தொடருபவர்கள் - நன்றிகள்

Wednesday, March 16, 2011

எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன் - மார்ச் 19 என்ன நடக்கும் ?அறிவியல் விளக்கம்

ஜப்பானில் ஏற்ப்பட்ட புவியதிர்வு மற்றும் சுனாமி தாக்கத்திற்கு பின்னர் அனைவரிடமும் கேள்வி எழுப்பி இருக்கும் செய்தி இந்த சந்திரன்  பூமிக்கு அருகில் நெருங்கி வரவிருக்கும்  செய்தி . இந்த நிகழ்வு  மார்ச் மாதம்  19 ஆம் திகதி இடம்பெறும் .

இதன் விளைவாக தான் ஜெப்பானில் பூமியதிர்ச்சியும் ,ஆழிப்பேரலையும் ஏற்ப்பட்டது எனவும்  மார்ச் 19 ஆம் திகதி மிகப்பெரிய பூகம்பங்களும் சுனாமி அலைகளும் உலகம் முழுதும் ஏற்ப்படும் எனவும் சில  வானவியலாளர்கள்  கூறிவருகின்றனர்  .


இதெல்லாம் உண்மையா ? ஜெப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிக்கும் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரனும் தொடர்புண்டா ? வரலாற்றில் இப்படி நிகழ்ந்த போது ஏதாவது இதற்க்கு முதல் நடந்திருக்கிறதா? இந்த சூப்பர் மூன் என்றால் என்ன ? என்பவை பற்றி ஆராய்வோம் .

சந்திரன் வழமையாக பூமியை சுற்றி எப்படி இயங்குகிறது ?
சந்திரன் பூமியை சரியான வட்ட பாதையில் சுற்றுவதில்லை .நீள்வட்ட பாதையில் தான் சுற்றுகிறது .
சந்திரனின்  நீள்வட்ட பாதையில் மற்றைய பக்கத்தை விட ஒருபக்கம் 31 ,000 மைல்கள் குறைவாகும் .பூமியிலிருந்து மிக தூரத்தில் இருக்கும் போது Apogee நிலையிலும் மிக நெருங்கிய தூரத்தில் இருக்கும் போது Perigee நிலையிலும் இருக்கிறது . மார்ச் 19  ஆம் திகதி மட்டும் இந்த Perigee அதாவது நெருங்கிய நிலையில் சந்திரன் இருக்கப்போவதில்லை  .ஒவ்வொரு மாதமும் தான் இது நிகழ்ந்துகொண்டு வருகிறது  .


ஆனால் எல்லா முறையும் நீள் வட்ட பாதையும் ஒரே அளவில் இருப்பதில்லை .19 வருடங்களின் பின்னர் இந்த முறை தான் இது மிக மிக அருகில் வரும் . வழமையாக 2 % பூமியை நெருங்கி வரும் இந்த முறை 8 % நெருங்கி வருகிறது .


சூப்பர் மூன் டே(Super moon day ) என்பது என்ன ?

"சூப்பர்" மூன் டே என்பது சந்திரன் எமது பூமிக்கு மிக மிக அருகில் வரும் போது முழுதாக  தெரியும்  நாள் .அதாவது பூமிக்கு மிக அருகில் ஏற்ப்படும் பௌர்ணமி எனலாம் .

சாதாரணமாக பூமியிலிருந்து  400 ,000 கிலோ மீட்டர்கள் தொலைவில் தான் சந்திரன் இருக்கும் .ஆனால் மார்ச் 19 ஆம் திகதி சந்திரன் சாதாரண தூரம் 400 ,௦௦௦ கிலோமீட்டர்களில் இருந்து 43 ,423 கிலோ மீட்டர்கள் குறைந்து பூமியிலிருந்து 356 ,577 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் .

இந்த தினத்தன்று பூமியதிர்ச்சி ,பெரிய அலைகள் ,சூறாவளி போன்றன உலகம் முழுதும் ஏற்ப்படலாம் என சில வானவியலாளர்கள்/ ஜோதிடர்களின் கருதுகிறார்கள்  .

எக்ஸ்ட்ரீம்  சூப்பர் முன் டே(Extreme Supermoon day)
மேற்கத்தைய பிரபல வானவியலாளர் ரிச்சர்ட் (Richard Nolle ) தான் சூப்பர் மூன் தினத்தன்று பூமியில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்ப்படும் என்று தெரிவித்துள்ளார் .இதனால் இதனை எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன் டே என கூறியுள்ளார் .

ஆனால் இதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்க்கவில்லை என்பது தான் கொஞ்சம் ஆறுதலான விடயம் . காரணம் இதற்க்கு எந்தவித விஞ்ஞான காரணங்களும் இல்லை என்பது அவர்களுடைய கருத்து .

ஜப்பானில் ஏற்ப்பட்ட பூமியதிர்ச்சியும்  ,சுனாமியும்  இந்த சூப்பர் மூனால் ஏட்ப்பட்டதா என்ற கேள்வி தான் இப்போது பலரிடையே தோன்றியுள்ளது .
இல்லை என்பதே விஞ்ஞானிகளின் திட்டவட்டமான பதில் .காரணம் சுனாமி ஏற்பட்ட தினத்தன்று சந்திரன் சாதாரண தூரத்தை விட பூமியில் இருந்து விலகி இருந்தது .

இதுவரை ஏதாவது பாதிப்புகளை ஏற்ப்படுத்தி இருக்கிறதா என்று பார்த்தால்...

1955 ,1974 ,1992 மற்றும் 2005 களில் சூப்பர் முன் ஏற்பட்ட போது இதே போல இயற்க்கை அழிவுகள் ஏற்பட்டுள்ளன .1955 இல் அவுஸ்திரேலியாவில் ஏற்ப்பட்ட பாரிய வெள்ள(Hunter Valley floods ) அனர்த்தம் .2005 இல் சூப்பர் முன் ஏற்ட்படுவதட்க்கு ஒரு கிழமைக்கு முதல் தான் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது .காற்றினா புயலும் அதனால் தான் ஏற்பட்டது என்கின்றனர் .ஆனால் இவை தற்செயலாக ஏற்ப்பட்டவை என்பது தான் விஞ்ஞானிகளின் கருத்து .

வழமையாக சந்திரனின் ஈர்ப்பால் அலைகளின் உயரம் அதிகரிக்கும் ஆனால் பூமியதிர்ச்சியை ஏட்ப்பட்டுத்தும் அளவுக்கு தட்டுகளை நகர செய்யும் அளவுக்கு மாற்றத்தை இதனால் ஏற்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் இப்போது திட்டவட்டமாக அறிவுத்துள்ளார்கள்.seismologists and volcanologists கருத்துப்படி பூமியின் உள் சக்திக்கோ (internal energy ) அதன் சமநிளைக்கோ மாற்றம் ஏற்படாது என்று கூறிகின்றனர் .

ஆனால் இந்த முறை சந்திரனை  மிக பெரிதாக அனைவரும் அருகில் பார்க்கலாம் .

James Garvin, chief scientist at the Goddard Space Flight Center under NASA, said in an article on NASA's website that "the effects on Earth from a supermoon are minor."


பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன்  பகிருங்கள் .

Tuesday, March 8, 2011

கறுப்பு உண்மைகள்-அம்மா பகவான் -பாகம் 1

முக்கிய குறிப்பு 
ஊடகங்களால்  ஊக்குவித்து வரப்படும் அம்மா பகவான் விடயம் பற்றி தொடராக சமூக நல நோக்கத்துடன் எழுதுகிறேன் .அவரை  எதிர்ப்பதற்காக  அல்ல ..மக்களின் விழிப்புணர்வுக்காக ..நன்றி கான்வே(Ph .D )

தமிழ் சமுதாயத்தின் சிந்தனைகளில் தடங்கலை ஏற்ப்படுத்தும் விடயங்களில் இந்த தனித்த மனித கடவுள்களின் ஆதிக்கம் அதிகம் .இது அவர்களுடையை உரிமை என்று சொல்லி விடலாம்.ஆனால் பௌத்த மதத்தில் சிறுவர்களை துறவிகளாக  சேர்ப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ? இல்லை என்றால் இந்த அம்மா பகவான் சமாச்சாரத்தையும் ஆதரிக்க மாட்டீர்கள் .

 21 + மேலே முடிவெடுக்கும்  பக்குவம் அடைந்த மனநிலையில் இருக்கும் மனிதர்கள் எப்படி வேண்டும் என்றாலும் செல்லுங்கள் .ஆனால் இந்த அம்மா பகவான் கலாச்சாரம் பாடசாலைகளில் சிறுவயது மாணவர்களிடம் திணிப்பு துளிர் விட ஆரம்பித்து உள்ளது  .அண்மையில் இலங்கை கிழக்கு பகுதியில் பாடசாலை மாணவர்களிடம் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது . 

பதின்ம வயதில் பல பிரச்சனைகள் பலருக்கும் வரும் ஆனால் அதை அவர்களே எதிர்கொள்வார்கள் . இடையில் இப்படியானவர்கள் அதை பயன்படுத்தி எப்படியோ புகுந்து விடுகின்றனர் . பின்னர் "காகம் இருக்க பனம் பழம் விழுந்த" கதை தான் . தமது வெற்றிக்கு காரணம் முழுக்க  அம்மா பகவான் என்ற மாயை வளர்ந்து விடுகிறது .பின்னர் அது அந்த தனி மனிதர் மீதான வெறியாகவும் மாறிவிடுகிறது .

இவர் யார் என்ற விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பதிவு இது .


1990 களில் இருந்து மிக மிக வேகமான வளர்ச்சி கண்டுவரும் இந்த அமைப்பு  2002 வரை வன்னேஸ் மூவ்மென்ட் (Oneness Movement -OM )  என்று அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும் இப்போது கல்கி தீக்ஷா மூவ்மென்ட்(Kalki Deeksha Movement) என அழைக்கப்படுகிறது .

இதில்   மாய நம்பிக்கைகளில் இருந்து விடுபட்ட முன்னாள் தலைமை உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இது வெறும் ஏமாற்று வேலை என்று இது நவீன கால மூட நம்பிக்கை என்றும் கூறுகின்றனர் .

இது தென் இந்தியாவில் 1980 களின் இறுதிப்பகுதியில் உருவாக்கப்பட்டது . பொது மக்களிடம் 1991 ஆம் ஆண்டு விஜயகுமார் நாயுடுவால் (அம்மா பகவான் )அறிமுகப்படுத்தப்பட்டது .அவரிடம் இருந்த/வளர்த்துக்கொண்ட  மனோதத்துவ ஆற்றல்கள் ,சில முறைகளால் அவர் 1984 களில் இருந்து அவரின் கவரும்  திறமையால்  பாடசாலையில் இருந்து சில மாணவர்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டார் .

அவர் தனது ஆன்மீக கற்பித்தலை பல வேதாந்த அறிஞர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரட்டி வளர்த்துக்கொண்டார் . அதில் குறிப்பிடத்தக்கதாக ரமண மகரிஷிகள் ,ஜே கிரிஷ்ணமூர்த்தி ,யு ஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களிடம் இருந்தே இந்த நுணுக்கங்களை கற்றார் . சமய புரட்ச்சியாளர் ஜே கே கிருஷ்ணமூர்த்தியின் பாடசாலையில் இவர் இருந்த போது இவரின் நடவடிக்கைகளை  கண்டித்தார் .

மேலும் விஜயகுமார் தனது பெயரை 1989 களில் கல்கி என மாற்றி அமைத்துக்கொண்டார் . அதாவது கல்கி என்பது இந்து புராணத்தில் கிருஷ்ணரின் 10 ஆவது அவதாரம் என கூறப்படுகிறது .

குறுகிய காலத்திலேயே கல்கி என்ற பெயரில்  இருக்கும் சட்ட சிக்கல்கள்,சமூக சிக்கல்கள் காரணமாக தனது பெயரை பகவான் என மாற்றி அமைத்துவிட்டார் .மேலும் தான் கடவுள் என்றும் தான் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஞான ஒளியை அளிக்க போவதாகவும், பின்னர் 2012 இல் 64 ,000 பேருக்கு தான் ஞானம் அளிக்க போவதாகவும் அறிவித்தார் .

இதை எப்படி செய்ய போகிறார் என்றால் "neurobiological brain-shift event " என்ற முறையின் மூலமாம் .அதாவது இந்த முறை  மூலம் அவரிடம் இருந்து ,அவர் மனைவியிடம் இருந்து ,சில நெருங்கிய பக்தர்களிடம் இருந்து உங்களுக்கு அருள் வழங்கப்படும் .இது 21 நாள் கோர்ஸ் . அதுவும் அவர்களால் அனுமதிக்கப்பட்ட தீக்ஷா வழங்குனராக நீங்கள் மேலும் செலவழிக்க வேண்டி இருக்கும் . இதுவரை காலமும் அடிப்படை கோர்ஸ் க்கு $7000 டொலர்கள் அறவிடப்பட்டு வந்துள்ளது .

ஆனால் இப்போது அவர் (அம்மா பகவான் ) இதை இலவசமாகவும் விரைவாகவும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்குமாறு கூறியிருக்கிறாராம் .அதனால் சிலரால் இணையங்களில் பரப்புரைகள் நடைபெறுகிறது ..வீடியோ கான்பெரென்ஸ் இல் எல்லாம் பூஜை நடைபெறுகிறதாம் .காரணம் ஒரு வேளை அவரின் அமைப்பு இந்தியாவில் மூடப்படலாம் என்ற அழுத்தம் தான் .

உலகத்தில் இருந்து அனைத்து பாகங்களில் இருந்தும் அனைவரையும் கவர்ந்து இந்த நிகழ்வு நடைபெறுகிறது இலவசமாக .ஆனால் அவர்கள் அறைக்கு $1500
டோலேர்கள் கட்ட வேண்டும் . ஆனால் அந்த அறையின் பெறுமதிகள் $500 கூட 
வராது . இது இலவசம் என்று தோன்றவில்லை .

தொடரும் ......
பயனுள்ளது என்றால் ,விழிப்புணர்வு ஏற்ப்படுத்த எண்ணினால் நண்பர்களிடம் இந்த பக்கத்தை பகிருங்கள் ..

Friday, March 4, 2011

பேஸ்புக் - 3 ஆம் நபர் அப்பளிகேசன்ஸ் -கவனம்!!



நாம் வங்கிக்கு செல்கிறோம் கடன் உதவி பெறும் அவசரத்தில் அவர்கள் தரும் படிவத்தில் என்ன இருக்கிறது என வாசிக்காமல் கையெழுத்து  இடுகிறோம் . அது நம்பிக்கை என வைத்துக்கொள்வோம் .ஆனால் அதன் விளைவு பின்னர் தான் தெரியும் .

ஆனால் அதை விட ஆபத்தானது ஒருவரது தனி அடையாளங்களை இன்னொருவர் வைத்திருப்பது . இப்போதைய முன்னணி சமூக இணையத்தளம் பேஸ்புக் அனைவரது தனி அடையாளங்களையும் வைத்திருக்கிறது. 

 ஆனால் பேஸ்புக் அல்லாத வெளி நபர்கள் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது அல்லவா ? எம்மை அறியாமலே நாம் எமது அனைத்து விடயங்களையும் வெளி நபருக்கு கொடுக்கிறோம் .அதற்கான ஊடகம் இந்த 3ஆம் நபர் அப்பிளிகேஷன்கள்(3rd party Applications ).

இதை பலரும் வாசிப்பதில்லை ..


சில வேளைகளில் தேவையில்லாத தகவல்களும் கேட்கப்படும் . கீழே சிறிய எழுத்தில்  "By proceeding this ,you agree to Farm villie Terms of services and privacy policy ".
 நீங்கள் வழக்கு கூட தொடரமுடியாது .

அண்மையில் வீட்டு விலாசங்களையும் தொலைபேசி இலக்கங்களையும் நீங்கள் பயன்படுத்தும்  3 ஆம் நபர் அப்ப்ளிகேஷன்கள் அணுகுவதற்கு பேஸ்புக் அனுமதி அளித்திருக்கிறது .  

இந்த தகவல்கள் அனைத்தும் வெளி நபர்களுக்கு விற்க்கப்படும் . உங்களுக்கு தொந்தரவுகள் பல ஏற்ப்படலாம் . இதை நிறுத்துவதே சிறந்த ஒரே வழி ஆகும் .பார்பதற்கு கவர்ச்சியாகவும் வேறு வேறு தலைப்புகளிலும் வடிவங்களிலும் வரும் .ஆனால் தயவு செய்து அப்ப்ளிகேஷன்கள் பாவிக்க வேண்டாம் .

இதனை தடுப்பது இலகு 

பேஸ்புக் கணக்கில் நுழைந்து வலது பக்கம் மேல் மூலையில் இருக்கும் ACCOUNT பகுதிக்கு சென்று PRIVACY SETTINGS அழுத்தவும் .

கீழே APPS AND SETTINGS பகுதியை எடிட் செய்யவும் ..

.
அதில் Remove Unwanted or spammy Applications    என்ற பகுதியை அழுத்தி தேவையில்லாததை அகற்றலாம் .

உங்கள் நண்பர்கள்  அதை பாவித்தாலும் ஆபத்து இருக்கிறது .அதை தடுப்பது பற்றி .மேலே உள்ள பகுதிக்கு கீழே உள்ளது இது .


உங்கள் கணக்கை திருடுபவர்களிடம் இருந்து பாதுகாக்க முக்கியமாக செய்ய வேண்டியது .

Account - Account settings சென்று Account security edit செய்து இந்த செயன்முறையை செய்யவும் .

இதன் தொழில்நுட்ப பொறிமுறையை உங்களோடு பகிர்கிறேன்.

பேஸ்புக் செர்வர்கள் மூன்றாம் நபர் அப்ப்ளிகேஷன்களை  வைத்திருப்பதில்லை . பெஸ்புக்கின் API (Application programming Interface ) ,REST Interface என்றால் அந்த மூன்றாம் நபர் அப்பிளிகேஷன்கள் பேஸ்புக் உடன்  இடைநிலை தொடர்பை ஏற்ப்படுத்த HTTP GET அல்லது POST முறையை பயன்படுத்துகின்றன .  

HTTP என்பது இணையத்தினூடு world wide web (www ) ஆல் பயன்படுத்தப்படும் தொடர்புவரைமுறை(Protocol ) கொண்ட தொடர்பாடல் . GET முறை இணைய பக்கத்தில் இருந்து  தகவல்களை எடுக்கவும் POST முறை தகவல்களை சேர்க்கவும் பயன்படுகிறது .

அதாவது பேஸ்புக் அப்பிளிகேஷன்களால் உங்கள் ப்ரோபாயில்களில் இருந்து தகவல்களை எடுக்கவும் இடவும் முடியும் .

3 ஆம் நபர் அப்பிளிகேசன்களை செய்பவர்கள் FQL (Facebook Query language ) ஐ பயன்படுத்துகின்றனர் .SQL இட்க்கு ஒப்பானது தான் . இவை programming Languages .டேடாபேசில் இருந்து  தகவல்களை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டவை . இதனால் அப்பிளிகேஷன்களை உருவாக்குபவர் அந்த அப்பிளிகேஷன்களை பாவிப்பவரிடம் இருந்து அனைத்து தகவல்களையும் பெற முடியும் .

அவ்வளவு தான் விடயம்..ஆனால் பேஸ்புக்கில் அப்பிளிகேசன் பாவிப்பதே வேலையாக வைத்திருப்பவர்களுக்கு தான் வேறு வழி இல்லை .

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்... 

Tuesday, March 1, 2011

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

முதல் பதிவு -பேய்கள் விஞ்ஞான விளக்கம் -தொடர்ச்சி 

இந்த நிகழ்வு உங்கள் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆனால் சிலர் பேயின் தாக்குதல் என்றும் சிலர் அதை பற்றி வெளியில் கேட்க்கமுடியாமலும்  அலட்ச்சியமாகவும் இருந்திருப்பீர்கள் .

நீங்க விழித்திருப்பது போன்ற உணர்வும் ஆனால் எழும்ப இயலாத படி உறைந்தது போன்ற உணர்வும் ஏற்ப்பட்டிருக்கும் .கத்துவதற்கு முயல்வோம் ஆனால் கத்த முடியாது . 

 யாராவது வருவது போன்ற உணர்வு ,பேய் போன்ற ஒரு உருவம் தெரியும் அல்லது யாரோ நெஞ்சின் மீது அமர்த்திருப்பதோ அமத்துவது போன்ற உணர்வு ஏற்ப்படும் .

ஆனால் வரலாற்றில் இதை பேயின் தாக்குதல் என்றே அழைத்து வந்தனர் .ஆனால் இந்த அதிர்ச்சியான நிகழ்வை விளக்க விஞ்ஞானம் தயார் .

சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் உடல் முழுதும் உறைந்த நிலையில் சிறிதளவு சுவாசமும் ,வேகமான  கண் அசைவும் இருக்கும் .

மேலே குறிப்பிட்ட இந்த பாதிப்புகள் அவர்களை பேயின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது . நரம்புகளில் இருந்து மூளைக்கு செய்திகள் தவறாக அனுப்பபடுவதால் இந்த sleep paralysis ஏற்ப்படுகிறது. 

சுருக்கமாக இந்த நிகழ்வை விவரிக்கிறேன்  . ஒருவர் உறங்கும் போது ,அவரது  மூளை தசை சுருக்கங்களை அடக்க தகவல்களை அனுப்பும் .
ஆனால் இதே தசைகளை செயல்ப்படுத்த மூளை தகவலை அனுப்ப முதல் ஒருவர் சுய நினைவுக்கு வந்தாராயின் அப்போதே இந்த உறைந்திருப்பது போன்ற உணர்வு ஏற்ப்படுகிறது. அவரால் உடலை அசைக்க முடியாமல் இருக்கும் .

ஒருவர் முழித்திருக்கும் போது எப்படி உடல் உறைநிலை அடைகின்றது என்பதை விபரமாக அறிய வேண்டுமானால் முதலில் உறக்கம் பற்றி ,அதன் நிலைகள் பற்றி தெளிவு இருக்க வேண்டும் .

இந்த பாலூட்டிகள் உறங்கும் போது மூளை இரண்டு நிலைகளை அடைகிறது .ஒன்று Non REM உறக்க நிலையும் அடுத்தது REM உறக்க நிலை .இந்த NREM மற்றும் ரேம் உறக்க நிலைகள் ஒரு வட்டம் போல மாறி மாறி  ஏற்ப்படுகின்றன  .


5 ஆவது உறக்க நிலை -ரேம்(Rapid eye movement )  நிலை


இரவு நேர உறக்கத்தில் மனிதன் 80 நிமிடங்கள் NREM உறக்க நிலையிலும் 10 நிமிடம் REM உறக்க நிலையிலும் இருக்கிறான் . மொத்தமாக இந்த 90 நிமிட நிகழ்வு மீண்டும் மீண்டும் 3 தொடக்கம் 6 தடவைகள் நிகழ்கிறது .

இந்த NREM உறக்க நிலையில் உடல் சிறு அசைவுகளையே ஏற்ப்படுத்துகிறது .இதன் போது தான் தூக்கத்தில் நடத்தல் உளறல் போன்ற நிகழ்வுகள் ஏற்ப்படுகின்றன .

இந்த REM உறக்கத்தின்  போது தான் இதயத்துடிப்பு ,சுவாச வீதம் ,இரத்த அழுத்தம் போன்றன வேறுபடுகின்றன .கண்களின் துடிப்பு அதிகமாக இருக்கும் காரணம் இதன் போது தான் கூடுதலான கனவுகள் ஏற்ப்படுகிறது .உறங்குபவர் இதன் போது தான் அசையும் கனவில் இருப்பார் .

தொடரும் ....

ஏன் ?