தொடருபவர்கள் - நன்றிகள்

Thursday, August 4, 2011

கால பயணம் (Time travel)- இறந்த காலத்துக்கு செல்வதில் பரடோக்ஸ் பிரச்சனை

கால பயணம் பற்றிய முன்னைய ஆக்கம் . காலபயணம் பற்றிய அடிப்படை இல்லாவிட்டால் வாசிக்கவும் - அழுத்துக

காலத்தில் பயணம் செய்வதில் உள்ள பிரச்சனை இறந்த காலத்துக்கு பயணம் செல்வது தான் . எதிர்காலத்தில் பயணம் செய்வதை இதுவரை யாரும் விமர்சிக்கவில்லை.


இந்த பிரச்னையை இலகுவாக விளக்குவதானால் ,உதாரணத்திற்கு நீங்கள் 200 வருடங்கள் பின்னோக்கி  சென்று விட்டீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் உங்கள் பிறப்புக்கு முன்னரான  காலப்பகுதியில் இருக்கிறீர்கள் . 

அதாவது ஒரு விளைவுக்கு (பிறப்பு ) முன்னரே நிகழ்வு (வாழ்தல் ) நடக்கிறது . இது மிகவும் முரண்பாடானது .

இதனை  விளக்குவது தான் பிரபலமான கிராண்ட் பாதர் பரடொக்ஸ். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் இறந்த காலத்துக்கு சென்று விட்டீர்கள் .அந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொந்த தாத்தாவையே கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது . நீங்களும் ஒரு துப்பாக்கியை  எடுத்து சுட்டு விட்டீர்கள் .

ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிறக்கவில்லை . உங்கள் தாத்தா உயிரோடு இருந்தால் தானே உங்கள் தந்தை பிறப்பார்  .தந்தை இருந்தால் தானே நீங்கள். ஆகாவே இந்த தொடர்பு வட்டம் துண்டிக்கப்படுகிறது(inconsistent causal loop ) . ஆகவே இது  இறந்த காலத்திற்கு செல்வதில் பிரச்சனையான விடயமாக கொள்ளப்பட்டது .

 =======================================================================

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

சயின்ஸ் ஃபிக்‌ஷன்?

குதூகலக்குருவி said...

இறந்த காலத்துக்கு பயணம் செய்வது என்பது கற்பனையில் மட்டுமே இருக்கக்கூடியது.. டைம் டிராவல் செய்வதை வைத்து அதிகளவான ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தாலும் faster-than-light (FTL) travel தவிர எந்தவொரு கருதுகோளும் நம்பத்தகுந்ததாக இல்லை. FTL travel சாத்தியப்படும் போல் தெரியவில்லை. 300 000 km/s முடியாதவோன்றகவே நான் கருதுகிறேன். ஆக்கம் அழகாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளேன் .

மகேஸ் said...

ஒளியை விட வேகமாகப் பயணித்து எதிர் காலத்திற்குத்தான் போக முடியுமே தவிர, இறந்த காலத்திற்குப் போக முடியாது..

ஏன் ?