தொடருபவர்கள் - நன்றிகள்

Friday, January 28, 2011

ஏன் குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது? மேலும் சுவாரசியமான சில

வேகமான  கார்கள்(பெராரி enzo போல ) 8 .1 மீட்டர் வரை வேகத்தை ஆர்முடுக்கும் . அதாவது ௦ இலிருந்து 60 mph வரை தனது வேகத்தை 3 .3 செக்கனில்  கொண்டு  வரும் ..ஆனால் சிறுத்தை இந்த காரை விட வேகம் . 3 அடிகள் வைத்தவுடனனேயே 40 mph வேகத்தை பெற்றுவிடும் .

இந்த சீதா ஓடுவதற்கே பிறந்த மிருகம் போல உடல் வடிவமைப்பு . சீதாவின் மெலிந்த கால்கள் சிறிய தலை ,மிருதுவான உடல்ப்பகுதி அனைத்தும் காற்றால் ஏற்ப்படும் தடையை குறைக்கிறது .அதன் சராசரி எடை 57 கிலோ கிராம்கள். அதனால் தூக்கி ஓடுவதற்கு அதிக எடையும் இல்லை .

அதன் பலமான இதயத்திநூடு கூடுதலான இரத்தம் பம்பப்படுகிறது .பெரிய நுரையீரல் மற்றும் மூக்குத்துவாரம் கூடுதலான காற்றை உள்ளெடுத்து வெளிவிட உதவுகிறது .அதன் இதயத்துடிப்பும் வேகத்திற்கு ஏற்ப்ப அதிகரிக்கிறது .


புதிதாக குழந்தை பிறந்தவுடன் அது அழுகிறது . பெற்றோர் சந்தோசத்தில்  இருந்தாலும் அந்த குழந்தை அழுவதற்கு உயிரியல் காரணம் இருக்கிறது .

தாயின் கருப்பையினுள் இருந்த குழந்தை முதன் முதலாக வெளி உலகிற்க்கு  வரும் போது முதலாவது தப்பி பிழைக்கும் செயலை தொடங்குகிறது . அது அழுகையுடன் தொடங்குகிறது .

அது உயிர் வாழ அவசியமான இந்த கத்தலுடன் கூடிய அழுகை மூலம் இதுவரை பலூன் போல செயல்ப்படாது இருந்த அதன் நுரையீரல் முதன் முதல் காற்றை சுவாசிக்கிறது .

சுவாரசியமான சில ...



நீங்க வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால் வாயின் வலது பக்கத்தால் உணவை அரைப்பீர்கள் . இடது பக்கமாக இருந்தால் இடதுபக்கமாக ..

பசி எடுப்பது நின்றால் அதிகமாக நீரை அருந்துங்கள் . உடல் நீரை இழந்தால் பசியெடுக்கும் பொறிமுறை செயலற்று போகும் 

வெங்காயம் உரிக்கும் போது சூவிங்கம் போட்டால் கண்ணீர் வருவதை தடுக்கலாம் .

சங்கை காதுக்குள் வைக்கும் போது எமக்கு கேக்கும் சத்தம் காத்து நரம்புகளிநூடு மேலும் கீழும் பாயும் இரத்தத்தின் சத்தம் .

டயிடணிக்  கப்பல் செய்ய ஏழு மில்லியன்கள் செலவு .படம் எடுக்க 200 மில்லியன்கள் செலவு 

முயல்  ,கிளியால்  மட்டுமே  தலையை  திருப்பாமல்  தமது  முதுகுப்பக்கத்தை பார்க்க முடியும் . 



1 comments:

Jana said...

நல்ல தகவல்கள். சிலவை புதியவை.
அடுத்து

//நீங்க வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால் வாயின் வலது பக்கத்தால் உணவை அரைப்பீர்கள் . இடது பக்கமாக இருந்தால் இடதுபக்கமாக ..//

Test பண்ணிப்பார்த்தேன் உதைக்குது. எனக்கு இடதுகைப்பழக்கம் ஆனால் உணவை வாயின் வலது பக்கமாகவே அரைக்க முடிகின்றததே!!

ஏன் ?