தம் போன்றன தோன்றுகின்றன . தெற்க்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டி உறங்கும் போது உலகின் காந்தப்புல திசையுடன் ஒத்திசைவது சுறுசுறுப்புடன் எமது உடலுக்கும் மனதிற்கும்  நல்லது .


கிழக்கே தலை வைத்து உறங்குவது காந்த புலன்களை குருக்கறுப்பதுடன்  சூரிய சக்தியுடன் ஒத்திசையும் .இதுவும் உடலுக்கு நல்லது என்பது தற்ப்போது உளவியலாளர்கள் , விஞ்ஞானிகள் கருத்து . 


முக்கியமாக இறந்தவர்கள் தலையை வடக்கே நோக்கி  வைப்பார்கள் இந்துக்கள் . ஒவ்வொன்றும் திரிபடைந்து ஒவ்வொரு திசையில் என்பது தான் கவலை . ஒரு முன்னோர் விஞ்ஞானம் பார்ப்பனர்களாலும், குருக்களாலும்  பின் தங்கிய மனோநிலை மத வெறியர்களாலும் வெறுமனே பூஜை கோவிலுக்குள் சிதைக்கப்பட்டு விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை .


நன்றி .தகவல்கள் சென்றடைய  மறக்காமல் வாக்கை இன்ட்லியில் பதியுங்கள் .

Thursday, September 2, 2010

மட்டம்தட்டுதல் - கொலம்பஸ் கனவும் முட்டையும் ..

விமர்சனம் , சுதந்திரமான  கருத்து,மாற்றுக்கருத்து  என்ற போர்வையில் இந்த மட்டம் தட்டுதல் எனும் விடயம் முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள சில மனிதர்களின்  உண்மை முகங்களுள் ஒன்று . நவீன முறைகளையோ அல்லது அறிவியல் முறைகளையோ  புகுத்த நினைக்கும் போது பழமை வாதிகளால் அல்லது மேலோட்ட சிந்தனைகளால் , பொறாமை , இயலாமை போன்ற குணங்கள் அடுத்தவற்றையோ,தனிமனித சிந்தனைகளையோ  அல்லது படைப்புகளையோ மட்டம் தட்ட நினைப்பது யதார்த்தம் .

அனைவரும் மனிதர்களே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை . மனிதனை மனித சிந்தனைகள் உயர்த்தும் என்ற எண்ணக்கரு ஒவ்வொரு  மனிதனின் ஆள் மனதிலும் விதைக்கப்படவேண்டும் . இது இப்போது நிகழ்வது மட்டுமல்ல ..இது வரலாறு ரீதியாக பல இடங்களில் பதியப்பட்ட ஒன்று . ஒரு சிறு கதை விளக்கும் என்று எண்ணுகிறேன் .


கொலம்பஸ் தான் கடல் வழிப்பயணம் மேற்க்கொண்டு அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்றவுடன் எம் மனதில் அடிப்படையில்  தோன்றும் ஒரே எண்ணம் இது அனைவராலுமே முடியுமே .ஏன் ஒரு மீனவனாலும் முடியுமே ? இதில் என்ன சிறப்பு இருக்க போகிறது என்பதே ..

ஆனால் இதற்க்கு அவர் 18 வருடங்கள் திட்டமிட்டு கடினமாக உழைத்தார் . படகு ஓட்டிகளிடமும் ராணியிடமும் நீண்ட வாதம் புரிந்தே அவர் இறுதியில் செல்வதற்கு படகும் பெற்றார் . எப்படியும் கடல் வழியாக செல்லும் போது நான் தரையை அடைவேன் , நிச்சயம் தரை இருக்கும் என நம்பினார் . அனைவரும் நகைத்தனர் . முட்டாள் கனவு என திட்டினர் ,முடியாத காரியம் என  மட்டம் தட்டினர் . அனைத்திற்கும் தளராமல் தொடர்ந்தார் .

இறுதியில் அமெரிக்க தரையை அடைந்ததும் இதுவரை ஐரோப்பியர் எவரும் இதனை அடையவில்லை என்பதை உணர்ந்து ஆனந்தப்பட்டார் . அது அவர் முகத்தில் ஒரு பைத்தியக்காரன்  சிரிப்பு போல . காரணம் ஒருவர் கூட அதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை .

அவர் இந்த செய்தியுடன் மீண்டும் ஐரோப்பா வந்தவுடன் ராணி , ராஜாவிடம் இருந்து வாழ்த்தும் வரவேற்ப்பும் கிடைத்தது . ஆனால் சிலருக்கு இதை பொறுக்க முடியவில்லை .இதில் என்ன இருக்கிறது இது ஒரு சாதாரண மீனவனாலும் முடியும் என்று ஏளனமாக நகைத்தனர் .

பொறுத்துக்கொண்டார்  கொலம்பஸ்... அன்றிரவு ஸ்பானிஷ் ஒருவர் கொலம்பஸை கௌரவிக்க  இரவு விருந்து கொடுத்தார் . அங்கு வந்திருந்த சிலர் கொலம்பஸை மட்டம் தட்ட நினைத்தனர் .. யாராலும் இது முடியும் , ஒரு படகு எடுத்து  எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றனர் . பதில் அளிக்காத கொலம்பஸ் சிறிது நேர மௌனத்தின் பின் ....

சட்டியில் இருந்த முட்டையை எடுத்து அனைவரிடமும் " ஜென்டில்மேன் யாரால் இதை முனைப்பக்கதில் நிலைக்குத்தாக நிறுத்த முடியும் "என்றாராம். அனைவரும் முயற்சி செய்தும் முடியவில்லை , முட்டை சரிந்து உருண்டது . பின்னர் அவர்களே இது எப்படி முடியும் என்றனர் .

முட்டையை எடுத்து அதன் கூர் முனையை சிறிதாக உராய்த்து  உடைத்து  நிறுத்திக்காட்டினார் .

"ஜென்டில்மன் இது உலகில் மிகவும் இலகுவான செயன் முறை இது  . எதை நீங்கள் முடியாது என்று கூறினீர்களோ அதே விடயம் " அனைவராலும் செய்யமுடியும் ..அது எப்படி செய்வது என்று காட்டிய பின்பு ..

முக்கியகுறிப்பு :- கொலம்பஸ் கடல் பயணம் செல்லும் போது உலகம் உருண்டை என அறிந்திருக்கவில்லை . தட்டை என்றே நினைத்திருந்தனர் . ஆனால் அவர் அதை பற்றி அதன் முடிவை பற்றி  கவலைப்படவே இல்லை ..

பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லியில்  வாக்கை பதியுங்கள்  .

Wednesday, September 1, 2010

இந்துக்களும் பிரபஞ்ச கொள்கையும் - முடிவிலிப்பக்கங்கள்

மதம் என்ற பெயரில் பதிவு எழுத ஆரம்பிக்கிறேன் என்றவுடன் எனது எண்ணங்கள் மதங்களை திருபுபடுத்திய/திருபுபடித்திக்கொண்டிருக்கும் , தவறான எண்ணக்கருவில் உள்ளவர்களை , இழிவானவர்களை நினைவு படுத்துவதால் பிரபஞ்ச கோட்பாடு அடிப்படையில் எழுத்துகளை பதிகிறேன் .

மதங்களை உருவாக்கிய மனிதன் அதற்க்கு பெயரும் வைத்தான் என்று சொல்வதில் சந்தேகம் இல்லை . இந்து என்ற பெயரும் இதற்க்கு விதிவிலக்கல்ல ஆனால்  இந்து மதத்தின் உருவாக்கத்திற்கு எந்தவித கதைகளுமோ இல்லை .உரிமையாளரும் இல்லை . அது ஒரு விஞ்ஞான ரீதியாக முதலே விருத்தியடைந்த மனித இனம் .அதன் அடையாளம் .


உதாரணத்திற்கு இந்தியா ஆரியபட்டாவின் (பூச்சியத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்  ) காலத்தில் உலக நாடுகளை விடவும் மிகச்சிறந்த அபிவிருத்தி அடைந்த  நாடாக இருந்ததாக உலக வரலாறுகள் கூறுகின்றன . இதன் வீழ்ச்சிக்கு காரணம் புரோகித சூழ்ச்சிகளும் , சில சமூகத்தவரின் தன்னலம் கருதிய நடவடிக்கைகளும் சமயத்தின் போக்கையே  மாற்றிவிட்டது .  வெறுமனே பணமும் ,காவடிகளும் ,திருவிழாக்களும் , பரிகாரமும் பூஜைகளுக்குளும் அடங்கி விட்டது .

அதிகூடிய இலக்க பெறுமதிகளை பாவித்த எமது முன்னோர்களின் சரியான விஞ்ஞான பார்வை மேலைத்தேய அறிஞர்களாலேயே தற்ப்போது வெளியில் கொண்டுவரப்படுகிறது . முக்கியமாக பிரபஞ்ச கோட்பாடு எப்போதோ முன் வைக்கப்பட்டு விட்டது . கிறிஸ்துவுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட இந்த கோட்பாடு ரிக் வேதாவில் (Rig Veda 10:129 )மிகவும் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது . 


யாருக்கு தெரியும் ? யாரால் உறுதியாக கூற முடியும் ?
எப்படி தோற்றம் பெற்றது ? எங்கே? எப்போது ?
இறைவன் உருவாக்கத்தின் பின்னரான நாளில் தோன்றினாரா ?
யாருக்கு தெரியும் ? யாருக்கு உண்மை தெரியும் ?
எப்போது? எங்கே ? உருவாக்கம் நிகழ்ந்தது ?
இறைவனே செய்தானா ? இல்லை  செய்யவில்லையா ? 
அவர் மட்டும் , அங்கே , தெரியும் ,தெரிந்திருக்கலாம்
ஒரு வேளை அவனுக்கே  தெரியாமலே இருக்கலாம்  ..


இதில் விடைகளை விட கேள்விகளே அதிகம் ...... 
அயிங்ஸ்டேயினின் பிரபஞ்ச கோட்பாடு (Big Bang ) இதை உறுதிப்படுத்திகிறது . பிரபஞ்சத்தில் பாரிய வெடிப்பே அனைத்தின்  தோற்றத்துக்கும் அடிப்படை .


இவை அனைத்திற்கும், இந்த சிந்தனைக்கு  முக்கிய காரணம் இந்து சமயம் இனத்தவர்கள் மாத்திரமே உலகம் தோன்றி பல பில்லியன் வருடங்கள் என சுவடுகளில்  குறிப்பிட்டு உள்ளனர் . வேறு எவரும் எந்த மதமும் விஞ்ஞானத்துடன் ஒத்துப்போவதில்லை . இந்து சமயத்தில்  19 பிலியன்கள் முன்பே உலகம் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது . இது கிட்டத்தட்ட பிக் பாங் இடம்பெற்ற ஆண்டுடன்(12 தொடக்கம் , 19 பிலியன் ) நெருக்கமானது .


பில்லியன் எனும் பாரிய பெறுமதியை இந்துக்கள் பயன்படுத்தியமை வானவியலாலர்களை ஆச்சரிய படுத்தி உள்ளது . அப்போதே பல பில்லியன் களுள் நமது பூமியும் ஒன்று என்ற கோட்பாடு நிறுவப்பட்டதும்  அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் .

எமது முன்னோர்கள் சிந்தனைகள் இவ்வாறு திரிபடைந்து மதம் எனும் சாயல்கள் பூசி மதம் பிடித்து  நிற்க்கிறது மனித இனம் . அது வெறுமனே அறிவற்ற முட்டாள்த்தனத்தை தொடர்ந்து பின் பற்றுகிறது . சமயம் மதம் என்பதம் கோணம் முற்றிலும் வேறானது .  தொடரும் ......

தகவல்கள் அனைவரையும் சென்றடைய இன்ட்லியில் வாக்கை பதியுங்கள் .. நன்றி 

ஏன் ?