தொடருபவர்கள் - நன்றிகள்

Wednesday, August 3, 2011

கள்ள மனதின் ஓரம் - கேளிக்கைக்கு மட்டுமா சமூக இணையத்தளம் ?

கேளிக்கை /மகிழ்ச்சி என்ற பதம் நுகர்பொருள் கலாச்சார சமுதாயத்தில்  திருபடைந்துவிட்டது எனலாம் . நகர்ப்புறம், வெளிநாடு என்ற புதிய அத்தியாயத்தில் நகர்ந்து வரும் உலகில் வெறும் படிப்பறிவை கௌரவத்திற்காக கற்கும் நிலையில் சுய அறிவு ,சுய சிந்தனை உண்மையான அறிவு என்பதெல்லாம் தூக்கி எறியப்பட வேண்டும் என்பதை கல்வித்திட்டம் ஒரு கட்டளையாக பிறப்பிக்கும் காலப்பகுதி இது . 

படிக்கிறேன் வேலை தேட வேண்டும் அதனூடு இடை இடையில்  கேளிக்கைகள் . இதான் வாழ்க்கை ,இது தான் மகிழ்ச்சி என்ற எண்ணக்கரு நிலவும் காலம் இது .மனிதம் நிலைநாட்டப்படும் போது ,அடுத்தவர்  முகத்திலும் மகிழ்ச்சி காண்பதே உண்மையான மகிழ்ச்சி என்பதை உணராத உலகு இது . 

இதே எண்ணக்கரு சமூக இணையத்தளங்களிலும் உலவி வருகிறது . சமுதாய வெளிப்பாட்டையே சமூக இணையத்தளம் காட்டவேண்டும் என்பது போய் கேளிக்கைகாக பயன்படுகிறது . கேளிக்கையாக இருப்பது தவறில்லை,கேளிக்கைகாகவே மட்டும் இருப்பது தவறு. சில நேரங்களில் முக்கிய பிரச்சனைகள் வரும் போது விழிப்புணர்வோ ஒரு குரல் கொடுப்போ சமூக இணையத்தளங்களில் நடப்பதில்லை . அப்படி நடத்துபவர்களை தடுக்கும் சமூகமே அதிகம் . நீங்கள் செய்யுங்கள் என்று சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ .அதே போல மனிதாபிமான குரல்களை கேலி செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை .

எனக்கு என்னை சுற்றியுள்ள என் சின்ன வட்டத்துக்கு அடிபட்டால் வருவது இரத்தம் மற்றயவர்களுக்கு /சமூகத்துக்கு வந்தால் அது தக்காளி சட்னி . 

ஒரு சமூக பிரச்னையை ,துன்பத்தை கொண்டு செல்லும் ஊடகமாக பயன்பட வேண்டிய சமூக வலைத்தளங்களில் குரல் கொடுப்பவர்களை பார்த்து இதனை செய்வதன் மூலம் என்ன நடக்க போகிறது என்ற கேள்வியை சுய அறிவற்று கேட்பவர்களும் உண்டு .

அவர்களை பார்த்து இதற்கும் ஒரு புரட்சியை எப்படி நடத்த வேண்டு என்று ஒரு பாடம் கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டுமோ என கேள்வி கேட்க்க வைக்கிறது .  

அண்மையில் ஒரு நண்பரின் உறவினருக்கு இரத்தம் தேவை என்றவுடன் அதனை பகிர்ந்தவரிடம் போய் இதனால் என்ன ஆக போகிறது என்று கேட்க்கவில்லை .ஆனால் அதே நபர்கள் பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை .தனக்கென்று வரும் போது அது பெரிது .

சிலர் குணமே கேளிக்கையானவர்கள் கோபமே வராதது போல இருக்கும் .ஆனால் ரஜனி படங்களின் இறுதி காட்சியில் வரும் ஆக்ரோஷம் சமுதாய சீரளிவுகளின் இறுதிக்கட்டத்தில் கூட வருவதில்லை .

ஒரே விடயத்தில் பலரும் ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் போது நிச்சயம் சமூக இணையத்தளமும் முக்கிய ஊடகமாக செயல்ப்படும் காலம் வரும் .

6 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரே விடயத்தில் பலரும் ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் போது நிச்சயம் சமூக இணையத்தளமும் முக்கிய ஊடகமாக செயல்ப்படும் காலம் வரும்///
கண்டிப்பாக வரும்.

Chitra said...

எனக்கு என்னை சுற்றியுள்ள என் சின்ன வட்டத்துக்கு அடிபட்டால் வருவது இரத்தம் மற்றயவர்களுக்கு /சமூகத்துக்கு வந்தால் அது தக்காளி சட்னி .


..... இந்த கண்ணோட்டம் மாறும் போது, நிச்சயம் மாறுதல்கள் - ஏன் புரட்சி கூட வரும்.

Kousalya said...

//இணையத்தளமும் முக்கிய ஊடகமாக செயல்ப்படும் காலம் வரும்//

இந்த நம்பிக்கை எனக்கு மிக அதிகம் இருக்கிறது.

நல்லதோர் பகிர்வு.

S.Sudharshan said...

Chitra said...
இந்த கண்ணோட்டம் மாறும் போது, நிச்சயம் மாறுதல்கள் - ஏன் புரட்சி கூட வரும்.//
உண்மை தான் ..நம்பிக்கை இருக்கிறது

Kousalya said...//
இந்த நம்பிக்கை எனக்கு மிக அதிகம் இருக்கிறது.நல்லதோர் பகிர்வு.//
நன்றி ...:)

S.Sudharshan said...

நன்றி :) !* வேடந்தாங்கல் - கருன்

Ramesh said...

Many more happy returns of the day.
எனக்கு என்னை சுற்றியுள்ள என் சின்ன வட்டத்துக்கு அடிபட்டால் வருவது இரத்தம் மற்றயவர்களுக்கு /சமூகத்துக்கு வந்தால் அது தக்காளி சட்னி.
Nalla dose

ஏன் ?