முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று .
பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் .
சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள் கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது .
சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது .
இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும் மீனாட்சி அம்மா என்று அழைக்க வீரா மீனாட்சி அம்மா உறவில் எந்த களங்கமும் இருக்கவில்லை .வீராவின் நடத்தைகளும் அமைதியாகவே இருந்தது .
இளம்பருவத்தை அடைந்தபோது தனது சிறுவயதில் சமீராக இருந்த போது ஏற்ப்பட்ட பாலியல் கொடுமைகள் அவனை மீண்டும் சமீராக மாற்றுவதோடு மன அழுத்தம் ,பயம் ,எரிச்சலையும் உண்டாக்குகிறது .சிறுவயதிலேயே பாலியல் நடத்தையின் பால் தூண்டப்பட்ட சமீர் தன்னுடன் இருக்கும் தான் காதலித்த பெண்ணாக மட்டுமே தெரியும் மீனாட்ச்சியுடன் கட்டாய உறவு வைத்துக்கொள்கிறான்.
தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை ,இனி அப்படி நடக்காது என கூறும் வீரவை புரிந்துகொள்ளாமல் ,ஒரு நல்ல மனநோய் மருத்துவரிடம் காட்டாமல் விட்டத்தில் இருந்து இல்லாத ஒருவரை இருப்பது போல கற்ப்பனை செய்தல்(Hallucinations ) போன்ற பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது .மிகுதியை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
வீரா என்ற ஒரு மனிதனுக்குள் பல மன போராட்டங்கள் நடக்கிறது .சமீரிடம் இருந்து சில பெண்களை காப்பாற்றி வைத்திருக்கிறேன் என சமீரா ரெட்டியிடமும் ,போலீசிடம் "நாயை கொன்னுட்டியே நீ எல்லாம் ஒரு மனுசனா" என்று சொல்லுமிடங்கள் வீராவின் குணத்தை தனித்து காட்டுகிறது .
முக்கியமாக படத்தின் ஒலிப்பதிவு ,ஒளிப்பதிவு அருமை.மனோஜ் பரமஹம்சா வின் ஓளிப்பதிவு சொல்லவா வேண்டும் . எந்தவித பின்னணி இசையும் இல்லாமல் இயற்க்கை சப்தங்களை வைத்து சிறப்பான ஒலிப்பதிவு .அதுவும் இறுதியில் மழை காட்ச்சிகள் அருமை .
எந்தவித பெரிய நடிகர்களும் இல்லாமல் திரைக்கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து இயக்குனர் படமாக வெளிவந்திருக்கும் நடுசி நாய்கள் கவுதம் மேனனின் முன்னைய மென்மையான படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது ..வாழ்த்துக்கள் கவுதம் மேனன் .
எந்தவித பெரிய நடிகர்களும் இல்லாமல் திரைக்கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து இயக்குனர் படமாக வெளிவந்திருக்கும் நடுசி நாய்கள் கவுதம் மேனனின் முன்னைய மென்மையான படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது ..வாழ்த்துக்கள் கவுதம் மேனன் .
மனப்பக்குவம் அடைந்தவர்கள் பார்க்கவேண்டிய படம் . இப்படி நமது கண்ணுக்கு தெரியாத பல நடக்கிறது என்பதை காட்டியுள்ள படம் . சிலது அல்ல பல . இந்தியாவில் 53 % மான சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்ப்பத்தப்படுகின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன .முக்கியமாக நம்பிக்கைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் கூடுதல் .ஆனால் பலர் முன்வந்து போலீசிடம் தெரிவிப்பதில்லை .
குறை -சில பாலியல் காட்ச்சிகள் குறைத்திருக்கலாம் .ஆனால் எந்த காட்ச்சியிலும் முகத்துக்கு கீழே கமெரா போகவில்லை .பாராட்டுக்கள் கவுதம் .
ஆனால் இதே படம் ஆங்கிலத்தில் வந்திருந்தால் மனம் ஏற்றுக்கொண்டிருக்கும் .!!!
கலாச்சாரம் கட்டுப்பாடு வக்கிரம் என்று கட்டுப்பாடு விதிக்கும் இடம் எயிட்ஸில் முதல் ஐந்துக்குள் உள்ளது .
இப்படி சொல்லி சொல்லியே தெளிவு அற்றவர்கள் ஆக்குவது இல்லாமல் செய்யப்பட வேண்டும் .
யதார்த்த சினிமா என்ற வகையில் சேர்க்க கூடிய படம் இது . படம் குப்பையில்லை .சமூகம் குப்பை என்பது மறுக்கமுடியாத உண்மை .அதை அப்படியே பிரதிபலித்திருக்கிறது இந்தப்படம் .
இந்தப்படத்தை உங்கள் பக்கம் இருந்து பார்க்கவேண்டாம் .மனநோய் பாதிக்கப்பட்ட வீராவின் பக்கம் இருந்து பாருங்கள் .அவனுக்கு பந்த பாசமோ அம்மா அப்பா உறவோ ஒன்றுமே தெரியாது .
தயவு செய்து யாரும் உங்கள் மனதில் வைத்திருக்கும் வக்கிரங்களை கக்காதீர்கள். விமர்சனங்கள் வாசிக்க முதல் படம் பார்த்திருந்தால் இந்த தாய் மகன் உறவு என்ற சிந்தனை அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு வந்திருக்காது ..காரணம் அப்படியொன்ற இல்லை . படம் தெளிவாக விளங்கவில்லை என்றால் தெளிவாக்கி கொள்ளுங்கள் .
சில விமர்சனங்கள் ஏன் படைப்பை விமர்சிக்காமல் !! இயக்குனரை விமர்சிக்கின்றன ??. இதை தூக்கி பிடித்து எதிர்த்து தவறானது தான் என காட்ட முனைவது நீங்கள் . .
நடுநிசி நாய்கள் படத்தில் தெளிவில்லை .இப்படியோன்றும் நடப்பதில்லை என்றால் இந்த லிங்க்கை வாசிக்கவும் . இந்தப்படமே உங்களை பாதிக்கிறது என்றால் இந்த சிறுவர் துஷ்பிரயோகம் இவ்வளவு தூரம் அனைவரையும் பாதிக்கும் என்பதை தான் படம் கூறுகிறது .
படம் முடிந்த பின்பு இறுதியாக படத்தில் மருத்துவர் கூறுவதை கேளுங்கள் .பாதி பேர் முதலே எழுந்து வந்துவிட்டார்கள் .
























