தொடருபவர்கள் - நன்றிகள்

Friday, March 4, 2011

பேஸ்புக் - 3 ஆம் நபர் அப்பளிகேசன்ஸ் -கவனம்!!



நாம் வங்கிக்கு செல்கிறோம் கடன் உதவி பெறும் அவசரத்தில் அவர்கள் தரும் படிவத்தில் என்ன இருக்கிறது என வாசிக்காமல் கையெழுத்து  இடுகிறோம் . அது நம்பிக்கை என வைத்துக்கொள்வோம் .ஆனால் அதன் விளைவு பின்னர் தான் தெரியும் .

ஆனால் அதை விட ஆபத்தானது ஒருவரது தனி அடையாளங்களை இன்னொருவர் வைத்திருப்பது . இப்போதைய முன்னணி சமூக இணையத்தளம் பேஸ்புக் அனைவரது தனி அடையாளங்களையும் வைத்திருக்கிறது. 

 ஆனால் பேஸ்புக் அல்லாத வெளி நபர்கள் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது அல்லவா ? எம்மை அறியாமலே நாம் எமது அனைத்து விடயங்களையும் வெளி நபருக்கு கொடுக்கிறோம் .அதற்கான ஊடகம் இந்த 3ஆம் நபர் அப்பிளிகேஷன்கள்(3rd party Applications ).

இதை பலரும் வாசிப்பதில்லை ..


சில வேளைகளில் தேவையில்லாத தகவல்களும் கேட்கப்படும் . கீழே சிறிய எழுத்தில்  "By proceeding this ,you agree to Farm villie Terms of services and privacy policy ".
 நீங்கள் வழக்கு கூட தொடரமுடியாது .

அண்மையில் வீட்டு விலாசங்களையும் தொலைபேசி இலக்கங்களையும் நீங்கள் பயன்படுத்தும்  3 ஆம் நபர் அப்ப்ளிகேஷன்கள் அணுகுவதற்கு பேஸ்புக் அனுமதி அளித்திருக்கிறது .  

இந்த தகவல்கள் அனைத்தும் வெளி நபர்களுக்கு விற்க்கப்படும் . உங்களுக்கு தொந்தரவுகள் பல ஏற்ப்படலாம் . இதை நிறுத்துவதே சிறந்த ஒரே வழி ஆகும் .பார்பதற்கு கவர்ச்சியாகவும் வேறு வேறு தலைப்புகளிலும் வடிவங்களிலும் வரும் .ஆனால் தயவு செய்து அப்ப்ளிகேஷன்கள் பாவிக்க வேண்டாம் .

இதனை தடுப்பது இலகு 

பேஸ்புக் கணக்கில் நுழைந்து வலது பக்கம் மேல் மூலையில் இருக்கும் ACCOUNT பகுதிக்கு சென்று PRIVACY SETTINGS அழுத்தவும் .

கீழே APPS AND SETTINGS பகுதியை எடிட் செய்யவும் ..

.
அதில் Remove Unwanted or spammy Applications    என்ற பகுதியை அழுத்தி தேவையில்லாததை அகற்றலாம் .

உங்கள் நண்பர்கள்  அதை பாவித்தாலும் ஆபத்து இருக்கிறது .அதை தடுப்பது பற்றி .மேலே உள்ள பகுதிக்கு கீழே உள்ளது இது .


உங்கள் கணக்கை திருடுபவர்களிடம் இருந்து பாதுகாக்க முக்கியமாக செய்ய வேண்டியது .

Account - Account settings சென்று Account security edit செய்து இந்த செயன்முறையை செய்யவும் .

இதன் தொழில்நுட்ப பொறிமுறையை உங்களோடு பகிர்கிறேன்.

பேஸ்புக் செர்வர்கள் மூன்றாம் நபர் அப்ப்ளிகேஷன்களை  வைத்திருப்பதில்லை . பெஸ்புக்கின் API (Application programming Interface ) ,REST Interface என்றால் அந்த மூன்றாம் நபர் அப்பிளிகேஷன்கள் பேஸ்புக் உடன்  இடைநிலை தொடர்பை ஏற்ப்படுத்த HTTP GET அல்லது POST முறையை பயன்படுத்துகின்றன .  

HTTP என்பது இணையத்தினூடு world wide web (www ) ஆல் பயன்படுத்தப்படும் தொடர்புவரைமுறை(Protocol ) கொண்ட தொடர்பாடல் . GET முறை இணைய பக்கத்தில் இருந்து  தகவல்களை எடுக்கவும் POST முறை தகவல்களை சேர்க்கவும் பயன்படுகிறது .

அதாவது பேஸ்புக் அப்பிளிகேஷன்களால் உங்கள் ப்ரோபாயில்களில் இருந்து தகவல்களை எடுக்கவும் இடவும் முடியும் .

3 ஆம் நபர் அப்பிளிகேசன்களை செய்பவர்கள் FQL (Facebook Query language ) ஐ பயன்படுத்துகின்றனர் .SQL இட்க்கு ஒப்பானது தான் . இவை programming Languages .டேடாபேசில் இருந்து  தகவல்களை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டவை . இதனால் அப்பிளிகேஷன்களை உருவாக்குபவர் அந்த அப்பிளிகேஷன்களை பாவிப்பவரிடம் இருந்து அனைத்து தகவல்களையும் பெற முடியும் .

அவ்வளவு தான் விடயம்..ஆனால் பேஸ்புக்கில் அப்பிளிகேசன் பாவிப்பதே வேலையாக வைத்திருப்பவர்களுக்கு தான் வேறு வழி இல்லை .

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 

13 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

பயனுள்ள பதிவு..

FOOD said...

பயனுள்ள பகிர்வு. நானும் என் முக புத்தக கணக்கை சரி பார்க்க வேண்டும் . நன்றி.
தமிழ்மணத்தில் தங்கள் பதிவை இணைக்க வேண்டுகிறேன்.

Jana said...

Thank you for your useful Information

பாலா said...

இந்த மாதிரி விண்டோ வந்தவுடன் நான் செய்யும் முதல் காரியம் பிளாக் செய்வதுதான். அனைவருக்கும் தேவையான பதிவு...

தர்ஷன் said...

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

Chitra said...

கவனமாக இருப்பது நல்லதுதான். பயனுள்ள பதிவுங்க.

S.Sudharshan said...

வேடந்தாங்கல் - கருன் said...
//பயனுள்ள பதிவு.//
நன்றி கரூன் :)

FOOD said...
//பயனுள்ள பகிர்வு. நானும் என் முக புத்தக கணக்கை சரி பார்க்க வேண்டும் . நன்றி.
தமிழ்மணத்தில் தங்கள் பதிவை இணைக்க வேண்டுகிறேன்//

மிக்க நன்றி .. தமிழ் மணத்தில் இணைக்கிறேன் :)

S.Sudharshan said...

Jana said...
//Thank you for your useful Information//
பாலா said...
//இந்த மாதிரி விண்டோ வந்தவுடன் நான் செய்யும் முதல் காரியம் பிளாக் செய்வதுதான். அனைவருக்கும் தேவையான பதிவு..//
மிக்க நன்றி பாலா &Jana :)

S.Sudharshan said...

தர்ஷன் said...
//மிகவும் பயனுள்ள பதிவு நன்றி//

Chitra said...
//கவனமாக இருப்பது நல்லதுதான். பயனுள்ள பதிவுங்க//

மிக்க நன்றிங்க தர்ஷன் & சித்ரா

சுந்தரா said...

மிக அவசியமான பதிவு.

பகிர்வுக்கு நன்றிகள் சுதர்ஷன்!

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், அருமையான காலத்திற்கேற்ற பதிவு. ஒரு சின்ன கேள்வி, இந்த பேஸ்புக்கில் றிஜிஸ்டர் பண்ணும் போது எங்களது போன் நம்பர் கேட்கிறது தானே? இந்தப் போன் நம்பரைக் கொடுப்பதால் எமக்கு ஏதும் பின் விளைவுகள் வருமா?

♔ம.தி.சுதா♔ said...

அட இது நல்லாயிருக்கே.. இம்புட்டு நாளும் நம்மளுக்கு இப்புடி ஒண்ணு இருக்கிறதே தெரியாதே... நன்றி.. நன்றி..

திருப்பூர் சரவனக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே.....

ஏன் ?