முக்கிய குறிப்பு
ஊடகங்களால் ஊக்குவித்து வரப்படும் அம்மா பகவான் விடயம் பற்றி தொடராக சமூக நல நோக்கத்துடன் எழுதுகிறேன் .அவரை எதிர்ப்பதற்காக அல்ல ..மக்களின் விழிப்புணர்வுக்காக ..நன்றி கான்வே(Ph .D )
தமிழ் சமுதாயத்தின் சிந்தனைகளில் தடங்கலை ஏற்ப்படுத்தும் விடயங்களில் இந்த தனித்த மனித கடவுள்களின் ஆதிக்கம் அதிகம் .இது அவர்களுடையை உரிமை என்று சொல்லி விடலாம்.ஆனால் பௌத்த மதத்தில் சிறுவர்களை துறவிகளாக சேர்ப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ? இல்லை என்றால் இந்த அம்மா பகவான் சமாச்சாரத்தையும் ஆதரிக்க மாட்டீர்கள் .
21 + மேலே முடிவெடுக்கும் பக்குவம் அடைந்த மனநிலையில் இருக்கும் மனிதர்கள் எப்படி வேண்டும் என்றாலும் செல்லுங்கள் .ஆனால் இந்த அம்மா பகவான் கலாச்சாரம் பாடசாலைகளில் சிறுவயது மாணவர்களிடம் திணிப்பு துளிர் விட ஆரம்பித்து உள்ளது .அண்மையில் இலங்கை கிழக்கு பகுதியில் பாடசாலை மாணவர்களிடம் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .
பதின்ம வயதில் பல பிரச்சனைகள் பலருக்கும் வரும் ஆனால் அதை அவர்களே எதிர்கொள்வார்கள் . இடையில் இப்படியானவர்கள் அதை பயன்படுத்தி எப்படியோ புகுந்து விடுகின்றனர் . பின்னர் "காகம் இருக்க பனம் பழம் விழுந்த" கதை தான் . தமது வெற்றிக்கு காரணம் முழுக்க அம்மா பகவான் என்ற மாயை வளர்ந்து விடுகிறது .பின்னர் அது அந்த தனி மனிதர் மீதான வெறியாகவும் மாறிவிடுகிறது .
இவர் யார் என்ற விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பதிவு இது .
1990 களில் இருந்து மிக மிக வேகமான வளர்ச்சி கண்டுவரும் இந்த அமைப்பு 2002 வரை வன்னேஸ் மூவ்மென்ட் (Oneness Movement -OM ) என்று அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும் இப்போது கல்கி தீக்ஷா மூவ்மென்ட்(Kalki Deeksha Movement) என அழைக்கப்படுகிறது .
இதில் மாய நம்பிக்கைகளில் இருந்து விடுபட்ட முன்னாள் தலைமை உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இது வெறும் ஏமாற்று வேலை என்று இது நவீன கால மூட நம்பிக்கை என்றும் கூறுகின்றனர் .
இது தென் இந்தியாவில் 1980 களின் இறுதிப்பகுதியில் உருவாக்கப்பட்டது . பொது மக்களிடம் 1991 ஆம் ஆண்டு விஜயகுமார் நாயுடுவால் (அம்மா பகவான் )அறிமுகப்படுத்தப்பட்டது .அவரிடம் இருந்த/வளர்த்துக்கொண்ட மனோதத்துவ ஆற்றல்கள் ,சில முறைகளால் அவர் 1984 களில் இருந்து அவரின் கவரும் திறமையால் பாடசாலையில் இருந்து சில மாணவர்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டார் .
அவர் தனது ஆன்மீக கற்பித்தலை பல வேதாந்த அறிஞர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரட்டி வளர்த்துக்கொண்டார் . அதில் குறிப்பிடத்தக்கதாக ரமண மகரிஷிகள் ,ஜே கிரிஷ்ணமூர்த்தி ,யு ஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களிடம் இருந்தே இந்த நுணுக்கங்களை கற்றார் . சமய புரட்ச்சியாளர் ஜே கே கிருஷ்ணமூர்த்தியின் பாடசாலையில் இவர் இருந்த போது இவரின் நடவடிக்கைகளை கண்டித்தார் .
மேலும் விஜயகுமார் தனது பெயரை 1989 களில் கல்கி என மாற்றி அமைத்துக்கொண்டார் . அதாவது கல்கி என்பது இந்து புராணத்தில் கிருஷ்ணரின் 10 ஆவது அவதாரம் என கூறப்படுகிறது .
குறுகிய காலத்திலேயே கல்கி என்ற பெயரில் இருக்கும் சட்ட சிக்கல்கள்,சமூக சிக்கல்கள் காரணமாக தனது பெயரை பகவான் என மாற்றி அமைத்துவிட்டார் .மேலும் தான் கடவுள் என்றும் தான் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஞான ஒளியை அளிக்க போவதாகவும், பின்னர் 2012 இல் 64 ,000 பேருக்கு தான் ஞானம் அளிக்க போவதாகவும் அறிவித்தார் .
இதை எப்படி செய்ய போகிறார் என்றால் "neurobiological brain-shift event " என்ற முறையின் மூலமாம் .அதாவது இந்த முறை மூலம் அவரிடம் இருந்து ,அவர் மனைவியிடம் இருந்து ,சில நெருங்கிய பக்தர்களிடம் இருந்து உங்களுக்கு அருள் வழங்கப்படும் .இது 21 நாள் கோர்ஸ் . அதுவும் அவர்களால் அனுமதிக்கப்பட்ட தீக்ஷா வழங்குனராக நீங்கள் மேலும் செலவழிக்க வேண்டி இருக்கும் . இதுவரை காலமும் அடிப்படை கோர்ஸ் க்கு $7000 டொலர்கள் அறவிடப்பட்டு வந்துள்ளது .
ஆனால் இப்போது அவர் (அம்மா பகவான் ) இதை இலவசமாகவும் விரைவாகவும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்குமாறு கூறியிருக்கிறாராம் .அதனால் சிலரால் இணையங்களில் பரப்புரைகள் நடைபெறுகிறது ..வீடியோ கான்பெரென்ஸ் இல் எல்லாம் பூஜை நடைபெறுகிறதாம் .காரணம் ஒரு வேளை அவரின் அமைப்பு இந்தியாவில் மூடப்படலாம் என்ற அழுத்தம் தான் .
உலகத்தில் இருந்து அனைத்து பாகங்களில் இருந்தும் அனைவரையும் கவர்ந்து இந்த நிகழ்வு நடைபெறுகிறது இலவசமாக .ஆனால் அவர்கள் அறைக்கு $1500
டோலேர்கள் கட்ட வேண்டும் . ஆனால் அந்த அறையின் பெறுமதிகள் $500 கூட
வராது . இது இலவசம் என்று தோன்றவில்லை .
தொடரும் ......
பயனுள்ளது என்றால் ,விழிப்புணர்வு ஏற்ப்படுத்த எண்ணினால் நண்பர்களிடம் இந்த பக்கத்தை பகிருங்கள் ..
பயனுள்ளது என்றால் ,விழிப்புணர்வு ஏற்ப்படுத்த எண்ணினால் நண்பர்களிடம் இந்த பக்கத்தை பகிருங்கள் ..

14 comments:
போங்க பாஸ்...இவங்கள பத்தி எவ்வளவு எழுதினாலும் நம்மட சனம் திருந்தப் போறதில்லை...
அடிச்சு தான் திருத்தணும்
போனவர்கள் பற்றி கவலையில்லை ....இனி மாற போகிறவர்களுக்காக தெளிவூட்டவே இது :)
நன்றி மைந்தன் சிவா
ம்ம்...தகவல்கள் அறிந்தேன் சகோ..நிறைய அதிர்ச்சியான விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்..ஜெ.கே சீடர் உள்பட..:(( ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் வளர்ந்துட்டே தான் இருப்பாங்க சகோ...:((
கடவுள் இருக்கின்றான் என்று சொல்பவனிடம் நன்றாக பழகு, அதேபோல கடவுள் இல்லை என்று சொல்பவனிடம் இன்னும் நன்றாக பழகு..ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்லுறான் பாரு! அவனுடன்தான் மிக அவதானமாக இரு. என்று வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் இல் கமல் சொன்ன வசனங்கள் நினைவுக்கு வருது.
சரியான சாட்டையடிப் பதிவு..
தொடருங்கள்..
உனக்கு யாரும் கடவுளை காட்ட முடியாது. கடவுளை வெளியே தேடாதே. உனக்குள்ளேயே தேடு என்று விவேகானந்தர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
நல்ல தொடர், விழிப்புணர்ச்சியூட்டும் பதிவிற்கும், தொடர்வதற்கும் வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு!
நல்ல பதிவு!எவ்வளவு சொன்னாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்.,,
மக்கள் விழிக்கவாப் போறாங்க?????
சும்மா ஒரு 400கோடி ரூபாய் கலெக்சன் ஆகும் போல!!!
நல்ல பதிவு சுதா..
பெத்தவங்கள தவிர வேறெந்த கடவுளிலும் எனக்கு உடன்பாடில்லை.
அதைவிட தன்னைத்தானே கடவுள் என்டுரானே அவனைவிட நம்பிக்கையிழந்தவன் எவனுமில்லை. அவனை நம்புரவனவிட ஆண்மைய்றவன் வேறேவனுமில்லை.
பதிவு தொடரணும்.. வாழ்த்துக்கள்.
21 நாளில் ஞானமா? என்னுடைய அறிவிப்பு என்னவென்றால் என்னகிட்ட வந்தால் 7 நாளில் ஞானம் கிடைக்கும்.கொஞ்சம் செலவு அதிகமாகும்.
சுதா பிந்திய வரவுக்கு மன்னிக்கவும்...
இந்தளவு பணத்தையும் எங்கே கொண்டு போய் கொட்டுறார்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
Post a Comment