தொடருபவர்கள் - நன்றிகள்

Sunday, July 17, 2011

ஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" என்று நவாலியூர் சோமசுந்தர புலவரது பாடப்புத்தகங்களில் படித்தது நினைவு. இன்று ஆடிப்பிறப்பு (17.7.2011) பனங்கட்டிகூழ் குடித்து மகிழ்ச்சியாய் கொண்டாடும் நாள் .

ஆடிப்பிறப்பு தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாள் . இன்றுவரை இது யாழ்பாண தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது . தமிழ் நாட்டு மக்கள் இதை பெரும்பாலும் மறந்துவிட்டனர் . மேலைத்தேய கலாசார திணிப்பு காரணமாக இருக்கலாம் .

ஆரியர்களால் திணிக்கப்பட்ட தீபாவளி ,சித்திரை வருடப்பிறப்பு போல் அல்லாது தை திருநாளும் ,ஆடிப்பிறப்பும் தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாளாகும் .

 அப்படி மாதத்தின் முதல் நாட்களை கொண்டாட வேண்டிய காரணம் என்ன என்பதை பார்ப்போம் . தமிழர்களின் திருநாள் எதுவும் அறிவியலுடன் பிழைக்காது . இயற்கையோடு தொடர்புபட்டவை அவை.

உலகிலேயே தமிழ் கலாசாரம் சிறந்து விளங்கியது என்கிறோம் என்றால் அதற்கான காரணம் விவசாயம் ,இயற்கையை மக்கள் மதித்தமை . தமிழர்களின் கலாசாரத்தில் கடவுள் என்ற பதத்திற்கு இடம் கொடுக்காமல்  இயற்கையையே மதித்தனர் . தையிலும் சூரியனுக்கு தான் நன்றி செலுத்தினர் .


ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள் .யாழ்ப்பாணத்தின் மீது தென் மேல் பருவக்காற்று வீசும் காலம் இது .யாழ்பாண மக்கள் பட்டம் விட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் .


தை முதல் தேதி நெல் அறுவடை நன்றி நவிலல் நாள்.ஆடி முதல் தேதி தை மாதத்திற்குப் பின் புது ஆறுமாதம் துவங்கும் நாள்.


 வானம் பார்த்த பயிர்கள் விதைதூவும் காலப்பகுதி. மழையால் ஆற்றுநீர் வரும் காலம். எனவே தான் தை முதலும் ஆடி முதலும் கவனத்திற்கு வந்தன.


இந்த காலப்பகுதியை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புதிய காலப்பகுதி போல கொண்டாடுவார்கள் .


நவாலியூர் சோமசுந்தர புலவர் பாடலிலேயே ஆடிக்கூழ் எப்படி செய்வது என்றே எழுதி விட்டார் . பாடலின் இனிமையும் சிறப்பும் அது .


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை 
ஆனந்த மானந்தம் தோழர்களே! 
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் 
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! 

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் 
பச்சை அரிசி இடித்துத் 
தெள்ளி,, 
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல 
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, 

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே 
வேலூரில் சக்கரையுங்கலந்து, 
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி 
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. 

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி 
வெல்லக் கலவையை உள்ளே இட்டு 
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே 
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! 

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி 
போட்டு மாவுண்டை பயறுமிட்டு 
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் 
மணக்க மணக வாயூறிடுமே 

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே 
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து 
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை 
ஆடிப் பாடிப்பும் படைப்போமே 

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே 
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு 
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க 
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே 

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல 
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் 
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் 
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை 
ஆனந்த மானந்தந் தோழர்களே 
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் 
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!  

Friday, July 15, 2011

காமராஜர் - சுய அறிவு பிறந்த தினம்

றாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ - ஆர் வெங்கட்ராமன் 


இன்று ஐயா காமராஜரின் பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் ,சிலருடைய பிறப்பு மற்றயவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும் சொந்தக்காரார் காமராஜர் எனும் பெருந்தலைவர் .இன்னொருவர் சொல்லிக்கொடுத்து வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உழல வித்தியாசத்தை காமராஜரை பார்க்கும் போது உணர முடியும் .

காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் .

சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் .

  • படிப்பு ஏறாததன் காரணமாக 6 ஆம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்தி விட்டார் .
  • ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார் .
  • பலரிடம் ஆலோசனை கேட்கும் நேரு ,இறுதியில் காமராஜர் சொல்வதையே கேட்பார் .
  • காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருக்கலாம் .ஆனால் அவரை சுற்றி எப்போதும் படித்த மேதைகள் மொயத்திருப்பார்கள் .

அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . அவர் முதலமைச்சர் ஆனவுடன் அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சர் ஆக்கினார் .


ஆனந்த விகடன் குறிப்புகள் 
=========================================================================

சட்டசபையில் கலைஞர் :- ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்று ஏதோ வசனங்கள் சொல்லிகொண்டிருந்தார் .
காமராஜர் கேட்டார்.. “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”
“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். 
==============================================================================================
பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.
காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் .




  • அவரது காலகட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ் நாடு பெற்றது .
  • தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் .
  • ஏழை குழந்தைகளும் கல்வி கற்க வரவேண்டுமென்று மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் .
  • எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார் .
  • எல்லா பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் .
தமிழுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தார் .தமிழின் அனைத்து விதமான புத்தகங்களையும் வெளியிட்டார் .நீதி மன்றம் அரச அலுவலகம் அனைத்திலும் தமிழை கொண்டுவந்தார் .

மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது,பதவி விலகி கட்சி நலனுக்காக செயல்ப்பட வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் தானும் பதவி விலகி முன் உதாரணமாக இருந்தார் .

இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும் இந்திரா காந்தி ,சாச்திரியையே பிரதமராக்கினார் . நேரு இறந்த பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்கும் வேலையை மிக திறமையாக செய்து முடித்தார் .

அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!!!!

காமராஜர் பற்றி மேலதிக,கூடுதல் தகவல்கள் படிக்க http://kamaraj101.blogspot.com

Friday, July 8, 2011

எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள் ..

இந்த பதிவை எவளவு தூரம் கவனிக்கக் போகிறீர்களோ அல்லது  அனைவரிடமும் சேர்க்க போகிறீர்கள் என்று தெரியவில்லை .எத்தனை பேர் இதில் இணைய முன் வந்து நிற்க்க போகிறீர்களோ தெரியவில்லை .ஆனால் தயவுசெய்து ஒரு 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் .  http://www.ewow.lk/ தளம் பற்றியது .
கல்வி ,வேறு தொழில் நடவடிக்கைகளுடன் இதையும் இயக்குவதால் எம்மால் முழுநேரமாக தனியாக செய்ய முடியாது . ஆனால் அனைவரும் நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் முடியும் .

ஒரு சமூகத்தின்/மொழியின் வளர்ச்சி அதன் பரிணாம வளர்ச்சியில் தான் இருக்கிறது . அந்த அந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வளர்ச்சியடையவேண்டும் .இணையத்தில் தமிழை தொகுப்போம் .

ஒரு சமூகம் வளர்ச்சி அடைய அந்த சமூகத்திலேயே இருந்து நன்றாக வந்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு மிக மிக முக்கியமானது .ஆனால் எம் சமூகத்தில் உள்ளவர்கள் வளர்ந்தவுடன் தன் சமூகத்தை திரும்பி பார்ப்பதில்லை என்ற எண்ணமே நிலவுகிறது . முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் .மிகவும் பின் தங்கி இருக்கிறோம் .நிச்சயம் ஒரு இணைய தமிழ் புரட்சி தேவைப்படுகிறது. அதற்கான வேண்டுகோள் பதிவு இது .ஒன்று சேருங்கள் .

இணையம் என்பது எதிர்காலத்தில் ஏழை ,பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க போகும் ஒன்று . உலக விடயங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலமும் பகுத்தறிவை வளர்ப்பதன் மூலமுமே எமது சமூகத்தை வளர்க்க முடியும் . அனைவருக்கும் அனைத்திலும் அடிபப்டை அறிவு இருக்க வேண்டும் .கல்வித்தளம் /விழிப்புணர்வு தளம் என்று எந்த வகையிலும் வைத்திருக்கலாம் .

முதலில் வெறுமனே அறிவியல் கட்டுரைகளை மட்டுமே நானும் எனது நண்பன் பிரபுவும் எமது வலைப்பதிவுகளில் கிடைக்கும் நேரங்களில் படித்தவற்றை பகிர்ந்து /எழுதி வந்தோம் . அறிவியல் விடயங்கள் தமிழில் இணையத்தில் தேடினால் கிடைக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்காக இருந்தது .இருவரும் எழுதியதை இணைத்து ஒரு தளமாக்கி தொடர்ந்து எழுவது தான் நோக்காக இருந்தது .

ஆனால் பொதுவாக பார்த்தபோது அறிவியல் விடயம் மட்டுமன்றி கல்வி தொடர்பான எதுவுமே இணையத்தில் தமிழில் இருக்கவில்லை .வளர்ச்சி என்றால் அது அறிவியலில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் இருக்க வேண்டும் என்று தோன்றியது .

அதற்காக உருவாக்கப்பட்ட தளம் தான் இது :: http://www.ewow.lk/

இந்த தளத்தில் இணைந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்ய  விரும்புவர்கள் info@ewow.lk தொடர்புகொள்ளவும் .

இதன் உள்ளடக்கங்கள்::எந்த பகுதிக்கும் பங்களிப்பு செய்யலாம் .

கல்விப்பகுதி : இரசாயனவியல் ,பௌதீகவியல்  பாட பகுதிகள் வீடியோ வடிவில் விளங்கப்படுத்தபட்டுள்ளன .: இவை இன்னும் சேர்க்க வேண்டும் .எங்கிருப்பவர்களும் இவற்றை படித்துக்கொள்ளலாம் .

தமிழில் இயங்கவில் ஆவர்த்தன அட்டவணை 

ஏன்? எதற்கு ? : ஏன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானது .இந்த பகுதியை தொகுத்து வருகிறோம் .உங்களுக்கு தெரிந்தவற்றை மூலத்தை குறிப்பிட்டு பகிரலாம்.

சுகாதார கல்விகளையும் வீடியோ வடிவில் தொகுத்துள்ளோம் .வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்கள் எப்படி ஏற்படுகிறது ?அதை தடுப்பது பற்றி சுகாதார விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது .ஆக்கங்கள் கேள்வி பதில்களாக உள்ளது .
  
அனைவரும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருக்கக் வேண்டும் என்ற நோக்கில் சட்டங்கள் பற்றிய விடயங்களை தொகுக்கிறோம் .மனித உரிமை சட்டங்களையும் தொகுக்கலாம் .

தமிழ் ஆவணப்படங்களும் செய்து வருகிறோம் .

அது தவிர வரலாறு ,தொழிநுட்பம் ,நாகரிகம் என பல விடயங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது .ஆனால் நாம் அவற்றை வழங்கு விதமும் தொகுக்கும் விதமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் .

எமக்கு தெரிந்தவற்றை மற்றயவர்களுக்கு தமிழில் கற்பிப்போம்,மற்றவர்களுக்கு தெரிந்ததை நாம் தெரிந்துகொள்வோம். தானாக இணையத்தில் தமிழ் சேர்ந்துகொண்டிருக்கும் .

நண்பர்களுடன் ,சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலே உதவியாக இருக்கும் .. இப்படியான பணிகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை இந்த செய்தி போய் எட்டினால் போதுமானது .

Thursday, July 7, 2011

வேலைத்தளத்தில் பேஸ்புக்கை "Excel"ல் பயன்படுத்துவது எப்படி ?

 பல நிறுவனங்கள் பேஸ்புக்கை தடை செய்துள்ளன .ஆனாலும் வேலைத்தளத்தில் இருப்பவர்கள் சமூக இணையத்தளங்களை பார்ப்பது அதிகம் .

இதனை நிவர்த்தி செய்யவே இந்த அப்பிளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த hardlywork.in என்ற அப்ப்ளிகேஷன் பேஸ்புக் தகவல்களை அப்படியே Excel sheet க்கு மாற்றி உங்களுக்கு வழங்குகிறது .

"வேலை தளத்தில் பேஸ்புக் பார்ப்பது ஒரு வித தயக்கத்தை உண்டாக்கினால் அல்லது யாராவது பார்த்துவிடுவார்கள் என்று எண்ணினால் அதனை எக்செல் வடிவில் வேலை செய்வது போல பயன்படுத்தலாம் .

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கினுள் நுழைந்துகொண்டு harldywork.in  கிளிக் செய்தவுடன் இப்படியொரு முகப்பு கிடைக்கப்பெறும் .


இதில் Gimmedem spreadsheets ஐ அழுத்தவும் .
அதனை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு சிறிய அறிமுகம் கிடைக்கும் .


Excelsheet இல் எழுத்துவடிவில் மாற்றும் பகுதியில் உங்கள் நண்பர்களை தேடி அவர்களின் ப்ரோபாயிலை பார்க்கலாம். Search friends பகுதி




எப்படியும் உங்கள் முகாமையாளர் கண்டுபிடித்துவிடுவார் என்றால் இதில் Spacebar ஐ மட்டும் அழுத்தினால் போதும் முழுவதும் இலக்கங்களால் ஆன  கணக்கு போல மாறிவிடும் . 


இதனை உருவாக்கிய யாலே பல்கலைகழகத்தை சேர்ந்த பி குறோஸ் ஐ கேட்ட போது தன்னிடம் தனது நண்பி பேஸ்புக் வேலைத்தளத்தில் பார்க்கமுடியவில்லை என்று முறையிட்ட பின்பே இதனை உருவாகக் வேண்டுமென்று தனக்கு தோன்றியதாக கூறினார் .

ஏன் ?