Wednesday, August 31, 2011

மங்காத்தா - விமர்சனமல்ல எனது பார்வை

இது ஒரு வியாபார நோக்க படம் என்பதால் விமர்சனம் அல்லாது எனது பார்வையிலேயே கருத்தை தெரிவிக்கிறேன் .

மங்காத்தா முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கம் கொண்ட அதிரடி திரைப்படமாக இருந்தாலும் வெங்கட்பிரபு தனது பாணியில் இருந்து மாறவில்லை . சீரியசான காட்சிகளும் புன்னகையை தந்துவிட்டு போகின்றன .

முதலில் அஜித்தின் மாறுதலுக்கு வாழ்த்துக்கள் . அசலில் (படம் வெற்றி அடையாவிட்டாலும் ) மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் .அதே இந்த திரைப்படத்திலும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது . இதன் கதை திரைக்கதை என அனைத்திலும் இயக்குனர் தான் . இதை முழுக்க முழுக்க இயக்குனர் படமாக பார்க்க முடிவது தமிழ் சினிமாவின் வெற்றி எனலாம் .


கதை இல்லை -தேவையுமில்லை (திரைக்கதை சிறப்பு )

கிரிக்கெட் சூதாட்ட பணத்தை அனைவரும் திட்டமிட்டு கொள்ளை அடிப்பது தான் கதை என ஒரு வரியில் சொல்லிவிடலாம். படத்தின் ற்றேயிலரில் கூட கதை தெரிந்துவிடும் . சில திருப்பங்கள் ,எதிர்பாராத விடயங்கள் திரைக்கதை மூலம் திரைப்படத்தை சிறப்பாக கொண்டு சென்றிருக்கின்றன .ஆரம்பத்தில் திரைக்கதை சோர்வு என்றாலும் பின்னர் நன்றாக இருந்தது .

முக்கியமாக அஜித்தின் நடிப்பு சிறப்பாக இருந்தது .அஜித்தின் கதாப்பாத்திரத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு . 


காட்டப்படாத பக்கம்(இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ) 

கிரிக்கெட்டின் பின்னால் நடைபெறும் சூதை காட்டியது பாராட்டத்தக்கது. ஆனால் இந்த சூதுகளின் பின்னணியோ அல்லது இந்த சூதுகள் ஒரு ஆட்டத்தை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை காட்டி இருந்தால் நன்றாக இருக்கும் . இப்படி நடைபெறும் சூதுகள் மூலம் தான் ஒவ்வொரு அணி வீரர்களும் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். அவர்கள் தான் போட்டியின் திசையையும் மாற்றுகிறார்கள் .

பின்னால் புரளும் பல கோடிக்கணக்கான பணம் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் பார்க்கும் எமக்கு புரியப்போவதில்லை . கிரிக்கெட்டின் இந்தப்பக்கத்தையும் காட்டியிருந்தால் பலருக்கு தெரிந்திருக்கும் .

படத்தின் குறைகள் 

யுவனின் பின்னணி இசை அருமை .பாடல்கள் தேவை இல்லாத இடங்களில் வருகிறது . கண்ணாடி நீ பாடல் தேவையில்லாமல் வருகிறது . இடைவேளைக்கு முன்னர் சில இடங்களில் கொட்டாவி வருவதை தடுக்க முடியாது .இன்னமும் பெண்களை மோகப்போருளாக மட்டும் பயன்படுத்துவது  சலிப்பை ஏற்படுத்துகிறது . தொடர்ந்து அதே அணியுடனேயே படம் எடுப்பதும் சலயொப்பை ஏற்படுத்துகிறது .

  மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பலரும் ரசித்து பார்க்க கூடியதாக இருக்கும் . மொத்தத்தில் ஒரு நல்ல அதிரடி திரைப்படம் பார்த்த மகிழ்ச்சியை கொடுக்கும் .

7 comments:

N.H.பிரசாத் said...

Ajith Always Rocks. Thala Pola Varuma?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Thala always rocks

சின்னப்பயல் said...

அதுக்குள்ள பாத்தாச்சாஆஆஆ...?!
தல போல வருமா..?! :-)

Philosophy Prabhakaran said...

எங்க தல படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் எழுதியதற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

ஷீ-நிசி said...

விமர்சனம் இன்னும் நிறைவாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து... நேரமில்லையோ நண்பரே?!

S.Sudharshan said...

நன்றி N.H.பிரசாத் & "என் ராஜபாட்டை"- ராஜா :)

@சின்னப்பயல் :முதல் நாளே :)

@philosophy prabhakaran
யார் படமாக இருந்தாலும் நடு நிலையாக எழுதுவதே விமர்சனம்.நன்றி :)

// ஷீ-நிசி said...
விமர்சனம் இன்னும் நிறைவாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து..நேரமில்லையோ நண்பரே?!//ஆம் அதனால் தான் இதனை விமர்சனமாக பதியவில்லை . எனது கருத்தாகவே பதிந்திருக்கிறேன் . :)