Tuesday, December 28, 2010

ஆத்திகன், நாத்திகன்(பகுத்தறிவு ) இடையே உரையாடல் -அறிவியல் ? கடவுள்?


பாரபட்ச்ச்சமின்றி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் டாக்டர் பால் டேவிஸ் என்பவரால் "The mind of the god " என்ற புத்தகத்தில் எழுதப்பட்டதை சுஜாதா அவர்கள் பகிர்ந்திருந்தார் ..... நான் உங்களோடு பகிர்கிறேன் ....


நாத்திகன் :- ஒரு காலத்தில் உலகத்தில் நடக்கும் அத்தனை காரியங்களுக்கும் கடவுள் தான் காரணம் .கல்லுக்குள் தேரை ,கருப்பை உயிருக்கு எல்லாம் கடவுள் தான் ஏற்ப்பாடு செய்கிறார் .அடுத்த பஸ் வருவது ,சிப்மண்டு பணம் திரும்பி வருவது கூட கடவுள் செயல் என்கிற விளக்கம் தேவைப்பட்டது .அது அறியாமையினால் வந்தது .மெல்ல மெல்ல அறிவியல் எல்லாவற்றின் இயற்கையையும் விளக்க கடவுளின் பொறுப்புக்கள்  படிப்படியாக குறைந்து வருகிறது . அந்த முதல் வெடிவரை( பிக் பாங் ) கடவுளே இல்லாமல் போய்விட்டார்கள் . அதற்க்கு மட்டும் எதற்கு ஒரு கடவுள் தேவைப்படும் என்கிறாய் .

ஆத்தீகன் :- உங்கள் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது . உலகில் பல விந்தைகள் உள்ளன. உதாரணமாக ,பெரிய வியப்பு உலகில் - முதல் உயிர் எப்படி உருவானது என்பதே சரியாக விளக்கப்படவில்லை .உங்கள் அறிவியலாளர்கள் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .

நாத்திகன் :- உண்மை தான் அறிவியல் எல்லாவற்றையும் இன்னும் விளக்கவில்லை . இதில் இன்னும் என்பது முக்கிய சொல் .விளக்க முடியாது என்றில்லை . கொஞ்ச நாள் ஆராச்சியில் அதன் அறிவு விஸ்தாரமாக ,மெல்ல மெல்ல விளக்கம் கிடைக்கும். ஆத்திகர்களான எல்லோரும் எப்போதும் இதை தான் சொல்கிறீர்கள் .உங்கள் அறிவியலால் இதை விளக்க முடியவில்லை என்பீர்கள் . விளக்கி விட்டால் இது எப்படி ? இது எப்படி ?இதை விளக்க முடியுமா ? என்று அந்த நிமிடத்தில் இன்னமும் விளக்கம் காணாத ஒரு பகுதியை எடுத்துக்காட்டாக சொல்கிறீர்கள் .

இப்படி இந்த விளக்கப்படாத ஓட்டைகள் இடம் மாறிக்கொண்டே போகின்றன .மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகின்றன .என்னை பொறுத்த வரை இவை அனைத்தும் அறிவியலால் விளக்கப்பட்டு விடும் .அவகாசமும் ஆராய்ச்சி வசதிகளும் கிடைத்தால் அத்தனை பள்ளங்களுள் குழிகளும் நிரப்பப்படும் .கடவுள் என்கிற தத்துவத்திற்கு தேவை இல்லாமல் ;அதாவது உங்கள் கடவுளுக்கு மெல்ல மெல்ல பவர் குறைந்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஏற்ப்பட்ட மகா வெடிக்கு (பிக் பாங் ) மட்டும் உண்டானவர் என்று முடியும் இன்று .

ஆத்திகன் :- உங்கள் அறிவியல் பிரபஞ்சம் இயங்க கடவுள் தேவையில்லை என்று நிரூபித்தாலும் ,அதனை ஆரம்பிக்க ஒரு கடவுள் தேவைப்பட்டே தீருகிறார் .

நாத்திகன் :- சரி.............. வேறு காரணம் எதுவும் இல்லாமல் கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்ற கூற்றுக்கு மட்டும் தேவைப்படுகிறார் என்றாள் ,நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டீர்களா ?

ஆத்திகன் :- பின் ?

நாத்திகன் :- இது தீர்வு அல்ல .பிரச்னையை வேறு தடத்துக்கு திசை திருப்புவது அவ்வளவு தான்  ."கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் " -இதற்க்கு என்ன அர்த்தம் ? இது எனக்கு எந்த செய்தியையும் தருவதில்லை .அந்த படைப்பு கணத்தின் போது யாரும் இல்லை . அதை சோதித்து பார்க்க முடியாது . ஒரு மர்மத்தை (பிரபஞ்சத்தின் ஆரம்பம் ) விளக்க மற்றொரு மர்மத்தை (கடவுள்) பயன்படுத்துகிறீர்கள் .அவ்வளவே ...நான் உங்களை உடனே கேட்கலாம் கடவுளை படைத்தது யார் ?

ஆத்திகன் :- கடவுளை யாரும் படைக்க தேவையில்லை .அவர் சுயம்பு .அவர் ஒரு தேவை .அவர் இருந்தே ஆக வேண்டும் .அதில் ஏதும் நமக்கு தேர்வு இல்லை .

நாத்திகன் :- அதே போல நம் பிரபஞ்சத்தையும் யாரும் படைக்கத்தேவையில்லை .அது சுயம்பு .அது தேவை .அதில் தேர்வு ஏதும் இல்லை என்று சொல்லலாமல்லவா ?

ஆத்திகன் :- விஞ்ஞானிகள் தர்க்கச்சங்கிலியை கவனிக்கலாம் .ஏன் மரத்தில் இருந்து பழம் விழுகிறது ? புவியீர்ப்பு விசையால் ..,ஈர்ப்பு விசை எப்படி வந்தது ?- அது ஒரு புலம் போல பரவியிருப்பதால் என்கிறீர்கள் .அது விண்வெளியின் வளைவு என்கிறீர்கள் .இவ்வாறு ஒரு விளக்கத்தை மற்றொரு விளக்கத்தால் இடம் பெயர்த்துக்கொண்டே போகிறீர்கள் .நாங்கள் கூறும் கடைசி கடவுளை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் ?]

நாத்திகன் :- அப்படியில்லை .எங்கள் விளக்கங்கள் அனைத்தும் பரிசோதித்து பார்க்க கூடியவை  .விண்வெளி வளைந்திருப்பதை கருவிகளையும் விசைகளையும் வைத்து அளந்து பார்க்க முடியும் .இல்லையெனில் அந்த விளக்கம் நிராகரிக்கப்படும் . விளக்கங்கள் எப்போதும் திருத்தத்துக்கு தயாராக இருப்பவை அவை வெறும் பேப்பர் முயற்ச்சிகள் அல்ல .

பிரபஞ்ச அறிவை விஸ்தரிக்கின்றன .அவைகளில் இருந்து நமக்கு பயனுள்ள நூற்றுக்கணக்கான டேக்நோலோஜிகளும் வின்வேளிப்பயனங்களும் அன்றாட விடயங்களும் நடக்கின்றன .ஆனால் இந்த கடவுள் என்கிற தத்துவத்தை வைத்துக்கொண்டு ஒரு பயனும் இல்லை .அது இன்னொரு சிக்கலான அம்சத்தை தோற்றுவிக்கிறது .மேலும் கடவுள் பிரபஞ்சத்தை படைத்தாரா என்பதை நம்மால் சரி பார்க்கவே முடியாது .பரிசோதனைக்கு உட்படுத்தவோ நிரூபிக்கவோ முடியாது ." கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார்" என்பது வெற்று வாக்கியம்,அவ்வளவு தான் .அவருடைய குணங்கள் என்ன ?பொறுப்புக்கள் என்ன ? என்ன கருவிகளை பயன்படுத்தினார் ? ஏன் இப்படி படைத்தார் ? இந்த விபரங்கள் இல்லாமல் "கடவுள் இருக்கிறார் என்பதற்கு நீங்கள் வேறு விதமான நிரூபணம் தராத பட்ச்சத்தில் அந்த கடவுளை என் போன்றவர்கள் நம்பத்தேவையில்லை .

ஆத்திகன்  :- பிரபஞ்சத்தின் ஆரம்பக்கணம் வரை உங்களிடம் விளக்கம் இருக்கலாம் .ஆனால் அந்த ஆரம்பக்கணத்தை ஒரு நிகழ்வாகவே முரட்டு உண்மையாகவே அறிய விரும்புகிறீர்கள் .அதற்க்கு ஓர் ஆழமான விளக்கத்தை தேட மறுக்கிறீர்கள் .

நாத்திகன் :- நீங்களும் கடவுளை ஒரு முரட்டு உண்மையாகவே ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்கள் .நாங்கள் பிரபஞ்சத்தை .அவ்வளவு தான் வித்தியாசம் .வாருங்கள் காப்பி சாப்பிடலாம் ...


Saturday, December 25, 2010

கிறிஸ்மஸ் ஏன் டிசெம்பர் 25 ?

ஏன் எதற்கு என்ற கேள்வி சாதாரண விடயங்களிலேயே கேட்க்கப்பாதவிடத்து மத விடயங்களில் மட்டும் கேட்கப்பட்டு விடுமா என்ன ?

இந்த ஆக்கம் யார் மனதையும் புண் படுத்த அல்ல . திரிபுகள்   உணரப்பட வேண்டும் என்பதற்க்காகவே .மதம் என்ற பெயரால் அந்த கால  அரசியல் வாதிகள் கொடிய அடக்குமுறைக்கு செய்த திரிபுகள் . வாசிக்க விருப்பமற்றவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம் .

சூரியன வழிபாடு தான் எகிப்திய காலத்தில் இருந்தும் புராதன காலத்தில் இருந்தும் தொடருகிறது. 3000 வருடங்களுக்கு முன் ஹோரஸ்  எனும் சூரிய கடவுளை எகிப்தியர்கள் வழிபட்டனர் . காரணம் எளிது . சூரியன் தான் அனைத்தையும் தருகிறது . கண்ணாலும் காண முடிகிறது .

மனிதனின் கவனத்தை ஈர்த்த இன்னொன்று நட்சத்திரங்கள் . மனித வரலாற்றில் 12 இராசிகளுக்கும் உருவமும் கொடுத்திருந்தான் . அது பன்னிரண்டு மாதங்களையும் , நான்கு காலங்களையும் குறித்தது .

12 ராசிகளும் சூரியன் பிரயாணிக்கும். 3000 வருடங்களுக்கு முற்பட்ட எகிப்திய சூரிய கடவுள் ஹோரஸ் க்கு எதிரான கடவுள் செட் அதாவது இரவு  .

காலையில்  ஹோரஸ்  (சூரிய கடவுள் ) செட் ஐ கொல்வார். மாலையில் செட் ஹோரஸ்  ஐ கொள்வார் .இது புராதன ஐதீகம் . ஆனால் இருள் ,வெளிச்சம் விளையாட்டு ,கட்டுக்கதை தற்போது பரிணாமம் அடைந்து சாத்தான் என்றெல்லாம் மாறி விட்டது .

இனி விடையத்திற்கு வருகிறேன் .


ஹோரஸ்    :- பிறந்தது டிசெம்பர் 25 
                       கன்னி பெண்ணுக்கு  பிறந்தார்
                        12 பேருடன் பயணித்தார் 
                        கிழக்கில் நட்சத்திரம் 
                        3 ராஜாக்கள் பார்த்தார்கள்  
                         பல சாகசங்கள் செய்தார் 
                                                                              வெளிச்சத்தின் கடவுள் 
                                                                             3 நாட்கள் இறந்திருந்தார் 
                                                                                 உயிர்த்தெழுந்தார் 

ஆனால் இது அப்படியே தொடர்கிறது .......


 அட்டிஸ்(கிரேக்கம் ) (கி .மு 1200 ) டயநோசிஸ் (கிரேக்கம் 500 கி மு) ,மித்ரா பெர்சிய (கி .மு 1200 ) முக்கியமாக ஞாயிற்று கிழமை வழிபாட்டின் ஆரம்பம் . இந்த வரிசை மிக நீளமானது .


இயேசு கிறிஸ்து : -                               பிறந்தது டிசெம்பர் 25 
                                                                கன்னி பெண்ணுக்கு  பிறந்தார்
                                                                   12 பேருடன் பயணித்தார் 
                                                                 கிழக்கில் நட்சத்திரம் 
                                                                 3 ராஜாக்கள் பார்த்தார்கள்  
                                                                  பல சாகசங்கள் செய்தார் 
                                                                   வெளிச்சத்தின் கடவுள் 
                                                                   3 நாட்கள் இறந்திருந்தார் 
                                                                  உயிர்த்தெழுந்தார் 

டிசெம்பர் 25 ? கிழக்கில் நட்ச்சத்திரம் ? 3 ராஜாக்கள் ?

கிழக்கில் இருக்கும் நட்சத்திரம் சிரியஸ் . பிரகாசமான நட்சத்திரம் . டிசெம்பர் 24 ஆம் திகதி சிரியஸ் நட்சத்திரத்துடன் வரிசையாக மூன்று நட்சத்திரங்கள் இருக்கும் . அது தான் இப்போது அழைக்கப்படும் அந்த மூன்று ராஜாக்கள் .


சிரியஸ் ,அந்த மூன்று நட்சத்திரங்களும் டிசெம்பர் 25 ஆம் திகதி சூரியனை நோக்கி வரிசையாக  இருக்கும் .

இது தான் கிழக்கிலிருந்த நட்சத்திரத்தை மூன்று ராஜாக்கள் தொடர்ந்தார்கள் என்று வாசித்திருக்கிறோம் .அது வழி காட்டும் என்றும் கூட ..

சூரிய உதயம் ,சூரியனின் பிறப்பு .

கன்னி கழியாத பெண் 

மேரி என்பது  வெர்கோ எனும் உடுமண்டலத்தொகுதி . வேர்கோவின் லத்தீன் பெயர் வெர்ஜின் . வெர்ஜின் என்பது கன்னி கழியாத பெண் . M எனவும் எகிப்தில் அழைக்கப்பட்டது .



அது தான் புத்தாவின் தாய் மாயா(MAYA ) ,மைரா(MYRA ) போன்றோரின்  பெயர்கள் M இல் ஆரம்பிக்கிறது .

வெர்கோ =HOUSE OF BREAD  எனவும் அழைக்கப்பட்டது . பெத்லஹெம் இன் இன்னொரு பெயர் தான் HOUSE OF BREAD . 

பெத்லஹெம் என்று ஒரு இடம் உலகில் இருந்திருக்கவில்லை .வானத்தில் தான் உண்டு .

 இலையுதிர் காலம்,குளிர் காலம் என காலங்கள் மாறும் போது சூரியன் வடக்கிலிருந்து தெற்க்கே வீழ்வது போல தோன்றும் . அதுவும் டிசெம்பர் மாதம் முதல் சூரியன் தெற்க்கே கீழே நகரும் .

டிசெம்பர்  22 ஆம் திகதி போல சூரியன் மிகவும் கீழ் நிலையில் இருக்கும் .அதாவது சூரியனின் இறப்பு .அதாவது தெற்கு நோக்கி சூரியன் செலும் . மூன்று நாட்கள் கழித்து மீண்டும் மேலும் வடக்கு நோக்கி ஒரு பாகை மேல் எழும்பும் . இது தான் மூன்று நாட்கள் இறந்து மீண்டும் உயிர்த்தெழும் .

முக்கியமாக 12 இலக்கங்கள் . 12 தோழர்கள் ஜோசெப்புடன் மற்றும் நபியையும் 12 பேர் தொடர்ந்தனர் என வரிசை நீள்கிறது . சூரியன் 12 ராசிகளுடனும் பயணிப்பதை குறித்ததே இவை .

கூடுதலாக  பைபிளில்  வசனங்கள்  சூரியனை குறிப்பனவையாவே இருக்கின்றன .
AS LONG AS I 'M IN THE WORLD
I 'M THE LIGHT OF THE WORLD "
ஜான் 9 :5

"இந்த உலக அழிவில் உங்களை சந்திப்பேன் " இயேசு பைபிள்   .2  மீன்கள் கொண்டு   பலர் பசியை ஆற்றினார் ???? காரணங்கள்   தொடரும்   .....

Religion is slavery .......

Thursday, December 16, 2010

மனித மனம் ,உயிர் -ஈகோ, சூப்பர் ஈகோ , இட்- சிக்மன் புரோயிட்

மனித அறிவின் அசுர பரிணாம  வளர்ச்சியில் விஞ்ஞானம் பல புராண கட்டுக்கதைகளையும் பல நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து அனைத்திற்கும் காரணம் தேடும் பயணத்தில் நேரம் எனும் பாதையில் செல்கிறது . மனோதத்துவம் பல வகைகளில் விஞ்ஞானத்தோடு ,விஞ்ஞானத்தில் ஒரு பெரும் பகுதியாக செயல்ப்படுகிறது  என்றால் மிகையாகாது . 

சீனாவில் சீ எனவும் இந்தியாவில் பிராணா எனவும் மேற்கில் soul எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இறை நம்பிக்கையில் உள்ளவர்கள். ஆனால் அதற்க்கு எந்தவித விஞ்ஞான ஆதாரமோ இதுவரை கிடையாது . ஆனால் இப்போது சமயங்கள் நிறுவனங்கள் வேறு விதமாக கதையை மாற்றுகின்றன . அதாவது பிழைப்பு தொடர்ந்து நடக்க மனோதத்துவத்திற்கு மாறி விட்டன .உள்ளிருந்து இயக்கும் மனசாட்சி இறைவன் என்கிறார்கள் .

 உயிர் ,மனது ,மரணம்,பயம்  இது மூன்றும் இறை நம்பிக்கையை தூண்டுவன . ஆனால் உயிர் ,மனது,மனசாட்சி போன்றன இருக்கின்றனவா ? இது தான் விடயம் ....... 


முன்னர் ஒரு தனிமனிதனுக்கு ஏற்ப்படும் மனோதத்துவ  பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்ச்சிகள் வேறு விதமாகவே நடந்தது . அவர்களை தனிமையில் வைப்பது ,இருட்டில் வைத்திருப்பது போன்றன . ஆனால் சிக்மன் பிரெயுட்(freud ) வேறு விதமாக முயற்ச்சித்தார் .அதாவது நோயாளிகளின் பிரச்சனைகளை கேட்டறிவது . ஒருவருடன் கதைத்து அவர்களுடைய  துன்பங்களை கேட்பதன் மூலம் மனநோய் பிரச்சனைகளில் இருந்து மீட்டார் .

மனித மனதை  ஈகோ, சூப்பர் ஈகோ , இட் என்று  மூன்று வகையாக பிரித்தார் ..




இதில் இட் சிறு வயதிலேயே இருக்கும் . ID (Internal Drive ) இட் தான் சிறு வயதிலேயே மனதில் உருவாகும் முதல் வளர்ச்சி .இது கட்டுப்படுத்த முடியாதது . இது மிகவும் ஆழ மனதின் செயல்ப்பாடு . இதனுள் ஒரு பிரிவு  Thanatos (தனடோஸ்)  என அழைக்கப்படும். "ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல் " மற்றையது  Libido (லிபிடோ) என்று அழைக்கப்படும் "பாலியல் ரீதியான காம ,காதல்  நிலைக்கு தூண்டப்படல்" . இவை இரண்டும் இட் இல் பகுதிகள் .

பின்னர் இரண்டாவதாக குழந்தைப்பருவ வளர்ச்சியில்(இரண்டு மூன்று வயதுகளில் ) சூப்பர் ஈகோ பரிணமிக்கிறது . உதாரணமாக அம்மா ஒரு செயலை செய்ய வேண்டாம் என சொல்லும் போது இது பரிணமிக்கிறது . அதாவது மேலே கூறிய இட் இல் உள்ள தனடோஸ்(ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல்,கூடாத செயல்கள் ) இந்த சூப்பர் ஈகோ வை தூண்டுகிறது .

சூப்பர் ஈகோ வின் பகுதி  இட்  இல் உள்ள அந்த செயல்ப்பாட்டை கட்டுப்படுத்துகிறது . இறுதி வளர்ச்சியான   ஈகோ முழுமையாக ஒரு மனிதனை எது சரி எது பிழை என தன்னிச்சையான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது .சில விடயங்களை பிழை என நேரேயே சுட்டிக்காட்டும் . மனசாட்சி என்று சொல்லலாம் .


இதில் சமயத்தை அழகாக தொடர்ப்பு படுத்துகிறார் . இந்த சூப்பர் ஈகோ வில்  ஒரு பகுதியாக சமயம் உருவானது . இட் இல் உள்ள காம மற்றும் தவறான விடயங்களை(லிபிடோ மற்றும் தனடோஸ்) கட்டுபபடுத்த  தொழில்ப்படுகிறது .எத்தனையோ குரு மார்களால்,யோகிகளால்  காமத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது உண்மை  . அது தான் இறைவன் என மனது நினைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது மனித மனங்களை .

அதுவும் இந்த சூப்பர் ஈகோ வில் இறைவனின் ,சமயத்தின் தொழில்ப்பாடு மனித அன்பு ,கருணை வளரும் போது அற்றுப்போகும் . ஒரு காலத்தில் மனித அன்பு ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்  .சமய ,இறைவன் கட்டுப்பாடுகள் உறுதியானதாக இல்லை . என  ப்ரோட் எதிர்வு கூறினார் . 

உதாரணமாக நமது சாமி மார் இறைவனை வணங்குபவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் தெரியுமே .

ஆதிகாலத்தில் மனிதனிடம் இட் மட்டுமே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது .

மனித ஆன்மா  21 கிராம் நிறை உடையது என ஒரு ஆய்வு மர்மமாக உள்ளது .
தொடரும்.... .